"விண்டோஸ் விஸ்டா"


"விண்டோஸ் விஸ்டா"
மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம்
மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண் டோஸ் வரிசையில் தன் அடுத்த தொகுப்பிற்கான புதிய பெயரை விண்டோஸ் விஸ்டா' என வெளியிட்டுள் ளது. "லாங்ஹார்ன்' என்ற குறியீட்டுப் பெயருடன் புதிய இயக்கத் தொகுப்பு தயாரிக்கும் பணியினை நான்கு ஆண்டுகளுக்கு முன் மைக்ரோ சாப்ட் தொடங்கியது. பல சோதனை ஓட்டங்களுக்குப் பின் தற்போது அடுத்த ஆண்டு மத்தியில் புதிய தொகுப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

முதலில் குறியீட்டுப் பெயராக "லாங்ஹார்ன்' என்று பெயர் கொண்ட இந்த தொகுப்பிற்கு விண்டோஸ் விஸ்டா என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்க்கு எட்டு மாதங்கள் பிடித்தது. பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர்களில் எண்கள் இருக்கும். (விண்டோஸ் 95, 97, 98, 2000) அல்லது சொற்களின் சுருக்கப் பெயர் இருக்கும். (விண்டோஸ் எக்ஸ்பியில் எக்ஸ்பி என்பது எக்ஸ்பீரியன்ஸ் என்பதின் சுருக்க மாகும். மி (எம் இ) என்பது மில்லினம் எடிசன் என்பதன் சுருக்கமாகும்.)

ஆனால் இந்த வழக்கம் தற்போது உடைக்கப்பட்டுள்ளது. உலகில் இயங்கும் பத்து கம்ப் யூட்டர்களில் ஒன்பதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்கத் தொகுப்புகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய அளவில் கம்ப்யூட்டருக்கான சாப்ட்வேர் தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் விளங்குகிறது. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பு தான் இதற்கு முன் மைக்ரோசாப்ட் தந்த தொகுப்பாகும்.

இத்தொகுப்பு வந்தபின் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அளவிலான கால இடைவெளி இதுவரை இயக்கத் தொகுப்பு வெளியிடுவதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஏற்பட்ட தில்லை. விண்டோஸ் விஸ்டா தொகுப்பில் பல மாற்றங்களையும் முன்னேறிய வசதிகளையும் தர இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகில் மனிதர்களின் வாழ்க்கை இப்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் பெர்சனல் கம்ப்யூட்டரையே மக்கள் சார்ந்து இயங்கி வருகின்றனர். அவர்களுக்கு அதிக நம்பிக் கையை ஊட்டும் வண்ணம் இந்த தொகுப்பு இருக்கும்.

தினசரி வாழ்க்கை தொடர்பான தகவல்களைப் புதிய முறையில் தொகுத்து இயக்கும் பல வசதிகள் இத் தொகுப்பில் தரப்படும். மேலும் தேவைப்படும் தகவல்களுடன் கம்ப்யூட்டரை இயக்குபவரை இணைக்கும் புதிய வழிகள் இத்தொகுப்பின் மூலம் வழங்கப்படும். அத்துடன் வாழ்க்கைய பொருள் உள்ளதாக ஆக்கிடும் சாதனங் களுடன் கம்ப்யூட்டரை இணைக்கும் வழிகளையும் இது கொண்டிடும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித் துள்ளது. புதிதாய் வர இருக்கும் விண்டோஸ் விஸ்டாவின் முக்கிய இலக்குகளாக மைக்ரோசாப்ட் அறிவித் திருப்பது –– மிகச் சிறந்த பாதுகாப்பு, தகவல்களை வகைப்படுத்த புதிய வழிகள் மற்றும் அதிகமான தொடர்பு சாதனங்களை கம்ப்யூட்டருடன் இணைக்கும் வசதி.

"தெளிவானது, நம்பிக்கைக்குரியது மற்றும் இணைத்துவிட்டால் இது உங்கள் உலகத்திற்கு அதிக தெளிவைக் கொண்டு வரும்" –– என

விண்டோஸ் விஸ்டாவிற்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இவை பற்றிய கூடுதல் தகவல்களும் முதல் சோதனைப் பதிப்பும் வரும் ஆகஸ்ட் 3 அன்று வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் லாங்க் ஹார்ன் குறித்து அறிவிப்பு வெளியிட்டது. அப்போது 2004 ஆம் ஆண்டில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்குகள் புதுப்பிக்கப்பட்டதால் வெளியிடப்படும் தேதியும் மீன்டும் மீண்டும் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கென தான் புதிதாய் வடிவமைத்த விண் எப்.எஸ். பைல் (*WinFS*) சிஸ்டத்தினை முற்றிலுமாக மைக்ரோசாப்ட் கைவிட்டுவிட்டது. இண்டிகோ (*Indigo*) என்ற பெயரில் இணைய சேவை வழங்கிட தான் உருவாக்கிய கட்டமைப்பிலும், அவலான் (*Avalon*) எனப் பெயரிடப்பட்ட புதிய கிராபிக்ஸ் தொகுப்பிலும் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. விண்டோஸ் விஸ்டா வின் வசதிகள் முற்றிலும் புதிய வசதிகள் என்றால் தேடுதல் செயல்பாட்டில் தரப்பட இருக்கும் புதிய தொழில் நுட்பத்தினையும் புதிய லேப்டாப் இயக்க தொழில் நுட்பத்தினையும் கூறலாம். "அவலான்' என அழைக்கப்பட இருக்கும் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஒளிச் சிதறலுடன் கூடிய விண்டோஸ் மற்றும் டாகு மெண்ட்டுகளுக்கேற்ற வகையில் உருவாக்கப்படும் ஐகான்களையும் கூறலாம். புதிய தேடும் வசதி: வேகமாகத் தேடும் பாளம் ("*quick search pane*,") என அழைக்கப்படும் பகுதியில் கேள்விகளை டைப் செய்து அதனுடன் தொடர்பான பைல்களின் பெயர்களைப் பெறலாம். இது மேக் கம்ப்யூட்டரின் எக்ஸ் டைகர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஸ்பாட்லைட் வசதிக்கு இணையானது. தேடுதலில் கிடைக்கும் முடிவுகளை போல்டர் களாகச் சேமிக்கலாம். தேடுதல் கேள்விகள் எப்போதும் நினைவில் வைக்கப்பட்டு அது தொடர்பான தகவல் கள் கிடைக்கையில் இந்த போல்டர்கள் அப்டேட் செய்யப்படும். எடுத்துக் காட்டாக இளையராஜா என நீங்கள் ஒரு முறை தேடி போல்டரை உருவாக்கினால் அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் அல்லது கம்ப்யூட்டரில் பதிக்கப்படுகையில் அவை அந்த போல்டரில் சேர்க்கப்படும். ஐகான் : புதிய பொருள் இனி ஐகான்கள் பைல் வகையைக் குறிக்காது; ஒவ்வொரு பைலின் டெக்ஸ்ட்டைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக ஒரு வேர்ட் டாகுமெண்ட்டின் ஐகான் முதல் பக்கத்தில் உள்ளதைக் காட்டும் வகையில் இருக்கும். இந்த ஐகான் படங்கள் சிறியனவாக இருந்தாலும் அவை பைலில் உள்ள தகவல்களை எடுத்து காட்டும் காட்சிப் படமாக அமையும். லேப் டாப் கம்ப்யூட்டரில் புதுமை: விண்டோஸ் விஸ்டா லேப் டாப் கம்ப்யூட்டர் இயக்கத் திலும் மாறுதல்களைக் கொண்டு வர இருக்கிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்காமல் கூட ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் செட் அப் செய்த தகவல்களைக் காட்டும்; இசையை முழங்கும். நெட்வொர்க்கில் இணைக் கப்படுகையில் அதனுடன் இணைந்த கம்ப்யூட்டர்களின் அனைத்து பைல்களையும் ஒரு தொகுப்பாகக் காட்டும். எடுத்துக் காட்டாக ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமின்றி இணைந்துள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் உள்ள மியூசிக் பைல்களையும் ஒரு தொகுப்பில் இணைத்துக் காட்டும். விஸ்டா இயக்குவதற்கு இன்றைய திறன் உள்ள மைக்ரோ பிராசசர் போதும். ஆனால் 512 எம்பி ராம் நினைவகம் தேவைப்படலாம். ஒரு மானிட் டரில் பல காட்சிகளையும் ஒரே காட்சியை பல மானிட்டர்களிலும் காட்டக்கூடிய திறனை விஸ்டா கொண்டி ருக்கும். லேப் டாப் கம்ப்யூட்டரைத் திறக்காமலேயே வெளியே காலண்டர் தகவல், பேட்டரி நிலை மற்றும் நெட்வொர்க் நிலை ஆகியவற்றைக் காட்டும் திறன் கொண்டதாக விஸ்டா லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும். மொத்தத்தில் லேப்டாப் கம்ப்யூட்டர் இன்னும் அதிகத்திறன் கொண்டதாகவும் எளிதாகப் பயன் படுத்தக் கூடிய ஒரு நுகர்வோர் சாதனமாகவும் விஸ்டாவால் மாற்றப்படும். விண்டோஸ் விஸ்டாவின் அடிப் படையில் சர்வர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைத் தொகுப்பும் வரும் ஆகஸ்ட் 3 அன்று அறிமுகப்படுத்தப் படும். இதன் முழுமையான தொகுப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிடப்படும். ஆனால் இதில் விஸ்டாவின் பெயர் இருக்காது. வெளியிடப்படும் ஆண்டின் எண்ணையே தற்போது விண்டோஸ் சர்வர் தொகுப்புகள் கொண்டுள்ளன. எனவே 2007ல் வெளியிடப்பட்டால் அந்த தொகுப்பு விண்டோஸ் சர்வர் 2007 என்றே அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1.(அ) விஸ்டா என்பது எதைக் குறிக்கிறது? "விஸ்டா" என்றால் ஆங்கிலத்தில் பரந்து விரிந்த காட்சி என்று பொருள். அல்லது தூரத் தோற்றம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிப்பொறியின் பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இந்த பெயர் பொருத்தம் தான் எனப் பலரும் எண்ணுகின்றனர். விஸ்டா – ஒரு வேடிக்கைப் பெயர் தான் வழக்கம்போல மைக்ரோசாப்ட் நிறுவனத்தை இந்த பெயர் வைத்து கேலி செய்வோரும் உண்டு.

"*VISTA*" என்பது மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வழக்கமான தடங்கல் களான *viruses, Infections, Spyware, Trojans and Adware *ஆகியவற்றின் சுருக்கப் பெயர் என்றும் பலர் இதனைக் கேலி செய்கின்றனர்.

1.(ஆ) விண்டோஸ் தொகுப்பின் வரலாறு விண்டோஸ் – 1983
விண்டோஸ் 1 – 1985
விண்டோஸ் – 2- 1987
விண்டோஸ் 3 – 22 மே 1990
விண்டோஸ் (மல்டி மீடியாவுடன்) – அக்டோபர் 1991
விண்டோஸ் 3.1 – ஏப்ரல் 1992
( வெளியான இரண்டு மாதங்களில் உலகம் முழுவதும் பத்து லட்சம் ஒரிஜினல் தொகுப்புகளுக்கு மேலாக விற்பனையாகி சரித்திரம் படைத்தது)
விண்டோஸ் ஒர்க் குரூப்ஸ் 3.1 – அக்டோபர் 1992
விண்டோஸ் என்.டி. 3.1 – ஆகஸ்ட் 1993
இந்த தொகுப்புடன் லைசென்ஸ் பெற்று விண்டோஸ் பயன்படுத் தியவர்களின் எண்ணிக்கை 2.5கோடியைத் தாண்டியது.
விண்டோஸ் ஒர்க் குரூப்ஸ் 3.11 – பிப்ரவரி 1994
விண்டோஸ் என்.டி. 3.51 – ஜூன் 1995
விண்டோஸ் 95 – ஆகஸ்ட் 1995.
மிகப் பெரிய அளவிலான விளம்பரத் துடனும் ஆரவாரத்துடனும் வெளியிடப்பட்டு வெளியாகி நான்கு நாட்களில் பத்து லட்சம் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
விண்டோஸ் என்.டி. 4 – ஆகஸ்ட் 1996
விண்டோஸ் சி.இ. – நவம்பர் 1996
விண்டோஸ் சி.இ. 2 – நவம்பர் 1997
விண்டோஸ் 98 – ஜூன் 1998
விண்டோஸ் சி.இ. 2.1 – ஜூலை 1998
விண்டோஸ் 98 எஸ்.இ. – மே 1999
விண்டோஸ் சி.இ. 3 – 1999
விண்டோஸ் 2000 – பிப்ரவரி 2000
விண்டோஸ் மில்லினம் – ஜூன் 2000
விண்டோஸ் எக்ஸ்பி – அக்டோபர் 2001
விண்டோஸ் சர்வர் 2003 – 2003
விண்டோஸ் விஸ்டா – ஜூன் 2006 ( வர உள்ளது)
--------------------------------------------------------------------------------

விஸ்டா – புதிய விஷயங்கள் விஸ்டா தொகுப்பின் புதிய விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக் கின்றன. விண்டோஸ் விஸ்டா இரு தொகுப்பாக வெளி வர இருக்கிறது. 32 பிட் மற்றும் 64 பிட் என இரு வகை தரப்படும். 64 பிட் வேகத்தில் செயல்படும் பிராசசர்கள் கொண்டகம்ப்யூட்டர்கள் 64 பிட் இயக்க விஸ்டா தொகுப்பைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் தொகுப்பு பூட் ஆகி கம்ப்யூட்டர் நம் வசத்திற்கு வருவதற்கு நம் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு இப்போது நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்த நேரம் விஸ்டாவில் குறைக்கப்படுகிறது. விஸ்டாவை நம்பிக்கைத் தூண் என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. நம்பிக்கையும் பாதுகாப்பும் நிலைத்த தன்மையும் கொண்டு விஸ்டா இயங்கும் என்று உறுதியாக மைக்ரோ சாப்ட் கூறுகிறது.

உங்களிடம் முப்பரிமாணத்தைக் காட்டும் திறன் கொண்ட மானிட்டர் அல்லது சாப்ட்வேர் இருக்கிறதா? விஸ்டா உங்களுக்கு ஜொலிக்கும் படங்களைக் காட்ட இருக்கிறது. விண்டோஸ் விஸ்டா ஜனவரி 2007 வரை தள்ளிப் போகும் எப்படியும் வரும் ஆகஸ்ட் மாதம் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப் பட்ட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த தொகுப்பான விண்டோஸ் விஸ்டா அடுத்த ஜனவரி வரை தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு ஏற்ற வகையில் மற்ற பயன் பாட்டு சாப்ட்வேர் தொகுப்புகளும் புதிய முறையில் எழுதப்பட வேண்டும் என்பதால் இந்த கால தாமதம் ஏற்படுகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இருப்பினும் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் விண்டோஸ் விஸ்டாவைக் கொண்டு தங்கள் பெர்சனல் கம்ப்யூட் டர்களை வெளியிடும் வாய்ப்புகள் உள்ளதாகவும் மைக்ரோசாப்ட் கூறுகிறது. ஆனால் தாமதத்திற்கு இன்னொரு முக்கிய காரணமும் கூறப்படுகிறது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமாவது எந்த விதமான செக்யூ ரிட்டி பிரச்னையும் இன்றி இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் திட்டமிடுவதாகவும் அதனை நன்றாக உறுதி செய்வதற்கு சில வாரங்கள் தேவைப்படுவதாகவும் மைக்ரோசாப்ட் நிர்வாகி தெரிவித்துள்ளார். இதற்கிடையே விஸ்டா சோதனைத் தொகுப்பு இன்னும் விஸ்தாரமாக அமைக்கப்பட்டு 20 லட்சம் பேருக்கு வழங்கப்படும். இது குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும். இந்த ஆண்டின் இரண்டாவது பகுதியில் விஸ்டா மற்றும் ஆபீஸ் 2007 ஆகிய இரண்டினையும் பெரிய அளவில் வெளியிட மைக்ரோசாப்ட் திட்டமிட்டிருந்தது.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தாமதம் இந்த திட்டத்தினைப் பாதிக்குமா என்று இனி தெரிய வரும்.

நன்றி: கம்ப்யூட்டர் மலர் மற்றும் எழில்நிலா.காம்

நன்றி : சிவா தமிழ்சத்திரம்

--~--~---------~முத்தமிழ் குழுமம்


"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு."
-- பாவேந்தர். -~--

சிவன் வணக்கம்

சிவன் வணக்கம் சிவலிங்க வணக்கமாக மாறுதல்:

பழங்காலத்தில் மக்கள் சிவன் என்னும் ஞாயிற்றுக் கடவுளை மலைமுகடுகளில் கண்டு வணங்கினார்கள். ஆகவே மலை முகடுகள் கடவுளின் உறைவிடம் என்று கருதினர். மலை இலாத நாடுகளில் மலைபோன்ற முக்கோண செய்குன்றுகளை எழுப்பி அவை மீது ஞாயிற்றைப் போன்ற வட்ட வடிவான வடிவத்தை வைத்து வழிபட்டார்கள். எகிப்தியரின் “கூர்நுதி”ச் சமாதிகள் ஞாயிற்றுக் கடவுளின் கோயில்களே யாகும். எல்லா இடங்களிலும் செய்குன்றுகளளை எழுப்புதல் எளிதன்று. ஆதலின், செய்குன்று வடிவான முக்கோணக் கற்கள் ஞாயிற்றின் குறிகளாக வைத்து வழிபடப்பட்டன. இலிங்கம் என்பதற்கு அடை யாளம் என்பது பொருள். (sanchi and its Remain – p.50 General F.C.Maisey) முக்கோண வடிவான கற்கள் பின்பு அடி அகன்று நுனி ஒடுங்கிய கற்களாக மாறின. ஒபிலிஸ்க் (Obelisk) எனப்படும் சதுரவடிவான தூண்களும் ஞாயிற்றின் வடிவங்களாகும்.

விவிலிய மறையில் பீதெல் என்று சொல்லபடுவன மரங்களின் கீழ் நிறுத்தப்பட்ட சிவலிங்கங்களேயாகும்.

கைலை, என்பது பழங்காலத்தில் சிவன், கோயில் கொண்டிருந்த மலைகளைப் பொதுவில் குறிக்க வழங்கிய பெயர் எனத்தெரிகிறது. இலங்கையிலுள்ள திருக்கோணமலையே எல் தொடர்பான பெயரைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அது, தென் கைலை என வழங்கப்படுகிறது.

கைலை மலை, திருக்கோணமலை முதலிய மலைகளைப் பார்க்கும் போது சிவலிங்கள் வடிவம் போன்று தோற்றம் அமைந்திருப்பதனாலேயே அவை சிவனின் இருப்பிடங்கள் எனக் கருதப்பட்டிருக்கின்றன. வடக்கேயுள்ள சிவன் மலை வட கைலை என்றும், தெற்கேயுள்ள அவ்வகை மலை தென் கைலை என்றும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆதியில்,

இவ்விடங்களின் பெயர்கள் ‘எல் + ஐ + அம் = எல்ஐஅம் என்று இருத்தல் கூடும். பின்பு பிரித்தறியும் பொருட்டு வடகை ( வடக்குப் பக்கத்திலுள்ள) இடகை (இடப் பக்கத்திலுள்ள) என்னும் சொற்கள் சேர்ந்து வழங்கப்பட்டனவாகலாம். அப்பொழுது வடகை எல்லை அம், தென்கை எல்லை அம் என்று ஆகிய பெயர்கள் வடகைலாயம், தென்கைலாயம் என்று வழங்கலாயின என்று கருதலாம்.

இலிங்க வணக்கம் இந்தியாவில் மட்டும் காணப்படுவதன்று. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் அகிப்திலும் காணப்படுகிறது. உரோமர் சிவலிங்கங்களைப் பிரியாபஸ் எனப் பெயரிட்டு வணங்கினார்கள். கிரேக்கர்களின் இலிங்கக் கடவுள் இதுவே. உரோமரும், கிரேக்கரும், எகிப்தியரும் சிவலிங்கங்களை நாட்டிக் கோயில்கள் அமைத்தார்கள். பிரியாபஸ் என்பது இந்தியாவில் காணப்படும் சிவலிங்கங்கள் போன்றது. இஸ்ரவேலர் சிவலிங்கங்களை வழிபட்டார்கள். விவிலிய மறை (I King XV) அசா (Asa) என்பவன் தன் தாயைச் சிவலிங்கத்துக்குப் பலி செலுத்தாதபடி தடுத்து அதனை அடைத்தெரிந்தானென்று கூறுகிறது. (A Dictionary of Religious Ceremonies of the Eastern Nation)


சிவம்பொருள் விளக்கம்:

‘சிவம் என்ற சொல் தமிழ்ச் சொல் என்று டாக்டர் கிரையர்சன் கூறுகின்றார் “The term’ Siva is Tamil in its origin; the conception of Rudra-Siva has a tinge of Dravidian influence on the Aryans not only philosophically but on their whole mode of thought” வேத இந்தியா (Vedic India) என்னும் நூலில் ரகோசின் என்பவர் சிவ வழிபாடு ஆரியர் வந்தபோது இந்த நாட்டில் வாழ்ந்த ஆதிமக்களில் ஒரு வகையாளர் வழிபாடென்று குறிப்பிட்டுள்ளார். சிவ என்ற சொல்லிலுள்ள சகர ஓசை ஆதியில் ஆரிய மொழியிற் கிடையாத கபால ஒலி (Cerebral) எனப்படும். அத்தகைய ஒலிகள் திராவிடச் சார்பால் ஆரிய மொழியில் புகுந்தன என்று ஆசிரியர் ராப்சன் கூறுகின்றார். சிவ என்ற சொல் செம்மை என்பதன் அடிப்படையாகப் பிறந்தது. அது சிவப்பு என்றும் நன்மை, மங்களம் என்றும் பொருள்படும். தமிழ் மக்கள் வேட்டுவ வாழ்க்கை நிலையிலிருந்த போது சிவனை வழிபட்டமையால் தமக்குள் அரிய செயலாய் மதிக்கப்பட்ட புலிக் கொலையையும் பாம்பு வசியத்தையும் அப்பெருமானுக்கு ஏற்றி வணங்கினர் போலும். புலித் தோலாடையும் பாம்பு நகையும் சிவபெருமானுக்கு உரியன வாயின1 என கா. சு. பிள்ளை விளக்குவதினின்று சிவம், ஆதிதிராவிட பழங்குடியினரின் வழிபாட்டில் இருந்தாகவும் அது மொழி வழியாகவும் பண்பாட்டின் வழியாகவும் தமிழர்க்கு உரியதென விளங்குகிறது.

சதாசிவம்:

ஆனந்த மார்க்கத்தின் தலைவரான ஆனந்த மூர்த்தி ஆய்வுக் கட்டுரையின் மூலம் மனிதனாகத் தோன்றி, மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் நல வாழ்விற்காகவும் அருந்தொண்டாற்றியவர் ‘சதாசிவம்’ என்றழைக்கப் பெற்றவர் என அறிகின்றோம்.2

வழிபாட்டில் சிவன்:

இராமன் சீதையை இராவணனிடமிருந்து மீட்டு வரும் போது சிவனை வழிபட்ட இடத்தைக் காட்டியதாக இராமயணம் மூலம் அறிகிறோம். கிருஷ்ணன் மகாபாரதப் போரின் போது 12ஆம் நாள் இரவு அருச்சுனனிடம் சிவனை நோக்கி வேள்விச் செய்யச் சொன்னான் என்பதாலும், இராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் காலத்தால் முற்பட்டவன் சிவன்3 என்னுங்கருத்தால் காலத்தைத் தெளிவாக வரையறை செய்ய முடியாத பழமை மரபிற்குரிய பெயரே ‘சிவன்’ எனத் தெரிகிறது.

பழமைச் சிறப்புடைய சிவன், காலத்தால் பழைய சங்க இலக்கியங்களிலும் குறிக்கப் பெறவில்லை என்பது வியப்பிற்குரியது. ஆனால், குறிப்பாக உணர்த்தும் மரபினைப் பரவலாகக் காணமுடிகிறது.

இலக்கியங்களில் சிவன்,

முக்கண் செல்வன்4
கரை மிடற்றண்ணல்5
காரி உண்டிக் கடவுள்6
தாழ் சடையன்7
புரமெரித்தோன்8
கொன்றை மாலையன்9
ஆலமர் கடவுள்10

1. கா.சு. பிள்ளை, தமிழர் மதம். சென்னை. பக். 6869
2. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். திருநெல்வேலி. 1999. பக். 65
Sadasiva who was born into this world about 7000 years ago and who by his holy birth consecreated as it were, each and every dust particle of this earth and utilized this whole life for the sole purpose of advancing the course of universal welfare Remember I have not said ‘human welfare’ because in our world not only are there humans, there are also birds and animals, trees and plants. Siva belongs to all and for all living beings. He gave His all, Hence the people called him Sadasiva- Sadasiva means ‘always’ and siva- as a I have said earlier means ‘welfare’ so Sada Siva means one whose only vow of existance is to promote the all round welfare of all living beings. (Sri Sri, Namah Shivaya Shamtaya, Ananda marga prachara sangam, Calcutta. 1985, p.5)
3. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 6869
4. புறம். 6, 55, அகம்181, முருகு153, கலி2:104
5. புறம் 1, 6, 55
6. மலைபடு கடாம் 82, 83
7. புறம்1
8. புறம்55
9. புறம்1, கலித்தொகை150
10. புறம்198

மேலே குறிக்கப் பெற்ற அத்தனையும் சிவனைக் குறிப்பனவே. என்ன காரணத்தினாலேயோ ‘சிவன்’ என்னும் பெயரால் குறிக்காமல் இத்தகைய குறிப்பால் குறிக்கும் மரபினைப் புலவர் கையாண்டனர் என்பது வியப்பளிப்ப தாகும்11 என்பர்.

மேற்கண்ட அனைத்தும் சிவனின் செயல்தான் என்பதற்கான எந்தச்சான்றினையும் காட்டவில்லை. முக்கண் செல்வன், கரை மிடற்றண்ணல், காரி உண்டிக் கடவுள், தாழ் சடையன், புரமெரித்தோன், கொன்றை மாலையன், ஆலமர் கடவுள் என்பன வெல்லாம் சிவனுக்கு மட்டுமே உரியதெனக் கருதுவதில் எந்த நியாமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

“சேயோன் மேய மைவரை யுலகம்”12 எனத் தொல்காப்பியம் குறிப்பது சிவனையேயாதல் வேண்டும்.13 என்பதும் சரியாகத் தோன்றவில்லை.

புராணம் குறிப்பிடும் சிவனும், இலக்கண இலக்கியம் காட்டும் குறிப்புகளும் ஒருவரையே குறிப்பிடுகின்றன என்பது பொருந்தாது. புராணங் குறித்த காலமும் இலக்கண இலக்கிய காலமும் வேறு வேறானவை. நீண்ட இடைவெளியைக் கொண்டவை என்பதால் இவ்வாறு கருதத் தோன்றுகிறது.
சிவன் பண்டு தியானம் கருதி மலையைத் தேர்ந்தவன். தென்னகத்தின் பொதியமும், வடக்கில் கயிலையும் அவன் சேர்ந்த மலைகள். சிவன் புலித் தோலையும் யானைத் தோலையும் உடுத்தியவன் என்பதிலிருந்து பனிக்காக இவ்வாடைகளைத் தேர்ந்தான் என அறிகின்றோம். சாம்பலைத் தண்ணீரில் குழைத்து உடம்பெல்லாம் பூசிக் கொள்ள எப்படிப் பட்ட குளிர் பாதிப்பும் ஏற்படாது. சிவன் இப்பழக்கம் மேற் கொண்டவன். காலப்போக்கில் சாம்பல் சமயச் சின்னமாகிய திருநீறாகியது. தியானம் யோகம் கற்பம் போன்ற முறைகளைக் கையாள சாத்வீக உணவையே கொள்ளுதல் வேண்டும். சிவன் மேற் கொண்ட உணவுமுறை இதுவே. சிவனை வழிபடு வோர் சைவர் எனப்பட்டது போல, உணவில் சிவன் கண்ட முறையும் காலப் போக்கில் சைவம் ஆனது14 என்பர்.

சிவன் தியானத்திற்காக மலையைத் தேர்ந்து, பொதிகைக்கும் கயிலைக்கும் சென்றான் என்பது பொருந் தாது. சிவன், கடல் கொண்ட குமரி நாட்டில் பஃறுளி ஆற்றங் கரையில் இருந்த தென் மதுரையில் நடைபெற்ற முதற் தமிழ்ச் சங்கத்தின் தலைவன். இது கி.மு. 10490 என்று கருதுவர் என்றால் கி.மு. 10490இல் குமரிக்கண்டத்திற்கும் கயிலைக்கும் ஒருவன் சென்று வருவதென்பது வெறுங் கற்பனையே. சாலை வசதியோ வாகன வசதியோ இல்லாத அக்காலத்தில் தமிழ்ச் சங்கத்தின் தலைவனாக இருந்த புலவரும், யோக நெறியைப் பின்பற்றுபவருமான ஒருவர் இவ்வளவு தூரம் நெடும் பயணம் மேற்கொண்டிருந்தால், அவர் மேற்கொண்டிருந்த புலமையும் யோக நெறியும் மேலோங்கியிருக்காது. கயிலை என்பதும் பொதிகை என்பதும் வேறு பொருளை உணர்த்தும் குறியீடாக இருக்கலாம்.

11. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 69
12. தொல்காப்பியம், அகத்தினை. இயல். 5
13. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 69
14. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 70
15. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 6869

முதல் சித்தன் சிவன்:

“சிவனைப் புராண நாயகனாகக் கொள்வதைக் காட்டிலும் வரலாற்று நாயகனாகக் கொள்வது பொருந்தும்.
சித்தர் இலக்கியங்கள் மூலம் சிவனே முதல் சித்தன் என்பதற்கான சான்றுகளைக் காணலாம்.

“பொதிகையிலே எனைப் பார்க்க சிவனும் வந்தார்
பூரணனே தெய்வமென்று போற்றிச் செய்து
இதமாகக் கற்பமுறை யாவும் கேட்டேன்”16

“சுகமாக நாகமது தரித்த ஈசன்
சுந்தரிக்குச் சொல்ல என்பால்
சூட்டினான்பார்”17

“நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நின்மலமாம் சதாசிவனார் எனக்குச் சொன்னார்”18

“சாரித்த நாற்பத்து முக்கோ ணத்தைச்
சதாசிவனார் வகுத்தபடி சாற்றி னேனே”19

“சருகுமுனி எனும்பேர் சிவன் தந்தார் பாரே”20

“நாரிமுனி பாகனார் அருளால் சொன்னார்”21

“சிவனார் உரைத்தமொழி பரிவாய்ச் சொன்னார்”22

“பாதிமதி அணிந்தவர்தான் சொன்னதிது”23

“சொல்லவே தேவிக்குச் சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல”24

“தாரணிந்த ஈசனன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல”25

என்பன போன்ற ஒத்த கருத்துகள் சித்தர் இலக்கியங்களில் காணமுடிகிறது.மருத்துவ நூல்களில் சிவன் மரபு தமிழில் காணப்பெறும் நூல்களில் பெரும்பாலும் பரமசிவன் தேவிக்கும், தேவி நந்திக்கும், நந்தி அகத்தியர் க்கும், அகத்தியர் புலத்தியர்க்கும் புலத்தியர் ஏனைய சித்தர் களுக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய அனைத்தையும் கூறியதாகக் காணப்படுகிறது. (இதே கருத்து சித்த மருத்துவப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.) ஆகவே அக்காலத்தில் சிறப்புற்று வாழ்ந்த மருத்துவப் பெரியார்களைப் போற்றுகின்ற வகையில் இவ்வாறு கூறப் பட்டதாகக் கொள்வதே சான்றோர்களுக்குச் சிறப்பெனத் தோன்றுகிறது.

சிவனின் வழிவந்த அகத்தியர் மருத்துவ மரபிரைக் குறிக்கும் முனைவர். ஆ. தசரதன், புலத்தியர்க்குப் பின், பரிபூரணம், முப்பு, சூத்திரம், வாகடம், வைத்தியம், கர்மம், கலைஞானம், தீட்டை, பூசை, இரசம், ஞானம்... .... .... என தற்போது

16. அகத்தியர் கற்ப முப்பு குறுநூல். பா. 48 17. அகத்தியன் வைத்திய வல்லாதி 600, பா.385 18. அகத்தியர் தீட்சா விதி200. பா. 50 19. அகத்தியர் பரிபூரணம்400. பா. 69 20. அகத்தியர் சௌமிய சாகரம்1200. பா. 77 21. யாகோப் வைத்திய வாத சுருக்கம்400. பா. 37 22. தேரையர்1001. பா. 653 23. யூகி வாதாங்க தீட்சை300. பா. 260 24. தன்வந்திரி வைத்திய சிந்தாமணி150. பா. 3 25. போகர் புவன கோசரம். பா. 1

வழங்கி வருகின்ற நூலின் பெயரோடு அர்/ஆர் விகுதிகளைச் சேர்த்துக் காரணப் பெயராக்கிப் பட்டிலிடு கின்றார். இது, படிக்கவும் கேட்கவும் சிறப்பாகத் தோன்றினாலும், ஆராய்ந்து பார்த்தால் அவ்வளவும் நூலின் பெயராகவும் மருந்தின் பெயராகவும் இருக்கக் காணலாம்.
இவையெல்லாம் ஆய்வாளர்களிடையே ஏற்படுகின்ற மயக்கங்கள் எனலாம்.

சிவன் சக்திகுறியீடு:

“கருவான எட்டிரண்டும் நாதம் விந்து
பேணப்பா நாதவிந்து சக்திசிவ மாச்சு
பெருகிநின்ற சத்திசிவம் தான்தான் என்று
பூணப்பா அறிவதனால் மனமே பூண்டு”26

என்பவற்றால், சத்தி என்பதும் சிவம் என்பதும் எட்டு, இரண்டு எனக்குறிப்பிடப்படுவது நாதம், விந்து ஆகிய இரண்டையேயாகும். அது வெளியிலுள்ளதல்ல. தான்தான் அது. அறிவினைக் கொண்டு மனதால் அறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தானான சூட்சமது என்ன வென்றால்
தன்மையுடன் போம்வாய்வு சிவம தாகும்
ஊனான உட்புகுதல் சத்தி யாகும்”27

மூக்கின் வழியே உள்ளே போகும் காற்று சத்தி என்றும், வெளியே போகும் காற்று சிவம் என்று அகத்தியரும், உள்ளே வெளியே உள்ள காற்று தெய்வமென்று, காகப் புசுண்டரும் குறியீடாகக் குறிப்பிடுகின்றனர். இவற்றால், சிவம் என்பதும் தெய்வம் என்பதும் குறியீடாகத் தோன்றுவது புலப்படும்.

“திரிந்து பார் தவாரங்கள் செடிபூ டெல்லாம்
சீவசந்து ஊர்வினங்கள் நடப்பினங்கள்
விரிந்துபார் பறப்பினங்கள் விலங்கி னங்கள்
வெறும் பாழென் றெண்ணாதே சிவமென்றெண்ணு”28

காற்றைச் சிவமென்ற அகத்தியரே, தாவரங்கள், செடி, பூண்டு, சீவசந்து, ஊர்வன, நடப்பன, பறப்பன, விலங்கு ஆகிய அனைத்துமே ‘சிவம்’ என்பது குறியீடல்ல. சிவப்பிரச்சாரமாகத் தோன்றுகிறது. (சிவம் என்றால் ‘அ’ ஆகிய உயிர் என்பதால் எல்லாவிடங்களிலும் அது இருக்கிறது எனுங் கருத்தில் இவ்வாறு கூறியிருக்கலாம்)

“மூன்றுக்கும் பேரேது முக்கண் ணென்பார்
மூவரென்பார் மூலமென்பார் மூர்த்தி யென்பார்
மூன்றுக்கும் பொருளறிந்தால் அவனே வாதி
முப்பாழு மிதுக்கொப்பு முடிவு மொப்பு”29

26. அகத்தியர் சௌமிய சாகரம். பா. 336
27. அகத்தியர் சௌமிய சாகரம். பா. 337
28. அகத்தியர் வைத்திய வல்லாதி600. பா. 285
29. கொங்கணர் முதற்காண்டம்1000. பா. 671

தங்கச் சுண்ணத்துள்ளே லிங்கம், பூரம், காரமிட்டு ஆட்ட செந்தூரம் ஆயிற்று. தங்கத்தாலான குருவுக்கு இம் மூன்றும் பச்சை வெட்டாகும் (கூட்டுப் பொருள்) இக் கூட்டுப் பொருளில்லா விட்டால் வேதையில்லை (வாத வித்தை) இத்தங்கக் குருவின் கிடையும் பச்சை மூன்றும் சிவனின் கண்கள் மூன்றுமாம். இறைவன் கண்கள் மூன்றுக்கும் ஒரே பெயராக முக்கண் என்பர்; அவன் செய்யும் தொழில்களை ஏதுவாகக் கொண்டு மும்மூர்த்தி என்பர் மூலக் காரணன் என்பர்; மூன்றுக்குமுள்ள பொருளறிந்தால் அவனே வாதியாம்.30 என்பவற்றிலிருந்து வாதத்திற்கு வேண்டிய மூலப் பொருள் இறைவன் என்றும், அதில் சேரும் மூன்று பொருள் இறைவனின் மூன்று கண்கள் அல்லது முக்கண் என்றும், அப்பொருள்கள் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு மும்மூர்த்தி என்றும் மூலக்காரணன் என்றும் குறியீட்டு முறையால் மறை மொழிகள் வழங்கக் காணலாம்.

சிவன் சித்தர்:

“சித்தராய்ப் போகுமென்று பேசிக் கொண்டு
சிவனவனும் யோசனையே செய்தார் பின்பு”31
மருந்துப் பொருளைச் சிவன் என்று சொன்ன கொங்கணர் வேறொரு நூலில் சிவனைச் சித்தர் என்று கூறுகின்றதைக் காண்கிறோம்.
“தானான சிவன்தன்னைப் பாலில் போட்டுத்
தனித்துமே அடுப்பேற்றி எரித்துக் கொண்டு
ஊனான துலர்த்தியே யிடித்து நைய்ய
உருசிலை வடிகொண்டு சூரணமே செய்து”32

சிவனைப் பாலில் போட்டு அடுப்பேற்றி எரித்து நைய இடித்து உலர்த்திச் சூரணஞ் செய்து என்று போகர் உரைப்பகுதிலிருந்து சிவன் இறைவனாகவோ, சித்தனாகவோ தோன்ற நியாயமில்லை. சிவன் என்பது ஒரு பொருளின் பெயர் என்பது தெளியும்.

“தானென்ற மூவருக்கும் வயது இந்தத்
தகைமையுள்ள கலியுகந்தான் கடாசி தன்னில்
நானென்ற இவர்களுமே மாண்டே போவார்
நன்மையென்ற அடுத்தோர்கள் வீணாய்ப் போவார்
வானென்ற சதாசிவனும் மகேஸ் பரன்றான்
வண்மையுள்ள யுகநூறில் மாண்டே போவார்
தேனென்ற சிவன்மனையாள் பராப ரையும்
தேகம்விட்டு மாண்டிடுவாள் கேளு கேளு
மாண்டிடுவாள் நானுமந்த யுகத்திற் தானும்
மாண்டிடுவேன் சித்தரெல்லாம் மாண்டே போயி
ஆண்ட குரு பராபரத்திற் சேர்ந்தே கொள்வார்
அப்பனே இல்வாழ்க்கை சொற்ப மாகும்”33

சுப்பிரமணியர் அகத்தியர்க்கு உரைப்பதாக வரும் ஞான உபதேசத்தில், இக் கலியுக இறுதியில் சிவன், சிவனின் மனைவி, ஆகியோர் முதலிலும் பின்னர் தானும் மாண்டு போவோம் என உரைக்கக் காண்கிறோம்.

30. கொங்கணர் முதற்காண்டம்1000. பா. 66971 31. கொங்கணர் கற்பம்100. பா. 76 32. போகர் கற்ப விதி. பா. 36 33. சுப்பிரமணியர் ஞானம்25. பா.810

இந்த உலகில் இறைவனாக இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஒரு நாளில் மரணமடைவதற்கு உரியவர்கள் என்பதனால், புராணங்கள் கூறுவது போலும் பக்திநூல்கள் கூறுவது போலும் சிவன் எந்தக் காலத்திலும் அழியாமல் இருப்பவனல்ல என்பது விளங்கும்

சிவன் என்னும் சொல் பல்வேறு பொருளில் பல நிலைகளில் பயன்படுத்தப் படுகின்ற சொல்லாக மருத்துவ நூல்களில் காணப்பகின்றன. என்றாலும், சித்தர்களில் ஒருவன் சிவன் என்னும் பெயரில் இருந்து வந்ததாகவும் அவனின் நினைவாக அவனுரைத்த மருந்து, ஞானம் ஆகியவற்றிற்கு அவனின் பெயர் விளங்க வழங்கி வருவதாகவும் கருத நேர்கிறது. சித்த மருத்துவத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு குழம்பிற்கு அகத்தியர் குழம்பு எனும் பெயர் வழங்கப் படுகிறது. அந்த மருந்து ஏனைய மருந்துகளிலிருந்து மாறுபட்ட மருந்தாகவும் எல்லா நோயையும் போக்கக் கூடிய மருந்தாகவும் உரைக்கப்படுவது நினைவிற் கொள்ளத் தக்கது.

பழந்தமிழ் நூல்களுள் மிகப் பழமைவாய்ந்தது, தொல்காப்பியம். அதன்கண் சேயோன், மாயோன், கொற்றவை என்பவையாகும். சேயோன் சிவந்த நிறமுடையவன். மாயோன் கரிய நிறமுடையவ திருமால். கொற்றவை திரிபுர சுந்தரி அல்லது முப்புறம் எரித்த அம்மை ஆகிய தெய்வங்கள் வழிபடப்பாட்டிற்குரியன எனக் குறிக்கப் பட்டுள்ளது.

குமரி நாட்டில் பஃறுளியாறு கடல்வாய்ப்படுமுன் இயற்றப்பட்டதுமான ‘காரிக்கிழாரின் புறப்பாட்டில்,
‘வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்’

என்று, தமிழகத்தின் எல்லையைக் குறிப்பிடுவதுடன்,

‘பணியிய ரத்தை நின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே’

என்று, சிவனுக்குத் திருக்கோயில் இருந்தது என்பதுடன், வழிபாட்டிற்குரிய தெய்வம் என்றும், நகரில் ஊர்வலமாகவும் எடுத்துவரப் பட்டது! என்றும், குறிப்பிடுகிறார்.
இச்செய்யுள் இன்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டிற்கு முற்பட்டது.

பெருங்கடுங்கோன், பாலைகலியில்,

‘முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்’

என்று, சிவன் முப்புறம் எரித்ததைக் கூறுவதையும் காண்க.

‘இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்’

என்று, குறிஞ்சிக்கலியும்,

‘மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ’

என்று, பரிபாடலும் கூறுகிறது.

‘புனையிழாய் ஈங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி
முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடைச்
சினைவாடச் சிறக்குநின் சினம் தணிந்து ஈக எனக்
கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ?’

என்று, கலித்தொகை (16: 9-12) கூறுகிறது.

புகைக்கப் பழகுகிறேன்!

புகைக்கப் பழகுகிறேன்!
~~~~~~~~~~~~~~~~~~

என்றோ ஒரு நாள்
எரியத்தான் போகின்ற
இவ்வுடம்பை வைத்துகொண்டு
என்னசெய்ய போகிறேன்?

கசந்து போகாமல்
கானல் நீராகப்
புகைந்து போகட்டும்
புகையாகிப் போகட்டும்!

சிறுகச் சிறுகவே
தீ மூட்டி எரியிட்டால்
சிதைக்குப் போகாத
சீமானாய்ப் போயிடலாம்!

திண்ணை கிடைக்காமல்
தெருவோரம் கிடக்கின்றேன்!
எவர் வந்து தீ வைப்பார்?
எவர் வந்து கொள்ளி வைப்பார்?

பாழாய்ப் போனவனைப்
பார்த்துத் துடிப்பதற்கு,
அழுது புலம்புதற்கு
அன்னை வரமாட்டாள்!

சிதையில் எரியாமல்
சீக்குப் பிடிகாமல்
சிறுகச் சிறுகவே
தீயாய்ப் போகட்டும்!

புகழ் மாலை சூடுதற்குப்
புகைக்கப் போகிறேன்!

சிதைக்குச் செலவு செய்ய
செல்லாக் காசில்லை!
செலவு மிஞ்சுமென்று
சிக்கனமாய்த் தீயிடுவேன்!

இறந்து எரிவதையும்
எவரும் காணாரே!
இருந்து எரிவதை நான்
இருந்திருந்து காண்பேனே!

எறும்பூறக் கல் மலையும்
இறந்து படுமென்ற
சொல்லும் பழுதில்லை!

என்பதுவும் உண்மையானால்,

சிறுகச் சிறுகவே
என் சிதைக்குத்
தீயூட்டப் போகிறேன்!

சொல்லாக் காசாகிச்
சீழ்பிடித்துச் சாகாமல்
சீக்காளிப் போலாகிச்
சீச்சீ என்றாரும்
சொல்லிச் சலிக்காமல்

எரியப் போகிறேன்!
பிகைப் பிடித்து
எரியப் போகிறேன்!

நானே
என்னுடலை
நன்றாய் எரியூட்டி

மரண வாசலையும்
நான்
மிதிக்காமல் எரிவேனே!

- இரவா - கபிலன்




"உடை, நகை, சிகை அலங்காரம்"








"உடல் சோதனை" 'Muscle testing'


*************************************************************************************
ஒவ்வொரு மனிதனின் உடலும் அவன் வாழ்க்கை குறித்த பல அரிய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள். இத்தகவல்களைச் சரியாகப் பயன்படுத்தி குணப்படுத்துவது எளிது என்கிறது applied kinesiology.

தசை சோதனை எனப்படும் muscle testing இத்தகவல்களைத் திரட்ட பயன்படுகிறது. இந்த சோதனை மிக எளிதானது. நமக்கு நாமே இந்த சோதனையை செய்துகொள்ளலாம் என்பது இதன் விசேஷம். ஒரு வாக்கியத்தை வாய்விட்டுச் சொல்லி அல்லது மனதில் நினைத்துக் கொண்டு குறிப்பிட்ட தசையின் பலத்தை சோதிக்கவேண்டும். நம் எண்ணம் சரி என்றால் தசைகள் பலமாகவும் தவறு என்றால் பல்வீனமாகவும் எதிர்வினை காட்டும்.

இந்த சோதனையின் மூலம் உடலுக்கு எத்தகைய சிகிச்சை தேவை என்பதையும் அலர்ஜி விளைவிக்கும் பொருட்களையும் அறிந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதே போல ஆழ்மனதிலுள்ள பிரச்சனைகளை இந்த muscle testing மூலம் கண்டறிந்து
மன அழுத்தத்தையும் குணமாக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த செயல்முறை அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை எனினும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது (மாற்று சிகிச்சை எதையுமே இன்னும் அறிவியல் ஒப்புக் கொள்ளவில்லை)

தசை சோதனை நடத்த பல வழிமுறைகள் இருந்தாலும் எளிதான ஒன்றை இங்கு பார்க்கலாம். இதனை நம்பாதவர்கள் இதனை ஒரு விளையாட்டாக செய்துபாருங்கள். நம்புகிறவர்கள் தயவு செய்து உங்கள் மருத்துவ சிகிச்சையைக் கைவிட்டுவிடாதீர்கள்.

இனி சோதனையின் செயல் முறை இங்கே:

இந்த சோதனை நம்பகரமாக அமைய உடலில் நல்ல நீரோட்டம் இருக்கவேண்டும். ஒரு கிளாஸ் நீரைக் குடித்துவிட்டு ஆரம்பிக்கலாம். உண்மையான சோதனைக்குச் செல்வதற்கு முன் சோதனை முன்னோட்டம் செய்து உடலின் நீரோட்டம் ஏதுவானதாக இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுதல் அவசியம்.

சோதனை முன்னோட்டம்:

1. வடக்கே பார்த்து நில்லுங்கள். உடம்பை நன்கு ஓய்வாகவும் தளர்வாகவும் வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள்

2. வாய்விட்டு 'என் முடியின் நிறம் பச்சை' என்று சொல்லுங்கள். (அதாவது ஏதாவது ஒரு பொய்யான கூற்றை வாய்விட்டு சொல்லுங்கள்)

3. உடல் முன் பக்கம் நகர்ந்தால்(சாய்ந்தால்) நீங்கள் முன்பு சொன்ன வாக்கியம் சரி என்கிறது உங்கள் உடல். பின்புறம் நகர்ந்தால் தவறு என்கிறது. எந்தப்பக்கம் நகர்கிறது என்று கவனியுங்கள்.

4. உங்கள் முடியின் நிறம் பச்சை இல்லை என்பதால் உங்கள் உடலில் சோதனைக்கு ஏதுவான சூழல் இருந்தால் உடல் பின்புறம் சாய்ந்திருக்கவேண்டும். அப்படி சாய்ந்திருந்தால் அதனை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள இதே போல மற்றொரு வாக்கியத்தைச் சொல்லி சோதித்துக் கொண்டு உண்மையான சோதனைக்கு முன்னேறுங்கள்

5. உங்கள் உடல் தவறாக எதிர்வினை காட்டியிருந்தாலோ அல்லது எந்த வித அசைவும் இல்லாதிருந்தாலோ நீங்கள் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு முறையில் உடலின் நீரோட்டத்தை அதிகரிக்கலாம்:

1. நீர் அருந்துதல்
2. கீழ் முதுகில் முதுகுத்தண்டின் இருபுறமும் நன்கு மசாஜ் செய்தல்
3. சிறிது உப்பைச் சுவைத்தல்
4. வாழைப்பழம் சாப்பிடுதல்

இவற்றைச் செய்துவிட்டு மீண்டும் முன்னோட்டச் சோதனையை நடத்துங்கள்

சோதனையின் பயன்பாடு:

நன்கு தெரிந்த விடைகளுக்கு உடல் சரியான எதிர்வினையை உருவாக்கி இருந்ததென்றால், உங்கள் உடல் மற்றும் வாழ்க்கை முறை குறித்த சோதனைகளை இப்போது நீங்கள் செய்து பதில்களை அறியலாம். உதாரணமாக,

1. உங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களைக் கண்டறிய '.------- என் உடலுக்கு நல்லது' என்ற வாக்கியத்தை உபயோகிக்கலாம். உடல் முன்னே நகர்ந்தால் அந்தப் பொருள் நல்லது எனவும் பின்னே நகர்ந்தால் அது ஒவ்வாது எனவும் அறியலாம். '..... என் உடலுக்கு நல்லதல்ல' போன்ற எதிர்மறை வாக்கியங்களை உபயோகித்தல் குழப்பத்தை விளைவிக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள். அதனால் நேர்மறை வாக்கியங்களையே உபயோகியுங்கள்

2. உங்கள் 3 வயதுக் குழந்தைக்கு தனக்கு என்ன செய்கிறதென்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதனை 'எனக்குத் தலை வலிக்கிறது' போன்ற வாசகங்கள் சொல்லச் சொல்லி சோதனை செய்யலாம்

3. ஆழ்மனதிலுள்ள எண்ணங்களை அறிய, 'நான் என்னை நேசிக்கிறேன்' போன்ற வாசகங்களை பயன்படுத்தலாம். உங்களை நீங்கள் நேசிக்கவில்லை என்று அறிந்தால் உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த முறையின் மூலம் அறியலாம்.

செய்து பாருங்கள். பயனளித்தால் லாபம். இல்லாவிட்டால் ஒன்றும் நஷ்டமில்லை.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - இது உங்கள் ஆழ்மனத்தோடு உரையாடும் ஒரு முறையே. எதிர்காலம் பற்றியோ அடுத்தவர் எண்ணங்கள் பற்றியோ இந்த முறை மூலம் அறிய முற்படுதல் தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மிக முக்கியமாக, தசை சோதனை காரணமாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் முறையான சிகிச்சை எதையும் கைவிட்டுவிடாதீர்கள்.

*************************************************************************

அழகுக் குறிப்புகள்

வெய்யில் காலங்களில் நம் முகம் சோர்ந்தும், எண்ணெய்ப் பசையோடும் காணப்படும். அதற்காக எல்லோரும் Beauty parlour போகமுடியுமா? இதோ எல்லா வயதினருக்கும் உச்சி முதல் பாதம் வரைக்கும் ஏற்ற டிப்ஸ்.

கண்:

நம் முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது நமது கண்களே. அக்கண்கள், பளிச்செனவிருக்க தினமும் இரவில் விளகெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப் பகுதி களில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும். அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் (rosewater) சேர்த்துத் தடவவேண்டும்.

உதடு:

உதட்டில் வெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தால் உதடு காய்ந்து போகாமல் இருக்கும்.

முகம்:

வெய்யில் காலங்களில் எண்¨ணெய்ப் பசை இல்லாமல் சருமம் பளிச்சென இருக்க இதோ சில குறிப்புகள்:

நிலை 1: முதலில் பால் ஏட்டை முகத்தில் தடவி, பஞ்சு மூலம் முகத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும்.

நிலை 2: பப்பாளி, ஆப்பிள் கலந்து முகத்துக்கு 10 நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும்.

நிலை 3: பிறகு துளசி, புதினா இலைகளுடன் தண்ணீரைக் கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும். (ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும்.)

நிலை 4: ஒரு முட்டைக் கரு, எலுமிச்சம்பழச் சாறு, தயிர், கடலை மாவு, எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

நிலை 5: கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தப்படுத்தவும் இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.

தலைமுடி:

1. பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் எடுத்துத் தலையில் தேய்க்கவும்.(பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணெய்யில் கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும்.)

2. பின் தலையை மசாஜ் செய்யவும்

3. 10 நிமிடங்கள் ஊறிய பிறகு, மருதாணி, டீ-டிக்காஷன் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு pack-ஆகப் போடவும்.(மருதாணி போடுவதால் முடியின் கலர் மாறாது. மருதாணி, டீ-டிகாஷன், தயிர் சேர்ந்த கலவையை இரவே ஊற வைத்துப் போட்டால்தான் முடி கலர் மாறும்.)

4. மருதாணி ஒத்துக் கொள்ளாதவர்கள் செம்பருத்தி இலையை உபயோகப் படுத்தலாம்.
இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மிருது வாகவும் இருக்கும்.

பாதம்:

பாதம் சுத்தமாகவும், மிருதுவாகவும் இருக்க தினமும் வெதுவெதுப்பான நீரில் உப்பு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து, குளிக்குமுன் 15 நிமிடங்கள் பாதத்தை அதில் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த தண்ணீரீல் சுத்தப்படுத்தவும்.

உடல் ஆரோக்கியத்திற்கு சில பொதுவான யோசனைகள்:

1. தினமும் நிறைய சீரகத் தண்ணீர் அருந்துங்கள்.

2. பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

3. பருத்தி ஆடையை அணியுங்கள்.

4. வெயிலில் வெளியில் செல்லும் போது sun screen லோஷன் உபயோகப்
படுத்துங்கள்.

5. மனதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளுங்கள்.

தேனீர் அருந்த வாருங்கள்

துளசி இலை டீ:

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம்பூ டீ:

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ டீ:

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி டீ:

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை டீ:

புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ:

கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

முருங்கைக் கீரை டீ:

முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.

குறிப்பு:

டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச் சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது. மேற்கண்ட இலைகள் மருத்துவக் குணம் கொண்டதால், அவற்றைத் தேனீராகப் பருகினாலும் அதன் மருத்துவக் குணம் மாறாமல் உடலுக்கு நன்மையைச் செய்யும் என்பதை உணர்ந்து , அவற்றைப் பயன் படுத்தி பயன் பெற வேண்டுகிறோம்.

சமையல் குறிப்புகள்


குழிப்பணியாரம்

செட்டிநாட்டு பலகாரங்களில் குழிப்பணியாரத்திற்கு தனி இடம் உண்டு. குழிப்பணியாரம் செய்பவர்கள் பொதுவாக இனிப்பு அல்லது காரம் இரண்டில் ஒன்றை மட்டுமே செய்வர். ஒருமுறை அரைத்த மாவிலேயே இனிப்பு, காரம் இரண்டையும் செய்தால், இரண்டு சுவைகளில் பலகாரம் கிடைப்பதுடன் வேலையும் எளிதாக இருக்கும். இரண்டு சுவையில் குழிப்பணியாரத்தை எப்படி செய்யலாம் என உங்களுக்கு படங்களுடன் விளக்குகின்றார் செட்டிநாட்டு மண்ணில் பிறந்து வளர்ந்து, தற்போது குவைத்தில் வசிக்கும் திருமதி. சித்ரா செல்லதுரை.

தேவையானப் பொருட்கள்

புழுங்கல் அரிசி - இரண்டு ஆழாக்கு
பச்சை அரிசி - இரண்டு ஆழாக்கு
உளுந்து - ஒரு ஆழாக்கு
வெந்தயம் - பத்து கிராம்
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் - ஐந்து
எண்ணை - ஐம்பது மி.லி
உப்பு - இரண்டு டீ ஸ்பூன்
வெங்காயம் - ஐந்து
ப. மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து

தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும். பணியாரம் சுடுவதற்கு சற்று முன்பு வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, உளுந்து, வெந்தயம் நான்கையும் ஐந்து மணி நேரம் ஊற வைத்து, அதிகம் தண்ணீர் விடாமல் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, சுமார் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். இதற்கு காலையிலேயே அரிசி ஊற வைத்து, மதியம் எடுத்து அரைத்து வைத்தால் மாலையில் புளித்த பின்பு பணியாரம் சுட சரியாக இருக்கும்.

புளித்த மாவினை இரண்டு பாகமாகப் பிரித்து, தனித்தனி பாத்திரங்களில் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு டீ ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வற்றைப் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

வெல்லத்தைப் பொடித்து ஐம்பது மில்லி தண்ணீர் விட்டு இளம்பாகு காய்ச்சவும். வெல்லம் முழுவதும் கரைந்து விட்டால் இறக்கி விடவும். அதில் ஏலக்காயை பொடித்து போடவும். புளித்த மாவை இரண்டு பாத்திரத்தில் பிரித்து வைத்து ஒன்றில் வெல்லப் பாகையும்,மற்றதில் வெங்காயக் கலவையையும் போட்டு நன்றாக கலக்கவும்.

அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து குழிகளில் லேசாக எண்ணை விட்டு முதலில் இனிப்பு மாவை முக்கால் குழி வரும் வரை ஊற்றவும்.

பிறகு மூடி வைத்து ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.

இதே போல் அடுத்து கார மாவை ஊற்றவும். சட்டியில் சிறிது எண்ணெய் தடவி விட்டால் எடுப்பதற்கு எளிதாக இருக்கும். நான் ஸ்டிக் பணியாரச் சட்டிகள் தற்போது கடைகளில் கிடைக்கின்றன.

இப்படி மாற்றி மாற்றி ஊற்றி எடுக்கவும். மிகவும் கருக விடாமல், பதமாக வெந்ததும் எடுத்துவிடவும்.
சூடாக இருக்கும் போதே தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

இந்தக் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கி, அதன் செய்முறையையும் படங்களுடன் விளக்கி யுள்ளவர், குவைத்தில் வசிக்கும் திருமதி. சித்ரா செல்லதுரை அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக நூற்றுக்கும் மேலான செட்டிநாடு மற்றும் பாரம்பரிய தமிழ் உணவுகளை வழங்கியுள்ள இவர், தொடர்ந்து ஏராளமான குறிப்புகளை படங்களுடன் உங்களுக்கு தர இருக்கின்றார்.

சமையல் குறிப்புகள்

அடை


தேவையானப் பொருள்கள்

ப. அரிசி - நூறு கிராம்
பு. அரிசி - நூறு கிராம்
பாசிப் பருப்பு - நூறு கிராம்
கடலை பருப்பு- நூறு கிராம்
துவரம் பருப்பு- நூறு கிராம்
உளுந்து - நூறு கிராம்
வர மிளகாய் - ஐந்து
பூண்டு - இரண்டு பல்
சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
சி. வெங்காயம் - இருநூறு கிராம்


செய்முறை


முதலில் அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தனியாக ஒரு கிண்ணத்தில் வரமிளகாய், சோம்பு இரண்டையும் ஊற வைக்கவும். சி. வெங்காயத்தை மிக நைசாக நறுக்கவும். அரிசி, பருப்பு கலவை நன்கு ஊறியதும் நன்றாக கழுவி உப்பு, ஊற வைத்த மிளகாய், சோம்பு, பூண்டுப் பல் சேர்த்து கிரைண்டரில் போட்டு ஐந்து நிமிடம் அரைக்கவும். வழிக்கும் நேரத்தில் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றியதும் வழித்து எடுக்கவும். வெங்காயத்தை மாவுடன் நன்கு கலக்கவும் தோசைக் கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை வைத்து தோசை போல் ஆனால் சிறிது கணமாக பரப்பி விடவும். சுற்றி எண்ணை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

அடை மாவில் விரும்பினால் எதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கிப் போடலாம். இது தேங்காய் சட்னியுடனோ வெல்லத்துடனோ சாப்பிட மிக சுவையாக இருக்கும்.


தேங்காய் சட்னி

தேவையானப் பொருட்கள்

தேங்காய் - அரை மூடி
பொட்டுக் கடலை - இரண்டு டேபிள் ஸ்பூன்
ப. மிளகாய் - மூன்று
பூண்டு பல் - ஒன்று
சி. வெங்காயம் - ஒன்று
இஞ்சி - மிக சிறிய துண்டு
உப்பு - ஒரு டீ ஸ்பூன்
எண்ணை - ஒரு டீ ஸ்பூன்
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து

செய்முறை

முதலில் தேங்காயை துருவி, அந்த துருவலுடன் பொட்டுக் கடலை, ப. மிளகாய், இஞ்சி, சி. வெங்காயம், பூண்டுப் பல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை கொட்டி அரை டம்ளர் தண்ணிர் ஊற்றி நன்கு கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு சட்னியில் கொட்டி இறுக மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்துத் திறந்து பரிமாறவும்.

சமையல் குறிப்புகள்

காரா பூந்தி

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – கால் கிலோ
அரிசி மாவு – நூறு கிராம்
உப்பு – ஒரு டீ ஸ்பூன்
உடைத்த நிலக்கடலைப் பருப்பு – ஐம்பது கிராம் கறிவேப்பிலை – மூன்று கொத்து மிளகாய் (அல்லது) மிளகு பொடி – ஒரு டீ ஸ்பூன் எண்ணை – அரை லிட்டர்



கடலை மாவு, அரிசி மாவு, உப்பு மூன்றையும் இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும் அடுப்பில் கடயை வைத்து எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.

மாவை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் எண்ணைக்கு நேராக பூந்திக் கரண்டி அல்லது ஏதாவது கண் உள்ள அரிகரண்டியைப் பிடித்துக் கொண்டு அதில் ஊற்றவும். பூந்தி மேலே எழும்பி நன்றாக வெந்ததும் (அமுக்கிப் பார்த்தால் அமுங்கக் கூடாது) அரித்து எடுக்கவும்.

பூந்தி உருண்டையாக விழவில்லயென்றால் சிறிது கடலை மாவு சேர்க்கவும்.பூந்தி முழுதும் தயாரானதும் ஒரு பாத்திரத்தில் வைத்து கறிவேப்பிலை, நிலக்கடலையை எண்ணையில் பொரித்து அதில் போடவும். பிறகு மிளகாய் தூளைப் போட்டு நன்றாக குலுக்கி வைக்கவும்.

நல்ல கரகரப்பான பூந்தி தயார்.

பூந்தி ரெய்தா

தேவையான பொருள்கள்:

காரா பூந்தி – நூறு கிராம்
எண்ணய் – ஒரு டீ ஸ்பூன்
கடுகு & உளுந்து – ஒரு டீ ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
வெங்காயம் – ஒன்று
ப. மிளகாய் – ஒன்று
தயிர் – கால் லிட்டர்
உப்பு – ஒரு டீ ஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன்


மிளகாய், வெங்காயத்தை மிகப் பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு & உளுந்து தாளித்து மிளகாய் போடவும். வாசனை வந்ததும் கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் போட்டு தயிரை ஊற்றி அடுப்பை அனைக்கவும்.

பூந்தியை ஒரு பாத்திரத்தில் போட்டு தயிர் கலவையை அதில் உற்றவும்.
வெங்காயம் போட்டு கிண்டி விட்டு மேலே மல்லி இலை தூவவும்.

அழகின் அழகு





காலம் காட்டும் மணம்


சங்க கால மகளிர் மாலைப் போதை அறிய மலர்மலர்ந்து மணங்கூட்டுவதை நுகர்ந்தறிந்து கொண்டனர்! என்பதற்கு, 'நெடுநல் வாடை' சான்றாக அமைகிறது. இதோ அவ்வரிகள்.


'வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பனைத்தோள்
மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,
பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழ, பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்த்தி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர' - (நெடுநல்வாடை 36 - 44)

விளக்கம்:
மகளிர், வெண்ணிறச் சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள் செறிந்த முன்கையுடையவர், மெத்தென்ற, மூங்கில் போன்ற தோள்களையுடையவர், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளாலும் உணர்ப்படும் மென்மைத் தன்மையாகிய சாயலையுடையவர்; முத்துப்போன்ற பல்லினை உடையவர்; பொலிவுடைய மகரக்குழை அணிந்த காதின் அழகிற்குப் பொருத்தமாக விளங்கும் குளிர்ந்த நோக்கம் கொண்ட அழகிய கண்களையுடையவர். பெண்களுக்கு இயல்பாகிய மடமைக் குணத்தைக் கொண்டவர். இம்மகளிர், பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லையின் அரும்புகளை, அழகிய பூந்தட்டுகளில் இட்டு வைத்திருப்பர். அவை, மலர்ந்து மணம் வீசுவதைக் கொண்டு, மாலைக் காலம் வந்தமையை அறிவர். இவ்வந்திப் போதில், இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில், நெய் தோய்த்த திரியைக் கொளுத்துவர். நெல்லையும் மலரையும் தூவிக் கை கூப்பி இல்லுறை தெய்வத்தை வழிபடுவர். வளம் நிறைந்த ஆவண வீதிகளில் மாலைக் காலம் இவ்வாறு கொண்டாடப் பட்டது.

அழகின் அழகு





தமிழிசை


தமிழ்நண்பர்களே,


சுதா ரகுநாதன் பாடக் கேட்கலாம்:

http://kelpidi.blogspot.com/2006/06/blog-post.html

பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல் இது. இதனைப் படித்திருக்கிறேன்.
ஏதோ ஒரு பழைய திரைப்படத்திலும் கேட்டிருக்கிறேன். அண்மையில்
வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது கர்நாடக இசை வடிவில்
இந்தப் பாடலை இருவர் பாடியிருப்பதைப் பார்த்தேன். அருமையாக
இருக்கின்றன. அவற்றை இங்கே கேளுங்கள்.

இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்தலைப்பு:
பெற்றோர் ஆவல்பாடியவர்கள்: நித்யச்ரீ, சுதா
இரகுநாதன்

இராகம்: தேஷ்தாளம்: ஆதி, ஏகம்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே
ஒருசொல்இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா?
துன்பம்...


பருவக் காற்றைக் கண்டு பிடித்தது தமிழனா? கிரேக்கனா?

தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள்.இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள்,கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத் தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் žசர் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹ’யான் முதலிய žன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர்.டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு,குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிர மாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.

பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத்தர வில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி'' நடைபெற்ற கப்பல் போக்குவரத்துத் தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹ’ப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்த தென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.

வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத் தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர் களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!'' என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.

இப்பொழுது ஒரு கேள்வி எழும். கரிகால் வளவனின் காலம் என்ன? கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ’ன் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?

கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ் இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2ம் நூற்றாண்டு). மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது. (முக்கியச் சொற்களின் பொருள்: - வளி - காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)

கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னர் காலத்தில் இந்த வழக்கம் பெரிதும் அதிகரித்த தென்று முன்னர் கண்டோம்.அவன் இயேசு கிறிஸ்துவுக்குச் சம காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன். ஆகவே கிரேக்கர்களுக்கு முன்னரே பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல் விட்டது தமிழன் தான் என்று அடித்துக் கூறலாம்.

பழந்தமிழ் இலக்கியத்தில் மேலும் பல இடங்களில் இதே போன்ற குறிப்புகள் வருகின்றனயவனர்கள் பற்றிய பலகுறிப்புகளும் உள்ளன.

''கப்பல்'' என்ற தமிழ்ச் சொல் கூட உலகெங்கிலும் வெவ்வேறு வகையில உருமாறி வழங்குகிறது கப்பல் - skip - ship

ஜெர்மானிய மொழியில் ''ஸ்கிப்''என்றும் ஆங்கிலத்தில் ''ஷ’ப்'' என்றும் உருமாறி விட்டது தமிழ்ச் சொல் கப்பல்!

''கட்டமரான்'' (catamaran) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்ஸ’கோவில் பயன்படுத்துகின்றனர். மெக்ஸ’கோவில் மாயா, இன்கா, அஸ்டெக் போன்ற பழம் பெரும் நாகரீகச் சின்னங்களை இன்றும் காணலாம்.

''நாவாய்'' (படகு, கப்பல்) என்ற சொல்லும் தமிழ் அல்லது வட மொழியில் இருந்து உலகம் முழுதும் சென்றது.

நாவாய் - NavY - Navy

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், ''எல்லாளன்'' என்ற சோழ மன்னனின் அறநெறி ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இது ''ஏழாரன்'' (ஏழு மன்னர்களை வென்று ஏழு ஆரம் அல்லது ஏழு மணி முடிகளை அணிந்தவன்) என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். சிலர் இந்தச் சோழ மன்னனைக் கரிகாலனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏனெனில் இருவரின் காலமும் ஏறத்தாழ ஒன்று தான். எல்லாள மன்னனின் கதை மனுநீதிச் சோழன் கதை போலவே உள்ளது. ஒரு பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தேரின் சக்கரத்தில் வைத்துக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகியவை கூறுகின்றன. ஆனால் இருவரும் ஒருவரா என்று அறிய மேலும் ஆராய வேண்டும். சோழ மன்னர்கள் இலங்கை, மற்றும் ஜாவா, சுமத்ரா (தற்கால இந்தோனேஷ’யா) வரை கடலில் சென்று வென்றனர்.

கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன. இவைகளில் மிகவும் பழமையான இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ''ஸ்ரீமாறன்'' என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் அங்கு சென்ற பாண்டிய மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இவன் கடலில் செல்லும் போது உயிர் நீத்தவன் என்பதை அவனுடைய பெயரே கூறிவிடும்.

தமிழர்களின் கடலாட்சிக்கு ஏராளமான சான்றுகள் இருப்பினும் முதலில் பருவக் காற்றைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியது தமிழனே என்பதற்கு இந்தச் சான்று களே போதும் அல்லவா?

தமிழ் மன்றம்

தமிழகம் கண்ட சமயப் பொறை

உலக மொழிகளுள் காலத்தால் வரையறுக்கப்படாதும், உயர்தனி மொழியாய் விளங்குவதும், இனிய நம் தமிழ்மொழியே ஆகும்.

தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியநூல்கள் பற்பல.அவற்றில் சமயத் தொடர்பான இலக்கியங்கள், பல்வேறுசமயப் புலவர்களால்காலந்தோறும் சமைக்கப்பட்டுள்ளன. இப்பரந்த உலகிடைத் தோன்றிய மனிதன் தான் வாழும்சூழ்நிலைக்கு ஏற்பப் பல்வேறு மொழிகளைத் தோற்றுவித்தான்.

அவற்றுள் சில நன்கு வளர்ச்சியடைந்துள்ளன. சிறப்பு அடைந்துள்ள மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று.
சமய இலக்கியங்கள் நிரம்பிய சுந்தர மொழி, தமிழ் மொழி.

'' உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே...''

என்று தொல்காப்பியம் கூறும்.
சாதாரண மனிதன் - உயர்ந்தவனாக சிறந்தவனாக மேம்பட்டவனாக ஆவதற்கு ஆவன செய்வது சமயம்.

அதோடு சமயத்தின் அறநெறி - உலக வாழ்க்கையோடு மத வாழ்க்கையும் அணைத்து மேற் செல்ல உய்கதி பெறவழி காட்டுகிறது.
சமூகத்தில் மனிதன் சில கொள்கைகளை ஏற்பதினாலும் அவற்றில் நம்பிக்கை வைப்பதினாலும் ஒரு மேலான நிலைக்கு ஆளாகிறான்.
அதற்குக் காரணமாக அமைவது சமயமே. சமயத்தினை சார்ந்து வாழ்பவன் ஆதலால் சமயத்தினைச் சார்ந்து ஒழுக்கமானவன் ஆகின்றான். இன்ப துன்பங்களை ஏற்பதால் அவனது மனம் மாறுகிறது. ஒவ்வொருவனும் கொள்கைவாதியாக மாறுவதால் ஒழுங்கான மனிதனைச் சமயம் உருவாக்கிக் காட்டுகின்றது.

நமது சமயம் விஞ்ஞானத்தால் உணரமுடியாத மெய்ப்பொருளாகத் தனது மெய் ஞானத்தால் இனிது இயம்புகிறது. தெய்வீகமான கருத்துக்களைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப் பதால் அது மறை எனப் பெயர் பெற்றது. நமது சித்தாந்தம் அறிவியல் நோக்கில் மெய்ப் பொருளை நிலைநிறுத்தம் உண்மைகளின் முடிபு. அறிவால் உண்மைகளை பூவினுள் மணம் போல் கொண்டுள்ளது.

''அண்டப் பகுதியின் உண்டைப்பிறக்கம் அளப்பருந்தன்மை வளப் பெருங்காட்சி ''
என்று மாணிக்க வாசகர் கூறுகிறார்.

முன்னோர்களின் அனுபவத்தில் தோன்றிய நெறிகள் பின்னோரின் வாழ்க்கைப்பாதைக்கு வழிகாட்டின..

சமயம் என்னும் சொல் பொருளுடையது. சமைத்துப் பக்குவப்படுத்தல் என்னும் பொருளில் சமயம் என்னும் சொல் தோன்றியது. கொள்கை, கோட்பாடு, குறிக்கோள் என்னும் பொருளில் சமயம் அமைந்தது. மனித வாழ்க்கைப் பயணத்திற்கு வழியாக அமையக்கூடிய காரண அடிப்படையில் நெறி, வழி ஆகிய சொற்கள் அமைந்தன. சமுதாயக் கூட்டுவாழ்க்கைக்கு மனிதன் பண்படவேண்டும். தனி மனித வாழ்க்கையாகிய விலங்கு வாழ்க்கையிலிருந்து மனிதன் பண்பட வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்துக் காட்டிய நெறிகள் துணையாக அமைந்தன.

உணவு பொருளை நேரடியாக உண்ணாமல் சமைத்த பிறகே அவற்றை அவித்து,வேகவைத்து உண்ணுகிறோம். அது போல் பக்குவ மில்லாத-பண்பில்லாத விலங்காக வாழும் மனிதனைச் சமைத்துப் பக்குவப்படுத்த தோன்றியவை சமயம்.

'' ஒன்றே குலம் ஒருவனே தேவன் ''

என்பது திருமுலர் வாக்கு.

மனிதன் தன் வாழ்வு வளம் பெறவும், மாக்கள் தன்மையிலிருந்து விடுதலை பெற்று ,மக்கள் தன்மை பெறவும் செய்யப் பட்டது.அதனை வேறு வகையில் சொன்னால் , மனிதனை பண்பாடு உடைவனாக ஆக்குவது சமயம்.
அனைத்திற்கும் ஆணி வேராய் அமைந்த ஒன்றை அறிகிறான். அவ்வறிவுக்கு அப்பாற்பட்ட ஒருபொருள் உண்டு என்பதையும் அறிகிறான். ஐம்பூதங்களை வணங்கியவர்களை அவைகளுக்கு அப்பாலும் இறைவன் உண்டு என்று நெறிப்படுத்தியதே சமயம். அவை அனைத்தும் ஒரு வரன் முறைக்கு உட்பட்டு இயங்குவதையும் காண்கிறான். சமயம் என்பது வெறும் குறிகளும் , அடையாளமும் அன்று. சமயம் என்பது அவற்றை கடந்து நிற்பது.

குறிகள், அடையாளங்கள் என்று எதனையும் போற்றாமல் ஒருவன் சிறந்த சமயவாதியாக வாழ முடியும். மனித மனத்தின் மாசை அகற்றி, பண்புடையவனாய், ஒழுக்கம் உடையவனாய், பிறர்க்குப் பயன்படுபவனாய் வாழ முற்படுவதே சமய வாழ்க்கையாகும். அவற்றிக்கும் அப்பால் அனைத்தையுங் கடந்து நிற்கின்ற ஒன்றை - கடவுள் என்ற ஒன்றை மனதில் கொண்டு வாழ்பவனே சமயவாதியாவான்.எனவே, கடவுள்- மனித வாழ்வு என்ற இவை இரண்டிற்கும் உள்ள தொடர்பு ,வாழ்விலிருந்து கடவுளை அடையும் நெறி மார்க்கங்களை தெளிவுப்படுத்துவதே சமயம். மனிதரை நெறிப் படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய சமயநெறி. அவற்றின் நடைமுறையால் மாறுபட்டு முரண்பட்டுபோயின.

உண்மையில் சமயம் என்பது தூயவாழ்க்கை முறை. மனிதனை நெறிப் படுத்திப் பக்குவப் படுத்தும் வாழ்வியல் அனுபவமுறை.மனிதனுடைய குறை நீக்கத்திற்கும்,நிறை நல பேற்றிக்கும் சமய வாழ்க்கையே துணை செய்யும். புலன்களை பக்குவப்படுத்தும்; தூய்மை யடையச் செய்யவும்; இன்ப அன்பு கனியும், அருள் பெருகும். ஆகவே, சமயங்கள் அன்பை மையமாக் கொண்டது.

"ஆருயிர்க் கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்னும் வள்ளலார் காட்டிய வாழ்வு நெறி. ''

அன்பு சிவம் ரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தார் [ திருமந்திரம் -270]

என்னும் திருமந்திரப் பாடல் இவ்வுண்மையை உணர்த்தும். சமயங்கள் பல.

''பொங்குபல சமயமெனும் நதிகள் எலாம்புகுந்து கலந்திட நிறைவாய்ப்
பொங்கி ஓங்கும்கங்குகரை காணாத கடலே ..''—

என்பது வள்ளாலார் வாக்கு.

ஆறுகள் எல்லாம் எங்குத் தோன்றினாலும். எத்திசை நோக்கி ஓடினாலும், முடிவில் கடலினையே சென்றடைவது போல உலகத்தில் தோன்றிய சமயங்கள் எல்லாம் முடிவில் பரம்பொருளினிடத்தே சென்றடைகின்றன.என்பது அவ்வருளாளர் தம் கருத்து.

சைவம், வைணவம், பெளத்தம், கிறித்தவம், சமணம், இஸ்லாம் என்னும் பற்பல சமயங்கள் தமிழிலக்கிய உலகில் காணப்படுகின்றன. அவை காட்டும் நெறிவழிச் சென்றால்,முடிவில்

''பரம்பொருள் ஒன்றே ''

என்ற கருத்திலேயே நிறைவுறுகின்றன.

மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு இச்சமயங்கள் எல்லாம் தத்தம் கருத்துகளைத் தெரிவிக்கின்றன. இலக்கியங்களும் சமயங்களும் சமுதாயத்தில் இருந்து முகிழ்க்கின்றன;சமுதாய வாழ்வியலிருந்து வெளிவருகின்றன. இதனால் அந்தந்தக் காலத்து மக்களின் ஒழுக்க முறைகளை, பழக்க வழக்கங்களை, பண்பாடுகளைத் தெற்றென விளக்குவன இலக்கியங் களூள் சமயங்களுமே என்பதை அறியலாம். பெரும்பாலான இலக்கியங்கள் காட்டும் சமயப் பொறையினைக் கண்டு தெளிந்து, வாழ்வியலைமேற்கொள்ள வேண்டியது இக்கால இளையர் களுக்கு இன்றியமையாத தேவையும் சேவையுமாகும்.

தொல்காப்பியர் காலத்துச் சமயப் பொறை.வேறுபாடுகளைக் கடந்து மனித குலப் பொதுமையை நமது சமயம் வலியுறுத்தியது.

''யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா ''

என்னும் கணியன் பூங்குன்றனார் பாடல் உண்மை சமய நெறியை உணர்த்துவது.

அடுத்து திருக்குறளிலும் தனியரு சமயத்தின் சாயல் இன்றிக் கடவுள் கொள்கையும்,சமயமும் பேசப்படுகிறது.குறிப்பிட்ட ஒரு சமயத்தின் சாயல் பெறாமல் கடவுட் கொள்கைபற்றி பேசும் ஆதி நூல் தொல்காப்பியம். அதில் சமயம் இடம் பெறுகிறது. மக்கள் வாழ்வினை ' அகம் 'என்றும் ' புறம் ' என்றும் வகுத்துப் பல்வேறு செய்திகளைத் தொகுத்து சொல்வதால் வாழ்வியல்கூறும் இலக்கிய மாகவும் இருக்கிறது.
தொல்காப்பியர் காலத்தும், அவர்க்கு முந்தைய காலத்தும் இறைவனை வழிபடும் முறை இருந்துள்ளது. அக்காலத்து மக்கள், ஐம்பூதங்களையும், முருகன், திருமால், கொற்றவை முதலான வழிபாடு செய்தனர் என்பதையும்..,

'' மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் ''( தொல். அகத் .5)

இப்பாடல் மூலம் அக்காலத்தில் பல கடவுளரை வணங்கும் நிலை இருந்தது என்பதையும், அவர்களுக்குள் ' சமயக்காழ்ப்புணர்ச்சி ' இல்லை என்பதையும் அறியலாம்.சமயக் கருத்து வேறுபாடு நிலவிய காலத்தில் மக்களை, அறவழிக்குட்படுத்த எழுந்தவையே நீதி இலக்கியம்.

அவ்வகையில் ' திருக்குறள் ' முதன்மையானது. ''ஆதி பகவன் முதற்றே உலகு'' என்னும் திருக்குறள் ' இறைவன் ஒருவனே ; அவன்தான் பரம்பொருள் ; முழுமுதற் பொருள் '' என்று குறிப்பிடுகிறது. ' கடவுள் வாழ்த்து' ப்பகுதியில் சமயப் பொதுமை நிலையில் இறைவனின் திருவடிச் சிறப்பையே சுட்டுக்காட்டியுள்ளார். திருவடி வழிபாடு, திணை, பால் கடந்த பொதுமை வழிபாடாகும்.

ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பாடிய 'திருவடித்தாண்டமும்''பதினைந்தாம் நூற்றாண்டில், அருணகிரி பாடிய 'சீர்பாத வகுப்பும் ' பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் பாடிய ' திருவடிப் புகழ்ச்சியும்' அமைந்து சமயப் பொறையை வலியுறுத்துகின்றன. இறைவனிடத்து மனிதன் வேண்டுவது என்ன என்பதை பரிபாடல் ஒன்று சிறந்த முறையில் கூறுகிறது.

''பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின் பால் அருளும் அன்பும் அறனும் ஒலி தாரோயே '' – என்கிறது.
பயன் கருதாத வழிபாட்டை வேண்டி, ' அன்பும், அறனும் அருளும் ' மூன்றும் வேண்டும் என வேண்டி விழைவது சமயம் .

தமிழ் மொழியைப் பொறுத்த மட்டில் அளவை களின் உதவி கொண்டு சமயத்தை நிறுவுவதைக் காட்டிலும் அகத்தே நிகழும் உணர்வுகொண்டே சமயத்தைப் பரப்பும் நூல்களே மிகுதியாகும்.

அதனால்தான் போலும்,சமய இலக்கியம் என்ற பெயரில் பக்தி இலக்கியங்களே தமிழில் மிகுதியாக தோன்றின. உலக மொழிகளில் பக்தி இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், முதல் இடம் தமிழுக்குத்தான். இரண்டாவது இடம் ஹீப்ரூ மொழியும்,மூன்றாவது இடத்தை சமஸ்கிருதமும் இடம் பெறுகிறது. வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்த சில நூல்களும் உண்டு.

அன்பின் வழியே , ஆண்டவனை அடையமுடியும் என்கிறது நமது சமயம். அந்த அன்பென்னும் பிடியுள் அகப்படும் மலையே! அடிப்படையை மனத்தில் கொண்டு பார்த்தால் , தோத்திரங்கள் அதிகம் தோன்றியதற்கு உரிய காரணத்தை ஒருவாறு அறிய முடியும். என்றாலும் தமிழில்தோன்றிய பேரிலக்கியங்கள் அனைத்தும் சமயத் தொடர்புடையது.

பிறமொழிகளில் பல்வேறு துறையில் இலக்கியம் உண்டு. அவற்றுள் சில சமயம் பற்றியும் இருக்கும். ஆனால், தமிழ் மொழியில் இலக்கியம் என்ற பெயரைப் பெறக்கூடியவை அனைத்தும் சமயத் தொடர்பு உடையனவாய் இருத்தல் அரிதற்குரியது.சமயத் தொடர்பற்ற நூல்கள் தமிழிலும் தோன்றி இருக்கலாம்.ஆனால், அவற்றிக்குக்காலத்தை வென்று நிலைபெறும் வன்மை இல்லைபோலும். பேரிலக்கியங்கள் ஒரு புறம் இருக்கச் சிற்றிலக்கியங் களாகிய பிள்ளைத்தமிழ் , குறவஞ்சி , பள்ளு , உலா ஆகியவைகள் சமயத் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது. ஆதலால்தான் 'சமயமின்றி தமிழில்லை ' என்று கூறுவது பொருள் பொதிந்த மொழியாக அமையக் காண்கிறோம். காப்பிய இலக்கியங்கள்.காப்பிய இலக்கியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், சீவக சிந்தாமணி போன்ற குறிப்பிடத்தக்க இலக்கியங்கள் அந்தந்தக் காலத்துச் சமய பொறையினை எடுத்துக் காட்டுகிறது எனக்கூறலாம்.

சிலப்பதிகாரம் ஒரு முத்தமிழையும் எடுத்துக்கூறும் தலைமை காப்பியமாகும்.அதன்சிரியர் ஒரு இளங்கோவடிகள், ஒரு சமணர். ஆனால், சிலப்பதிகாரத்தில் சைவம், வைணவம், பெளத்தம் முதலிய சமயங்களையும் எடுத்து கூறுவதன் மூலம் சமயச் சார்பற்ற காலமாகச் சிலப்பதிகாரம் இருந்துள்ளமையை அறியலாம். சைவ சமயக் கடவுள் சிவனைப் பற்றிப் பல இடங்களில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். மதுரை காண்டத்துள் வேட்டுவ வரியில், ''சிவனுக்கு நெற்றிக்கண் உண்டு என்பதையும்,தேவர்களுக்காக நஞ்சுண்டு நீலகண்டன் ஆனான் என்பதையும், வாசுகியை நாணாகவும், இமயத்தை வில்லாகவும் கொண்டு திரிபுரத்தை எரித்தான் என்றும், கொன்றை மாலையைத்த்ரித்தவன் '' என்றும் கூறப்படுகிறது. மேலும் சிவனை..,'' பிறவா யாக்கை பெரியோன்...'-என்று போற்றுகிறது.வைணவ சமயக் கடவுள் திருமாலைப் பற்றிச் சிலம்பில், ஆய்ச்சியர் குரவையிலும், காடுகாண் காதையிலும் காணலாம். ஆய்ச்சியர் குரவையுள்,'' கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்...''என்ற குறிப்பும், திருமாலின் பெரிய கோயில் எனப்படும் ' திருவரங்கம் ' பற்றிய குறிப்பும்,திருமால் திசேடன் மீது பள்ளி கொண்டுள்ளான் என்ற குறிப்பும் 'காடுகாண் காதை 'யில்காணப்படுகிறது.மேலும் அவனுடைய திருவுருவ நலன்களும், அவன் யுதங்கள் ஏந்தி நிற்கும்திறமும்,நின்ற கோலமும்,கிடந்த கோலமும் கூறப்பட்டுள்ளன.சிலம்பின் கதை மாந்தர் சிலர் சமணக் கதை மாந்தர் களாகவே வந்துள்ளனர்.கவுந்த அடிகள், மாங்காட்டு மறையோன் முதலானோரைக் குறிப் பிடலாம். சமயத்தால் சமுதாயம் வேறுபாடு கொள்ளாமல் வாழமுடியும் என்று காட்டி யுள்ளார்.வைணவக் காப்பியமான கம்ப இராமாயணத்தில் பிற சமயக் கடவுள் பற்றியும் கூறுகின்றது.இக்காப்பியத்துள் இராவணன்,வாலி முதலானோரைச் சைவ சமயக் கடவுளான சிவனின் பக்தர்களாகவே படைத்துள்ளார். வாலியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது,'' பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும்அஞ்சலித்து அறியாச் செங்கை '' உடையவன் என்றும், ' அட்டமூர்த்தி தாள் பணியும் அன்பன் ' என்றும் குறிப்பிடுகிறார். இராவணைனைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ' சிவபெருமானால் முக்கோடி வாழ்நாள் வழங்கப் பெற்றவன் ' என்றும், ' துள்ளுநீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் 'என்றும் குறிப்பிடுகிறார்.மேலும் சிந்தாமணி,மணிமேகலைமுதலிய காப்பியங்களும், சமயக் காழ்ப்பற்ற நிலையினை விளக்க பல தெய்வங்களைக் குறிப்பிடுகின்றன. காப்பிய உலகில், குறிப்பிட்ட ஒரு சமயச் சார்பற்ற நிலையினை உணர்த்தி,புதிய சமுதாயமாக, சமய காழ்ப்பற்ற சமுதாயத்தை ஏற்படுத்தவே நமது முன்னோர்கள் முயன்றுள்ளார்கள்.அருளாளர்களின் சமயப் பொறைமனித இனத்தைத் தீமைகளிலிருந்து விலக்கி நல்வழிப்படுத்துவதற்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் அருளாளர் கள், பெரியோர்கள் பலர் தோன்றியுள்ளனர்.அவர்கள் எல்லாம்சமுதாயத்திற்குச் சமயம் தேவை என்றும் ' பரம்பொருள் ஒன்று, அதனை அடையும் வழிகளே இச்சமயங்கள் ' என்றும் எடுத்துரைத்துள்ளனர்.'' ஒன்றே குலமும் , ஒருவனே தேவனும்ஒன்றது பேரூர், வழியாறு அதற்குள...''என்று திருமூலரும்....,'' யாதொரு தெய்வம் கொண்டீர் ;ஆங்கே அத் தெய்வமாகி மாதொரு பாகனார்தாம் வருவர் ..''--என்று அருணந்திச் சிவாச்சாரியாரும்..,'' அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ஆனந்த பூர்த்தி யாகி அருளடு நிறைந்தது...''- என்று தாயுமானவரும்...,'' சாதியிலே மதங்களிலே சமய நெறி களிலேசாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் !அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழ கலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே ..''-- என்று வள்ளலாரும்..,'' அரியலால் தேவி யில்லை ஐயன் ஐயாற னார்க்கே...''-என்று அப்பர் பெருமானும்,'' அரியும், சிவனும் ஒண்ணுஅறியாதவன் வாயில் மண்ணு..''என்ற பழமொழியாலும்,அரியையும்,சிவனையும்,சங்கரநாயாரண மூர்த்தமாகவழிபடும் முறையாலும் காணலாம்.தற்கால இலக்கியங்களில் என்றதும் பாரதி , பாரதிதாசன் நினைவு நமக்கு வருகிறது.'' எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பாயானும் வந்தேனொரு சித்தன் இந்த நாட்டில்..'எனப் படுவதால் அவரும் தம் ன்றோர் நெறிவழியே சமயச் சார்பற்ற உலகினை உருவாக்க நினைத்தார் என்பதனை,''ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடிஅலையும் அறிவிலிகாள் !'' -- என்பதன் வாயிலாக அறியாலம்.இவ்வாறு பாடலால் சமய வேறுபாடற்ற சமயப் பொறையுடைய சமுதாயத்தை உருவாக்கியவர்களாக திகழ்ந்துள்ளனர். இவைகளை தொல்காபியர் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரைசமய வேறுபாடற்ற ஒரு சமூகத்தினை நாம் தமிழிலக்கியங்களில் வாயிலாக அறிய முடிகிறது.

தமிழக வரலாற்றில் சோழர்கள்


தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்பது ஆராயத்தக்கது. உலக்கை - ஒலக்கையாக மாறலாம் என்றால் 'சூழ' - 'சோழ' வாக மாறியதில் வியப்பில்லை.

தமிழ் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு முக்கியம் என்று இப்போது தெரிந்திருக்கும். சமஸ்கிருதத்தில் 'திருடன்' என்றும் சொல்லுவதுண்டு. சோழர்க்குறிய பெயர்களில் 'கிள்ளி வளவன்' பிரபலமானது. ஆராய்ந்தால் "கிள், தோண்டு, வெட்டு" என்னும் பல பொருள்களைக் குறித்து "நிலத்தைத் தோண்டி வளம் செய்பவன்" என்பது கிள்ளி வளவன் என்று வந்திருக்கலாம்.
காடே இல்லாத சோழ நாட்டில் சோழர்களின் சின்னம் புலி. புலிக்கொடி, புலி இலச்சினையாகியிருக்கிறது. ஏதோ ஒரு சோழரின் கொள்ளுத்தாத்தா ஒரு புலியை கொன்ற பெருஞ்செயலை மதித்து அதையே தங்களது சின்னமாக ஏற்றுக் கொண்டிருக்கலாம். பொடா சட்டம் இல்லாத அந்த காலத்தில் கூட. சோழர்கள் ஏன் 'புலி'ச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற குறிப்பு சங்க நூல்களில் இல்லை. அனால், இடைக்காலத்தில் தெலுங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட சோழர் சிங்க இலச்சினையை பெற்றிருந்தனர்.(1) .
சோழ நாட்டில் புளிய மரம் நிறைய உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. சோழர் காலத்தில் முத்தமிழ் வளர்ச்சியடைந்தது. புலவர்கள் ஐஸ் வைத்து பாடல் இயற்றியதால் இயற்றமிழ் வளர்ந்தது; பாணர்கள் பாடியதால் இசைத்தமிழ் வளர்ந்தது, அதற்கு மங்கைகள் ஆடியதால் நாடகத்தமிழ் வளர்ந்தது. போர் இல்லாத காலத்தில் அரசர்களுடைய பொழுதுபோக்கு இரண்டு, ஒன்று அந்தபுரம் மற்றொன்று புலவர்களின் ஜால்ராவை கேட்டுக் கொண்டிருப்பது. இராஜராஜ சோழனுக்கு பரந்த மனசு, நிறைய மனைவியர். ஆனால் கல்வெட்டில் 15 பேர் பெயர்தான் இருக்கிறது. பெரிய கோயிலை கட்டுவதற்கு நிறைய கற்கள் தேவைப்பட்டதால் மற்ற பெயர்களை எழுதாமல் விட்டிருக்கலாம்.
தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள் கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949 -957) மனைவி செம்பியன் மாதேவியார்! .
மனைவியின் சொல்லை யார் தான் தட்ட முடியும்? . பிறகே சோழமண்ணில் அற்புதமான கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத் தொட்டான் இராஜராஜசோழன்! வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன் மற்றும் குணவான் மதுராந்தகன் - இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக் கட்டிய தலைமை ஆர்க்கிடெக்ட் கள்!

பெரிய கோயில்:
கி.பி. 6-ம் நூற்றாண்டில் இருந்து பல்லவர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது தஞ்சை. அப்போது முதலாம் மகேந்திர வர்மன் கட்டிய பல கோயில்களை ரசித்த அருள்மொழிவர்மனின் மனதுக்குள் விஸ்வரூப மெடுத்ததுதான் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்! அடிப்படையில் பல்லவர் கோயில்களின் வடிவம்தான் அது! கிபி 1003'ல் துவங்கி ஆறே ஆண்டுகளில் கட்டி முடித்த ஆச்சரியம் தஞ்சை பெரிய கோயில்.

இந்த கோயிலுக்கு இராஜராஜன் வைத்த பேர் இராஜராஜேஸ்வரம். பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப் பட்டது. பிறகு மாராத்தியர்கள் ஆண்ட போது அது பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பேர் பெற்றது. (பிரகதீஸ்வரர் என்பது சமஸ்கிருதப் பெயர்). இன்று அதை நாம் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம். கோயிலுக்கு முன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதே! இவ்வளவு பெரிய கோயிலுக்கு நந்தி சற்றுச் சிறியதாக இருக் கிறதே! என்று கருதிய நாயக்க மன்னர்கள், இராஜராஜசோழன் வைத்த நந்தியை அப்புறப்படுத்திப் புதிய நந்தியை வைத்தார்கள். முந்தைய நந்தி, பிராகாரத்துக்குத் தெற்குப் பக்கம் ஒரு மூலையில் வைக்கப் பட்டிருப்பதை இன்றும் நாம் காண முடியும்.
பெரியகோயில் கட்டப்பட்டவுடன், அதன் வானுயர்ந்த கோபுரத்தைப் பார்த்துப் பிரமித்த தஞ்சை மக்கள் கவலையுடன் "கோபுரம் விழாமல் இருக்குமா?என்று கேட்டதற்குத் தலைமை ஸ்தபதி தமாஷாக "பயப்படாதீர்கள்! அதன் நிழல்கூடக் கீழே விழாது!" என்றாராம். அதை நிஜம் என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்! கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! .வெயில் இருந்தால்.
கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் இராஜராஜன் இறந்தார்.அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப்படைக் கோயில் கட்டப் பட்டது. ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, கோணலாகப் புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்!
ஐப்பசி மாதத்தில், சதய நட்சத்திரத்தில் பிறந்தார் இராஜராஜன். அதாவது, அக்டோபர் - நவம்பர் மாதத்தில். இராஜராஜ சோழன் இறந்த பின் புதைக்கப் பட்ட இடத்தில் தற்போது எந்த அளவுக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்தது என்று தெரியவில்லை தமிழகத்தை ஒரு வல்லரசாக உருவாக்கிய அந்த மாமன்னர் புதைக்கப்பட்ட இடம் கேட்பாரற்று ஒரு மணல்மேடாகக் கிடப்பது வருத்தமான விஷயம்.
குறைந்தபட்சம் அங்கே புலிச் சின்னத்தோடு (குதுப்மினார் ஸ்டைலில்) ஒரு ஸ்தூபியாவது யாராவது கட்டியிருக்கலாம். இராஜராஜன் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் இராஜேந்திரசோழன் இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்றார். அவர் ஆட்சிக்கு வந்து 23-வது ஆண்டில் (48-வது வயதில்)அப்போது சோழர்களின் தலைநகரமாக இருந்த கங்கைகொண்ட சோழபுரத்தில், பிரகதீஸ்வரர் கோயில் வடிவிலேயே, கி.பி.1035-ல் ஒரு கோயில் கட்டினார். ஆனால் ஏனோ அது பெரிய கோயில் போல் பிரபலம் அடையவில்லை. பெரிய கோயிலின் கோபுரத்தில் முதல் மாடியில் நாலாபுறமும் நாட்டிய சாஸ்திரத்தில் பரதமுனி குறிப்பிட்ட பரதநாட்டிய முத்திரைகளை சிவபெருமான் ஆடிக் காண்பிப்பது போன்ற சிற்பங்கள் இராஜராஜசோழன் காலத்தில் செதுக்கப் பட்டன. மொத்தம் 108 சிற்பங்கள். அவற்றில் 81 சிற்பங்களை மட்டுமே சிற்பிகள் முடித்து, மிச்சத்தை அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். என்ன நடந்திருக்கும்? சிற்பிகளின் கண்களை கோயில் கட்டி முடித்த கண்களை இராஜராஜன் குருடாக்கி விட்டார் என்று இன்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
தஞ்சை பெரியகோயில் கட்டியபோது பணியாற்றிய இருபத்தைந்து வயது நிரம்பிய சிற்பிகளுக்குக் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டப்பட்டபோது ஐம்பது வயது தான் ஆகியிருக்கும். பல சிற்பிகள் இரு கோயில் வேலைகளிலும் பங்கேற்றிருக்க வேண்டும். ஆகவே, சிற்பிகளின் பார்வையை இராஜராஜசோழன் பறித்திருக்க வாய்ப்பே இல்லை.
தன் மகன் இராஜேந்திரன் அவர்களைப் பயன்படுத்தி வேறு கோயிலே கட்டக்கூடாது என்று தந்தை நினைப்பாரா? நல்ல தமாஷ்!.

கங்கைகொண்ட சோழபுரம்:
ஒருவேளை, இராஜேந்திரசோழனின் கங்கை கொண்ட சோழபுர வேலைகள் துவங்கி யிருக்கவேண்டும். 'எல்லா சிற்பிகளும் அங்கே செல்ல வேண்டும்' என்று பொதுவாக மன்னர் ஆணையிட்டிருக்கலாம். இராஜேந்திரனிடம் 'நாட்டிய முத்திரை சிற்பங்கள் முடிக்கப்படவில்லை' என்று யாரேனும் எடுத்துச்சொல்லியிருந்தால், நிச்சயம் சில சிற்பிகளைப் பெரியகோயிலில் இராஜேந்திரன் விட்டுவிட்டுப் போயிருப்பார். மந்திரி பிரதானிகள் 'அரசரின் ஆணை' என்று பரபரப்போடு சொல்லி, எல்லா சிற்பிகளையும் அலாக்காகத் தூக்கிக் கொண்டுபோய் விட்டிருக்கவேண்டும்! பல சிற்பிகள் 'வேலையை முடிக்கவில்லையே..!' என்று ஏக்கத்தோடு திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே கங்கை கொண்ட சோழபுரத்துக்குச் சென்றிருக்க வேண்டும்!
1835-36ல் A.Cotton என்னும் ஆங்கிலேயர் என்ஜினியர், கீழ்அணைக்கட்டு (அணைக்கரை அணை) கட்டுவதற்காக சிற்ப வேலைப்பாடு மிகுந்த கற்கள், மற்றும் மதில் சுவற்றை அக்கக்காகப் பிரித்தெடுத்து அதை அணைக்கட்ட உபயோகப்படுத்தினார். அங்கு உள்ள கிராம மக்கள் எவ்வளவு முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பிறகு ஒரு மதில் சுவர் எழுப்பித் தர வாக்களிக்கப்பட்டது. அது இன்று வரை நிறைவேற்றபடவில்லை. திருச்சியிலிருந்து 100 கிமீ, சென்னையிலிருந்து 250 கி.மீ, கும்பகோணத்திலிருந்து 75 கிமீ தூரத்தில் உள்ளது கங்கைகொண்ட சோழபுரம்.
போக முடியாதவர்கள், டிவியில் சங்கமம் திரைப்படம் சன் டிவியில் போட்டால் அதில் பார்க்கலாம்.
இராஜராஜன்:
இராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்று வடிவமைக்கப் பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் இராஜேந்திர சோழர். பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் அந்தச் சிலை தற்போது வடக்கே சாராபாய் மியூஸியத்தில் இருக்கிறது. அந்தச் சிலையை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து, தஞ்சை கோயிலில் வைக்கவேண்டாமா?ஏற்கெனவே, தஞ்சை பெரியகோயிலில் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இன்றைய தலைவர்களுக்கு, அதன்பின் ஏதேனும் பிரச்னை ஏற்படுகிறது என்று ஒரு பேச்சு நிலவுகிறது. ஒருவேளை, இராஜராஜசோழன் சிலையைக் கோயிலிலிருந்து பிரித்து,எங்கோ வடக்கே கொண்டுபோய் வைத்ததுதான் இதற்குக் காரணமாக இருக்குமோ? யார்கண்டது.
மழை நீர்சேகரிப்புத் திட்டத்துக்கும் இராஜராஜ சோழனுக்குச் சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள்.மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் நம்ம இராஜராஜசோழன்தான்! பெரிய கோயிலில் விழும் மழைநீரைத் துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்காகத் தரைக்கடியில் பெரிய குழாய்கள் போடப் பட்டன (இன்றும் அவற்றை நாம் காணலாம்).
தவிர, தஞ்சாவூரிலுள்ள சேவப் பன்னவாரி என்னும் ஏரி மழைக்காலத்தில் நிரம்பிய பிறகு, அந்த நீர் வீணாகாமல் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்துக்கு வாய்க்கால் மூலம் கொண்டுசெல்லப் பட்டு, வடிகட்டப்பட்ட பிறகு, அங்கிருந்து எல்லாத் தெருக்களுக்கும் மண்சுதை(Terracota) குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
பின்குறிப்பு:

இராஜராஜ சோழன், மற்றும் தஞ்சை பெரிய கோயில் பற்றிய செய்திகள் 'ஹாய் மதன்' பகுதியில் ( ஆ.வி டிசம்பர் 2004) வந்தவை. அதை அப்படியே ( சில மாற்றங்களுடன்) இங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

கங்கை கொண்ட சோழபுரம், மற்றும் சோழர்கள் பற்றிய குறிப்புக்களுக்கு ஆதாரம் K.A.Nilakanta Sastri புத்தகம். Madras University.

கங்கை கொண்ட சோழபுரம் படம் உதவி: ( http://www.kumbakonam.info/ ) நிறைய அழகான படங்கள் இருக்கிறது. ஒரு முறை போய் பாருங்கள்.

அச்சுக்கலை வரலாற்றுத் தடயங்கள்

இந்தியாவில் அச்சுக் கலை தோற்றம் - வரலாறு

The legacy that Ziegenbalg left

A weeklong celebration begins tomorrow to mark the arrival of a pioneer who laid the foundations for the printing industry in India.

BORN LINGUIST: Ziegenbalg spent more time studying Tamil.

PRINTING came to India serendipitously. In 1556, a Portuguese ship put into Goa for victualling. Aboard were 14 Jesuits bound for Abyssinia (today's Ethiopia) and a printing press. One of them, Joao de Bustamente, a Spaniard, was a printer. He was accom origin.

The clergy in Goa felt their need for a printing press was greater than Abyssinia's and, so, requested the Governor-General to make the press available to them. The press was taken over and sent with Bustamente to the College of St. Paul, a seminary that still exists. Early start
From Goa on the Konkan Coast to the Malabar Coast, then round the Cape of Comorin to the Fisheries Coast, printing in Latin, Portuguese, Tamil or Malabar and, to a lesser extent, Konkani, spread over the next hundred years.

Significantly, all the presses belonged to the Church or the Portuguese. None was set up by Indians and printing did not spread to the rest of the country. Then, as suddenly as it had started, printing died out in India. Tamil printing seems to have stopped after 1612. Records show that the last books in Portuguese were printed in Goa in 1674.
* * *
Printing in India revived only in the early 18th Century. The beginnings were again serendipitous. In 1620, The Danish East India Company obtained from the Rajah of Tanjore the grant of a 25-square mile coastal territory called Tarangambadi, which the Danes called Tranquebar. It was here that modern printing was revived — to spread throughout India. It was here too that the foundations were laid for the Protestant missionaries' contribution to education in India.

The Danish merchants in Tranquebar wanted no Danish priests in their territories. However, King Frederick IV's chaplain insisted there should be a Lutheran presence in Danish settlements. As a compromise, King Frederick invited the Pietists from Halle in eastern Germany to send out priests to Tranquebar. The 23-year-old Bartholomaeus Ziegenbalg and the rather older Heinrich Plutschau answered the call. When they arrived in India on July 9,1706 they founded the first formal Protestant mission in Asia.
Learning local languages

Ziegenbalg realised that if he was to interact with the local population he would have to learn not only the lingua franca of the coast, Portuguese, but also the local tongue, Tamil that the Portuguese called "Malabar". He must have been a born linguist, for within a couple of months he learnt sufficient Portuguese to be able to use it to learn Tamil with the help of an untrained tutor, Ellappar, who taught him in the traditional way by tracing alphabet on a bed of sand. Within three months, Ziegenbalg was writing home.

Ziegenbalg converted only a few Malabarians and spent far more time studying Tamil. He set up the first printing press in India after the Portuguese effort ground to a halt, established a publishing programme and got the missionaries who joined him to set up schools in the areas they fanned out to, particularly Madras, Tanjore (Thanjavur) and Tinnevely (Tirunelveli).

Ziegenbalg was convinced that the only way the mission could succeed was if books were prepared in "the Malabar language". He went on to write in 1709, "I choose such books as I should wish to imitate both in speaking and writing ... Their tongue ...(now) is as easy to me as my mother tongue, and in the last two years I have been enabled to write several books in Tamil..." Literary work Johann Heinrich Schloricke, 30 years old at the time, printed in Portuguese the Tranquebar mission press's first publications in 1712/13. With this, printing in India got its second wind and the foundations for today's thriving Indian Printing Industry were laid.
Ziegenbalg, however, was convinced that the Mission's work could prove successful only if the press produced books and other literature in Tamil. He therefore sent back drawings of the Tamil alphabet to Halle with the request to create Tamil typefaces there. The Tamil type arrived in Madras on June 29,1713, together with three Germans who were to galvanise the press and printing when they got to Tranquebar by the end of August. In September/October 1713, Johann Gottlieb Adler, a type founder, printer and mechanic, his 14-year-old brother Dietrich Gottlieb Adler and the 27-year-old Johannes Berlin, a bookbinder and printing assistant used the Halle Tamil type, to print the first `Malabarick' publication since the Portuguese had put a stop to printing in Tamil c.1612. Tamil typefaces The Halle type, however, was too large and gobbled up the Mission's limited paper stock. While more paper was sought from London, Johann Adler began cutting new and smaller Tamil type in June/July 1714 and cast it using, according to legend, the lead covers of tins of Cheshire cheese that were regularly sent out by the SPCK. Using this type, Johann Adler completed the printing of the New Testament in Tamil (Pudu Etpadu) in July 1715. Adler's type foundry was set up in Porayur, on the outskirts of Tranquebar. In 1715, he started a paper mill in the same village, the Government meeting half the costs and the Mission the rest. He then opened a printin manufacturing unit nearby. All three were the first printing material "factories" in India. The Tranquebar mission press was now virtually self-sufficient and this was to help it to remain active for another 100 years. After 1817 there is no report of the press functioning.

Not only did printing continue in Tranquebar, but it also spread to Madras, Tanjore and another Danish settlement, Serampore, near Calcutta where it flowered.

The Danish Halle Mission in Serampore near Calcutta was where William Carey, Joshua Marshman, William Ward and William Grant, Baptist missionaries, exiled from Calcutta for indulging in missionary activities, found refuge. They arrived in Serampore on January 10, 1800, bringing a printing press with them. In the next 35 years, the Serampore Press cut type in 40 different languages, including 33 Indian languages.

This is why most Indian printers tend to think of Carey as the father of modern Indian printing. They have forgotten the foundations of the industry laid by Bartholomaeus Ziegenbalg and Johann Adler. * * *

The German-Tamil link

Ziegenbalg was only 36 when he died in 1719. His last 13 years were spent laying the foundations for German scholarship in Tamil that continues to this day.

Apart from the numerous Tamil translations of Christian publications he made, he wrote several books and booklets that could be described as being Indological in nature.

He also had the press printing educational material of a more general nature.

As early as 1708 he had compiled his Bibliothece Malabarke, listing the 161 Tamil books he had read and describing their content.

In 1713, in Biblia Tamulica he expanded this bibliography. Also in 1713 the produced what was perhaps the first Almanac to be printed in India. Then, in 1716, there appeared what was probably the first book printed in Asia in English, A Guide to the English Tongue, by Thomas Dyche.

The next year the press printed an A.B.C. (in Portuguese) for schools in the English territories.
What did not get printed in Tranquebar were Ziegenbalg's Indological writings. In fact, his works like Nidiwunpa (Malabari moral philosophy), Kondei Wenden (Malabari morals) Ulaga Nidi (Malabari civil justice), and his books on Hindusim and Islam were printed only 150-250 years later in Europe and Madras.