"ஒளவைக்குறள் - அறிமுகம்"

பாரத நாட்டில் வாழும் மக்கள் கடவுள் பதத்தை அடையும் வண்ணம்,நூல்கள் பேரறிவாளர் களால் பட்டறிவின் வாயிலாய் எழுதப்பட்டன. நூல்கள் எழுதுவதற்கு முன்பே, ஞான மார்க்கத்தின் இரகசியங்களை வாயினால் ஒருவருக்கு ஒருவர் சொல்லி வந்தார்கள்.
.
பின்பு பீசங்களை ஏற்படுதிய பிறகு, ஓலையில் அந்த எழுத்துக்களைக் கொண்டு தாங்கள் அனுபவித்த மகத்தான இரகசியப் பொருளைப் போதிக்க வேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து,சீவர்களிடத்தில் வைத்திருந்த கருணையினாலேயே உபதேசித்து வந்தார்கள்.
.
அவ்விதமாக வெளிப்பட்ட நூலே வேதமாகும்.
.
இதுவே முதல் நூலாக விளங்குகிறது.
.
இவ்வேதத்தை அறிந்தனுபவித்த ஞானிகளும் பெரியோர்களும் இதன் மூலமாகக் கிடைத்த அனுபவத்தினால் சார்பு நூல்களை இயற்றினார்கள்.
.
வேதசாரம் ஞானிகளால் ஆறு உப அங்கங்களாகப் பிரிக்கப்பட்டன.
.
அவைகளில்,
முதலாவதாகிய சிட்சை என்னும் அங்கத்தைத் தழுவியே வேதங்கள் அனுசரிக்கப்பட்டு வந்தன. கடவுளைக் காண வழி இரண்டென வகுத்து, அவை சுரம், சரமென உணர்த்தி, அவைகளை நாதத்தின் மூலமாகவும், பிராணாபான வயுக்களின் மூலமாகவுமே அடைய முடியுமென்று உணர்த்திப் பாக்களைப் பாடி வைத்தார்கள். அது போலவே, ஓங்கார சொரூபமாகிய நம் நாட்டின் (இந்தியாவின் மேல் ஓம்மைப் பொருத்திப் பார்க்கவும்) வடபுலத்தில் உறைந்த ஞானிகளால் சத்தி அம்சமாகிய செங்கிருதமென்னும் மொழியானது ஆலய வழிபாடு, வேள்வி செய்தல், முன்னோருக்கு ஆண்டுக்கு ஆண்டு செய்யவேண்டிய சடங்குகள், திருமணம் ஆகியவை களுக்கு (பரவித்தைக்கு) மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த மொழி பேசுவதற்கு உபயோகப் படவில்லை என்பதால், அம்மொழியினின்றும் இந்தி, மராட்டி, குசராத்தி முதலிய வடபுலத்து மொழிகளை உண்டாக்கிக்கொண்டு, ஞான வினையாகிய ஆத்ம வித்தைக்குச் செங்கிருதத்தையே தாய்மொழி யாக்கிக் கொண்டார்கள்.
.
இப்படியிருக்க, தென்புலத்தில், சிவமொழியான தமிழ் ஓங்காரபீசமாகத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதில் அனேக பேரறிவாளர்கள் தோன்றி உலகுக்குத் தாங்கள் அநுபவித்த ஆநந்தமாகிய இரகசியத்தை வழிநூலாக்கி வழங்கினார்கள்.
.
தமிழை ஆதாரமாகக் கொண்டு பீசத்தைத் தமிழிலிருந்தும் ஒலியை செங்கிருதத்திலிருந்தும் எடுத்துக்கொண்டு ஒன்றாய்க் கூட்டிக் கிரந்தம் என்னும் மொழியை உண்டாக்கினார்கள்.
.
தமிழையே ஆதாரமாகக் கொண்டு தங்கள் அநுபவங்களை வெளிப்படுத்தி இருக்கும் ஞானிகளின் போக்குகளை,
.
நாம் அநுபவித்துத்தான் உணரமுடியுமேதவிர, அநுபவமில்லாமல் சாத்திரங்களைப் படித்து மட்டுமே முடிவுக்கு வருவது நன்றன்று.
.
அதனால், ஞானிகளின் போக்குகளைச் சிதைத்து விடுவதினால் ஏற்பட்ட குற்றத்தையும், கற்றவர்கள் வார்த்தையே எதிர்பார்க்கும் மற்றவர்கள் கதியினாலேற்படும் (மூச்சோட்டம்) குற்றத்தையும் அடைவர்.
.
வேதாந்த ஆய்வு என்பதைச் சாற்றிறற ஆய்வோடு நிறுத்திக் கொள்ளுகிறார்களே தவிர தம் பிறப்பைப் பற்றியும், ஐம்பூதங்களை மானுட உடலில் இணைத்திருக்கும் மருமங்களையும், நாதபிந்து கலைகளின் இரகசியங்களையும், இன்னும் மற்றவைகளையும் ஆராயாமல் விட்டு விடுகின்றனர்.
.
சாற்றிறங்களைப் படித்து அறிவதை விட தன்னை அறியவேண்டி ஆராய்ச்சியின் வழியிலே சென்றால்தான் சூக்கும தத்துவங்களை அறியமுடியும்.
.
கண்ணலே பார்க்காமல் அநுபவத்திற்குக் கொண்டு வந்துணருவது முடியாத ஒன்று. "தன்னை யறிந்தால் தலைவனைக் காணமுடியும்" என்பதை அலசி ஆராயாமல் விட்டதே உண்மை ஞானம் மறைபட்டதிற்குக் காரணம். அதற்கு எடுத்துக்காட்டாக, வீடுகளிலும் ஆலயங்களிலும் (ஆன்மா இலயிக்கும் இடங்களிலும்) இறைவனை வணங்கும் போதும், கற்பூரம், சாம்பிராணிப்புகை, தேங்காய் இம் மூன்றையும் பயன்படுத்துவது எதற்கு? இறைவனை மகிழ்விப்பதற்காக என்று கூறி வாழ்நாளை வீணாக்கி வருகிறோம்.
.
இவைகளுடைய தத்துவங்கள் (உண்மைகள்) இரகசியமாக மறைக்கப்பட்டு இருக்கின்றன. மறைக்கப் பட்டிருப்பதால்தான் வேதங்கள் மறைகள் எனப்பட்டன.
.
இறைவன் தூபதீபங்களுக்கும் தேங்காய்க்கும் ஆசைப்படுபவரா? எங்கும் எதிலும் நிறைந்துள்ள இறைக்கு இச்சையுண்டா?
.
இந்த அற்பப் பொருள்களைக்காட்டி அவருடைய அருளைப் பெறமுடியுமா?
.
தேங்காய், மாயையாகிய மட்டையினால் மறைபட்டும், பற்றாகிய நாரினால் கட்டப்பட்டும், ஆசையாகிய சிரட்டையினால் மூடப்பட்டும் இருக்கின்ற உண்மையாகியது (உள்+மெய் = சிவம்). அதனுள் இருக்கும் நீராகிய சத்தியும், இரண்டும் இணைந்தபின் உண்டாகிய உடலில் ஓடும் சீணவன் சாம்பிராணிப் புகை. பிராணண் ஒளியைப் பிரகாசிப்பதையும், மன அசைவை நிறுத்துவதற்கும் கற்பூர ஒளியைக் காட்டினார்கள். இவைகளை அறிந்து உணர்வதே கல்வியின் பயன்.
.
இதைப்போலவே மறைக்(கப்பட்டுள்ள) கருத்துக்களை, நம் நாட்டின் உருவமைப்பிலும், நம் உடல் அமைப்பிலும், தெய்வமைப்பிலும், விழா வினைகளின் அமைப்பிலும், தெய்வ ஆலயங்களுள்ள ஊர்ப்பெயரின் அமைப்பிலும், மனிதர்களின் பெயரமைப்பிலும், வீட்டுச்சுத்தம், உடல்சுத்தம், ஆகாரசுத்தம் முதலிய அமைப்பிலும் ஞானிகள் நூல்களின் சாரங்களாகத் தந்திருக்கின்றனர்.
.
இவைகளைப் புரிந்துகொண்டால் நூல்களின் கருத்துக்கள் எளிதில் விளங்கும்.
.
ஆத்மவித்தையானது உலகத்தில் சஞ்சரிக்கவும், யோகம் என்னும் தந்திரத்தை (தன்+திறத்தை) அறியாமல் மனம் கலங்கும் சீவப் பிறவியற்க்குப் பேருதவியாக இருக்கும் என்னும் எண்ணத்துடன் எமக்குப் புரிந்தவரை விளக்கப்பட்டுள்ளது.
.
இதைத் தேடுதல் வேட்டையிலுள்ளவர்கள் கண்டால் ஆநந்தப்படுவர்.
.
மற்றவர்கள் படித்தவுடன் தீர்மானிக்காமல், பூரணமாகப் படித்துத் தீர்மானிக்க வேண்டுகிறேன்.
.
நிறையிருப்பின் அடைவீர் ஆநந்தம், குறையிருப்பின் கூறுவீர் என்னிடம் (திருத்திக்கொள்ள). மனு வாழ, மானுடம் பயன் பெறட்டும்.
.
ஞானவெட்டியான்
திண்டுக்கல்
(தமிழகம்)
பின்குறிப்பு:
.
இதுவே ஞானத்தின் முதல்படி என்பதால், சீவப்பிறப்பெடுக்க முடிவு செய்த நண்பர்கள் அனைவரும், இவ்வறிய நூலைப் படிப்பது அவசியம்.

"ஒளவைக்குறள் - அறிமுகம்"

பாரத நாட்டில் வாழும் மக்கள் கடவுள் பதத்தை அடையும் வண்ணம், நூல்கள் பேரறிவாளர் களால் பட்டறிவின் வாயிலாய் எழுதப்பட்டன. நூல்கள் எழுதுவதற்கு முன்பே, ஞான மார்க்கத்தின் இரகசியங்களை வாயினால் ஒருவருக்கு ஒருவர் சொல்லி வந்தார்கள்.
பின்பு பீசங்களை ஏற்படுதிய பிறகு, ஓலையில் அந்த எழுத்துக்களைக் கொண்டு தாங்கள் அனுபவித்த மகத்தான இரகசியப் பொருளைப் போதிக்க வேண்டியவர்களைத் தேர்ந்தெடுத்து, சீவர்களிடத்தில் வைத்திருந்த கருணையினாலேயே உபதேசித்து வந்தார்கள்.
அவ்விதமாக வெளிப்பட்ட நூலே வேதமாகும்.
இதுவே முதல் நூலாக விளங்குகிறது.
இவ்வேதத்தை அறிந்தனுபவித்த ஞானிகளும் பெரியோர்களும் இதன் மூலமாகக் கிடைத்த அனுபவத்தினால் சார்பு நூல்களை இயற்றினார்கள்.
வேதசாரம் ஞானிகளால் ஆறு உப அங்கங்களாகப் பிரிக்கப்பட்டன.
அவைகளில்,
முதலாவதாகிய சிட்சை என்னும் அங்கத்தைத் தழுவியே வேதங்கள் அனுசரிக்கப்பட்டு வந்தன. கடவுளைக் காண வழி இரண்டென வகுத்து, அவை சுரம், சரமென உணர்த்தி, அவைகளை நாதத்தின் மூலமாகவும், பிராணாபான வயுக்களின் மூலமாகவுமே அடைய முடியுமென்று உணர்த்திப் பாக்களைப் பாடி வைத்தார்கள். அது போலவே, ஓங்கார சொரூபமாகிய நம் நாட்டின் (இந்தியாவின் மேல் ஓம்மைப் பொருத்திப் பார்க்கவும்) வடபுலத்தில் உறைந்த ஞானிகளால் சத்தி அம்சமாகிய செங்கிருதமென்னும் மொழியானது ஆலய வழிபாடு, வேள்வி செய்தல், முன்னோருக்கு ஆண்டுக்கு ஆண்டு செய்யவேண்டிய சடங்குகள், திருமணம் ஆகியவைகளுக்கு (பரவித்தைக்கு) மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த மொழி பேசுவதற்கு உபயோகப்படவில்லை என்பதால், அம்மொழியினின்றும் இந்தி, மராட்டி, குசராத்தி முதலிய வடபுலத்து மொழிகளை உண்டாக்கிக்கொண்டு, ஞான வினையாகிய ஆத்ம வித்தைக்குச் செங்கிருதத்தையே தாய்மொழியாக்கிக் கொண்டார்கள்.
இப்படியிருக்க, தென்புலத்தில், சிவமொழியான தமிழ் ஓங்காரபீசமாகத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. அதில் அனேக பேரறிவாளர்கள் தோன்றி உலகுக்குத் தாங்கள் அநுபவித்த ஆநந்தமாகிய இரகசியத்தை வழிநூலாக்கி வழங்கினார்கள். தமிழை ஆதாரமாகக் கொண்டு பீசத்தைத் தமிழிலிருந்தும் ஒலியை செங்கிருதத்திலிருந்தும் எடுத்துக்கொண்டு ஒன்றாய்க் கூட்டிக் கிரந்தம் என்னும் மொழியை உண்டாக்கினார்கள். தமிழையே ஆதாரமாகக் கொண்டு தங்கள் அநுபவங்களை வெளிப்படுத்தி இருக்கும் ஞானிகளின் போக்குகளை,
நாம் அநுபவித்துத்தான் உணரமுடியுமே தவிர, அநுபவமில்லாமல் சாத்திரங்களைப் படித்து மட்டுமே முடிவுக்கு வருவது நன்றன்று.
அதனால், ஞானிகளின் போக்குகளைச் சிதைத்து விடுவதினால் ஏற்பட்ட குற்றத்தையும், கற்றவர்கள் வார்த்தையே எதிர்பார்க்கும் மற்றவர்கள் கதியினாலேற்படும் (மூச்சோட்டம்) குற்றத்தையும் அடைவர்.
வேதாந்த ஆய்வு என்பதைச் சாற்றிறற ஆய்வோடு நிறுத்திக் கொள்ளுகிறார்களே தவிர தம் பிறப்பைப் பற்றியும், ஐம்பூதங்களை மானுட உடலில் இணைத்திருக்கும் மருமங்களையும், நாதபிந்து கலைகளின் இரகசியங்களையும், இன்னும் மற்றவைகளையும் ஆராயாமல் விட்டு விடுகின்றனர்.
சாற்றிறங்களைப் படித்து அறிவதை விட தன்னை அறியவேண்டி ஆராய்ச்சியின் வழியிலே சென்றால்தான் சூக்கும தத்துவங்களை அறியமுடியும்.
கண்ணலே பார்க்காமல் அநுபவத்திற்குக் கொண்டு வந்துணருவது முடியாத ஒன்று. "தன்னை யறிந்தால் தலைவனைக் காணமுடியும்" என்பதை அலசி ஆராயாமல் விட்டதே உண்மை ஞானம் மறைபட்டதிற்குக் காரணம். அதற்கு எடுத்துக்காட்டாக, வீடுகளிலும் ஆலயங்களிலும் (ஆன்மா இலயிக்கும் இடங்களிலும்) இறைவனை வணங்கும் போதும், கற்பூரம், சாம்பிராணிப்புகை, தேங்காய் இம் மூன்றையும் பயன்படுத்துவது எதற்கு? இறைவனை மகிழ்விப்பதற்காக என்று கூறி வாழ்நாளை வீணாக்கி வருகிறோம்.
இவைகளுடைய தத்துவங்கள் (உண்மைகள்) இரகசியமாக மறைக்கப்பட்டு இருக்கின்றன. மறைக்கப்பட்டிருப்பதால்தான் வேதங்கள் மறைகள் எனப்பட்டன.
இறைவன் தூபதீபங்களுக்கும் தேங்காய்க்கும் ஆசைப்படுபவரா? எங்கும் எதிலும் நிறைந்துள்ள இறைக்கு இச்சையுண்டா?
இந்த அற்பப் பொருள்களைக்காட்டி அவருடைய அருளைப் பெறமுடியுமா?
தேங்காய், மாயையாகிய மட்டையினால் மறைபட்டும், பற்றாகிய நாரினால் கட்டப்பட்டும், ஆசையாகிய சிரட்டையினால் மூடப்பட்டும் இருக்கின்ற உண்மையாகியது (உள்+மெய் = சிவம்). அதனுள் இருக்கும் நீராகிய சத்தியும், இரண்டும் இணைந்தபின் உண்டாகிய உடலில் ஓடும் சீணவன் சாம்பிராணிப் புகை. பிராணண் ஒளியைப் பிரகாசிப்பதையும், மன அசைவை நிறுத்துவதற்கும் கற்பூர ஒளியைக் காட்டினார்கள். இவைகளை அறிந்து உணர்வதே கல்வியின் பயன்.
இதைப்போலவே மறைக்(கப்பட்டுள்ள)கருத்துக்களை, நம் நாட்டின் உருவமைப்பிலும், நம் உடல் அமைப்பிலும், தெய்வமைப்பிலும், விழா வினைகளின் அமைப்பிலும், தெய்வ ஆலயங்களுள்ள ஊர்ப்பெயரின் அமைப்பிலும், மனிதர்களின் பெயரமைப்பிலும், வீட்டுச்சுத்தம், உடல்சுத்தம், ஆகாரசுத்தம் முதலிய அமைப்பிலும் ஞானிகள் நூல்களின் சாரங்களாகத் தந்திருக்கின்றனர்.
இவைகளைப் புரிந்துகொண்டால் நூல்களின் கருத்துக்கள் எளிதில் விளங்கும். ஆத்மவித்தையானது உலகத்தில் சஞ்சரிக்கவும், யோகம் என்னும் தந்திரத்தை (தன்+திறத்தை) அறியாமல் மனம் கலங்கும் சீவப் பிறவியற்க்குப் பேருதவியாக இருக்கும் என்னும் எண்ணத்துடன் எமக்குப் புரிந்தவரை விளக்கப்பட்டுள்ளது.
இதைத் தேடுதல் வேட்டையிலுள்ளவர்கள் கண்டால் ஆநந்தப்படுவர்.
மற்றவர்கள் படித்தவுடன் தீர்மானிக்காமல், பூரணமாகப் படித்துத் தீர்மானிக்க வேண்டுகிறேன்.
நிறையிருப்பின் அடைவீர் ஆநந்தம், குறையிருப்பின் கூறுவீர் என்னிடம் (திருத்திக்கொள்ள). மனு வாழ, மானுடம் பயன் பெறட்டும்.
ஞானவெட்டியான்
திண்டுக்கல்
(தமிழகம்)
பின்குறிப்பு:
இதுவே ஞானத்தின் முதல்படி என்பதால், சீவப்பிறப்பெடுக்க முடிவு செய்த நண்பர்கள் அனைவரும், இவ்வறிய நூலைப் படிப்பது அவசியம்.

"உண்ணாநோன்பு மருத்துவம் "

-- பேராசிரியர் யூரி நிக்கோலயேவ்--
உண்ணாநோன்பு மருத்துவம் மிகப் புராதனமானதோர் இந்தியமுறையாகும்.
இப்போது மீண்டும் அது ஓர் அறிவியல் அடிப்படையைப் பெற்று ரூசிய நாட்டிலிருந்து இந்தியா வந்துள்ளது என்று,இந்தியாவுக்கு வந்திருந்த போது பல இந்திய மருத்துவர்கள் என்னிடம் கூறினர். உண்ணாநோன்பு மருத்துவம் பல நோய்களுக்கான மருத்துவமுறையாக நெடுங் காலத்திற்கு முன்னரே எகிப்து, இந்தியா, கிரோக்கதேசம், ஆகிய நாடுகளில் வழங்கிவந்தது.
வரலாற்றிற்கு முற்பட்ட புராதன - மிகப் பழங்காலத்திலேயே மக்கள் இந்த முறையை கடைப்பிடித்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
விலங்குகளின் உடல்நலம் கெட்டால், உடல்நலம் சீரடையும் வரை, அவை தாமாகவே உணவு ஏற்பதை நிறுத்தி விடுகின்றன என்பதையும் நாம் அறிவோம்.
உண்ணாநோன்பு பற்றிய ரூசிய ஆய்வு:
இந்தியாவில் ஆயுர்வேத முறைப்படி உண்ணாவிரத சிகிச்சை பழங் காலத்திலிருந்தே இருந்த வருகிறது.
உடலிலுள்ள நச்சுப் பொருட்களை முதலில் அகற்றுவதற்கான ஒருவழி முறையேஉண்ணாநோன்பு!
அதைத்தொடர்ந்து, பின்னர் நோயைத் தீர்க்கப் பல்வேறு மருந்துகள் கொடுக்கப் படுகின்றன. உண்ணா நோன்பு, யோகப் பயிற்சியிலும் ஒர் அம்சமாகும்.
18ம் நூற்றாண்டில் மொஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியர்களான பிவெனியானொவ், ஐ ஸ்ராஸ்கி ஆகியோர் பல்வேறு வகையான நோய்களைத் தீர்ப்பதில் பட்டினி சிகிச்சையின் பயன்கள் குறித்தப்பல்வேறு ஆய்வுகளை நடத்தி வெற்றி பெற்றார்.
வளர்-சிதை மாற்றக் கோளாறுகள் - குறிப்பாக கொழுப்புப் பொருள்களின் வளர்சிதை மாற்றம், பல்வேறு இரத்தவோட்ட மண்டல நோய்கள், நுரையீரல், ஆஸ்துமா, தோல் நோய்கள், ஆகியவற்றை குணப்படுத்துவதில் கட்டப்படுத்தப்பட்ட உண்ணாவிரத முறை அளிக்கும் பயன்கள் குறித்து சோவியத் மருத்துவரான, என். நார்பகோன் தமது ஆய்வுக்கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளார்.
முன்சிறுகுடல் வளைவு, இரப்பை ஆகியவற்றிலுள்ள புண்களை ஆற்றுவதில் அப்படிப்பட்ட உண்ணாவிரதச் சிகிச்சையின் வெற்றிகள் பற்றி ஏ.பாகுலேவ் என்பவர் ஆய்வுகள் நடத்தி வெற்றிகள் கண்டள்ளார்.
இருபது -முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சோவியத் ரூசிய நாடுகளில் உண்ணாநோன்பு மருத்துவம் பல்வேறு மருத்துவ மையங்களிலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. தோல் தொடர்பான நோய்களுக்கு முக்கியமாக இம்முறை பின்பற்றப் படுகிறது.மனப்பிளவு நோய்க்கு உண்ணா நோன்புசிலவகை மனக்கோளாறுகளுக்கு குறிப்பாக ஆரம்ப நிலையிலுள்ள மனப்பிளவு நோய்க்கு உண்ணாவிரத சிகிச்சை முறையைப் பின்பற்றலாம் என்பதை ரஷ்ய மருத்தவர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடலில் எந்தவித நோயும்இல்லாதிருக்கும்போது கூடத் தாங்கள் நோயுற்றிருப்பதாக அச்ச உணர்வினால் துன்புறும் பல நோயாளிகளுக்கும் பல்வேறு பீதியுணர்வினால் தனிமைப்பீதி கூட்ட நெரிசலால் எற்படும் பீதி, இருட்டு, தொற்றுநோய், கூர்மையான பொருள்களைப் பற்றிய பீதி, ஆகியவற்றினால் அவதிப் படுவோருக்கும் இம்மருத்துவ முறை சிறந்த பலன்களை அளித்துள்ளது.
எங்கள் மருத்துவக்கூடத்தில் மட்டுமே நாங்கள் இதுவரை ஏழாயிரம் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு இம்முறையைக் கடைப் பிடித்திருக்கிறோம்.
குணப்படுத்துவது கடினம் என்று கருதப்பட்டு வந்த சிலநோய்களைக் குணப்படுத்து வதிலும் இந்த முறை சிறந்த வெற்றிகளைத் தந்துள்ளது. எனினும் சீரான மருத்துவ மேற்பார்வையிலேயே இந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வகை மருத்துவம் அளிக்கப் படும் நோயாளிகள் மருத்துவ மையத்தில்தனிக்கூடங்களில் வைக்கப்படுகின்றனர்.
நோயாளிகள் அவர்களது உறவினர்கள் ஆகியோரது ஒப்புதலின் பேரிலேயே இம்முறை கடைப்பிடிக்கப் படுகின்றது.முதலில் நோயாளிகள் எல்லாவகையான ஆய்வுகளுக்கும் உட்படுகின்றனர்.
உண்ணாநோன்பு மருத்துவம் மேற்கொள்வதால் நோயாளிகள் எவ்வகையான பாதிப்பும் எற்படப் போவதில்லை என்பதை உறுதி செய்த பின்னரே இம் மருத்துவமுறை தொடங்கப் படுகிறது.ஒவ்வொரு நோயாளியும் எத்தனை நாட்கள் உண்ணாநோன்பு இருக்க வேண்டும் என்பது அவரவரது நோய் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்து முடிவு செய்யப் படுகிறது.
அந்தக் காலகட்டம் இருபது முதல் நாற்பது நாட்கள் வரை நீடிக்கலாம் உண்ணாநோன்பை நோயாளிகள் பின்பற்றும் போது அவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்கப்படுவதில்லை.மருத்துவ முறைஉணவு கிடைக்காமல் கட்டாயத்தின் பேரில் பட்டினி கிடக்கும் போது ஒரு மனிதனுக்கு சாவு தொடரலாம். அதற்கு மாறாக பட்டினி நிலை இங்கு ஒரு மனிதனது நோயைத் தீர்க்கப் பயன்படுத்தப் படுகிறது.
ஏனெனில் இம் மருத்துவ முறை தொடங்கும் போது ஒரு மனிதனின் குடல் மண்டலம் அனைத்தும் முதலில் கழுவப்பட்டு உடலிலுள்ள எல்லா நச்சுப் பொருட்களும் அகற்றப்படுகின்றன. நோயாளிகளுக்கு குடிப்பதற்கு நிறைய நீரும் காலை வேளையில் நீர் மருத்தவமும் பொதுவான மசாஜ்மருத்துவமும் அளிக்கப் படுகிறது.
அவர்கள் பெரும்பாலான நேரத்தை வெட்ட வெளியிலேயே கழிக்கின்றனர். பொதுவாக முதல் 3-5 நாட்களில் கட்டுப்படுத்தப் பட்ட தானியங்கு அமைப்புகள் தளர்ந்து பசியுணர்வு மறைந்துவிடுகிறது. உணவின் மணமோ அதைப் பார்ப்பதோ அவர்களைப் பாதிப்பதில்லை.
எனினும் உணவு குறித்த இனிய நினைவுகள் இருக்கத்தான் செய்கின்றன அதிலும் நோயாளி அத்தகைய நினைவுகளிலிருந்து விடுபடாதிருந்தால் அவை மேன்மேலும் அவனைப் பாதிக்கவே செய்யும்.
மருத்துவரும் உளவியல் சிகிச்சையாளரும்இந்தக் கட்டத்தில் நோயாளிக்கு உதவுகின்றனர்.
ஆறாவது அல்லது ஏழாவது நாளில் தான் மிக்க கடுமையான அனுபவம் ஏற்படும். அப்பொழுதுதான் உடல் தன்னுள்ளேயுள்ள அற்றல் சேமிப்புகளையே உணவாகப் பயன்படுத்தத் தொடங்குகின்றது.
இந்த நெருக்கடியான கட்டமும் குறுகிய கால அளவுக்கே நீடிக்கும்.
அதன் பின்னர்நோயாளிக்கு அவ்வளவு சிரமம் இருக்காது.
அவனது மன உணர்வும் பலமும் அதிகரிக்கும்.
அவனிடமிருந்த முதன்மை நோய் குறையத் தொடங்குகிறது.
உடலின் ஆற்றல் சேமிப்பு அனைத்தும் தீரும்வரை இந்நிலை நீடிக்கும்.உடல் புனரமைக்கப் படுகிறது.
முப்பது அல்லது முப்பத்தைந்து நாட்களில் ஒருவர் இந்த நிலையை அடைகின்றார். இதற்குள்ளாக அந்த நோயாளியின் நாக்கு தூய்மையடைந்து தோலும் ஒருவித இளஞ் சிவப்பு நிறத்தை அடைகிறது. வாயிலுள்ள துர்நாற்றம் நீங்கி அவனுக்கு கோரப் பசி உணர்வு மேலிடுகின்றது.
இந்தக் கட்டத்தில்தான் அடுத்த மிக முக்கியமான புனரமைப்பு நிகழ்ச்சி தொடங்கப் படுகின்றது.முதலில் நோயாளிக்கு நீர்த்த பழச்சாறு கொடுக்கப் படுகிறது. பின்னர் படிப்படியாக நீர் சேர்க்காத பழச்சாறும் அதன் பின்னர் கஞ்சி வேகவைத்த காய் கறி சூப் போன்றவை மெல்ல மெல்லக் கொடுக்கப்படுகின்றது.சாப்பிடத் தொடங்கி முப்பது அல்லது நாற்பதாவது நாளில்தான் அவனுக்கு வழக்கமான முழு உணவு கொடுக்கப் படுகின்றது.
உண்ணாநோன்பு காலத்தில் ஒரு நோயாளி மொத்தத்தில் சராசரி பதினைந்து முதல் இருபது சதவிகித எடையை இழக்கின்றார்.
ஆனால் மிகவும் பருமனானவர்கள் எடைக் குறைப்பிற்காகவே இந்தச் சிகிச்சை முறையைக் கடைப்படித்தால் இழப்பு அதிகமாக இருக்கும்.
முடிவுரை
இந்த முறையில் ஜந்து உயிரியல் அம்சங்கள் உள்ளன.
முதலாவது நரம்பு மண்டலத்திற்கும் மூளைக்கும் தற்காப்பு அடங்கல் என்ற நிலைக்கு முழு ஓய்வு கிடைக்கின்றது.
இரண்டாவது உடலிலிருந்து நச்சுப்பொருள் நீங்க உடல் தூய்மை செய்யப்படுகின்றது. மூன்றாவது ஒருவிதக் கூர்மையான உள் அடங்கல் ஏற்படுவதானது பின்னர் ஏற்படும் புனரமைவுக்குத் தூண்டுதலாக ஆகின்றது.
நான்காவதாக திசுக்கள் தீவிரமாகத் தாமே புதுப்பிக்கப் படுகின்றன.
ஐந்தாவதாக உடலின் எல்லா உறுப்பு மண்டலங்களும் குறிப்பாக நாளமில்லாச் சுரப்பு மண்டலம் ஒரு விதத் தகைவு நிலைக்கு உட்படுத்தப் படுகின்றது.
பிற எல்லா உறுப்புகளையும் போன்றே உண்ணாநோன்பு சிகிச்சையின் போது மூளையும் அதிலுள்ள நச்சுப் பொருள்களை இழந்து புத்துயிர் பெறுகின்றது.
மேலும் அதற்கு கணிசமான அளவு ஓய்வும்தரப்படுகின்றது.
மூளை ஆற்றலின் பெருமளவைப் பயன்படுத்தக் கூடியதுசெரிமான மண்டலமேயாதலால் உணவின்றி இருக்கும்போது அது நல்ல ஓய்வு பெறுவது இயல்பே.
இதுதான் உளவியல் கோளாறுகள் சீரடைவதன் அடிப்படை இரத்தநாள இறுக்க நோயாளிகள் நல்ல நினைவாற்றலைப் பெறுவதுடனே உணர்ச்சிப் பாதிப்புகளி னின்றும் விடுபடுகின்றனர்.
- நன்றி: நல்வழி

நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை ஆக்கங்களில் கணித விதிப்பாடுகள் -8

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

(குறிப்பு: இக்கட்டுரை எழுதிய நியூக்ளியர் அறிஞர் சி.ஜெயபாரதம், குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் உடன் இணைந்து பணியாற்றியவர். முனைவர் இர.வாசுதேவனின் நண்பர். தற்போது கனடாவில் குடியமர்ந்துள்ளார்)

'ஜியாமெட்ரி [வரைகோணக் கணிதம்] தெரியாதவர் என் கணிதக் கல்விக் கூடத்தில் நுழையாது அப்பால் செல்லுங்கள். ... பித்தகோரஸின் கணித விதிதான் [நேர்கோண முக்கோணப் பக்கங்களின் சதுரக் கூட்டல் சாய்வு பக்கத்தின் சதுரத்துக்குச் சமம்] அகில ஆக்கத்தின் உறுப்புச் செங்கல்கள் என்று நான் கூறுவேன். '

கிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347]

'யார் நம்புவார், கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே, பிரபஞ்ச கோளங்களின் பிம்பங்களைக் காணும் பேராற்றல் அடங்கி யிருக்கிறது என்று ? '

'உலகின் அழகுமயம் அனைத்தையும் கண்விழி தழுவுகிறது என்பதை நீ அறிய வில்லையா ? மனித இனங்கள் ஆக்கும் கலைகள் எல்லாவற்றையும் பற்றி அதுதான் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிறகு அவற்றைச் சீராய்த் திருத்துகிறது. மனிதனின் கண்விழி கணிதத்தின் இளவரசன் என்று கருதப் படுகிறது! கண்விழி மூலம் தெரிந்த விஞ்ஞான மெய்ப்பாடுகள் யாவும் பின்னால் உறுதிப்பாடு ஆகின்றன. அது விண்மின்களின் தூரத்தையும், பரிமாணத்தையும் அளந்துள்ளது. பூமியின் மூலகங்களைத் [Elements] தேடி அவற்றின் இருப்பிடங்களை கண்டுபிடித்துள்ளது. கட்டடக் கலையைப் படைத்துள்ளது. தெய்வீக ஓவியக் கலையை உதயமாகச் செய்து அதன் தொலை நோக்குக் காட்சியையும் [Perspective] தோற்றுவித்துள்ளது!

ஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி (1452-1519)

'எகிப்திய மாந்தர் கொண்டிருந்த கணித ஞானம், வானியல் அறிவு, பூதள விபரம், விஞ்ஞான நுணுக்கங்கள் அனைத்தும் விந்தையானவை, வியக்கத் தக்கவை! அவரது அகிலவியல், மதவியல் கோட்பாடுகளும் [Cosmology, Theology] ஆழ்ந்து அறியத் தக்கவை! பிரமிட்களின் புதிர்கள், அமைப்புகள் ஆகியவற்றைப் புரிய வைக்கும் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதின் மூலம், ஓரளவு பிரபஞ்சக் கோட்பாடுகளையும் அவற்றில் மனிதரின் தொடர்புகளையும் தெரிந்து கொள்கிறோம். '

பீட்டர் டாம்ப்கின்ஸ் [Peter Tompkins, Author: Secrets of the Great Pyramids]


: எகிப்தில் உள்ள பிரமிட் போன்ற கூம்பில்லாக் கோபுரங்கள் பல மாயா நாகரீகம் தழைத்த மத்திய அமெரிக்காவிலும், இந்தியாவின் தென்னக மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளில் ஏறக்குறைய ஒரே காலங்களில் தோன்றி யிருக்கலாம் அல்லது அம்மாதிரிக் கோபுர அமைப்புகள் பின்னால் ஆங்கே பரவி யிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. பிரமிக்கத் தக்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், அரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் நுணுக்கமான கணித ஞானமும், வானியல் யூகமும், விஞ்ஞான அறிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந் ததாகத் தெரிகிறது. பண்டைய எகிப்தில் ஓராண்டின் காலத்தையும், நாட்களையும், நேரத்தையும் அளக்கக் கணித விதிகள் பயன்படுத்தப் பட்டன. நேர் கோடுகள், பல்வேறு கோணங்கள், வட்டம், வளைவு, சதுரம், நீள்சதுரம், பரப்பளவு, கொள்ளளவு [Volume], உயர்ந்த தூண், பிரமிட் போன்ற சதுரக் கூம்பகம், கோயில் ஆகியவை யாவும் துல்லியமாக அமைத்துக் கட்ட கணித விதிப்பாடுகள், பொறியியல் நுணுக்கங்கள் சீராகக் கடைப் பிடிக்கப் பட்டு வந்திருக்கின்றன. 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தியர் நாட்கள், மாதங்கள், வருடம் குறிப்பிடும், ஆண்டு நாள்காட்டியைத் [Calendar] தயாரித்து வந்திருக்கிறார்கள்.


எகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள் அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக் குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான 'யந்திரவியல் நியதி முறைகளைக் ' [Principles of Mechanics] கையாண்டதாக அறியப்படுகிறது! கல்துறைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள்.

அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை! நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது! கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில! கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா! பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர் ? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர்! எகிப்தியர் வரைகோணக் கணிதம் (Geometry), இரசாயனம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடல்பகுப்பு (Anatomy), இசை (Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள்.

4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான 'பை ' [Constant Pi=3.14 (22/7)] என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்-ஹெச் [Karl-H] [தகவல்:21] என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த 'வரலாற்றுப் பிதா ' எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் [Herodotus (கி.மு. 484-425)] எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் [Surface Area of Each Face of the Pyramid = Square of its Height (Height x Height)]. இந்த வரைகணிதப் பரப்பளவை [Geometrical Area] எகிப்தின் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது! அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும்! ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 100% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட மிட்டதாக அறியப் படுகிறது!


எகிப்தியர் கட்டடக் கலையில் கணித விஞ்ஞானம்

விஞ்ஞானப் பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி, நைல் நதி நாகரீகத்தை மேம்படுத்திய பண்டைக் கால எகிப்தியர்தான் முதன்முதல் கணித விதிகளைப் பின்பற்றிய மாந்தர் என்று வரலாற்றில் அறியப்படுகிறது. கெமிஸ்டிரி [Chemistry] என்னும் இரசாயனப் பதமே எகிப்தியர் சொல்லான 'ஆல்கெமி ' [Alchemy] என்னும் இரசவாத முறையிலிருந்து வந்தது என்று அறியப் படுகிறது. எல்லாத் துறைகளையும் விட, அவர்கள் மிஞ்சி மேம்பட்ட துறைகள், மருத்துவம், பயன்பாட்டுக் கணிதம் [Applied Mathematics] ஆகியவையே. புராதன பாபிரஸ் இலைக் காகிதங்களில் [Papyrus: Ancient Paper -Water Plant or reed, meant for writing] எழுதப் பட்டுள்ள ஏராளமான எகிப்திய காவியங்களில் மருத்துவ முறைகள் காணப் பட்டாலும், எப்படி இரசாயனக் கணித முறையில் கலக்கப் பட்டன என்னும் விளக்கங்கள் காணப்பட வில்லை. ஆனால் நிச்சயமாக அவரது முற்போக்கான விளக்கப் பதிவுகள் அவரது கைவசம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் எகிப்தியர் இரசாயனம், மருத்துவம் மட்டுமின்றி, வானவியல், பொறியியல், பொதுத்துறை ஆளுமை [Astronomy, Engineering & Administration] போன்ற துறைகளிலும் தெளிவான அறிவியற் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.

தற்கால தசம எண்ணிக்கை போன்று [Decimal System] 4000 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் குறியீட்டுச் சின்னங்களில் [Symbols] ஒரு தனித்துவ தசம ஏற்பாடைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அவரது குறியீட்டுச் சின்னங்களையும் அவற்றுக்கு இணையான எண்கள் சிலவற்றையும் கீழே காணலாம்:


எண்: 1 .... ஒற்றைக் கோடு
எண்: 10 .... ஒரு லாடம்
எண்: 100 .... C எழுத்து போல் ஒரு சுருள்
எண்: 1000 .... தாமரை மொட்டு
எண்: 10,000 .... ஒரு விரல்
எண்: 100,000 .... ஒரு தவளை எண்: 1000,000 .... கை உயர்த்திய ஒரு கடவுள்

எகிப்தின் நிபுணர்கள் தயாரித்த இரண்டு கணிதச் சுவடுகள் 4500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் விருத்தி செய்த வடிவெண்கள் அல்லது எண்ணிக்கைச் சின்னங்கள் எனப்படும் ஹைரோகிலிஃபிக் எண்களைத் [Hieroglyphic Numerals] தமது கணித, வணிகத் துறைகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஹைரோகிலிஃப் முறையில் வடிவங்களும், சின்னங்களும் எழுத்துகளைக் காட்டவும், எண்ணிக்கையைக் கூட்டவும், உச்சரிப்பை ஊட்டவும் உபயோகமாயின. சின்ன மயமான [Symbols] அந்த எண்கள் எகிப்தியரின் கோயில்கள், பிரமிட்கள், கோபுரங்கள், வரலாற்றுத் தூண்கள், குவளைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. எகிப்தியரின் வரலாற்றுப் புகழ் பெற்ற இரண்டு கணிதக் காலச் சுவடுகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கிடைத்துள்ளன. முதலாவது சுவடு: ரிந்து பாப்பிரஸ் [Rhind Papyrus]. இரண்டாவது சுவடு: மாஸ்கோ பாப்பிரஸ் [Moscow Papyrus]. பாபிரஸ் என்பது நமது ஓலைச் சுவடிக்கு ஒப்பான எகிப்தின் ஓரிலைச் சுவடு.

முதற் சுவடை ஸ்காட்லாந்தின் எகிப்தியவாதி ஹென்ரி ரிந்து [Egyptologist: Henry Rhind] 1858 ஆம் ஆண்டில் லக்ஸர் நகரில் [Luxor (Egypt)] விலை கொடுத்து வாங்கியதாகத் தெரிகிறது. அது இப்போது பிரிட்டிஷ் கண்காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. கி.மு.1650 ஆம் ஆண்டில் சுருட்டிய 6 மீடர் நீளம், 3 செ.மீ அகலம் உள்ள பாபிரஸ் இலைப் பட்டையில் அது எழுதப்பட்டது. மூலமான ஆதிச்சுவடு அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கி.மு.1850 இல் ஆக்கப் பட்டதாக அறியப்படுகிறது. ரிந்து சுவடியில் எகிப்திய கணித ஞானிகளின் 87 கணிதப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முறைகள் விளக்கப் படுகின்றன. அதை மூலச் சுவடியிலிருந்து முதலில் பிரதி எடுத்த எகிப்த் கணித மேதை, ஆமெஸ் [Ahmes] என்பவர்.

இரண்டாவது மாஸ்கோ சுவடும் ஏறக்குறைய அதே காலத்தில் ஆக்கப் பட்டது. மாஸ்கோ சுவடியைப் பிரதி எடுத்த அல்லது ஆக்கிய கணித மேதை யாரென்று எழுதப் படவில்லை. அதை விலை கொடுத்து வாங்கிய ரஷ்ய அறிஞர் பெயர் கொலெனிச்செவ் [Golenischev] என்பதால் அதை கொலெனிச்செவ் பாப்பிரஸ் என்று பெயர் அளிக்கப் பட்டது. இப்போது அச்சுவடி மாஸ்கோ நுண்கலைக் காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. மாஸ்கோ சுவடியில் 25 கணிதப் பிரச்சனைகளின் தீர்ப்புகள் எழுதப் பட்டுள்ளன. இந்த இரண்டு சுவடுகளிலும் பொதுவாகச் செய்முறைக் கணிதத் தீர்ப்புகளே பயிற்சிக்காக விளக்கப் படுகின்றன. ரிந்து சுவடியில் 87 கணக்குகளில் 81 எண்ணிக்கை, பின்னங்கள் விடையாக வருபவை. சில கணக்குகளுக்குத் சமன்பாடுகள் [Equations] தேவைப்படுகின்றன. வேறு சில கணக்குகளுக்கு வரைகோண முறைகளைப் [Geometry] பயன்படுத்த வேண்டியது. சில கணக்குகளில் விட்டம் மட்டும் தரப்பட்டு, வட்டத்தின் பரப்பளவு என்ன வென்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது. வட்டத்தின் பரப்பு = பைx விட்டத்தின் சதுரம்/4 [Pi x DxD/4]. Pi =22/7

கூம்பற்ற பிரமிட் (Trunk Pyramid) கொள்ளளவுக் கணிப்பு

கிரேக்க கணித மேதை பித்தகோரஸின் நேர்கோண முக்கோண விதியைப் [Pythagoras Theorem (கி.மு.570-500)] பலவழிகளில் எகிப்தியர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தி உள்ளனர். பிரமிட் அமைப்பின் உட்பகுதி வரை முறைகள், பரப்பளவுகள், கொள்ளளவுகள் [Areas & Volumes] அனைத்தும் பித்தகோரஸின் நியதியை உபயோகித்து கணக்கிடப் பட்டவை. பிரமிட்களின் உள்ளே ஃபாரோ மன்னரை அடக்கம் செய்த புதை மாளிகைகள் [Kings Chambers] பித்தகோரியன் முக்கோணத்தில் [3-4-5 (3^2+4^2=5^2)] அமைக்கப் பட்டவை.

பிரமிட் ஒன்றின் உயரமும் (h), பீடத்தின் சதுரப் பக்கத்தின் அளவும் (a) முடிவு செய்யப் பட்டால், அதற்கு வேண்டிய மொத்தக் கற்கள் எத்தனை என்று எகிப்தியர் காண முடிந்தது. பிரமிட் கொள்ளளவு = 1/3 [hxaxa] or 1/3 [ha^2]. அதுபோல் கூம்பற்ற பிரமிடின் [Trunk Pyramid] கொள்ளளவையும் கணிக்கலாம். கூம்பின் பீடச் சதுரப் பக்கம் (b), மேற் சதுரப் பக்கம் (a), மொட்டைப் பிரமிட் உயரம் (h) என்று ஒருவர் வைத்துக் கொண்டால், கூம்பற்ற பிரமிட் கொள்ளளவு = 1/3[h] x [b^2+ab+a^2]. கோடிக் கணக்கான பாறைக் கற்களின் எண்ணிக்கையை அறிய, வெட்டி எடுத்துச் சீராய்ச் செதுக்கப்படும் ஒரு பாறாங்கல் பரிமாணம் (நீளம், அகலம், உயரம்) தெரிந்தால் போது மானது. கணிக்கப் பட்ட பிரமிட் கொள்ளளவைப் பாறாங்கல் ஒன்றின் கொள்ளளவால் வகுத்தால், மொத்தக் கற்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.

கோயில் நான்மணிமாலை

தமிழ் விரிவுரையாளர்,
மா. மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை.


கோயில் என்ற பொதுவழக்கு சிதம்பரம் கோயிலைக் குறிப்பதாகும். கோயில்
நான்மணி மாலை என்ற பட்டினத்துப் பிள்ளையாரின் பனுவல் சிதம்பரம்
திருக்கோயிலை முன்னிறுத்திப் பாடப்பட்டுள்ளது.

இது நாற்பது பாடல்கள், நான்கு வகை யாப்பு, நான்குவகை கருப்பொருள்
என்ற நிலையில் நன்நான்காகக் கோர்க்கப் பெற்றுள்ளது. மாலை என்ற
வடிவிற்கு ஏற்ப அகப்பொருள்சுவையும் இதனுள் இணைக்கப் பட்டுள்ளது.
பட்டினத்துப் பிள்ளையார் இதனுள் பயன்படுத்தியுள்ள எளிமையான தத்துவக் கருத்துக்களால் இப்பனுவல் சிறப்பு மிக்க ஒன்றாக விளங்குகின்றது.

இந்நூல் வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்ற நான்குவகையான பொதுயாப்புகளில் பாடப்பட்டுள்ளது. இணைகுறள் ஆசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா ஆகிய இரண்டும் ஆசிரியப்பாவின் வகைகளாக வந்து சில இடங்களில் அமைந்துள்ளன.

இந்நூலுள் நான்கு வகைக் கருப்பொருள்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு ; 1. சிவபெருமானின் பெருமைகள், 2. சிவபெருமானின் ஆடல், 3. அகக் கருத்துகள், 4. தத்துவக் கருத்துகள். இந்நான்கைப் பற்றிய கருத்துகளை விளக்கு
வதாக இக்கட்டுரை அமைகிறது.

சிவபெருமானின் பெருமைகள் சிவபெருமானின் பெருமைகள் என்ற கருத்தின் அடிப்படையில் சிவபெருமானின் உடலழகு, பத்து அங்கங்கள், திருவிளையாடல்கள். சிவன் இருக்கும் இடம் ஆகியன போற்றப் பெறுகின்றன. இவை இந்நூலின் பாடல்
களில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. பட்டினத்தடிகள் சிவபெருமானின் புற
அழகைப் பாடல்கள்தோறும் கூறி வியக்கின்றார்.

அவற்றில் சில பகுதிகள் பின்வருகின்றன.

''சிவபெருமானின் திருவடி ஒன்று மட்டுமே பாதாள உலகின் கீழ் நீள்வது. திருமுடி அண்டங்கள் எல்லாம் கடந்து நிறைவது. திருநீறு நிறைந்த எட்டு தோள்களும் எட்டு திசைகள் கடந்தவை. ''(பா.6) என்பன பட்டினத்தடிகள் காட்டும் சிவபெருமானின் தோற்றப் பொலிவுகள் ஆகும்.

'வாமத்தி¢லே ஒரு மானை தரித்து ஒரு மானை வைத்தாய்' (பா.14) என்று மான் ஏந்தியமையையும் , பார்வதியை ஒரு பகுதி ஏற்றியமையையும் அவர் ஒரு சேரப் பாடுகிறார். 'அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் பையரவு அணிந்த தெய்வநாயக' என்ற தொடரின் மூலம் சிவபெருமானின் பாம்பணியும் தலையணியும் விளக்கம் பெறுகின்றன. இவை அழகிற்குச் சான்றுகள்.

சிவபெருமான் அணிகின்ற கொன்றைமாலையும் வெண்கொற்றக்குடையும், வெற்றிதரும் விடைக்கொடியும், ஒலிசெய்யும் உடுக்கை என்னும் இசைக்கருவியும், நான்மறைகள் என்று கூறத்தக்க குதிரைகளும், ஆயிரம் ஆயிரம் யானைகளும், மேருமலையும், தில்லைத் திருப்பதியும், பதினாயிரம் திருப்பெயர்களும் போன்ற பத்து அங்கங்களைப் பெருமை கொள்ள ஏற்றுக் கொண்டவர்.

அவரின் திருமண நாளில் தேவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது எழுதப்பட்ட பெயரேட்டில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ள நான் உன்னிடம் வேண்டுகின்றேன். இவ்வாறு செய்தால் நுளம்பும்(கொசுவும்) கருடனாகி விடும் என்ற விதிக்கு ஏற்ப நானும் அடியவரில் ஒருவராவேன்(பா.4) என்று பட்டினத்துப் பிள்ளை வேண்டுகோள் வைக்கிறார். இவ்வேண்டுகோளின் அடிப்படையில் சிவபெருமானின் பத்து அங்கங்களையும் தொண்டர்கள் அறிந்து கொள்ள முடிகின்றது.

சிவபெருமானின் திருவிளையாடல்கள் இம்மாலையின் இறுதிப்பாடலில் தௌ¤வாக்கப் பெற்றுள்ளன. திருமாலுக்குச் சக்கரம்¢ அருளியமை, குபேரனுக்குச் சங்கநிதி பதும நிதி அளித்தமை, மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் அளித்தமை, தேவர்க்காக கொடிய நஞ்சு உண்டமை, மன்மதனை எரித்தமை, தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை அழித்தமை, அருச்சுணனுக்கு ஆயுதம் வழங்கியமை, இராவணனின் செருக்கை அடக்கியமை, சலந்தரனை அழித்தமை, சண்டீசருக்குப் பதம் அளித்தமை, மகனான சீராள தேவனை அரிந்த சிறுத்தொண்டருக்கு அருளியமை, விளக்கைத் தூண்டிய எலிக்கு சக்கரவர்த்தி பதம் தந்தமை, அடி முடி தேட விட்டமை முதலான பல திருவிளையாடல்கள் இப்பாடலில் அட்டவணைப் படுத்தப் பெற்றுள்ளன(பா.40).

இவை அனைத்தும் புராணச் செய்திகளும், பெரியபுராணச் செய்திளும் ஆகும். அறிந்த இந்த செய்திகள் தவிர பலரும் அறியாத விளையாடல்களையும் பட்டினத்தடிகள் இப்பனுவலி¢ல் பொதிந்து வைத்துள்ளார்.

அவ்வகையில் உலகம் அழியும் காலத்தில் உயிர்களைக் காக்கவும், கடல் நிலம் போன்ற பகுதிகளைக் காக்கவும் சேல் மீன் ஆகி உலகை உண்ட திருவிளையாடல் புதிய ஒன்றாகும்.

சிவன் இனிது அமரும் இடம் தில்லையம்பதியாகும். இங்கு அவன் நடனக் கோலத்தில் விளங்குகிறான். தில்லையில் உள்ள இறைவன் 'பெரியதிற் பெரியை
என்றும் அன்றே, சிறியதிற் சிறியை என்றும் அன்றே' என்னும் அளவில் என்றும் இருப்பவன். ''செய்யவாய், மையமர் கண்டம், நெற்றியில் ஒற்றை நாட்டம், எடுத்த
பாதம், தடுத்த செங்கை, புள்ளி ஆடை, நாடகம் மன்றுள் ஆடுபவன் ''(பா.12) என்று
தில்லை இறைவன் இவரால் சிறப்பிக்கப் படுகிறான்.

இவ்வாறு இறைவர் பெருமை ஒரு கருப் பொருளாக நின்று இப்பனுவல் சிறக்கிறது.சிவபெருமானின் ஆடல் சொல், பொருள் இரண்டின் அளவையும் கடந்து தம்மை மறந்து சிவனை நினைப்பவர் மனத்திலும் தி¢ல்லையிலும் ஆடல் புரியக் கூடியவர் நடராசப் பெருமான்(பா.4). இவரின் நடத்தால் ஏழு உலகமும் உயிர் பெறுகிறது (பா. 7). இவர் அம்பலத்தே நின்று கூத்து உகந்தவர் (பா. 10). '' மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்ப அம்மன்றுக் கெல்லாம் அணியாய் அருள் நடம் ஆடும் பிரான் இவர் '' (பா.26) என்ற பட்டினத்துப் பிள்ளையாரின் குறிப்புரைகள் கொண்டு சிவபெருமானின் ஆடலை அறிந்து அருள் பெறமுடிகிறது.

அகக் கருத்துகள் சிவபெருமானுடைய தேர் வரும்போதே பெண்களின் கைகளில் இருந்த வளையல்கள் கழறத் தொடங்கிவிடும்( பா. 17). வாடைக்காற்றும் மேகமும் மழையும் கலந்து வருகின்றன. இதன்மூலம் வரும் சிவபெருமான் மீது கொண்ட காதல் வருத்தத்தைத் தலைவி எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறாள் (பா. 22) ஊர் அலர் தூற்ற, வாடைக் காற்று வருத்த, பசப்பு நோய் வர இவ்வாறு பற்பலத் துன்பங்களைப் பெற்ற என்மகளைத் தேற்ற உன் கொன்றை மாலையைத் தந்தருள்க (பா.31) என்ற வகையில் பல அகக் கருத்துள்ள பாடல்களை இப்பனுவல் பெற்றுள்ளது.

தத்துவக் கருத்துகள் எளிமையான தத்துவக் கருத்துக்களைப் பாடுவதில் வல்லவர் பட்டினத்துப் பிள்ளையார். இப்பனுவலிலும் பல தத்துவக் கருத்துகளை எளிமையாகச் சொல்லிச் செல்கின்றார்.

'' பேசு வாழி பேசு வாழி கண்டன மறையும் உண்டன மலமாம் பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும் பிறந்தன இறக்கும் பெரியன சிறக்கும் ஒன்றொன்று ஒருவழி நில்லா அன்றியும்''(பா. 28) என்று உலகின் இயல்பை எளிய தத்துவங்களால் எடுத்துரைக்கிறார் பட்டினத்தடிகள்.உயிரின் இயல்பைத் தத்துவப் பின்னணியோடு பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.

''குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி ஐவர் ஐந்திடத்து ஈர்ப்ப நொய்தில் பிறந்தாங்கு இறந்தும் இறந்தாங்கு பிறந்தும் கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும் கொப்புட் செய்கை ஒப்பின் மின்போல் உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்'' (பா. 20)என்ற இவ்வடிகளில் வரும் ஐந்து புலனாசையினால் அழியும் பிறப்பும் மீளவும் இறப்பும் மீளவும் பிறப்பும் என்பதான சுழற்சியில் சிக்கும் மனித வாழ்வைப் பட்டினத்தடிகள் வெறுக்கின்றார்.

''மக்கள் யாக்கைக்கு நினைப்பினும் கடிதே இளமை நீக்கம் அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி அதனினும் கடிதே கதுமென மரணம் வானாள் பருகி உடம்பை வறிதாக்கி நாணாள் பயின்ற நல்காகக் கூற்றம் இனைண தன்மையது இதுவே'' என யமனின் இயல்பைக் கூறுகிறார் பட்டினத்தடிகள்.

சுருங்கச் சொல்லி தத்துவங்களை விளங்க வைக்கும் சீர்மை இவரின் இலக்கியங்களில் காணத்தகும் சிறப்பாகும். அவ்வழியில் கோயில் நான்மணிமாலையும் இனிய தத்துவக் கருத்துகளை வழங்கிச் சிறக்கின்றது.
--~--~---------~--~----~------------~-------~--~----~


"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர். -~----------~----~----~----~------~----~------~--~---

இலக்குவன் தியாகம்!

இராமாயணத்தில் பரதனின் உயர்ந்த தியாகத்தை மெச்சி, அனைவரது உள்ளமும் அவனைத் தொழுவது இயல்பு தான்!

பரதன் துறந்தது கைகேயி தன் வரத்தினால் பெற்ற, அயோத்தி சிம்மாசன உரிமையைத் தான். ஆனால் இலக்குவனோ தன் வாழ்வையே இராமனுக்காகத் துறந்து விடுகிறான்- என்பதை உணரும் போது நம் உள்ளம் இன்னும் உருகி விடும்!

உத்தரகாண்டத்தில் இலக்குவனின் முடிவில் அவன் தியாகத்தைநாம் காண்கிறோம்.
இராமனுடன் வனம் புகுந்த இலக்குவன் இராமனையும் சீதையையும் காவல் காப்பதி லிருந்து அனைத்துப் பணிகளையும் விரும்பி மேற்கொள்கிறான்.

சித்ரக்கூடத்தில் பலவிதமான மரங்களைக் கொண்டு பர்ணசாலை அமைக்கிறான். அதில் இராமர் வாஸ்து சாந்தி செய்த பின்னர் சீதையுடன் புகுகிறார். இராமனுக்கே தன் வாழ்வு என்பதைப் போல இயங்கும் இலக்குவனை, வால்மீகி இராமனின் வெளியே உலாவும் பிராணன் என்கிறார். (பஹிர் பிராண இவாபர: பாலகாண்டம் 18-28)

வால்மீகியின் இந்தக் கூற்று மிக்க பொருள் பொதிந்தது என்பதை அவன் முடிவின் மூலம் உணர முடிகிறது.

யுத்தத்தின் போது இராவணன், பிரமன் கொடுத்த வேல் ஆயுதத்தால் இலக்குவனை அடித்து வீழ்த்துகிறான். களத்திலே மூர்ச்சித்துக் கிடக்கும் இலக்குவனை நோக்கி எல்லையற்ற மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்த இராவணன், இலக்குவனின் உடலைத் தூக்கிச் செல்ல முயல்கிறான். ஆனால் அவனால் முடியவில்லை.

எவ்வளவு முயற்சி செய்த போதும் இலக்குவனின் பொன் உடலை வெள்ளிக் கயிலை மலையைத் தூக்கிய இராவணனால் தூக்க முடியவில்லை!

அப்போது எங்கிருந்தோ வந்த அனுமன் எளிதாக இலக்குவன் உடலைத் தூக்கிச் செல்கிறான். பின்னர் இலக்குவன் காப்பாற்றப் படுகிறான்.

(இடுக்கில் நின்ற அம்மாருதி புகுந்து எடுத்து ஏந்தி -கம்பன்: யுத்த-முதல் போர்புரி படலம்)

வெளி பிராணன் போலவே இருக்கும் இலக்குவனும் இராமன் போலவே, பக்தன் அல்லாத அயலாருக்கு பாரம்; பக்தருக்கோ பாரமற்ற எளியன என்பதை இந்த சம்பவத்தால் பார்க்கிறோம். அரக்கனான இராவணனுக்குப் பாரமாக இருந்த இலக்குவன் பக்தனான அனுமனுக்கு மயிலிறகு போல எளியனாக ஆகி விட்டான். இது போன்ற பல சம்பவங்கள் மூலம் இராம -இலக்குவ தொடர்பை நுணுக்கமாக வால்மீகியும் கம்பரும் எடுத்துக் காட்டும் பாங்கே அலாதி சுவையுடன் அமைகிறது.

இலக்குவனின் முடிவைப் பார்ப்போம்.

நீண்ட காலம் அயோத்தியை அரசாண்ட ராமனின் அவதார காலத்தின் முடிவு நெருங்குகிறது. இதை பிரம்மா காலனுக்கு உணர்த்த, காலன் இராமரை ஒரு முனிவர் வேடத்தில் அணுகுகிறான்.

வாயிலில் இருந்த இலக்குவனிடம், “ஒரு முக்கியமான விஷயமாக இராமரைப்பார்க்க வந்திருக்கிறேன்” என்று கூறிய முனிவரைரிடம், இராமனின் அனுமதிபெற்று அவரை உள்ளே அனுமதிக்கிறான்.

தங்க ஆசனத்தில் அமர்ந்த காலன், "நாம் இருவரும் தனியே பேச வேண்டியவிஷயம் இது. நாம் பேசுவதை வேறு யாரேனும் கேட்டாலோ, தனித்துநாம் இருப்பதைப் பார்த்தாலோ கூட அவன் உன்னால் கொல்லப்பட வேண்டும்"என்று கூறுகிறான்.

இதற்கு இணங்கிய இராமர், இலக்குவனிடம் வாயிற்காப்போனை அனுப்பி விடு;நீயே அங்கு இரு; யார் என்னைப் பார்க்கிறானோ அல்லது எங்களின்பேச்சைக் கேட்கிறானோ அவன் என்னால் கொல்லப்படுவான்" என்றுகூறுகிறார்.

இலக்குவன் வெளியே வாயிலுக்குச் செல்ல காலன் இராமரிடம் பிரம்மா தன்னை அனுப்பியதாகச் சொல்லி, இராமன் தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டகாலம் முடிவுக்கு வருவதை பிரம்மா நினைவூட்டச் சொன்னதை விரிவாகவிளக்கிக் கூறுகிறான். இராமர் அமைதியாக இதைக் கேட்டுக் கொண்டிருக்கும்வேளையில் வெளியே துர்வாச முனிவர் வருகிறார்.

அவரைத் தடுத்த இலக்குவன், இராமர் மிக முக்கியமான வேலை நிமித்தம்இருப்பதைச் சொல்லி சிறிது காத்திருக்க வேண்டுகிறான். இதை கேட்டதுர்வாசர்ம் பெரும் கோபம் கொள்கிறார்.

"உடனே உள்ளே சென்று நான் வந்ததைச் சொல்!. இல்லாவிடில் இராமரையும்உன்னையும் பரத, சத்ருக்க்கனரையும், ஏன்!, இந்த நாட்டில் உள்ளஅனைவரையும் உங்கள் சந்ததி யினரையும் சபித்து விடுவேன்!"என்கிறார்.

சற்று யோசித்த இலக்குவன் தன் வாழ்வைத் தியாகம் செய்வதே சிறந்தது; அதனால் மற்றவரைக் காப்பாற்ற முடியும், என்ற முடிவுக்கு வந்து உள்ளே சென்று துர்வாசரின் வரவை அறிவிக்கிறான்.

இராமர் உடனே காலனுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு வெளியேவந்து துர்வாசரை வரவேற்கிறார்.

“ஆயிரம் ஆண்டுகள் உண்ணாமல் இருந்துத, ஒரு தவத்தை முடித்து விட்டுநேராக இங்கு வருகிறேன்.உண்ணுவதற்கு ஏற்பாடு செய்” என்கிறார் துர்வாசர்.இராமன் அளித்த விருந்தால் மனம் மகிழ்ந்து விடை பெறுகிறார் அவர்.இப்போது இராமன் மனம் மிகவும் துயரம் அடைகிறது.

அவனை நோக்கிய இலக்குவன்,

" காகுத்ஸரே! எனக்கு உங்கள் பிரதிக்ஞையின்படி உரிய தண்டனையை வழங்குங்கள். என்னைக் கொல்லுங்கள்" என்று தானே முன் வந்து கூறுகிறான்.

உடனே இராமன் வசிஷ்டர் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து முனிவர் (காலன்)வந்ததையும் இடையில் குறுக்கே புகுந்ததால் பிரதிக்ஞையின் படிஇலக்குவனைக் கொல்ல வேண்டியிருப்பதையும் கூறுகிறான்.

இராமன் இலக்குவனை நோக்கி,

" சுமித்ரையின் புதல்வனே! இனி உன்னை நான் ஒதுக்குகிறேன். ஏனெனில் நாணயமானோருக்கு ஒதுக்குவது என்பதும் மரணமும் ஒன்று தான்" என்கிறான்.

அற நூலின் படி அமைந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட இலக்குவன் கண்களில் நீர் மல்க சரயு நதி நோக்கிச் செல்கிறான். அங்கே கூப்பிய கைகளுடன்தன் புலன்களை ஒடுக்கி தன் மூச்சை நிறுத்துகிறான்.'

இலக்குவனின் இந்தத் தியாகம் நம்மை உருகச் செய்கிறது!

வெளி பிராணனான இலக்குவன் "போன" பின் உள் பிராணனுக்கு என்ன வேலை?
வால்மீகியின் ஆழ்ந்த வார்த்தைகளுக்கு கடைசியில் அர்த்தம் புரியும் வகையில்,இராமன் அனைவரையும் அழைத்து, " இன்றே நான் வனம் ஏகச் செல்கிறேன்"என்று கூறி தன் அவதார காரியத்தை முடித்து தன் நிரந்தர இருப்பிடமானவைகுண்ட வாசத்திற்குப் புறப்படத் தயாராகிறான்.

இராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு சிறு சிறு சம்பவமும் மனதில் பதிந்து அறநெறிகளை உணர்த்துவதோடு உள்ளத்தை உருக்குவதாகவும் அமைகிறது!

பட்டி மன்ற வரலாறு. -முனைவர் இர.வாசுதேவன்

1. பழந்தமிழர் தம் கருத்தை மற்றோர்க்கு அறிவிக்க கருத்துப் போர் நிகழ்த்தியதாகத் தெரிகிறது. அது, பொது இடங்களில் பல்லோர் முன்னிலையில் நிகழ்ந்திருக்கிறது.

ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள்! விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள்! உரையாற்றும் வல்லமை கொண்டோ ரெல்லாம் உரையாற்றுங்கள்! சமயங்கள் கூறும் தத்துவங்களை காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள்! கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள்! வாதத்தை வாதத்தால் வாதிட்டு, வாதத்தைத் தீர்த்து வையுங்கள்! என்று, தொடிதோட்செம்பியன், அரசாணை வெளியிட்டான். இது, முதற் சங்க காலத்தில் நிகழ்ந்த நிகழ்வாகக் கருதுவர்.
பட்டிமன்றம் என்பது,

"பல்கேளிவித் துறை போகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித் தெடுத்த உடுகெழு கொடியும்"

மாறுபட்ட கருத்தை உரைப்பது என்னும் பொருளில், பட்டினப்பாலை உரைக்கிறது.

அக்காலத்தில் பட்டிமன்றங்கள், அரசுத் தலைநகரங்களிலும், பெரு நகரங்களிலும், பொது விழாக்களிலும் நடைபெற்றுள்ளன . ஒரு நிகழ்வை அறிவிக்கும் மதுரை மாநகரம், பின்வருமாறு முரசு அறைந்தது. "பெருஞ்செய் ஆடவர் தம்மின்; பிறரும் யாவரும் வருக! ஏனோரும் தம்" என்று, மதுரைக் காஞ்சி கூறுகிறது.

பனம்பரனார் இயற்றிய இலக்கண நூலான பனம்பாரத்தில் காணப்படும் ஒரு சூத்திரத்தில், 'மன்னிய அவையிடை வெல்லுறு போதினும்' என்று குறிப்பு, சொற்போரிட்டு வெல்லும் நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. இக்கருத்து, இன்றைக்கு 3500 ஆண்டுகட்கு முற்பட்டது.

'ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்'

என்று , மணிமேகலை குறிப்பிடுகிறது.

சொற்போர் நிகழ்த்துவதற்கு உரிய கருத்துகளை வள்ளுவம் ஒரு அதிகாரமாகக் கூறுகிறது. சொற்போர் நிகழ்த்துவோரைச் ' சொல்லேர் உழவர் ' என்கிறது. நூலைக் கற்றவன் அவைக்கு அஞ்சினால், அவனைப் பேடியின் கையிலுள்ள வாளை' உவமை யாக்குகிறது. மதுரைக் காஞ்சியில் "கம்பலை" என்னும் சொல் ஆளப்படுகிறது. அது, பட்டிமன்றங்களில் எழுந்த ஆரவாரம் என்று பொருள் கூறுகின்றனர்.

"கல்வி பயில்களம் பட்டிமண்டபம்" என்று பிங்கல நிகண்டு (663) பொருள் உரைக்கிறது .

பட்டிமன்ற நெறிகளை அவிநயம் என்னும் பழந்தமிழ் நூல் உரைக்கிறது. அவையில் வாது செய்வோர் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தெளிவாக உரைக்கிறது . அதாவது,

அவைபுகும் நெறியே ஆயுங்காலை எனத் தொடங்கி,

அவையில் கூறவேண்டியவற்றை அவையில் புகும் முன்னரே ஓர் ஒழுங்கு வரிசைப் படுத்திக் கொள்ளவேண்டும்.

பேச எழும்போது இருவரும் ஒன்றாக எழக்கூடாது.

பேசப் புகுந்தவன் கருத்து தோல்வியுறுதலும் உண்டு. இந்த உண்மையையும் எதிர்பார்த்தே புகவேண்டும்.

இருவரும் கூடி உடன் பட்டு நிறைவு பெற வேண்டும். இதனையும் முன் எண்ணமாகக் கொள்ள வேண்டும்.

'தெரிவுடன் உணர்ந்தோர் செப்பினர்' என்று முடிக்கிறது.

அவையடக்கம் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் செய்தி:

அவையில் பேசுவோர் அவைக்கு அடங்கி வணக்கம் சொல்லுதல் வேண்டும். இது, அவை அடங்கியல் எனப்பட்டது. ( தொல்காப்பியம்) "(யான்) அறியாதன சொல்லினும் (அவையோர்) பாகுபடுத்திக் கோடல் வேண்டும். என ( அவையிலுள்ள) எல்லா மாந்தர்க்கும் தாழ்ந்து கூறல் என்று நச்சினார்க்கினியர் விளக்குகிறார்.

பேசுவோர் எழுந்து நின்று பேசுதல் (சிலம்பு)

ஒருவர் பேசும் போது மற்றவர் பேசாமை (நாலடியார்)

இகல் இல்லாதவராக எஃகு போன்ற கருத்து உறுதி கொள்ளுதல் (நாலடி)

அதிரப் பேசாமை (ஆசாரக் கோவை)

கொச்சைச் சொல்லுக்கு மாற்றாக 'அவையியல் கிளவி' சொல்லுதல் (தொல்காப்பியம்)

அவைக்கேற்ற வரையறை கொள்ளுதல் (பழமொழி)

முடிவுக்கு வந்த கருத்தை ஏற்றுக் கொள்ளல் (அவிநயம்)

தலைமைக்குக் கட்டுப்படல் (நாலடி)

மகிழ்ச்சியான ஆரவாரக் குறிப்புகள் (மதுரைக் காஞ்சி)

பாராட்டல் (பழமொழி)

நன்றி கூறல் (திருக்குறள்)


இவை பட்டிமன்றத்தில் காணப்படும் பண்புகளாகும்.

விடுதலைக்கு குரல் கொடுத்தவர் தென்னகத்து பூலித்தேவன்

மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன்.
தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலை நிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்!
நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங் கோலொச்சிய பாளையக் காரனாவான். தன் பாளையத்திற்கு மட்டு மின்று மேற்குப் பாளையத்தார் களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச் செய்த மாபெரும் போர்வீரன்.
இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் 'வெள்ளையனே வெளியேறு' என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழ் மறவன் பூலித்தேவனின் வரலாற்றுச் சுவடிகளில் சிலவற்றைக் இங்கு காண்போம்.
மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங் களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு பாளையங்களாக பிரிக்கப்பட்டதன் காரணம் பாண்டிய வமசத்தினர் மீண்டும் படைத் திரட்டி ஆட்சியைப் பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான். மதுரை, திருச்சி, கொங்குநாடு ஆகிய பகுதிகளில் தெலுங்கர்களையே நாயக்க மன்னன் நியமித்தான். திருநெவேலிச் சீமையில் தான் பெரும்பாலும் தமிழர்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள்.
மேலும் பாண்டிய வம்சத்தின் சிலரையும் பாளையக்காரர்களாக நியமித்து ஓரளவு வம்சாவழி எதிர்ப்பையும் அடக்கினான். மக்களிடத்து இவ்வாறு அதிகார வரம்பை பகிர்ந்தளித்ததால் மக்கள் எதிர்ப்பும் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நாயக்க அரசர்களின் ஆட்சி பலவீனமடைந்தது. இதனால் ஓரளவு சுய அதிகாரம் பெற்றிருந்த பளையக்காரர்கள் சிறிது சிறிதாக நாயக்கராட்சியின் கட்டுப் பாட்டிலிருந்து விலகினார்கள்.
இத்தனைய பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம் இந்திய விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள் பெயர் சித்திர புத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர்.
1-9-1715 ல் மாவீரன் பூலித்தேவர் இவர்களின் புதல்வராக தோன்றினார். இயற்பெயர், 'காத்தப்ப பூலித்தேவர்' என்பதாகும் 'பூலித்தேவர்' என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர் பூலித்தேவர் பிறந்த பொழுது அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். அதற்கு காரணம் பூலித்தேவரின் தந்தை சித்தி புத்திரத் தேவரின் நல்லாட்சிதான்.
அவருடைய ஆட்சி நல்ல முறையில் இருந்ததால்தான் மக்கள் அவர் மீது மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் தான் அவருக்கு பூலித் தேவர் பிறந்தபொழுது, மக்கள் மகிழ்வுற்றார்கள்.
சித்திரபுத்திரத் தேவர் எந்த பிரச்சினையும் இல்லாத அறுபத்து மூன்று ஆண்டுகள் மக்கள் போற்றும் வண்ணம் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாளைக்காரர்கள் மத்தயில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான் பூலித்தேவர் வளர்க்கப்பட்டார். சிறுவயதில் தாதிகளிடம் தன்னு டைய முன்னோர் பற்றிய வீர வரலாறுகளைக் கேட்டு மகிழ்ந்தார்.
மேலும் அந்த பிஞ்சு உள்ளத்தில் இறையுணர்வு பற்றிய தெளிவான விளக்கமும் பதிய வைக்கப்பட்டது. இவ்வாறு சிறுவயதில் ஊன்றப்பட்ட வீர உணர்ச்சியும், இறையுணர்வும் இறுதிவரை அவர் மனதில் இருந்தது. பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப் பட்டது.
சிறு வயதிலேயே முன்னோர் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டதால் தாமும் அவர்களைப்போல் பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உறுதி பூலித்தேவர் மனதில் இருந்தது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார் மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு
இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர் பூலித்தேவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு மாவீரன் என்று கூறுமளவிற்கு அவருடைய உடல்வாகு இருந்தது. அவரைப் பற்றிய ஒரு நாட்டு பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். சோதியைப் போல முகமிருக்கும், திண் தோள்களை உடையவர், பல்லோ பளபளக்கும், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.
காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கி னார்கள். பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக் கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து அவரை அத்தனை இளம் வயதில் மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.
பின்னர் பூலித்வேருக்கு திருமண ஏற்டபாடுகள் நடைபெற்றன.
அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான். கயல்கண்ணி நல்ல அழகி மட்டுமல்ல, வீர விளை யாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர்.
கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள்.
பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர புத்திர தேவன் மற்றும் சிஞானப் பாண்டியன் என்று மூன்று நன்மக்கள் பிறந்தனர்.
பூலித்தேவருக்கு பதினெட்டு வயதிருக்கும் பொழுது கிழக்குப் பளையங்களைச் சேர்ந்த இலவந்தூர் , ஈராட்சி ஆகியவற்றிற்க்கு ஏற்பட்ட எல்லைத் தகராறைத் தீர்த்து வைக்கச் சென்றிருந்தார். அச்சமயம் சிவகிரிப் பாளையத்தான் வந்து கால் நடைகளைக் கவர்ந்து சென்றான். இந்தச் செய்தியை ஒற்றன் மூலம் பூலித் தேவருக்கு கூறப்பட்டது.
உடனே அவர் தளபதியான சவனத்தேவருக்கு செய்தி அனுப்பி சிவகிரிப் பளைக்காரணை தடுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார்.
உடனே 150 வீர்களுடன்ட புறப்பட்டு நேராக சிவகிரிப் படைகளைத் தாக்கு வதற்குச் சென்றார். பூலித்தேவர் போர்க்களத்தில் நுழைந்ததும் சிவகிரி படைகளின் எண்ணிக்கை கனிசமாக் குறைந்து கொண்டே வந்தது. இதனைக் கண்டு மேலும் பலர் களத்தை விட்டு ஓடினர். பூலித்தேவர் இறுதியில் வெற்றிகரமாக கால்டைகளை மீட்டுச் சென்றார். அக்காலப்போர் முறையின் முதற்கட்டமே வேற்று நாட்டின் கால் நடைகளைக் கவர்ந்து செல்வதுதான்.
போரில் வெற்றிபெற்றாலும் சவணத்தேவர் கூடலூர் வரை எதிரிகளை துரத்திச் சென்று போரிட்டார். அவர்களின் எல்லைக் கருகில் சென்று விட்டதால் எதிரி களின் எண்ணிக்கை கூடிவிட்டது.
ஆனாலும் மனம் தளராது போராடி பல பேரை சவணத்தேவர் கொன்று குவித்தார். ஆனால் களத்தில் அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அதையும் பொருட் படுத்தாமல் அவர் போராடியதில், இறுதியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதற்கு விலையாக தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.

CAN U BEAT THIS RESUME !!!!!!!!!!!! !RESUME EDUCATION


இது ஒருவரின் பயோடேட்டா

பார்த்து விட்டு என்ன வேலை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்!!
-----------------------------------------------------

CAN U BEAT THIS RESUME !!!!!!!!!!!! !RESUME EDUCATION /

Qualification:

1950: Stood first i! n BA (Hons), Economics, Punjab University , Chandigarh
,

1952; Stood first in MA (Economics), Panjab University ,Chandigarh
,

1954; Wright's Prize for distinguished performance at St John'sCollege,
Cambridge,

1955 and 1957; Wrenbury scholar, University of Cambridge,

1957; DPhil ( Oxford), DLitt (Honoris Causa); PhD thesis on India'sexport
competitivenessOCCUPATION /

Teaching Experience:

Professor (Senior lecturer, Economics, 1957-59;
Reader, Economics, 1959-63;
Professor, Economics, Panjab University , Chandigarh , 1963-65;
Professor,Internati onal Trade, Delhi School of Economics,University of
Delhi,1969-71 ; Honorary professor, Jawaharlal Nehru University ,New Delhi, 1976
and
Delhi School of Economics, University of Delhi ,1996 and
Civil ServantWorking Experience/

POSITIONS :
1971-72: Economic advisor,
ministry of foreign trade1972-76:
Chief economic advisor, ministry of finance 1976-80:
Director, Reserve Bank of India ;
Director, IndustrialDevelopment Bank of India ;
Alternate governor for India , Board of governors, Asian Development
Bank;
Alternate governor for India , Board of governors, IBRD November 1976 -
April 1980: Secretary, ministry of finance(Department of economic
affairs);
Member, finance, Atomic Energy Commission; Member,finance, Space
CommissionApril 1980 - September 15, 1982 :
Member-secretary, Planning Commission1980-83:
Chairman , India Committee of the Indo-Japan joint study committeeSeptember
16, 1982 - January 14, 1985:
Governor, Reserve Bank of India.1982-85:
Alternate Governor for India, Board of governors, International Monetary
Fund1983-84: Member, economic advisory council to the Prime Minister1985:
President, Indian Economic AssociationJanuary 15, 1985 - July 31, 1987 :
Deputy Chairman, Planning CommissionAugust 1, 1987 - November 10, 19! 90:
Secretary-general andcommissioner, south commission, GenevaDecember 10,
1990 - March 14, 1991 :
Advisor to the Prime Minister on economic affairsMarch 15, 1991 - June 20,
1991 :
Chairman, UGCJune 21, 1991 - May 15, 1996 :
Union finance ministerOctober 1991:
Elected to Rajya Sabha from Assam on Congress ticketJune 1995:
Re-elected to Rajya Sabha 1996 onwards:
Member, Consultative Committee for the ministry of financeAugust 1, 1996 -
December 4, 1997: Chairman, Parliamentary standing committee on commerceMarch
21, 1998 onwards:
Leader of the Opposition, Rajya Sabha June 5, 1998 onwards:
Member, committee on financeAugust 13, 1998 onwards:
Member, committee on rulesAug 1998-2001:
Member, committee of privileges 2000 onwards: Member, executive committee,
Indian parliamentary group June 2001: Re-elected to Rajya SabhaAug 2001 onwards:
Member, general purposes committee

BOOKS:
India 's Export Trends and Prospects for Self-Sustained Growth -Clarendon
Press, Oxford University, 1964;
also published a large number of articles in various economic journals.

OTHER ACCOMPLISHMENTS:

Adam Smith Prize, University of Cambridge ,
1956Padma Vibhushan,
1987Euro money Award, Finance Minister of the Year,
1993;Asia money Award, Finance Minister of the Year for Asia,
1993 and1994

INTERNATIONAL ASSIGNMENTS:

1966: Economic Affairs Officer1966-69:
Chief, financing for trade section,
UNCTAD1972-74:
Deputy for India in IMF Committee of Twenty onInternational Monetary Reform
1977-79: Indian delegation to Aid-India Consortium Meetings1980-82:
Indo-Soviet joint planning group meeting1982:
Indo-Soviet monitoring group meeting1993:
Commonwealth Heads of Government Meeting Cyprus 1993:
Human Rights World Conference, Vienna

RECREATION :

Gymkhana Club, New Delhi;
ife Member, India International Centre,New DelhiName:

Dr Manmohan Singh

DOB: September 26, 1932
Place of Birth: Gah ( West Punjab)
Father: S. Gurmukh Singh
Mother: Mrs Amrit Kaur

Married on: September 14, 1958
Wife: Mrs Gursharan Kaur
Children: Three daughters
Our Prime Minister seems to be the most qualified PM all over
theworld.
Pass this to every INDIAN.... and be PROUD to be an INDIAN

ஊண் போற்றி!! ஊன் போற்றி!!! - முனைவர் இர.வாசுதேவன் M.A.,M.PHIL.,Ph.D.

தமிழ் தொன்மையானது; தமிழர் தம் ஒழுக்கம் அதனினும் தொன்மையானது". தமிழில் தோன்றிய இலக்கியம் அனைத்தும் ஒழுக்கத்தை உரைக்கக் கூடியவை. அதேபோல், தமிழ் மொழியிலுள்ள இலக்கணங்கள் மொழி ஒழுக்கத்தையும் வாழ்க்கை ஒழுக்கத்தையும் உரைக்கத் தோன்றியவையே.

ஒழுக்கம் என்பது நாகரிகம் தோன்றிய காலத்துக்கும் முந்தியது! ஒழுக்கத்தின் தேவையை உணர்ந்து வகுக்கப் பெற்றவையே நீதியும் நெறி முறையும். ஒழுக்கத்தை வலியுறுத்தும் வள்ளுவம், ' ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ' என்கிறது.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"

ஒழுக்கம் வாழ்விற்குச் சிறப்பைத் தரும்; அதனால், ஒழுக்கம் உயிரைவிடவும் சிறந்ததாக எண்ணிக் காக்கப் படும். இதன் ஒண்மையை உணராதவர் எய்துவர் எய்தாப் பழி! என்று, எச்சரிக்கிறது, தமிழ் மறை.

ஒழுக்கம் இருவகைப் படும்.அவை, 'புறவொழுக்கம் அகவொழுக்கம்' என்பவையாகும். புறவொழுக்கம் நீரினாலும் அகவொழுக்கம் வாய்மையினாலும் காக்கப் படும்.

அகவொழுக்கம் மனஞ் சார்ந்ததாகவும், புறவொழுக்கம் உடல் சார்ந்த தாகவும் கருதுவர். உடலாலும் உள்ளத்தாலும் ஒழுக்கத்தை ஒழுகினால், வாழ்வில் துன்பம், துயரம் என்பவை தொடராமலிருக்கும். இதுவே, தமிழ்மறை கண்ட வாழ்வியல் உண்மை.

ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க விழைவோர் உடலை ஓம்புகின்ற ஒழுக்க முறைகளைக் கற்றறிதல் நலம். பின்னர், அவ்வொழுக்கத்தை மேற்கொண்டொழு கினால் வாழ்வில் சுகங்கொழிக்கும்.

உடலொழுக்கம்.

தினந்தோரும் உடலை ஓம்புவது தினவொழுக்கம் எனப்படும். தினவொழுக்கத்தில் தவறுகள் நேரின் துன்பமும் துயரமும் தொடரும். தின வொழுக்கத்தைத் தேடாதார் துன்பத்தைத் தேடினார்! எனல் சாலும்.

"நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்"

என்றதனால் அறியலாம்.

உடலுக்கு நோயெனவொன்று எப்போது தோன்றுகிறதென்றால், உண்ட உணவு செரியாமுன் உண்பதனாலும், கழிவை வெளியேற்றாமல் தடுப்பதினாலுமேயாம். அதனாலேயே நோயெனும் துன்பமும் துயரமும் அடைய நேரிடுகிறது.

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்"

ஞாயிறின் உதயத்தைக் காணாமல் தூங்கி எழுவோர் பலர். அவர்களிடம் எப்போதாவது உதயத்தைக் கண்டதுண்டா? என்று கேட்டால், எப்போதோ பார்த்த ஞாபகம்! என்பதுண்டு. அவ்வாறு, காலங்கடந்து துயிலெழாமல் 'வைகறையில் துயில் எழு' என்றார், தமிழ் மூதாட்டி.

உதயத்துக்குமுன் துயிலெழுந்து காலைக் கடனை முடித்து, நீராட வேண்டும். நீராடல் என்றால், ' சனி நீராடு' என்பதைக் குறிப்பிடுவர். அது, சனி தோறும் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்! என்பதைக் குறிப்பதாகும்.

" நாள் இரண்டு; வாரம் இரண்டு;
மாதம் இரண்டு; வருடம் இரண்டு

என்றொரு வழக்கு உடலைப் பேணுதற்காக உரைப்பதுண்டு. நாள் இரண்டு - நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மலம் போக்க வேண்டும்! என்பதையும், வாரம்இரண்டு-வாரம் இரண்டு முறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும்! என்பதையும், மாதம் இரண்டு - மாதம் இரண்டு முறை இல்லற இன்பம் துய்க்க வேண்டும்! என்பதையும், வருடம் இரண்டு - வருடத்திற்கு இரண்டு முறை குடலைச் சுத்தஞ் செய்ய வேண்டும்! என்பதையும் குறிப்பதாகும்.

உணவு:

உயிர் வாழ்வதற்குத் தேவையானது, உணவு. உணவு இல்லையேல் உடலும் உயிரும் இல்லை. அத்தகைய உணவை எவ்வாறு உண்ண வேண்டும்? என்னும் போது, ' அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட' என்று, நாலடி உரைக்கும். ஆறு சுவையுடைய உணவை உண்ணும் போது, முதலில், இனிப்பும் அதன்பின்னர், புளிப்பு, உப்பு, காரம், கசப்பு என்று உண்ட பின்பு இறுதியில், துவர்ப்புச்சுவை உணவை உண்ணவேண்டும். அவ்வாறு உண்பதனால் உடம்பை ஆட்கொண்டிருக்கும் பஞ்சபூதங்கள் சம நிலை பெறும். உணவின் முடிவில் தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ஐயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கும்.

உணவைக் குறிப்பிட்ட காலத்திலேயே உண்ணவேண்டும். எந்த நேரத்திலும் எதையும் உண்ணலாம்! என்னும் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஞாயிறு எழும் போதும், ஞாயிறு மறையும் போதும் உணவை உண்ணக் கூடாது. கோபம், துக்கம், கவலை ஆகியவற்றுடனும், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும், வெட்ட வெளியிலும், ஈரத்துணியுடனும், கை, கால், முகம், வாய் கழுவாமலும் உணவு உண்ணக் கூடாது.

உணவின் அளவு தொழிலுக்கேற்ப மாறுபடும். ஆனாலும், ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு உண்ண வேண்டும்? என்பதற்கு விதி விதிக்கப் பட்டுள்ளது. யோகி, துறவி, மெய்ஞ்ஞானி பொன்றோர் ஒரு நாளுக்கு ஒரு போதும், அறிஞர், சிந்தனையாளர், அலுவலர் போன்றோர் இரு போதும், கடின உழைப்புடையோர் முப்போதும் உணவுண்ண வேண்டும்.

உணவுண்ணும் போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால் ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் செல்வத்தை உண்டாக்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால் அழிவை நோக்கிச் செல்ல வைக்கும்.

உணவுண்ண பல்வகை உண்கலங்கள் பயன் படுத்தப் படுகின்றன. அவற்றுள், பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவை சிறந்தவை. அவை, எல்லாராலும் பயன் படுத்த முடிவதில்லை. ஆனால், அவை அனைத்திலும் சிறந்தது, 'வாழை இலை'. வாழையிலையில் உணவுண்டால் உணவைச் சீராகச் செரிமானமடையச் செய்வதுடன் உணவில் குற்றங்கள் ஏதேனும் இருந்தாலும் அவற்றைப் போக்கும். விருந்திற்கும் மருந்திற்கும் வாழையே சிறந்ததாகும்.

உணவை உண்டு முடித்தவுடன் நூறடி தூரம் நடை பயில வேண்டும். தாம்பூலம் தரிப்பது உடலாரோக்கியத்துக்கு உகந்தது.

காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் என்னும் பழக்கம் தொடர வேண்டும். இஞ்சி, சீரணத்தைப் பெருக்கும். சுக்கு, வாயுவை நீக்கும். கடுக்காய், உணவின் கழிவை வெளியேற்றும். இம்மூன்றும் உடலைக் காக்கும் அரணாகவும் மருந்தாகவும் இருக்கும்.

உணவை உண்டு விட்டுச் சும்மா இருந்தால் சுகம் கிடைத்து விடாது! 'சோம்பித் திரியேல்' என்று, மூதாட்டி சொன்ன சொல்லை நினைவில் கொள்ள வேண்டும். 'சும்மா இருப்பதே சுகம்' என்பது வேறு நிலை. அதை நினைத்துக்கொண்டு தூங்கக் கூடாது!

'ஓரடி நடவேன்
ஈரடி கடவேன்
இருந்து உண்ணேன்
படுத்து உறங்கேன்!

என்னும் வாக்கினைக் கவனிக்க வேண்டும்.

'ஓரடி நடவேன்' என்பது, உச்சி வேளையில் தன்னிழல் ஒரு அடியாக இருக்கும் வேளையில் வெளியில் நடக்க மாட்டேன்! என்றும், 'ஈரடி கடவேன்' என்பது, ஈரமான மண்ணில் நடக்க மாட்டேன்! என்றும், 'இருந்து உண்ணேன்' என்பது, முன்னர் உண்ட உணவு வயிற்றில் இருக்கும் போதே உணவு உண்ணமாட்டேன்! என்றும், 'படுத்து உறங்கேன்' உறக்கம் வராமுன்னம் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டு உறங்காமல் கிடக்க மாட்டேன்! என்றும் பொருளைத் தருகிறது. இவ்வழியைக் கடைப் பிடித்தால் மிகுந்த ஆரோக்கிய முடன் இருக்கலாம். அதேபோல்,

'காலை கல்லும்
மாலை புல்லும்
ஆளை வெல்லும்!'

என்னும் மொழியும் கவனிக்கத் தக்கது.

உதயத்துக்கு முன் கல் தரையிலும், ஞாயிறு மறைவுக்குப் பின் புல் தரையிலும் நடை பயின்றால் அது உடல் நலத்துக்கு உகந்தது! என்று, உரைக்கப் பட்டுள்ளது!

உறங்கும் போது, எங்கும் எப்படியும் படுக்கலாம் என்றில்லாமல்,

'தன் ஊர் கிழக்கு
தங்கின ஊர் மேற்கு
வேட்டகம் தெற்கு - உனக்கு
வேண்டா ஊர் வடக்கு!'

என்னும் வழக்கும் கவனிக்கத் தக்கது.

எல்லாருக்கும் உகந்த திசை கிழக்கு! ஆனால், அனைவரும் விரும்பும் திசை மேற்கு! தம்பதியானவர்களுக்குத் திசை தெற்கு! எவருக்கும் எலாத திசை வடக்கு! என்று, பொருள் கொள்வர். எத்திசையில் படுத்து உறங்க வேண்டும்! என்று, அறிவித்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உணவு உட்கொண்ட பின்னர் இளநீர் உட்கொண்டால் வாத பித்த ஐயம் சமமாகும். வரட்சி, வெட்கை ஆகிய சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும். கண் குளிரும். பசியுண்டாகும். இல்லத்தரசி சுகமடைவாள்.

உணவு உண்ட பின்னர் வற்றக் காய்ச்சிய பசுவின் பால் அருந்தினால், கண்ணோய்கள் நாடாமல் நீங்கும். உணவு செரிக்கும். உடல் பெருக்கும். அழகுண்டாகும். சுடு சோற்றில் நெய்விட்டு உணவருந்தினால் தாது வலுவடையும். பசியுண்டாகும். மலம் நீங்கும். உடல் அழகு பெரும்.

பூச்சூடினால் தலை நோய் குணமாகும். வெட்டையும் மேக நோயும் குறையும். கண்ணொளி யுண்டாகும்.

மேற்கண்ட இவையெல்லாம் தமிழ் இலக்கியமும் தமிழ் மருத்துவ நூல்களும் எடுத்துரைப்பன. இயற்கை வாழ்க்கையை மேற்கொண்டிருந்த சான்றோரிடம் தாங்கள் மேற்கொண்டிருக்கும் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்டோம். அதற்கு அவர், கீழ்க்கண்டவாறு கூறினார்.

சுக வாழ்க்கை நெறி

நாங்கள், மேற்கொண்டொழுகும் ஒழுக்கங்களை வழிமுறைகளை எவரெவர் கடைப் பிடிக்கின்றனரோ அவரெல்லாம் நோயில்லாமல் ஆனந்த வாழ்வு வாழ்வர்! என்று, உறுதிபடக் கூறினார். தாங்கள் மேற்கொள்ளும் நெறியாவனவென்றோம்?

நாங்கள்,
மூன்று வேளையும் நன்னீரால் உடலைச் சுத்தஞ் செய்வோம்!
முப்போதும் ஆலம், வேலம் ஆகிய குச்சிகளினால் பல் துலக்குவோம்!
கொடிய பசியேற்படும் வேளையிலும் குறைவான அளவு உணவையே உட்கொள்வோம்! மெதுவாகவே நடப்போம்!
வெந்நீரில் குளிப்போம்!
தினமும் பால், மோர், நெய் சேர்த்த உணவையே உண்போம்!
வெந்நீரையே அருந்துவோம்!
இளம் பெண்ணுடனே உறவு கொள்வோம்!
மாலை வெய்யலில் காய்வோம்!
சந்தனம், சவ்வாது, புனுகு, திருநீறு போன்ற வாசனைத் திரவியங்களைப் பூசுவோம்! இளநீரை அருந்துவோம்!
மலசலம் அடக்க மாட்டோம்!
குளிர்ந்து தெளிந்த நீரைக் குடிப்போம்!
காலை உண்டி கொள்வோம்!
சந்தனம், அகிற்புகை நுகர்வோம்!
பகற்போதில் மனையாளுடன் உறவு கொள்ளோம்!
தென்றலில் அமர்ந்திருப்போம்!
புணர்ச்சிக் காலத்தில் வலது கையைத் தரையில் ஊன்ற மாட்டோம்!
குடிக்கும் தண்ணீரைக் குரைவாகக் குடிப்போம்!
அதிகமாக மோரைக் குடிப்போம்!
தினந்தோரும் ஆடையை மாற்றுவோம்!
அதிக நேரம் நீரில் ஆடமாட்டோம்!
கந்தயானாலும் கசக்கிக் கட்டுவோம்!
கூழானாலும் குளித்துக் குடிப்போம்!
செரிக்கு முன்னே உணவை உண்ண மாட்டோம்!
இரவு வேளையில் தயிரை உண்ணமாட்டோம்!
எங்கள் ஊரில்தான் எமனும் இருக்கின்றார்.
அவர்,
நாங்கள் இருக்கும் திசைக்கே வருவதில்லை! என்று, கூறினார்.

வாழ்க, வாழ்க்கை ஒழுக்க நெறி! வாழ்வோம், ஒழுக்க நெறி வழி!




பசியின்மையைப்போக்கும் - இஞ்சி - தேனில் பிரண்டை

கொத்துமல்லி
திருவாதி - இம்மூன்றும் துவையல்

மலச்சிக்கலைப்போக்கும் - ஆமணக்கு
நீர் பிரம்மி ( அரைக்கீரை )

பொன்னாங்கண்ணி (உடல் வன்மை)
தேற்றான் (கற்பம்)
சிறுகீரை (புத்தி கூர்மை)

மூட்டுவலியைக் குணப்படுத்தும் - முடக்கறுத்தான் (அடை)
தழுதாழை (காய்ச்சி பூச)
வாத நாராயணன் (அரைத்துப் பூச)

வீக்கத்தைக் குறைக்கும் - செவ்வாமணக்கு (வதக்கிக் கட்ட)
கற்றாழை (சோற்றைப் பூச)
சுழற்சி (காயினைப் பொடியாக்கி)

நீரிழிவைப் போக்கும் - நாவல் (கொட்டை)
ஆவாரை (பூ)
கொன்றை ( பட்டை)
சீந்தில் (நீர்வேட்கைக்கு)

தோல் நோயை நீக்கும் - அறுகம்புல் (சாறு)
புங்கு (விதை)
பூ வரசு (காய்)
நெய்சிட்டி (பொடி)
சிவனார் வேம்பு (பூ குடிநீர்)


தலை முடியைப் பாதுகாக்கம் - வெட்டி வேர்
மருதோன்றி
உசிலை

பார்வைக் குறைபாட்டைப் போக்கும் - நந்தியா வட்டம் (சாறு)
நேத்திர பூண்டு (இலைச்சாறு)
முட்களா (பூ சாறு)

காது நோயைப் போக்கும் - மருள்
பிரண்டை
பூண்டு

பல் நோயைப் போக்கும் - எருக்கு
வேம்பு
நாயுறுவி
காட்டாமணக்கு

வாய்ப்புண் வயிற்றுப் புண்ணுக்கு - மணத்தக்காளி
வில்வம்

இரைப்புக்கு - ஆடாதொடை
கண்டங்கத்தரி

இதய நோய்க்கு - சீந்தில்
தாளிக்கீரை

தண்ணீர் சுத்திகரிப்புக்கு தேற்றான் கொட்டை
கொழுத்தவனுக்கு கொள்ளும்

இளைத்தவனுக்கு எள்ளும் தின்னச் சொல்லும்!


நாட்ட மிரண்டும் நடுமூக்கில் வைத்திடில் - தூக்கம் வரும்!


மூளை - பிரமி; இதயம் - தாமரை; நுரையீரல் - ஆடாதோடை; லிவர் - கீழாநெல்லி;
சிறுநீர்ப்பை - அசோகு; மூட்டு - நொச்சி.


அட்டவணை

வாதம் பித்தம் ஐயம் உடலினர்க்கு ஏற்ற உணவுப் பொருள்கள்

பெயர் வாத உடல் பித்த உடல் ஐய உடல் கீரைகளும்
பயன்களும் கீரை வகைகள்:

அகத்திக் கீரை
முளைக் கீரை
கடலைக் கீரை
கொத்துமல்லிக் கீரை
வெந்தயக் கீரை
முருங்கைக் கீரை
மணத்தக்காளி
பொன்னாங்காணி
கொத்துப் பசலை
முன்னைக் கீரை
நல்வேளை
ஆரை
முசுமுசுக்கை
மூக்கரட்டை
புளியாரை
கோவை
தூதுளை
வல்லாரை
சிறுகீரை
பண்ணை
சக்கரவர்த்தி

காய் கிழங்கு வகைகள்:
கலியாணப் பூசணிக்காய்
கத்தரிப் பிஞ்சு
முருங்கைப் பிஞ்சு
மிதிப்பாகல் பிஞ்சு
கொம்பு பாகல் பிஞ்சு
வெள்ளை அவரைப் பிஞ்சு
வெள்ளரிக்காய் பிஞ்சு
நீளப்புடல் பிஞ்சு
பீர்க்கம் பிஞ்சு
அவரைப் பிஞ்சு
அத்திப் பிஞ்சு
வாழைக்காய்
சுரைப் பிஞ்சு
பலாப் பிஞ்சு
வழுதுணங்காய்
காராகருணை
காட்டுக் கருணை
முள்ளங்கி
வள்ளிக் கிழங்கு
வெங்காயம்
பருங்களா
வாழைத் தண்டு
வாழைப் பூ

வற்றல் வகைகள்:

சுண்டை வற்றல்
காட்டுப் பிரண்டை வற்றல்
தூதுளங்காய் வற்றல்
மணத்தக்காளி வற்றல்
நெல்லி வற்றல்
ஆதொண்டை வற்றல்

உப்பு ஊறுகாய் வகைகள்:

நாரத்தை ஊறுகாய்
மாவடு "
மிளகு "
இஞ்சி "
எலுமிச்சை "
களா "
கடுக்காய் "
நெல்லி "


உப்பு வகைகள்:

இந்துப்பு
கல்லுப்பு
கடலுப்பு


முளைக்கீரை:
வயோதிகர், இளைஞர், வாலிபர் ஆகிய
அனைவர்க்கும் உகந்தது. காய்ச்சல், காசம் போக்கும்.

அறுகீரை:
காய்ச்சல், குளிர் நடுக்கம், சன்னி, கபவாதம் ஆகிய
பிணி போக்கும். காமத்தைத் தூண்டும்.

சிறுகீரை:
கண்புகைச்சல், இருமல், படலம், பாத எரிச்சல்,
வீக்கம், பித்தம் நீங்கி அழகு உண்டாக்கும்.

மணலிக்கீரை:
மார்புச்சளி, வாதம், ஐயம், கிருமி நோய், பயித்தியம்,
சீதளம் நீங்கும்.

சிறு பசலை:
கபத்தை அதிகமாக்கும். புணர்ச்சியில் இன்பம்
உண்டாக்கும், வெப்பம் தணியும், மயூம் இளகும்.

வசலைக்கீரை:
மூத்திரக் கடுப்பு, வெள்ளை, வாந்தி போகும்.

சாணாக்கீரை:
கபம், அக்கினி மாந்தம், மகோதரம், ஆறாப்புண்
நீங்கும்.

பண்ணைக்கீரை:
மலம் இளகும், குடலுக்கு நன்மை, கரப்பான்,கிரந்தி
நீங்கும்.

வள்ளைக்கீரை:
வாதம் போக்கும், குழந்தை பால் சுரக்கும்.

வேளக்கீரை:
தலைவலி, உடல் குடைச்சல், சீரணம், மார்வலி
நீங்கும். வன்மையுண்டாகும்.

பொன்னாங்காணி:
கண்நோய், கருவிழி நோய்,உடல் சூடு, பீனசன்,
மூலம் நீங்கும். உடல் பொன்னிறமாகும்.

வல்லாரை:
கணச்சூடு, மலக்கழிச்சல், இரத்தக் கடுப்பு நீங்கும்.

முருங்கைக்கீரை:
அக்கினி மந்தம், உட்சூடு, தலைவலி, மூர்ச்சை,
கண்ணோய் போகும்.

அகத்திக்கீரை:
பிறரால் இடப்பட்ட மம்ந்தின் தீமை, பைத்தியம்,
நீங்கும். உண்ட உணவு செறிக்கும்.

ஆரைக்கீரை:
பித்த நோய், நீரிழிவு, இரத்த பிரமேகம் ஒழியும்.

தூதுளை:
காது கேளாமை, காதெழுச்சி, காசம், நமைச்சல்,
மதரோகம், அக்கினிமந்தம், திரிதோடம், சூலை,
விந்து நட்டன் ஆகியவை விலகும்.

கருவேப்பிலை:
நா சுவை அறியாமை, சீத பேதியால் வயிற்றுவலி,
நாட்பட்ட காய்ச்சல், பைத்தியம் போகும்.

புளியாரைக்கீரை:
பித்த மபூக்கம், வாத கப விகர்ப்பம், மூலவாயு,
பிராணி, இரத்த மூலம் போகும்.

கொத்துமல்லி:
வாத ரோகம், பித்த நோய், காய்ச்சல், போகும்.
வன்மை உண்டாகும். சுக்கிலம் பெருகும்.

போகம் விளைக்குங் கீரைகள்:

"தாளி முருங்கைத் தழைதூ துணம்பசலை
வாளிவறு கீரையுநெய் வார்த்துண்ணில் - ஆளியென
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாங்
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்"

நறுந்தாளி, நன்முருங்கை, தூதுணம், பசலை, அறுகீரை, இவற்றுடன் யாதானும் ஒன்றைப் புளி நீக்கிப் பாகஞ்செய்து, அன்னத்துடன் நெய் சேர்த்து, நண்பகலில் மாத்திரம் ஒரு மண்டலம் உண்ணில் புணர்ச்சியில் நிவாகம் உண்டாகும்.

பூ வகைகள்:

வாழைப்பூ:

இரத்த மூலம், பிரமேகம், வெட்டை, பயித்தியம், கபாதிக்கம்,
உதரக்கடுப்பு, இருமல், கைகால் எரிச்சல் இவை நீங்கும்.

தூதுளம் பூ:

உடல் பெருக்கும், தாது வளர்ச்சி, அழகுண்டாகும், மகளிர் வசியம்
உண்டாகும்.

வெங்காயப் பூ:
குன்மரோகங்கள், வாத நோயைப் போக்கும்.

வேப்பம்பூ:
வாந்தி, ஏப்பம், கிருமி நீங்கும்.

அகத்திப்பூ:
வெண்சுருட்டு முதலிய பிகையினாலும், வெயிலினாலும்
மருந்துகளினாலும் பிறந்த வெப்பம் அழலை நீங்கும்.

ஆவாரைப் பூ:
மதுமேகிகளுக்கு நன்று, கற்றாழை மணத்தை அகற்றும். உடல்
கவர்ச்சியாகும்.

காலையில் 26 முதல் 26 நாழிகைக்குள் எழுந்திருக்க வேண்டும். சுறு சுறுப்பு உண்டாகும். புத்தி தெளியும். நரம்பு தூய்மையாகும். பயித்தியமும் கோபமும் நீங்கும்.
வாதம், பித்தம், கபம் தத்தம் நிலையில் இயங்கும்.

"புத்தி யதற்குப் பொருந்தும்! தெளிவளிக்கும்
சுத்த நரம்பு நற் றூய்மை யுறும் - பித்தொழியும்.
தாலவழி வாத பித்தம் தத்தநிலை மன்னும் அதி
காலை விழிப்பின் குணத்தைக் காண்"

நீர் கழிக்கும் போது இடக்கையால் வலப்பக்கத்து அடிவயிற்றைப் பிடித்து அமுக்க வெண்டும். மலம் கழிக்கும் போது வலக்கையால் இடப்பக்கத்து அடிவயிற்றை அமுக்க வேண்டும்.


பல் துலக்குதல்:
"வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்குப் பல் துலங்கும்
பூலுக்குப் போகம் பொழியுங்காண் - ஆலுக்குத்
தண்டா மரையாளும் சாருவளே - நாயுருவி
கண்டால் வசீகரமாம் காண்"
துவர்ப்புச் சுவை, கைப்புச் சுவை பல்லுக்கு நல்லது.

நீராடல்:
" காலை குளிக்கில் கடும்பசி நோயும் போம்
மாலை குளிக்கில் இவை மத்திபமே - சோலையுடை
வாச நீர் சுத்த சலம் வன்னி நீராடுங்கால்
தேசமுடற் பேதமுன்னிச் செப்பு"

பஞ்ச கற்பம்:
"பூ நெல்லி நீர் மிளகு பொற்கடுக்காய் வான் மஞ்சள்
கானகத்து வேம்பரிசி காரிகையே - மானங்கேள்
ஒன்றரை ஒன்றேகால் ஒன்று உறுதி முக்கால்
கன்றரைக் கையான் நீரில் தேய்"

பசி:
"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனுன்
கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்".

வெந்நீர்: "இயம்பிட எளிதே! வெந்நீர், இயம்புவன் சிறிது கேண்மின்!
நயம்பெழூத் தெளீந்த நீரை நன்றாக வறூத்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குறூத்திடு வீராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்".


தீமை: "முருங்கைக் கீரை வெந்து கெட்டது
அகத்திக் கீரை வேகாமல் கெட்டது"

"இஞ்சிக்குத் தோடும்
கடுக்காய்க்கு வித்தும் நஞ்சு"
வல்லாரை:
"அக்கர நோய் மாறும் அகலும் வயிற்றிழிவு
தக்க விரத்தக் கடுப்புத் தானேகும் - பக்கத்தில்
எல்லாரையும் அருந்தென்றே யுரைத்து நன்மனையுள்
வல்லாரையை வளர்த்து வை".

நரம்பு நோய்:
"அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ?
கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்!
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்!
நரம்பு கோணிடில் நாமதற்கு என்ன செவோம்?"

தினமருந்து: காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டிடில்
கோலை ஊன்றிக் கூனி நடந்தவன்
கோலைத் தூக்கிக் குலுக்கி நடப்பனே!
தூதுவளை:
"திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவையேல் நல்ல
திருக்குளத்தைப் போலே திருத்தும் - திருக்குளத்தை
எல்லாம் இரவுவிளை என்ன வருந் தூதுவளை
எல்லாம் இரவும் இளியென்"

"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னை அர்ச்சிக்கத் தான் இருந்தானே"
(திருமந்திரம். 2355)

தன்னையே தான் அறிய முயன்றால், அம்முயற்சியினால் தனக்கு ஒரு கேடும் வராது; தன்னையேதான் அறியாததனால் தானே கெடுகின்றான்; தன்னையே தான் அறியச் செய்யும்அறிவை அறிந்த பின்னால், தன்னையே தான் வணங்கத் தான் இருந்தானே.

(அறிவைஅறிந்தபின்பு, தன்னையே தான் வணங்க, வணங்கத் தன் வாழ்நாள் நீண்டு நெடுநாள் வாழ்வான் என்றுபொருள்)

ஊன் வளர்க்கும் உணவு:

நாம் உண்ணும் உணவு நமக்கு எப்படிப் பயன் படுகிறது? என்பதை, உணவாகப் பயன் படும் பொருள்களைக்கொண்டே அறியலாம்.

நமது உடலும் நாம் உண்ணும் உணவும் இயற்கைவழி இயன்றது! என்பதால், இயற்கை இயற்கைக்கு மருந்தாகிறது! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

1.சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை: சிறுநீர் அடைப்பைப் போக்கும்.
2.கற்பப்பைப் போன்றிருக்கும் கொய்யாக்காய்: கற்பக் கோளாறைப் போக்கும்.
3.மூளை போன்றிருக்கும் அக்ரூட்: மூளையை வளர்க்கும்.
4.கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய்: கண்ணோய்க்கு மருந்து.
5.இதயம் போன்றிருக்கும் செந்தாமரை: இதய நோயைப் போக்கி இதயத்தைக் காக்கும்.
6.உயிரணு போன்றிருக்கும் எள்: உயிரணுவை வளர்க்கிறது.
7.உளுந்து கொடி நரம்பு போன்றிருக்கும்: உளுந்து நரம்பு மண்டலத்தைக் காக்கும்.

"என்னினெய்யு முக்கூட் டெனுநெய்யு மானெய்யுங்
விள்ளுதயி லாதியென வீறுநெய்யு - முள்ளபடி
வாரந் தனக்கிருநாள் வைந்தாடி நோய்களதி
காரந் தனக்கிடமிற் காண்"

வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நோய்கள் அணுகாது ஓடிப்போகும்.

எண்ணெய், பாதத்தில் தேய்த்தால் கண்ணோய் போகும். கண்ணுக்குள் விட்டால் காதுநோய்போகும். காதுக்குள் விட்டால் தலை நோய் போகும். தலைக்குத் தேய்த்தால் நோயெல்லாம்போகும்.

தேங்காய்:
தேங்காய் சூடும் வரட்சியும். பயன் அதிக உணவு. இதனால் இரத்தம் சுத்தமாகும். தாது விளையும். இடுப்புவலி, கீல்வாதம், பாரிசவாதம், முதலியவற்றைக் கண்டிக்கும். ஈரலுக்கு வலிவு கொடுக்கும். உள்புண்ணை ஆற்றும். மூலத்திற்கு நல்லது. விந்து விளையும். இளநீரில் வறுத்த கொத்தமல்லிச் சூரணம் ஊறவைத்திக் குடிக்க நீர்த்தாரையில் ஒழுகும் இரத்தம் நிற்கும்.

தேங்காயை நெல்லில் வைத்து அவித்து குழந்தைக்குக் கொடுக்க வயிற்றுக் கிருமி சாகும். தேங்காய் தைலத்தால் அறிவு வளரும்.

வாழ்க வளமுடம்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.