இணைய தளம் காசு சம்பாதிக்கும் வழிகளைச் சொல்லித் தருகின்றன.`சம்பாதிக்கும் வழி தெரியாமல், சம்பாதிப்பவர்களும் உண்டு! இணைய தளத்தில் உலவுவதற்குக் கூட பணம் தருகிறார்கள்.`அது, எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனாலும் நண்பர்களின் இமெயில் வேண்டுகோளுக்கிணங்க அந்த இணையதளத்தை கிளிக் செய்தேன். கொஞ்சம் நம்பும்படிதான் இருக்கிறது.`ஒரு நண்பர் வாங்கிய பணத்திற்கானசான்றிதழ்களை கூட காட்டுகின்றார். சரி காசா? பணமா? என்று ஒரு கணக்கையும் ஆரம்பித்திருக்கின்றேன். நீங்களும் ஆரம்பியுங்கள்..`இதில், நீங்கள் இணைந்தால் எனக்கும் பணம் வரும்.`
நீங்கள் இணைந்து நான் கீழே கொடுத்தது போல ஒரு இணைப்பை (உங்கள் ID உள்ள Link) உங்கள் நண்பர்களுக்கு கொடுத்தால் அவர்கள் இணைய இணைய உங்களுக்கும் பணம் வரும்.`
முயற்சி செய்துதான் பாருங்களேன்.`
இதோ உங்களுக்காக.... www.agloco.com/r/BBCP9754`இதன் வழியாகச் சென்று உங்களைப் பதிவுசெய்து கொள்ளுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதேபோல், செல்போன் வைத்திருப்பவர்களும் பணம் சம்பாதிக்கலாம்.`
கீழ்க்காணும் இணைப்பின் வழியாகச் சென்று உங்களை செல்போன் எண்ணை பதிவு செய்து கொண்டால், உங்களுக்கு ஒரு கணிசமான தொகை வரத் தொடங்கிவிடும்.`
Hello Friends,mGinger.com pays you to read ads on your cellphone! These ads are only about your interests. Not only that, you get to decide when you want these ads. Based on my calculations I can easily make enough money to free up my cell phone bill. Check it out...``See how much you can make. Have fun calculating...and sign up. You will like it...`
யான் பெற்ற பயன் பெறுக இவ்வையம்! எல்லோரும் பயன் பெற வாழ்த்துகிறேன்.
`
அன்புடன்
முனைவர் இர.வாசுதேவன்
செயலாளர்
தமிழ் மன்றம்
உழைக்காமல் பணம் சம்பாதிக்க எளிய வழி!
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
வெப்ப நோய்களைத் தடுக்கலாம், வாங்க! - கு. கணேசன்
கோடை வெயில் அனலாய் தகிக்கிறது. கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல் நம் உடலில் பல நோய்கள் வெளிப்படுகின்றன. இனி குறைந்தது மூன்று மாதங்களுக்கு இந்த வெப்ப பாதிப்புகளை நாம் சமாளித்தே ஆக வேண்டும்.
வியர்க்குரு: வெயில் ஏற ஏற உடலில் வியர்வை அதிகமாகச் சுரக்கும். அப்போது தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அதனால் "வியர்க்குரு' வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. குளித்து முடித்தபின் உடலைத் துடைத்துவிட்டு, வியர்க்குரு பவுடர், காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம்.
வேனல் கட்டிகள்: தோலின் வழியாக வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ளும். உடனே அந்த இடம் வீங்கிப் புண்ணாகும். இதுதான் வேனல்கட்டி. இதற்கு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வேனல்கட்டி வருவதைத் தடுக்க, வெயிலில் அதிகமாக அலைவதைத் தவிர்க்கவும். நிறைய தண்ணீர் பருகவும்.
காளான்படை: வியர்க்குருவில் பூஞ்சை அல்லது காளான் சேர்ந்து கொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் காளான்படை நீங்கிவிடும். படையைக் குணப்படுத்தும் களிம்புகளையும் மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.
வியர்வை நாற்றம்: அளவுக்கு அதிகமான வியர்வை காரணமாக உடல் நாற்றமெடுக்கும். இதனைத் தவிர்க்க, குளித்து முடித்ததும் அலுமினியம் குளோரைடு அல்லது ஜிங்க் கலந்த நாற்றம் போக்கும் பவுடர்களை உடலில் பூசிக் கொள்ள வேண்டும்.
ஒளி ஒவ்வாமை:சூரியனின் புற ஊதாக்கதிர்கள் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு "ஒளி ஒவ்வாமை' உண்டாகும். இதனால் உடலில் வெயில் படும் இடங்கள் கறுத்துவிடும்.
நீர்க்கடுப்பு: கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும். என்றாலும் அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் அதற்குரிய பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, மஞ்சள்காமாலை: கோடையில் சமைத்த உணவுகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் உருவாக்கும் கிருமிகள் அதிகமாக இருக்கும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்குக் கோடை காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் வரும்.
வெப்பத் தளர்ச்சி: வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் சிலருக்கு 106 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும்.
வெப்ப மயக்கம்: சுட்டெரிக்கும் வெயிலினால் தோலிலுள்ள ரத்தநாளங்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி செய்து விடுகிறது; இதனால் இதயத்திற்கு ரத்தம் வருவது குறைந்து விடுகிறது; ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது; மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. உடனே தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது. சில சமயங்களில் மரணம்கூட நிகழலாம்.
முதலுதவி:வெப்பமயக்கம் மற்றும் வெப்பத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி தரவேண்டியது முக்கியம். அவரைக் குளிர்ச்சியான இடத்திற்கு அப்புறப்படுத்துங்கள். மின்விசிறிக்குக் கீழ் படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படிச் செய்யுங்கள். அவரைச் சுற்றிக் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும். இது மட்டும் போதாது. அவருக்கு குளுக்கோஸ் மற்றும் தாதுக்கள் அடங்கிய சிரைவழி நீர்மங்களைச் செலுத்த வேண்டியதும் முக்கியம்.ஆகையால் உடனடியாக மருத்துவரின் உதவி கிடைப்பதற்கும் வழி செய்யுங்கள்.
கோடையை வெல்வது எப்படி? கோடை வெயிலைச் சமாளிக்கவும், வெப்ப நோய்கள் வராமல் தடுக்கவும் அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள். சாதாரணமாக தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம். கோடையில் குறைந்தது 3 லிருந்து 4 லிட்டர் வரை குடிக்க வேண்டும்.காய்ச்சி ஆற வைத்து தண்ணீரை ஒரு மண்பானையில் ஊற்றி வைத்து ஜில்லென்று குடிக்கலாம்.
காபி மற்றும் தேநீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்களைக் குடிப்பதைவிட இளநீர், நீர்மோர், பதநீர், பழச்சாறுகள், லஸ்ஸி ஆகிய இயற்கை பானங்கள் குடிப்பதை அதிகப்படுத்துங்கள். எலுமிச்சைச் சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
கோடையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கோடையில் நம் தினசரி உணவுமுறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். முக்கியமாக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், எண்ணெய்ப் பலகாரங்கள், பேக்கரிப் பண்டங்கள்,அசைவ உணவுகள் ஆகியவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் இவ்வகை உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
காரட் ஜூஸ், வெந்தயம் ஊற வைத்த நீர் குடித்தால் உடல் வெப்பம் குறையும். இரவு உணவில் 2 வாழைப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துகள் உள்ளன. இவை வெயிலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்ட உதவும்.
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
"மயிலை மன்னாரின் குறள் விளக்கம்"
*
அதற்குக் காரணமும் இருந்தது.[??]எப்படிப் போய் அவனைப் பார்ப்பது என்ற அச்சம் இருந்தாலும், அவனைப் பார்க்காமல் எப்படி இருப்பது என்ற ஆவல் மிகவும் உந்தவே, அடுத்த நிமிடம் மயிலாப்பூர் மாடவீதியில் நின்றேன்!சொல்லாமல், கொள்ளாமல் வந்தாலும் கொஞ்ச நேரம் குளத்தைச் சுற்றி வந்தால் எப்படியும் பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில், கால் போன போக்கில் சுற்றிக் கொண்டிருந்தேன்.
*
எங்கும் காணாமல் மனம் நொந்து, இன்னொரு தடவை சுற்றலாம் என நினைத்து, ஒரு 2 ரூபாய்க்கு சூடான வறுத்த வேர்க்கடலை வாங்கி, அதைக் கொறித்தவாறே நடந்தவனின் முதுகில் பளாரென ஒரு அடி விழுந்தது!
*
"இன்னாப்பா! ஆரைத் தேடிக்கினு இங்கே சுத்தறே? நீதான் இப்பெல்லாம் நம்மளையெல்லாம் பாக்க வரமாட்டியே? இன்னா வோணும்?" என்று நக்கலாகக் கேட்டபடி தோளில் கை போட்டான் மயிலை மன்னார்!
*
"இல்லே மன்னார்! உன்னைப் பார்த்து நாளாகி விட்டதே என்றுதான் சுற்றிக் கொண்டிருந்தேன்" என்று அசடு வழிந்தேன் நான்!"சரி! இன்னா சமாச்சாரம்? இப்ப எதுக்கு என்னியத் தேடிக்கிணு வந்தே? சொல்லு!" என்று அன்பாகக் கேட்டான் என் நண்பன்.
*
"திருக்குறள் அதிகாரம் எழுதி நாளாச்சு. காமத்துப் பாலில் இருந்து ஒரு அதிகாரம் நீ சொல்லி நான் எழுதணும்னு ஆசை! அதான்..." என்று தயக்கத்துடன் இழுத்தேன்!
*
"ப்பூ! இத்தானா! இதுக்கா இப்படி பம்மறே! மொதமொதலா காமத்துப்பால் எளுதப் போறேன்ற! அதுல இன்னால்லாமோ ஸொல்லிருக்காரு அய்யன்! பொண்ணு தனியா பொலம்புது, காதலன் தவிக்கறான்! ரெண்டு பேருக்கும் இன்னென்னமோ அட்வைஸ் கொடுக்கறாரு.
*
ஸரி! நீ கேட்டுட்டே! ஒரு காதலன் காதலி ரெண்டு பேருமே ஸொல்ற மாரி ஒரு அதிகாரம் எளுதியிருக்காரு. அத்தைச் சொல்றேன். எளுதிக்கோ!" என்றான் மயிலை மன்னார்!
*
"புணர்ச்சி விதும்பல்னா, காதலின்பத்தைச் சொல்றதுன்னு அர்த்தம்.
*
மொதல்ல காதலி ஒரு 8 பாட்டு சொல்றா. பொறவால, காதலன் கடைசி 2 பாட்டு." என்றவாறு தொடங்கினான்.
*
இனி வருவது குறளும், அவன் விளக்கமும்!
*
"அதிகாரம் 129." "புணர்ச்சி விதும்பல்"
*
"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு." [1281]"
*
இப்ப ஒரு பாட்டில் தென்னங்கள்ளு... அதுக்கு நீ கேரளாவுக்குப் போவணும்!... ஒனக்குக் கிடைக்குது. அத்தப் பாக்கற! வெள்ளையா இருக்கு. மூந்து பாக்கற! ஒரு கப்பு அடிக்குது! இத்தயா குடிக்கப்போறோம்னு நினைக்கறே! மூக்கைப் பிடிச்சுகிட்டு கப்பு கப்புன்னு அடிக்கறே! வவுத்தைப் பொறட்டுது மொதல்ல. கொஞ்சம் ஊறுகாயை எடுத்து நாக்குல தடவி, அந்த டேஸ்டை மாத்தறே! காவ் காவுன்னு ரெண்டு ஏப்பம் வுடறே! கொஞ்ச நேரம் களிச்சு , .... அப்பிடியே மெதக்குறே! ஒலகமே நல்லாத் தெரியுது ஒனக்கு! ரொம்ப சந்தோசமா இருக்கே!
*
ஆனா, இதெல்லாம் எப்ப வருது? எல்லாம் உள்ளே போனதுக்கு அப்புறமாத்தான்.ஆனா, காதல்ங்கறது அப்பிடி இல்லை! ஆளை நெனைச்சவுடனேயே, ஒரு கிக் வருது! பார்த்தவுடனேயே ஒரு சந்தோஷம் வருது! இதான் காதலோட மகிமை! கள்ளை விட சிறந்தது காதல்!"
*
"தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்." [1282]"
*
எனக்கு அவரை நினைச்சாலே இம்மாம் அளவுக்கு காதல் பொங்குது மனசுல. ஒரு பனைமரம் அளவுக்கு உசருது என் உள்ளத்துல.
*
இது இப்படியே இருக்கணும்னா, நான் துளிக்கூட அவரைப் பத்தி தப்பா நினைக்கக் கூடாது! 'அவரு என்னிய இன்னும் வந்து பாக்கலியே, நேத்துப் பார்த்த போது எங்கிட்ட ராங்கு பண்ணினாரே'ன்னு தோண ஆரம்பிச்சு அவரு மேல கோவம் வர ஆரம்பிச்சுதுன்னா, அவ்ளோதன், 'புஸ்'ஸுன்னு அல்லாம் எறங்கிடும்.அவரு பத்தின நல்ல நினைப்ப அப்பிடியே உசரமா வெச்சுக்கணும்!"
*
"பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல் கண்." [1283]"
*
என்னைக் கட்டிக்கிட்டவரு [கொண்கன்] என்னை மதிக்காம, அவரு இன்னா நினைக்கறாரோ, அப்பிடியே அவர் மனசுபோல செஞ்சாலும், அவரைப் பார்க்காம இருக்க இந்தப் பாளும் பொம்பளை சென்மத்தால இருக்க முடியலியே!இந்தக் கண்ணு அவரையே தேடுது!"
*
"ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு." [1284]"
*
அவர்கூட சண்டை போடணும்னுதான் மனசுல நினைச்சுகிட்டு அவரைப் பார்க்கப் போனேன். ஆனா, பாவிமவ, அவரைப் பார்த்தவொடனியே அல்லாம் மறந்து அவரைக் கட்டித் தளுவணும்னு மனசு கிடந்து துடிக்குது! சே இன்னா பொளைப்பு இது!"
*
"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து." [1285]"
*
கண்ணுக்கு மை தீட்டலாம்னு ஒரு குச்சியை எடுத்து, மைதடவி, கண்ணு மேலே தீட்ட ஆரம்பிச்சேன். கண்ணாடி முன்னே நின்னு மை தடவும் போது,கண்ணு மேலியே என் கண்ணு நின்னுது. கோலை.. குச்சியைப்... பார்க்கவே இல்லை! அதே போல, அவரைத் திட்டணும்னு பலதை நினைச்சுகிட்டு இருந்தாலும், அவரு.. அதாங்க என்னைக் கொண்டவரு.. அவரைத்தான் "கொண்கன்"னு ஐயன் ஸொல்றாரு... எதிர்க்க வந்து நிக்கும் போது அவரைத் தவிர, வேற் எதுவும் நெனப்புல வரவே மாட்டேங்குது! குத்தம்ங்க்ற 'குச்சி' கண்ணுக்கே தெரிய மாட்டேங்குது!"
*
"காணுங்கால் காணேன் தவறாய் காணாக்கால்
காணேன் தவறல் லவை." [1286]"
*
அந்த மனுஷன் என்னெதிர்ல நிக்கறப்ப, அவரோட குத்தம் எதுவுமே மனசுல வர மாட்டேங்குது. அவர் இல்லாதப்ப, அவரு பண்ணின தப்பு எதுவுமே நெனப்புக்கு வர மாட்டேங்குது! இது எப்படின்னு எனக்குப் புரியவே இல்லை!"
*
"உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து." [1287]"
*
இப்ப தொபுக்கடீர்னு போய் ஒரு ஓடற ஆத்துல குதிக்கறோம்! அது இன்னா பண்ணும்? நம்பளை அப்பிடியே இளுத்துகிணு போவும்! அது தெரிஞ்சும் அதுல குதிக்கிறோம்! அது போல, அவரோட சண்டை போட்டாக் கூட, அது நிலைக்காது, நான் அவரோட சமாதானமாயி கூடவே போயிடுவேன்னு தெரிஞ்சும், சண்டை போடற மாரி நடிக்கறேனே?"
*
"இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே உள்வநின் மார்பு." [1288]
*
மொதப் பாட்டுல.... குறள்ல... கள்ளைச் சொல்லி ஆரம்பிச்சாங்க இந்தத் தலைவி.... [கீதாம்மாவைச் சொல்லலை]!! இப்ப கடைசிப் பாட்டிலியும் அதே கள்ளை உதாரணம் ஸொல்லி முடிக்கறாங்க! "ஏ கள்ளப்பயலே! கள்ளைக் குடிச்சா, அதால கெட்ட பேர்தான் வரும். இருந்தாலும் திரும்பவும் அதைக் குடிக்கணும்னு ஆசைதான் வருது. அதே போல, உன்கூட சேர்றது எனக்குக் கெட்டதுதான்னாலும், எம்மனசு கிடந்து உன்னோட மார்பைத் தளுவறதுக்கே திரும்பத் திரும்ப ஓடுது! இத்த இன்னா பண்ணாத் தாவலை!"
*
இத்தைக் கேட்டுக்கினே நம்ம ஆளு வரான்! ஒரு ரெண்டு பாட்டு தலைவன் ஸொல்றான்!
*
"மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்." [1289]"
*
காதல்ல வர்ற இன்பம் ஒரு பூவை விட மெல்லிசா இருக்கும். அத்தைச் சொல்லி முடியாது! என்னியப் போல அதை அனுபவிச்சவங்க இந்த ஒலகத்துல ரொம்பக் குறைஞ்ச பேர்தான் இருப்பாங்க!"
*
"கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னிலும் தான்விதுப் புற்று." [1290]"
*
என்னியப் பார்த்தவொடனே அவ கண் கலங்கித் தவிச்சா. ஆனா, அடுத்த நிமிசமே அத்தை மறந்திட்டு, என்னியவுட ரொம்ப வேகமா என்னைக் கட்டிப் புடிச்சுகிட்டா! அவளோட அன்புக்கு முன்னால என்னுதுல்லாம் ஒரு தூசுக்கு சமானம்!"
*
எல்லாம் சொல்லி முடித்தவுடன் சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்தான் மன்னார்."என்ன ஆச்சு?' என வினவினேன்.
*
"இல்லேப்பா, நேரத்தோட வந்துருவியில்லே மச்சான்னு என் பொஞ்சாதி கிளம்பும்போது கேட்டுச்சு. ஒன்னியப் பார்த்த குஷில அத்த மறந்துட்டேன்.
*
இப்ப நான் போவணும். இல்லேன்னா அது சங்கடப்படும்" என்றான்.
*
"அதுவும் சரிதான். அண்ணியைக் கேட்டேன்னு சொல்லு." என்று சொல்லியபடி அன்புடன் விடை கொடுத்தேன் என் ஆசை நண்பனுக்கு.... டீ, மசால்வடை சாப்பிடாமலேயே!
****************************************************************************
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
இந்திய ரிசர்வ் வங்கி காலாண்டு கடன் கொள்கை - ஒரு பார்வை
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
தமிழ்ப் பணியாளர் - முனைவர் கு.கல்யாணசுந்தரம்
தமிழ் டிஜிட்டல் நூலக துறைக்கு பிள்ளையார் சுழி போட்டவர். இணைத்தில் புகழ் பெற்ற மதுரைத்திட்டத்தின் முன்னோடி. சென்னை மாநகரில் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி படிப்புவரை பயின்றவர். சென்னை லயோலா கல்லூரியில் இரசாயனத் துறையில் பி.எஸ்ஸி மற்றும் எம்.எஸ்ஸி பட்டப் படிப்பு முடித்த பிறகு அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்தியானா மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் இரசாயனத் துறையில் ஆராய்ச்சி மேற்க்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.
பாஷா இணையத் தளத்திற்காக முனைவர் கு.கல்யாணசுந்தரத்தின் வெற்றி உரைகளை தொகுத்த போது ...
இணையத்தில் நூல்களை தொகுக்கும் ஆர்வம் தங்களுக்கு எப்படி உருவானது?
பத்து ஆண்டுகளுக்கு முன் மக்கின்டாஷ், வின்டோஸ் கணினிகளில் தமிழிலேயே நேரிடையாக உள்ளிட மயிலை என்னும் தமிழ் எழுத்துரு தயாரித்து அதை பல நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை காண்பிக்க திருக்குறள் 1330 குறள்களை உள்ளிட்டு மின்அஞ்சல் மூலம் உலகில் பல பகுதிகளில் உள்ளவர்களுக்கு அனுப்பினேன்.அதை தொடர்ந்து பாரதியார் பாடல்கள், அவ்வையார் பாடல்கள் போன்றவற்றை உள்ளிட்டு அனுப்பினேன்.
1997 ம் ஆண்டு பாலா பிள்ளை ஆரம்பித்து நடத்தும் தமிழ்.நெட் என்னும் மின்னஞ்சல் குழுவில் இணைந்தேன். இக்குழு முறையில் தழிழ் இலக்கியங்களை உலகில் உள்ளவர்கள் ஒன்றுகூடி தயாரித்து பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஒரு கேள்வி எழுந்தது.
அதை தொடர்ந்து 1998ம ஆண்டு பொங்கல் திருநாளன்று மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்பு தொகுப்புத் திட்டம் என்ற ஒரு தன்னார்வு திட்டத்தை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தோம்.
நூல்கள் காகிதப்பதிப்பு, இணையப்பதிப்பு வெற்றி தோல்விகள் என்ன?
காகிகப் பதிப்புக்கு தேவையான அச்சுயந்திரங்கள் 19-ம் நூற்றாண்டிலேயே இருந்த போதிலும், பாரதியார் போன்றவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பயன்படுத்தக்கூடும் என்ற ஒரு அச்சத்தினால் தமிழ் அச்சுயந்திரங்கள் 20-ம் நூற்றாண்டின் பின்பாதி வரை அதிகமாக பயன்படுத்தப் படவில்லை. தமிழ் நூல்கள் சங்ககால நூல்கள் முதல் ஆயிரக் கணக்கி்ல் இருந்தபோதிலும் பெரும் பாலானவை புத்தக வடிவில் அதிக அளவில் அச்சிடப்படவில்லை.
அதோடு மட்டுமில்லாமல், 20ம் நூற்றாண்டின் பின் பகுதியில் புதினங்கள் பெருமளவில் வந்து பொது மக்களை கவர்ந்தது.
இதனால் தமிழ் இலக்கிய நூல்கள் காகிதப்பதிப்பாக வருவது தற்காலத்தில் பெருமளவு குறைந்துவிட்டது. இணையத்தில் இந்திய மொழிகளில் தமிழ் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இணையத்தில் மின்னஞ்சல் மடலாடற்குழு மூலம் தகவல் தொடர்பு, கருத்துப் பறிமாற்றம் செய்வதில் தமிழ் முன்னோடியாக உள்ளது.
அதேபோல் இணைய தளங்கள் எண்ணிக்கைகளிலும் , பிளாக் தளங்கள் மூலம் கருத்தைப் பறிமாற்றம் செய்வதில் தமிழ் மொழி இந்திய மொழிகளிலே முதலிடம் பெற்றுள்ளது.இணையம் வழியே விநியோகிக்கப் படும் தமிழ் நூல்களின் மின்பதிப்புகள் எண்ணிக்கை மிகக் குறைவானதே. தமிழ்நாட்டில் உள்ள பல தமிழ்நூல் பதிப்பாளர்கள் மின்பதிப்புகள் காகிதப் பதிப்புகள் விற்பனையை ெபருமளவில் பாதிக்கும் என்ற ஒரு தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
மின்பதிப்புகள் இணையம் வழியாக உலகில் பல நாட்டில் உள்ள தமிழர்கள் தமிழ் நூல்களைப் பற்றி முதன்முறையாக தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.மதுரைத் திட்டம் போன்றவை காப்புரிமை காரணமாக பழங்கால தமிழ்நூல்களின் மூல செய்யுள்கள்/பாடல்களை மட்டுமே மின்பதிப்பாக வெளியிடுகின்றன. இந்நூல்களின் உரைகளை காகிதப்பதிப்பு மூலமே முழுமையாக படித்து தெரிந்து கொள்ளமுடியும்.
தங்களுடைய மதுரை திட்டத்தின் பணிகள், இலக்கு ஆகியவற்றை விவரிக்கவும்.
மதுரைத் திட்டம் என்பது தமிழர்களும் தமிழ்மொழிமேல் பற்றுள்ள மேலைநாட்டவரும் அவரவர் தங்களது கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களை உள்ளிட்டு, பிழைதிருத்தி பிறகு இம்மின்பதிப்புகளை இணையம் வழியாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் இலவசமாக இறக்கிக்கொள்ள வசதி செய்வதே. www.projectmadurai.org, இத்திட்டத்தில் இன்றுவரை 300க்கு மேற்பட்ட தமிழ் நூல்களை இலவச மின்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.
குறைவான விற்பனை காரணமாக பெரும்பான தமிழ்நூல்கள் காகிதப் பதிப்பாக வெளிவராமல் இன்றும் ஓலை வடிவிலேயே இருக்கின்றன.யாழ்ப்பாண நூல் நிலையம் தீயில் எரிந்து போன பொழுது ஈழத் தமிழர் படைத்த தமிழ் நூல்கள் அனைத்தும அழிந்துவிட்டன. பெரும்பாலான ஈழத் தமிழர்கள் நாடு புலர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதால் ஈழத் தமிழர் இலக்கியம் சிதைந்த போகக்கூடிய நிலையில் உள்ளது.
பணவசதி குறைவு காரணமாக தமிழ்நாட்டு நூலகங்களில் நூல்களும் ஒலைச்சுவடிகளும மோசமான நிலையில் காக்கப்பட்டு வருகின்றது. இன்னும் 50 ஆண்டுகள் அவை அனைத்தும் செல்லரித்து பாழடையும் நிலையில் உள்ளது.
மதுரைத்திட்டத்தின் இலக்கு காலம்,நாடு,மதம்/சமயம் போன்ற எந்தஒரு வேறுபாடின்றி, பல்விதமான தமிழ இலக்கியங்களை மின்வடிவத்தில் உள்ளிட்டு,உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் தமிழ் மொழிமேல் பற்றுளர்களுக்கும் அடையச் செய்வதே ஆகும்.
தமிழ் தகவல் தொழிற்நுட்பம் எந்த அளவிற்கு பின்தங்கியுள்ளது?
நீங்கள் இதில் எதிர்பார்க்கும் வளர்ச்சிகள் என்னென்ன?
உலகில் பல லட்சக்கணக்கான தமிழர்கள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக கணினியில் பல விதமான தொகுப்புகளை தயாரித்து இணையம் வழி பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். ஆனால் ஆங்கில மொழியில் உள்ளதுபோல் அனைவரும் ஒரு தகுதரம் கொண்டு தயாரிக்கப்பட்ட எழுத்துருக்களையோ அல்லது மென்பொருள்களையோ பயன்படுத்தும் நிலையில் இல்லை.முன்பு கூறியது போல் இணையத்தில் தமிழ் மொழி தகவல் தொடர்பு. கருத்துப் பறிமாற்றம், இணைய தளங்கள எண்ணிக்கை போன்றவற்றில் முதலிடம் வகிக்கிறது.
ஆனால் அவை அனைத்தும் தகுதரங்களை பயன்படுத்தாததால் இவற்றின் பயன் பெருமளவில் பாமர மக்களை அடையாமல் இருக்கிறது. இன்றும் பலர் பாமினி போன்ற ஒருமொழி 8-பிட் எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர். பன்மொழி முறையில் அமைக்கப்பட்ட யூனிகோடு தமிழர்களிடையே இன்றும் முழுமையாக ஏற்கப்படவில்லை. இந்நிலை மாறவேண்டும். மாறினால் தான் கணினியில் தமிழ் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்களை உள்ளிட்ட வாய்ப்புகளை அதிகரிக்கும்.
உத்தமம் அமைப்பு பற்றியும் அதில் தங்களது பங்கு என்ன என்பது பற்றியும் கூறமுடியுமா?
உத்தமம் என்று அைழக்கப்படும் “உலகத் தகவல் தொழில்நுட்ப மன்ற” அமைப்பு www.infitt.org ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகின்றன.உத்தமத்தின் குறிக்கோள்கள் உலகெங்கிலும் உள்ள தமிழ் ெமன்பொறி தயாரிப்பாளர்களும் கணினியில் தமிழைப் பயன்படுத்துவர்களுக்கும் இன்றியமையாத தகுதரங்கள் வளர்ப்புக்கு வசதி செய்து தருவதே.
இதற்காக மின்னஞ்சல் குழு வசதி செய்துகொடுப்பதோடு ஆண்டுதோறும் இவர்கள் ஒன்றுகூடி நேரிடையாக கருத்துப்பறிமாற்றம் செய்ய வசதியாக தமிழ் இணைய மாநாடுகளை உலகில் வேறுவேறு மாநகர்களில் நடத்திவருகிறது. சென்னை, சிங்கப்பூர், கோலாலம்பூர் (மலேசியா), சான் பிரான்சிஸ்கோ (கலிபோர்னியா, அமெரிக்கா) போன்ற நகர்களில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகளில் தமிழர்கள் கலந்துகொண்டு பயனடைந்துளளார்கள்.
ஆரம்ப காலத்திலிருந்து உத்தமத்தின் நிர்வாகக் குழுவில் பங்குகொண்டு வருகிறேன். தமிழ் இணைய மாநாடுகளுக்கு கருத்தரங்கு அமைப்புக்குழு தலைவராகப் பணியாற்றியுள்ளேன்.தற்போது உத்தமத்தின் நிர்வாகக்குழு தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன்.
தமிழ் அறிவியல் உலகில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? தங்கள் சொந்த இலக்கு என்ன?
ஆரம்பத்தில் கூறியதுபோல இரசாயனத் துறையில் பல்கலைக்கழக அளவில் கல்வி கற்பிப்பதும் இரசாயனத் துறையில் ஆராய்ச்சியில் பங்குபெறுவதுமே எனது முழுநேர முயற்சிகள். இருப்பினும் கடந்த பத்து ஆண்டுகளுக்குமேல் என்னால் முடிந்தளவு கணினி, இணைய வழியில் தமிழ் மொழி வளர, உலகெங்கிலும் உள்ள தமிழர்களை சென்றுடைய என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். மதுரைத் திட்டத்தில் பங்குபெறுவது மனதிற்கு பெருமளவில் திருப்தியை கொடுத்துவருகிறது. தமிழ் இலக்கிய நூல்களின் மொத்த எண்ணிக்கைப் பார்த்தால் இதுவரை 300 முக்கிய நூல்களுக்கு மின்பதிப்பு தயாரிப்பது ஒரு சிறு துளியே.
பாதுகாக்கப்பட வேண்டிய நூல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. குறிப்பபாக காகிதவடிவ புத்தகமாக வராமலேயே மடிந்துகொண்டிருக்கும் நூல்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளன. கணினியில் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் தமிழ் மொழியில் விரைவில் பெற உத்தமம் போன்ற அைமப்புகள் இன்றியமையாதவை என்பது எனது தாழ்மையான கருத்து. அதனால் உத்தமம் மேலும் விரிவடைந்து உலகளவில் ஒரு பெருமைப்படக் கூடிய அமைப்பாக ஆவேண்டும் என்பது எனது அவா. அதற்கு என்னால் முடிந்த அளவு பணி செய்வேன்.
தமிழ் மரபு அறக்கட்டளை www.tamilheritage.org முனைவர் கண்ணன் தலைமையில் தமிழரது கலாசாரம் சம்பந்தப்பட்டவைகளை பல்லூடக மின்வடிவில் பாதுகாக்க முயன்றுவருகிறது. இதிலும் இயக்கத்தின் துணைதலைவராக என்னால் முடிந்த உதவிகளை ெசய்துவருகிறேன்.
பாஷா இந்தியா வாசகர்களூக்கு வாழ்த்துகள்.
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
நாட்டார் வழக்காற்றியல் வழி தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள் -- முகில்
பத்துகாணி நஞ்ச புஞ்ச இங்க இருக்க
பண்ருட்டிக்கி போனானாம் ஒண்ணுக்கிருக்க
வாய்த்திருக்கிற சூழலில் வாழத் தெரிய வேண்டும். அதை விட்டுவிட்டு வேறுஇடம் போவது ஏற்புடையதல்ல என்பதைக் கிண்டலாகச் சொல்கிற வாய்மொழி இலக்கியம்இது.
கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன்
வானமேறி வைகுந்தம் போனானாம்.
அறுக்க மாட்டாதவன் இடுப்புல
அம்பத்தெட்டு அருவாளாம்
புள்ள தெரத்த பேலவுட்டுப் பாத்தா
புல்ல புடிச்சிகிட்டு தர்ருபுர்ருங்குதாம்
போன்ற சொலவடைகளும் இதே மதிப்பீட்டை வெவ்வேறு வார்த்தைகளில் பதிவுசெய்துள்ளன. காலம்காலமாய் சொல்லப்படுவதைப் பழமொழி என்கிறார்கள்.
போன்ற சொலவடைகளும் இதே மதிப்பீட்டை வெவ்வேறு வார்த்தைகளில் பதிவுசெய்துள்ளன. காலம் காலமாய் சொல்லப் படுவதைப் பழமொழி என்கிறார்கள்.
நடு ஏரியில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட
சம்மந்தமில்லாதவற்றில் தலையிட்டால் கேடு வந்து சேரும் என்பதை அழகாகச் சொல்கிறது இந்தச் சொலவடை.
தாலாட்டுப் பாடல், ஒப்பாரிப் பாடல், நலுங்குப் பாடல், நடவுப் பாடல், விளையாட்டுப் பாடல், வண்டிக்காரன் பாடல், கும்மிப் பாடல், ஒயில் பாடல்,வாழ்த்துப் பாடல், பிரச்சனைப் பாடல்... இப்படி பலவகைப் பாடல்கள் இருக்கின்றன.
கொம்பூதிக் கொட்டடிச்சி குனிஞ்சி கும்மியடிப்போம்
கொலவ போட்டு பாட்டுப் பாடி ஒயிலாட்டம் நடிப்போம்.
நம்மூரு அய்யனாருக்கு அர்ச்சன பண்ணப் போவோம்
எல்லா பேரும் நல்லாருக்க ஏகவிரதம் இருப்போம்
ஒயில் பாடலில் மகிழ்ச்சி மட்டும் பொங்க வில்லை; எல்லோரும் நல்லாயிருக்க வேண்டுமென்ற ஆசையும் பொங்கி வழிகிறது. நாட்டார் கலைகளின் சிறப்புகளில் ஒன்று கூட்டாக நிகழ்த்தப் படுவதாகும். அனைத்துத் தரப்பு மக்களின் அபிலாஷைகளை அனைவரும் புரிந்து கொள்ளும் பாங்கைக் கீழ்க்கண்ட கும்மிப்பாடலில் காணலாம்:
கத்தரிக்கா அண்ணாவே
கூடையில அண்ணாவே
கொண்டுவந்தேன் அண்ணாவே
ஓம்பந்தலுக்கு அண்ணாவே
எனக்குன்னுதான் அண்ணாவே
பொறந்த பொண்ண அண்ணாவே
எதிராளிக்கி அண்ணாவே,
நீதரலாமோ அண்ணாவே,
நீ தாரும் நல்ல அண்ணாவே,
பணமும் சரி அண்ணாவே
ஏந்தலகடத்தான் அண்ணா
வேகல்லுஞ்சரி அண்ணாவே
எண்ண கொடம் அண்ணாவே
றான் ரெண்டெடுத்து அண்ணாவே
எல்லையில அண்ணாவே
நான் போட்டுடைப்பேன் அண்ணாவே
ஓடையில ஏம்மாமா,
நான் அறுப்பறுத்து ஏம்மாமா
ஒழுங்கியில ஏம்மாமமா,
நான் கட்டு கட்டி ஏம்மாமா
கட்டு கட்டி ஏம்மாமா,
நான் தூக்கையிலே ஏம்மாமா
கண்ண கண்ண ஏம்மாமா,
நீ காட்டுறியே ஏம்மாமா
தங்க அரிசி கொண்டு
தனியா ரயிலேறி
தங்க மக வரும் வரைக்கும்
சவமிருந்தால் ஆகாதோ
பொன்னு அரிசி கொண்டு
புதுசா ரயிலேறி
பொன்னுமக வரும் வரைக்கும்
பொணமிருந்தால் ஆகாதோ
கண்ணுக்கெதிரே நடக்கும் அநியாயத்தைக் கண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும்கோபப்படுவதும் கொதித்தெழுவதும் தமிழ் வாழ்வின் வீரியமிக்க அடையாளங்களில்ஒன்றாகும்.
பத்துமூட அரிசி வந்தா பாதிதானே போடுறாக
அஞ்சி மூட அரிசியத்தான் ராசாக்கா - மக்களுக்கு
அடையாளமே காட்டலியே அய்யாக்கா.
அதிகாரிங் கமிசன்தானே கமிசந்தானே
நம்ம ஊரு கணக்கப்புள்ளையுங்
கமிசன்தானே ராசாக்கா மக்களுக்கு
கடமையோடு ஒழைப்பாரில்ல அய்யாக்கா.
முயற்சியெடுக்க வேணும் முடிவு பண்ணி பாக்க வேணும்
மக்களெல்லாம் ஒண்ணா சேந்து ராசாக்கா - மந்திரிகிட்ட
மனுகொடுத்து பேச வேணும் அய்யாக்கா
தங்கள் வாழ்வை ஒத்த தன்மைகளோடுதான் தங்கள் தெய்வங்களையும் மக்கள் உருவாக்கி யிருக்கிறார்கள். அதனால்தான் சிறு தெய்வங்களுக்கு கறி, சாராயம், சுருட்டு போன்றவைகள் படைக்கப் படுகின்றன. இப்படிப்பட்ட பண்பாட்டுக் கூறுகள் மக்களிடம் ஊடாடியிருப்பதால்தான் தெய்வங்களை வணங்குகிற அதேநேரத்தில் நடைமுறை வாழ்வுக்கு உதவாத தெய்வங்களை கிண்டலடிக்கிற பாடல்களையும் காணமுடிகிறது.உதாரணத்திற்கு ஒரு பாடல்,
நூத்தப் பத்த செலவு செஞ்சி
நூதனமா குதர செஞ்சி
தூக்கி தூக்கி தோளசந்து போனோமே - சாமி
தொரத்தியே சவாரி செய்ய காணோமே
காணி மண்ணு கல்லு மரம்
தன்னால் ஒரு பொம்ம செஞ்சி
கட்டடமும் வீடும் கட்டி வச்சோமே - ஒரு
காலணாவும் வாடகையக் காணோமே
கண்ட கண்ட இடமெல்லாம்
கையெடுத்து கும்புட்டாலும்
கல்லுசாமி புள்ள தருமா - ராத்திரிக்கி
கணவனாக மாறி வருமா
உழைப்புதான் போற்றப்பட வேண்டிய உன்னதமான விஷயம் என்பது நம் உயர்ந்தமதிப்பீடுகளில் ஒன்று. இதை அழகாகச் சொல்லுகிற பாடல் ஒன்றைக் கீழேபாருங்கள்:
மழ வருது மழ வருது
நெல்ல வாருங்க
முக்காப்படி அரிசி போட்டு
முறுக்கச் சுடுங்க
ஏறு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையிங்க
சும்மாருக்குற மாமனுக்கு
சூடு வையிங்க
நன்றி : கீற்று
நன்றி : புத்தகம் பேசுது
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
2
மறுமொழிகள்
தாய்மையை விலை பேசும் உலகமயம்
விந்தணுவும் தனித்தனியே சேகரிக்கப்பட்டு, சோதனைக் குழாயிலிட்டு வளர்த்து பின்னர் வாடகைத் தாயின் கருப்பை யிலிடப்படும்; வாடகைத் தாய் அக்கருவைச் சுமந்து குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டு, அதற்கீடாக உரிய தொகையைப் பெற்றுக் கொள்வார். இதுதான் ஆரவாரமாக அறிவிக்கப் பட்டு விளம்பரப்படுத்தப் படும் புதிய வேலை வாய்ப்பு.
`
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
உயிர்ப்பற்றுப் போன தமிழ்ப்பல்கலைக்கழகம்!?
`
-------- தெ.மதுசூதனன்
`
1925- -ல் திருச்சியிலிருந்து 'தமிழன்' எனும் பத்திரிகை வெளி வந்துகொண்டிருந்தது. −அப் பத்திரிகையில் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை என்பவர்கட்டுரைகள் பல எழுதி வந்தார்.
`
தமிழ்ச்சூழலில் −அக் கோரிக்கையின் நியாயப்பாடு பல்வேறு தமிழபிமானிகளால் வரவேற்கப் பட்டது.
`
இந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகஆட்சிக் குழுவிலிருந்த பெரும்பாலோர் தமிழை முழுமையாகப் புறக்கணித்துவரக்கூடிய சூழலும் அப்போது நிலவியது. ஆகவே அத் தருணத்தில் தமிழ்மொழிக்கென்று தனிப் பல்கலைக் கழகக் கோரிக்கை ஏற்புடையதாகவேயிருந்தது.
`
எம்.எஸ். முன் வைத்த கோரிக்கை அன்றைய சைவ அறிஞர்கள் பலராலும் தீவிர பிரச்சாரப் படுத்தும் கோரிக்கையாகவே யிருந்தது.
`
−இதனால் ஆட்சிக்குழுவிலிருந்த தெலுங்கர்கள் சிலர்ஆந்திரப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும்முன்வைத்தனர்.தமிழ் மொழிக்கான முழுமையான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென்றகோரிக்கை வலுப்பட்டு வந்தாலும் அன்றைய ஆங்கிலேய அரசு அங்கீகாரம் கொடுக்கபின் நின்றது.
`
அதே நேரம் 1928- −ல் ஆந்திராவில் ஆந்திரப் பல்கலைக்கழகம்உருவாக்குவதற்கான அனுமதியை பிரிட்டிஷ் அரசு கொடுத்தது. இப்போக்கு தமிழுக்கும் நிச்சயம் தனித்த பல்கலைக்கழகம் உருவாவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது.
`
1929-களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை படிப்படியாகவலுவிழந்து போகும் சூழல் உருவானது.
`
அவ்வப்பொழுது ஒரு சிலரால் தமிழ்ப் பல்கலைக்கழகக் கோரிக்கை மேற்கிளம்பும்.
இருப்பினும் 1980-களில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகயிருந்த பொழுது தமிழ்ப் பல்கலைக் கழகக் கோரிக்கை மறு பிறப்பு எடுத்தது. எம்.ஜி.ஆரும் இக்கோரிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க முற்பட்டார். 1981 செப்டம்பர் 15- இல்தஞ்சையில் 'தமிழ்ப் பல்கலைக் கழகம்' உருவாக்கப்பட்டது.
`
தமிழ் மொழிக்கென்று தனித்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற நீண்டகாலக் கோரிக்கை எம்.ஜி.ஆரால் தீர்த்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் திருச்சி சாலையில் வல்லம் என்ற ஊருக்கருகே ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்உருவாக்கப்பட்டது.
`
வானத்திலிருந்து பார்த்தால் தமிழ் எழுத்து தெரியும்வகையில் பல்கலைக்கழக கட்டடம் கட்டவும் தீர்மானிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்து 'தமிழியல்' சார்ந்தஉயர்நிலைக் கல்வி ஆய்வு மையமாகத் திகழவே வடிவமைக்கப்பட்டது.
`
இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராகப் பேராசிரியர். வி.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் நியமிக்கப்பட்டார். அவரது ஆளுமையிலும் ஆற்றலிலும் பல்கலைக்கழகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றால் மிகையாகாது.'தமிழியல்' ஆராய்ச்சிப் பரப்பின் வகை மாதிரியாகத் திகழும் வகையில் கல்விப்புலம் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டது.
`
அவை : 1. கலைப்புலம் 2.மொழிப்புலம் 3. சுவடிப்புலம் 4. வளர் தமிழ் புலம் 5. அறிவியல் புலம்ஒவ்வொரு துறைக்கும் துறைபோகிய புலமையாளர்கள் வரவழைக்கப்பட்டு பல்கலைக் கழகத்துக்குத் தக்க தளம் அமைக்கப்பட்டது. மேல்நாட்டு ஆராய்ச்சிப் புலமைச் செழுமையைத் தக்கவாறு தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்திட வி.ஐ.சுப்பிரமணியம் திட்டமிட்டுப் பணியாற்றினார்.
`
எம்.ஜி.ஆர். தக்க ஒருவரைதுணை வேந்தராக நியமித்தமை பாராட்டத்தக்கது. வி.ஐ. சுப்பிரமணியம் கண்ணும்கருத்துமாகயிருந்து சிறந்த பல்கலைக்கழகமாக வளர்ந்திட அரும்பாடுபட்டார். தனது பணிகளில் எவரது குறுக்கீடுகள் எதனையும் விரும்பாதவர். கண்டிப்பானவர். அதனால் எவர் தலையிட்டாலும் உடனே தனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்றும், அதற்காக எப்போதுமே ராஜினாமா கடிதத்தைத் தயாராகவே வைத்திருந்தார் என்றும் கூறுவர்.
`
பல்வேறு வெளிநாட்டுப் புலமையாளர்கள் வருகை தரு பேராசிரியர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் பல்கலைக்கழகத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
`
ஜெர்மன், சுவிட்சர்லாந்து, ஈழம், போலந்து போன்ற நாடுகளிலிருந்து பலர் வருகை தரு பேராசிரியர்களாக −இருந்துள்ளனர்.
`
−இங்குள்ள ஆசிரியர்கள் பலர் வெளிப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று ஆராய்ச்சியில் ஈடுபடவும், பயிற்சிபெறவும் அதற்கான வாய்ப்புக்களை பல்கலைக்கழகம் அமைத்துக் கொடுத்தது.
`
சிலதுறைகளில் உயராய்வு மையங்களும் உருவாக்கப்பட்டன. மண்டபத்தில் நிகழாய்வு மையம், உதகமண்டலத்தில் மலையின மக்கள் ஆய்வு மையம், காஞ்சிபுரத்தில் தத்துவ ஆய்வு மையம், பல்கலைக்கழகத்தில் பேரகராதித் துறை, வாழ்வியல்களஞ்சிய மையம், அறிவியல் களஞ்சிய மையம் போன்றவை உருவாக்கப்பட்டு ஆராய்ச்சிச் செல்நெறியில் புதிய அத்தியாயங்களைத் தோற்றுவிக்க முற்பட்டன.
`
பல்வேறு நூல்கள், நூலடைவுகள், ஆவணப்படுத்தல்கள் எனத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பணிகள் குறுகிய காலத்தில் வளர்ந்தன. ஆராய்ச்சிக்கருத்தரங்குகள் பல திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டன.வி.ஐ.சுப்பிரமணியத்தின் காலத்தில் பல்கலைக்கழகச் சூழல் திட்டமிட்டுஉருவாக்கி வளர்க்கப்பட்டது.
`
−இதன் பின்னர் வந்த துணை வேந்தர்கள் காலத்தில் எந்த நோக்கத்துக்காகப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை ஈடேற்றம் காணும் வகையில் சிதைவை நோக்கி நகரத் தொடங்கியது.
`
அரசு தலையீடுகள் பல்கலைக்கழகத்தின் கலாசாரத்தையே ஆட்டம் காணவைக்கிறது. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க அறக்கட்டளைகள் பலவற்றை அடகுவைத்துக் கடன் வாங்கும் நிலைமைகள் கூட உருவாகியுள்ளது.
`
தமிழ்ப் பல்கலைக்கழகம் பெயருக்கு மாத்திரமே பல்கலைக்கழகமாக அதன்கட்டடங்கள் மட்டும் நிமிர்ந்து நிற்கிறது. வி.ஐ.சுப்பிரமணியத்தின்காலத்தில் பிரகாசிக்கத் தொடங்கிய பல்கலைக்கழகம் அவருக்குப் பின்னால்மங்கத் தொடங்கியது. தமிழ் மொழி, தமிழர்
`
பல்கலைக்கழகத்தின் ஆத்மாவைச் சிதைக்கும் துணைவேந்தர்களின் வருகை, அரசுத் தலையீடு, பொறுப்பற்ற ஆசிரியர்களின் புகலிடம்என யாவும் கூட்டுச் சேர்ந்து 'தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்' உயிர்ப்பை நிறுத்தி வருகின்றன.தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் எதிர்காலம் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும்பிரச்சினைப்பாடுகளின் சமிக்ஞைகளில் ஒன்று எனலாம்.
`
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
0
மறுமொழிகள்
தேவாரத்தைக் காட்டிய பிள்ளையார் - டாக்டர் எஸ்.ஜெயபாரதி
.
இராஜராஜசோழர் சோழநாட்டின் அரியணை ஏறியது 985-ஆம் ஆண்டு. அவர் வாழ்ந்த காலத்துக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றியது தேவாரம்.
.
தேவாரம் பாடிய அப்பர் என்னும் வாகீசர் என்னும் திருநாவுக்கரசர், பாலறாவாயர் ஆணை நமதென்ற பெருமாள் ஆளுடையபிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தர், தம்பிரான்தோழர் என்னும் வன்றொண்டர் என்னும் சுந்தரமூர்த்தி ஆகியோரை 'மூவர் முதலிகள்' என்று சொல்வார்கள்.
.
இவர்களில் காலத்தால் முற்பட்டவர் அப்பர். அவர் முதலில் சைவ சமயத்தில் இருந்தவர். ஆனால் பிற்காலத்தில் அவர் சமணசமயத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதனுள் சென்று முக்கியமானவராக விளங்கினார். அவருடைய நாற்பதாம் வயதில் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்தார். எண்பதாம் வயதுவரையில் அவர் தமது 'தயாமூலதர்மம்' என்னும் திருத்தொண்டு செய்துகொண்டு, தம்முடைய நாற்பதாண்டு சைவத் திருத்தொண்டின்போது நாற்பத்தொன்பதினாயிரம் பதிகங்களைப் பாடியவர். இவர் பாடிய பாடல்களைத் 'தேவாரம்' என்றழைப்பார்கள். இவரால் சைவ சமயம், சோழநாட்டிலும் தொண்டைநாட்டிலும் நன்கு பரவியது.
.
இரண்டாவதாக வாழ்ந்தவர் திருஞான சம்பந்தர். அவர் பதினாறாண்டுகளே வாழ்ந்தவர். சிவனுக்குச் செல்லப்பிள்ளையாக விளங்கியவர். இவர் அப்பருடைய சமகாலத்தவர். பாண்டிநாட்டில் சைவசமயத்தை மீட்டு, சைவத்தைப் பரப்புவதில் வெற்றிகண்டவர். மொத்தம் பதினாறாயிரம் பதிகங்களைப் பாடியவர். இவர் பாடியவற்றைத் 'திருக்கடைக்காப்பு' என்றழைப்பர்.
.
மூன்றாமவர் சுந்தரர். காலத்தால் ஏறத்தாழ நூற்றாண்டுகாலத்துக்குப் பிற்பட்டவர். இறைவனுடன் தோழமை பூண்டு வழிபடமுடியும் என்பதையும் இறைவன் எளியார்க்கும் எளியவன் என்ற கருத்தை உண்மையென நிரூபித்து நிறுவும்வண்ணம் வாழ்ந்துகாட்டியவர்.
.
இவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கயிலைக்கு சேரமான் பெருமாள் நாயனாருடன் சென்ற போது, அதுவரைக்கும் மூவராலும் பாடப்பட்ட தேவாரப் பதிகங்களையெல்லாம் ஒன்று சேர்த்து, எடுத்துச் சென்றார். சிவனுடைய ஆணையால் சிவபூதம் ஒன்று, அவற்றையெல்லாம் எடுத்துத் தில்லையில் ஓரிடத்தில் பத்திரமாக வைத்து, மூவரின் திருக்கைச்சாத்தால் திருக்காப்பிட்டுவைத்தது.
.
அப்படியே அவை இருந்து போயின.
.
பல்லவர்கள் காலத்திலும் சோழர்களில் ராஜரஜருக்கு முற்பட்ட ஏழு சோழமன்னர்களின் காலத்திலும் தேவாரப்பாடல்கள் செல்வாக்கிழந்து விளங்கியிருக்கின்றன.
.
அந்நிலையில் அவற்றைக் கண்டுபிடிக்கச்செய்து அவற்றை முறைப்படித் தொகுக்கச் செய்து நாடெங்கும் சிவாலயங்களில் ஓதவைத்து, அப்படிப்பட்டதொரு மரபை அதிகாரபூர்வமாகத் தோற்றுவித்து, அதற்காக ஏராளமான பொருளைச் செலவிட்டு, மற்றவர்களையும் இந்த மரபுதனைக் கடைபிடிக்கச் செய்து, கட்டிக் காத்து வருமாறும் செய்தவர் இராஜராஜசோழர்தான். அன்றிலிருந்து பல தலைமுறைகளையும் கடந்து, பல நூற்றாண்டுகளையும் கடந்து, இவ்வழக்கம் சிறப்பான முறையில் இன்றும் நம்மிடையே பரவி நிற்கிறது.

இராஜராஜர் சிறந்ததொரு சைவர். சைவப்பிழம்பாகிய பாட்டியார் செம்பியன் மாதேவியாரால் வளர்க்கப் பட்டவர். சிறந்த சிவனடியாரான கண்டராதித்த சோழரின் தம்பியின் பேரர். பரம்பரைச் சைவர்களாகிய சோழர் குலத்திலகம். சிவனடியாரும் சித்தருமாகிய கருவூர்த்தேவரின் அடியார். சிறந்த காளாமுகச் சம்பிர தாயத்தில் விளங்கிய ஈசானிய சிவாச்சாரியாரை தம்முடைய ஆச்சாரியராகவும் இராஜாகுருவாகவும் பெற்றவர்.
.
இவருடைய வம்சாவளி, வாழ்க்கை வரலாறு போன்றவற்றை ஏற்றதோர் இடத்தில் பின்னர் பார்ப்போம்.
.
இராஜராஜனின் இஷ்டதெய்வங்கள்.
.
திருவாரூர் தியாகராசரும், தில்லை நடராசரும் இராஜராஜரின் இஷ்டதெய்வங்கள். இராஜராஜரின் பேராற்றல், இறைத்தொண்டிலும்கூட வடிகால் பெற்றது. பலவழிகளால் சிவநெறியைத் தழைக்கச் செய்தார். அவருடைய காலத்திலும், தீவிர சைவர்களாக விளங்கிய அவருடைய வழித்தோன்றல்கள் காலத்திலும் சிறந்த நிலையை எய்திய சைவம், அவர்கள் கொடுத்த உற்சாகத்தில் தமிழகத்தில் நன்கு வேரூன்றி, அதே சமயத்தில் பாரதத்தின் சமய வாழ்வியலிலும் தன்னுடைய செல்வாக்கையும் தாக்கத்தையும் ஆழமாகப் பதித்துக்கொண்டு, இன்று உலக சமயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
.
சிவநெறியைத் தன்னகத்தே கொண்டு தழைக்கச்செய்த இராஜராஜரின் சிறப்புப் பெயர்களில் ஒன்று 'சிவபாத சேகரன்'. இன்னொரு சிறப்புப்பெயர், 'திருமுறை கண்ட சோழன்'.
.
அப்பர், சம்பந்தர் சுந்தரார் இயற்றிய பல்லாயிரக்கணக்கான தேவாரப் பாடல்கள் மறைந்து போயின. அங்கும் இங்குமாக விளங்கிய சில பாடல்களே தேவாரத்தை நினைவுறுத்துவனவாக இருந்தன. இவற்றை நம்பியாண்டார் நம்பி என்னும் சைவப் பெருந்தகையாரின் உதவியோடு கண்டு பிடித்து, இவற்றையும் இவற்றுடன் இன்னும் பல பாடல்களையும் சேகரித்துச் சேர்த்துத் திருமுறைகளாகத் தொகுப்பிக்க இராஜராஜர் செய்த முயற்சியைக் கூறுவதுதான், 'திருமுறை கண்ட புராணம்' என்பது.
.
இராஜராஜருக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார் என்னும் சைவப்பெருந்தகை பாடியது இது.
.
இராஜராஜரின் அவைக்கு வரும் அடியார்களில் சிலர், தேவாரத்திருப்பதிகங்களில் ஒவ்வொன்றைமட்டுமே பாடிவிட்டுச்சென்றனர். அவற்றைத் தவிர வேறெதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆகையால் தேவாரப் பதிகங்களை நாடெங்கும் பக்தியுடன் இராஜராஜர் தேடிவந்தார். ஆனால் வேறு பதிகங்கள் கிடைக்கவே யில்லை. இதனால் மன்னவர் மனம் நொந்தார்.
.
விநாயகரை ஓதுவிக்கச்செய்த சிறுவன்
.
அவ்வமயம் திருநாரையூர் என்னும் ஊரில் 'சைவம் வாழ மாமணி போல் ஒரு சிறுவன் வந்து' தோன்றினான். அச்சிறுவருடைய தந்தை அவ்வூரில் கோயில் கொண்டுள்ள 'பொல்லாப்பிள்ளையா'ருக்குப் பூசை செய்பவர்.
.
ஒருநாள் பூசைக்குச் செல்ல இயலாத தந்தையார் தம் மகனாகிய நம்பியாண்டார் நம்பியைப் பூசை செய்ய அனுப்பினார். சிறுவராகிய நம்பியும் பள்ளிக்குச் செல்லாமல் கோயிலுக்குச் சென்று, பொல்லாப் பிள்ளை யாருக்குத் திருவமுது படைத்துப் பிள்ளையாரை உண்ணுமாறு வேண்டினார். ஆனால் படைத்தவை படைத்த வாறு இருந்ததைக் கண்ட நம்பி, பிள்ளையாரின்மேல் தம்முடைய தலையை மோதலானார்.
.
"நம்பி பொறு!", என்று பிள்ளையார் அவரைத் தடுத்து, அவர் படைத்தவற்றை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு திருவமுது மறைந்தது.
.
அதன்பின்னர், "சந்த மறைமுதல் கலைகள் நீயே. ஓதித் தரல் வேண்டும்", என்று நம்பி வேண்டிக் கொண்டதற்கிணங்க, விநாயகரும் நம்பிக்கு சகல கலைஞானங்களையும் அக்கணமே தாமே ஓதுவித்தார்.

`````````````````````````````````````````````````````
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
2
மறுமொழிகள்









































