"ஒளவைக்குறள் - அறிமுகம்"
இட்டவர் முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' 0 மறுமொழிகள்
"ஒளவைக்குறள் - அறிமுகம்"
இட்டவர் முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' 0 மறுமொழிகள்
"உண்ணாநோன்பு மருத்துவம் "
இட்டவர் முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' 0 மறுமொழிகள்
நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை ஆக்கங்களில் கணித விதிப்பாடுகள் -8
(குறிப்பு: இக்கட்டுரை எழுதிய நியூக்ளியர் அறிஞர் சி.ஜெயபாரதம், குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் உடன் இணைந்து பணியாற்றியவர். முனைவர் இர.வாசுதேவனின் நண்பர். தற்போது கனடாவில் குடியமர்ந்துள்ளார்)
'ஜியாமெட்ரி [வரைகோணக் கணிதம்] தெரியாதவர் என் கணிதக் கல்விக் கூடத்தில் நுழையாது அப்பால் செல்லுங்கள். ... பித்தகோரஸின் கணித விதிதான் [நேர்கோண முக்கோணப் பக்கங்களின் சதுரக் கூட்டல் சாய்வு பக்கத்தின் சதுரத்துக்குச் சமம்] அகில ஆக்கத்தின் உறுப்புச் செங்கல்கள் என்று நான் கூறுவேன். '
கிரேக்க மேதை பிளாடோ [கி.மு.427-347]
'யார் நம்புவார், கண்விழி போன்ற சிறிய ஓர் குமிழுக்குள்ளே, பிரபஞ்ச கோளங்களின் பிம்பங்களைக் காணும் பேராற்றல் அடங்கி யிருக்கிறது என்று ? '
'உலகின் அழகுமயம் அனைத்தையும் கண்விழி தழுவுகிறது என்பதை நீ அறிய வில்லையா ? மனித இனங்கள் ஆக்கும் கலைகள் எல்லாவற்றையும் பற்றி அதுதான் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிறகு அவற்றைச் சீராய்த் திருத்துகிறது. மனிதனின் கண்விழி கணிதத்தின் இளவரசன் என்று கருதப் படுகிறது! கண்விழி மூலம் தெரிந்த விஞ்ஞான மெய்ப்பாடுகள் யாவும் பின்னால் உறுதிப்பாடு ஆகின்றன. அது விண்மின்களின் தூரத்தையும், பரிமாணத்தையும் அளந்துள்ளது. பூமியின் மூலகங்களைத் [Elements] தேடி அவற்றின் இருப்பிடங்களை கண்டுபிடித்துள்ளது. கட்டடக் கலையைப் படைத்துள்ளது. தெய்வீக ஓவியக் கலையை உதயமாகச் செய்து அதன் தொலை நோக்குக் காட்சியையும் [Perspective] தோற்றுவித்துள்ளது!
ஓவியக்கலை மேதை: லியனார்டோ டவின்ஸி (1452-1519)
'எகிப்திய மாந்தர் கொண்டிருந்த கணித ஞானம், வானியல் அறிவு, பூதள விபரம், விஞ்ஞான நுணுக்கங்கள் அனைத்தும் விந்தையானவை, வியக்கத் தக்கவை! அவரது அகிலவியல், மதவியல் கோட்பாடுகளும் [Cosmology, Theology] ஆழ்ந்து அறியத் தக்கவை! பிரமிட்களின் புதிர்கள், அமைப்புகள் ஆகியவற்றைப் புரிய வைக்கும் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வதின் மூலம், ஓரளவு பிரபஞ்சக் கோட்பாடுகளையும் அவற்றில் மனிதரின் தொடர்புகளையும் தெரிந்து கொள்கிறோம். '
பீட்டர் டாம்ப்கின்ஸ் [Peter Tompkins, Author: Secrets of the Great Pyramids]
: எகிப்தில் உள்ள பிரமிட் போன்ற கூம்பில்லாக் கோபுரங்கள் பல மாயா நாகரீகம் தழைத்த மத்திய அமெரிக்காவிலும், இந்தியாவின் தென்னக மாநிலங்களிலும் உலகின் பல்வேறு நாடுகளில் ஏறக்குறைய ஒரே காலங்களில் தோன்றி யிருக்கலாம் அல்லது அம்மாதிரிக் கோபுர அமைப்புகள் பின்னால் ஆங்கே பரவி யிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. பிரமிக்கத் தக்க பிரமிட் கோபுரங்களையும், சிற்பக் கோயில்களையும், அரசர் புதைப்பு மாளிகைகளையும் கட்டி முடிக்க எகிப்தியர் நுணுக்கமான கணித ஞானமும், வானியல் யூகமும், விஞ்ஞான அறிவும், பொறியியற் திறமையும் கொண்டிருந் ததாகத் தெரிகிறது. பண்டைய எகிப்தில் ஓராண்டின் காலத்தையும், நாட்களையும், நேரத்தையும் அளக்கக் கணித விதிகள் பயன்படுத்தப் பட்டன. நேர் கோடுகள், பல்வேறு கோணங்கள், வட்டம், வளைவு, சதுரம், நீள்சதுரம், பரப்பளவு, கொள்ளளவு [Volume], உயர்ந்த தூண், பிரமிட் போன்ற சதுரக் கூம்பகம், கோயில் ஆகியவை யாவும் துல்லியமாக அமைத்துக் கட்ட கணித விதிப்பாடுகள், பொறியியல் நுணுக்கங்கள் சீராகக் கடைப் பிடிக்கப் பட்டு வந்திருக்கின்றன. 4000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தியர் நாட்கள், மாதங்கள், வருடம் குறிப்பிடும், ஆண்டு நாள்காட்டியைத் [Calendar] தயாரித்து வந்திருக்கிறார்கள்.
எகிப்தியர் பிரமிட் நிறுவவும், ஆலயங்கள் கட்டவும், சின்னங்கள் அமைக்கவும் பெரும் கற்பாறைகளைத் துல்லியமாகக் குன்றுகளில் வெட்டிப் புரட்டி இழுத்து வரத் திறமையான 'யந்திரவியல் நியதி முறைகளைக் ' [Principles of Mechanics] கையாண்டதாக அறியப்படுகிறது! கல்துறைப் பொறியியல் [Stone Technology], கட்டமைப்புப் பொறியியல் [Structural Engineering] போன்ற துறைகளில் வல்லவராய் இருந்திருக்கிறார்கள்.
அத்தகைய முற்போக்குக் கட்டங்களைப் பண்டைக் கால எகிப்தியர் முதலில் எப்படித் திட்டமிட்டார், பிறகு எப்படிக் கட்டினார் என்று கூடத் தற்போது நம்மால் தெளிவாக ஊகிக்க முடிய வில்லை! நமக்குப் புரிவதும் சிரமமாக உள்ளது! கால வெள்ளத்தில் அடித்துப் போனவை சில! கள்ளர் கூட்டம் புகுந்து திருடிச் சென்ற ஓவியச் சிற்ப, ஆபரணக் களஞ்சியங்கள் கணக்கில் அடங்கா! பல்லாயிரம் ஆண்டுகள் ஃபாரோ மன்னரின் உடல்களை எவ்விதம் பாதுகாப்பாக எகிப்தியர் அடைத்து வைத்தார் என்பது ஒரு புதிர் ? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஓவியங்களில் அழிந்து போகாத, வண்ணத் திரவங்களை, எங்ஙனம் தயாரித்தார் என்பது அடுத்த புதிர்! எகிப்தியர் வரைகோணக் கணிதம் (Geometry), இரசாயனம் (Chemistry), மருத்துவம் (Medicine), உடல்பகுப்பு (Anatomy), இசை (Music) ஆகியவற்றை நன்கு அறிந்து பயன்படுத்தி வந்திருந்தார்கள்.
4000 ஆண்டுகளுக்கும் முன்னே வட்டத்தின் நிலை எண்ணான 'பை ' [Constant Pi=3.14 (22/7)] என்பதைப் பற்றி எகிப்தியர் விளக்கமாக அறிந்திருந்தார் என்று ஜெர்மென் மேதை கார்ல்-ஹெச் [Karl-H] [தகவல்:21] என்பவர் கூறுகிறார். பிரம்மாண்டமான பிரமிட்களை ஆராய்ந்த 'வரலாற்றுப் பிதா ' எனப்படும் கிரேக்க மேதை ஹெரொடோடஸ் [Herodotus (கி.மு. 484-425)] எழுதிய சரித்திரப் பதிவுகளில், பிரமிட் சாய்வு தளம் ஒன்றின் பரப்பளவு, பிரமிட் உயரத்தின் இரட்டைப் பெருக்கம் [Surface Area of Each Face of the Pyramid = Square of its Height (Height x Height)]. இந்த வரைகணிதப் பரப்பளவை [Geometrical Area] எகிப்தின் ஆலயக் குருமார் கிரேக்க ஞானி ஹெரொடோடஸிடம் அறிவித்ததாகத் தெரிகிறது! அந்த முறையில் கணித்தால், கற்கோபுரமான பிரமிட்களின் பிரமிக்கத்த அளவுகள் 99.9% துல்லிமத்தில்தான் அமைந்திருக்கும்! ஆனால் எகிப்தியக் கணிதப் பொறியாளர் 100% துல்லிமத்தைக் குறிக்கோளாகக் கொண்டு, திட்ட மிட்டதாக அறியப் படுகிறது!
எகிப்தியர் கட்டடக் கலையில் கணித விஞ்ஞானம்
விஞ்ஞானப் பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி, நைல் நதி நாகரீகத்தை மேம்படுத்திய பண்டைக் கால எகிப்தியர்தான் முதன்முதல் கணித விதிகளைப் பின்பற்றிய மாந்தர் என்று வரலாற்றில் அறியப்படுகிறது. கெமிஸ்டிரி [Chemistry] என்னும் இரசாயனப் பதமே எகிப்தியர் சொல்லான 'ஆல்கெமி ' [Alchemy] என்னும் இரசவாத முறையிலிருந்து வந்தது என்று அறியப் படுகிறது. எல்லாத் துறைகளையும் விட, அவர்கள் மிஞ்சி மேம்பட்ட துறைகள், மருத்துவம், பயன்பாட்டுக் கணிதம் [Applied Mathematics] ஆகியவையே. புராதன பாபிரஸ் இலைக் காகிதங்களில் [Papyrus: Ancient Paper -Water Plant or reed, meant for writing] எழுதப் பட்டுள்ள ஏராளமான எகிப்திய காவியங்களில் மருத்துவ முறைகள் காணப் பட்டாலும், எப்படி இரசாயனக் கணித முறையில் கலக்கப் பட்டன என்னும் விளக்கங்கள் காணப்பட வில்லை. ஆனால் நிச்சயமாக அவரது முற்போக்கான விளக்கப் பதிவுகள் அவரது கைவசம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் எகிப்தியர் இரசாயனம், மருத்துவம் மட்டுமின்றி, வானவியல், பொறியியல், பொதுத்துறை ஆளுமை [Astronomy, Engineering & Administration] போன்ற துறைகளிலும் தெளிவான அறிவியற் கருத்துக்களைக் கொண்டிருந்தனர்.
தற்கால தசம எண்ணிக்கை போன்று [Decimal System] 4000 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் குறியீட்டுச் சின்னங்களில் [Symbols] ஒரு தனித்துவ தசம ஏற்பாடைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அவரது குறியீட்டுச் சின்னங்களையும் அவற்றுக்கு இணையான எண்கள் சிலவற்றையும் கீழே காணலாம்:
எண்: 1 .... ஒற்றைக் கோடு
எண்: 10 .... ஒரு லாடம்
எண்: 100 .... C எழுத்து போல் ஒரு சுருள்
எண்: 1000 .... தாமரை மொட்டு
எண்: 10,000 .... ஒரு விரல்
எண்: 100,000 .... ஒரு தவளை எண்: 1000,000 .... கை உயர்த்திய ஒரு கடவுள்
எகிப்தின் நிபுணர்கள் தயாரித்த இரண்டு கணிதச் சுவடுகள் 4500 ஆண்டுகளுக்கு முன்பாக எகிப்தியர் விருத்தி செய்த வடிவெண்கள் அல்லது எண்ணிக்கைச் சின்னங்கள் எனப்படும் ஹைரோகிலிஃபிக் எண்களைத் [Hieroglyphic Numerals] தமது கணித, வணிகத் துறைகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஹைரோகிலிஃப் முறையில் வடிவங்களும், சின்னங்களும் எழுத்துகளைக் காட்டவும், எண்ணிக்கையைக் கூட்டவும், உச்சரிப்பை ஊட்டவும் உபயோகமாயின. சின்ன மயமான [Symbols] அந்த எண்கள் எகிப்தியரின் கோயில்கள், பிரமிட்கள், கோபுரங்கள், வரலாற்றுத் தூண்கள், குவளைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. எகிப்தியரின் வரலாற்றுப் புகழ் பெற்ற இரண்டு கணிதக் காலச் சுவடுகள் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கிடைத்துள்ளன. முதலாவது சுவடு: ரிந்து பாப்பிரஸ் [Rhind Papyrus]. இரண்டாவது சுவடு: மாஸ்கோ பாப்பிரஸ் [Moscow Papyrus]. பாபிரஸ் என்பது நமது ஓலைச் சுவடிக்கு ஒப்பான எகிப்தின் ஓரிலைச் சுவடு.
முதற் சுவடை ஸ்காட்லாந்தின் எகிப்தியவாதி ஹென்ரி ரிந்து [Egyptologist: Henry Rhind] 1858 ஆம் ஆண்டில் லக்ஸர் நகரில் [Luxor (Egypt)] விலை கொடுத்து வாங்கியதாகத் தெரிகிறது. அது இப்போது பிரிட்டிஷ் கண்காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. கி.மு.1650 ஆம் ஆண்டில் சுருட்டிய 6 மீடர் நீளம், 3 செ.மீ அகலம் உள்ள பாபிரஸ் இலைப் பட்டையில் அது எழுதப்பட்டது. மூலமான ஆதிச்சுவடு அதற்கும் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கி.மு.1850 இல் ஆக்கப் பட்டதாக அறியப்படுகிறது. ரிந்து சுவடியில் எகிப்திய கணித ஞானிகளின் 87 கணிதப் பிரச்சனைகளைத் தீர்க்கும் முறைகள் விளக்கப் படுகின்றன. அதை மூலச் சுவடியிலிருந்து முதலில் பிரதி எடுத்த எகிப்த் கணித மேதை, ஆமெஸ் [Ahmes] என்பவர்.
இரண்டாவது மாஸ்கோ சுவடும் ஏறக்குறைய அதே காலத்தில் ஆக்கப் பட்டது. மாஸ்கோ சுவடியைப் பிரதி எடுத்த அல்லது ஆக்கிய கணித மேதை யாரென்று எழுதப் படவில்லை. அதை விலை கொடுத்து வாங்கிய ரஷ்ய அறிஞர் பெயர் கொலெனிச்செவ் [Golenischev] என்பதால் அதை கொலெனிச்செவ் பாப்பிரஸ் என்று பெயர் அளிக்கப் பட்டது. இப்போது அச்சுவடி மாஸ்கோ நுண்கலைக் காட்சி மாளிகையில் வைக்கப் பட்டுள்ளது. மாஸ்கோ சுவடியில் 25 கணிதப் பிரச்சனைகளின் தீர்ப்புகள் எழுதப் பட்டுள்ளன. இந்த இரண்டு சுவடுகளிலும் பொதுவாகச் செய்முறைக் கணிதத் தீர்ப்புகளே பயிற்சிக்காக விளக்கப் படுகின்றன. ரிந்து சுவடியில் 87 கணக்குகளில் 81 எண்ணிக்கை, பின்னங்கள் விடையாக வருபவை. சில கணக்குகளுக்குத் சமன்பாடுகள் [Equations] தேவைப்படுகின்றன. வேறு சில கணக்குகளுக்கு வரைகோண முறைகளைப் [Geometry] பயன்படுத்த வேண்டியது. சில கணக்குகளில் விட்டம் மட்டும் தரப்பட்டு, வட்டத்தின் பரப்பளவு என்ன வென்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது. வட்டத்தின் பரப்பு = பைx விட்டத்தின் சதுரம்/4 [Pi x DxD/4]. Pi =22/7
கூம்பற்ற பிரமிட் (Trunk Pyramid) கொள்ளளவுக் கணிப்பு
கிரேக்க கணித மேதை பித்தகோரஸின் நேர்கோண முக்கோண விதியைப் [Pythagoras Theorem (கி.மு.570-500)] பலவழிகளில் எகிப்தியர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தி உள்ளனர். பிரமிட் அமைப்பின் உட்பகுதி வரை முறைகள், பரப்பளவுகள், கொள்ளளவுகள் [Areas & Volumes] அனைத்தும் பித்தகோரஸின் நியதியை உபயோகித்து கணக்கிடப் பட்டவை. பிரமிட்களின் உள்ளே ஃபாரோ மன்னரை அடக்கம் செய்த புதை மாளிகைகள் [Kings Chambers] பித்தகோரியன் முக்கோணத்தில் [3-4-5 (3^2+4^2=5^2)] அமைக்கப் பட்டவை.
பிரமிட் ஒன்றின் உயரமும் (h), பீடத்தின் சதுரப் பக்கத்தின் அளவும் (a) முடிவு செய்யப் பட்டால், அதற்கு வேண்டிய மொத்தக் கற்கள் எத்தனை என்று எகிப்தியர் காண முடிந்தது. பிரமிட் கொள்ளளவு = 1/3 [hxaxa] or 1/3 [ha^2]. அதுபோல் கூம்பற்ற பிரமிடின் [Trunk Pyramid] கொள்ளளவையும் கணிக்கலாம். கூம்பின் பீடச் சதுரப் பக்கம் (b), மேற் சதுரப் பக்கம் (a), மொட்டைப் பிரமிட் உயரம் (h) என்று ஒருவர் வைத்துக் கொண்டால், கூம்பற்ற பிரமிட் கொள்ளளவு = 1/3[h] x [b^2+ab+a^2]. கோடிக் கணக்கான பாறைக் கற்களின் எண்ணிக்கையை அறிய, வெட்டி எடுத்துச் சீராய்ச் செதுக்கப்படும் ஒரு பாறாங்கல் பரிமாணம் (நீளம், அகலம், உயரம்) தெரிந்தால் போது மானது. கணிக்கப் பட்ட பிரமிட் கொள்ளளவைப் பாறாங்கல் ஒன்றின் கொள்ளளவால் வகுத்தால், மொத்தக் கற்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.
இட்டவர் முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' 0 மறுமொழிகள்
கோயில் நான்மணிமாலை
தமிழ் விரிவுரையாளர்,
மா. மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை.
கோயில் என்ற பொதுவழக்கு சிதம்பரம் கோயிலைக் குறிப்பதாகும். கோயில்
நான்மணி மாலை என்ற பட்டினத்துப் பிள்ளையாரின் பனுவல் சிதம்பரம்
திருக்கோயிலை முன்னிறுத்திப் பாடப்பட்டுள்ளது.
இது நாற்பது பாடல்கள், நான்கு வகை யாப்பு, நான்குவகை கருப்பொருள்
என்ற நிலையில் நன்நான்காகக் கோர்க்கப் பெற்றுள்ளது. மாலை என்ற
வடிவிற்கு ஏற்ப அகப்பொருள்சுவையும் இதனுள் இணைக்கப் பட்டுள்ளது.
பட்டினத்துப் பிள்ளையார் இதனுள் பயன்படுத்தியுள்ள எளிமையான தத்துவக் கருத்துக்களால் இப்பனுவல் சிறப்பு மிக்க ஒன்றாக விளங்குகின்றது.
இந்நூல் வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்ற நான்குவகையான பொதுயாப்புகளில் பாடப்பட்டுள்ளது. இணைகுறள் ஆசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா ஆகிய இரண்டும் ஆசிரியப்பாவின் வகைகளாக வந்து சில இடங்களில் அமைந்துள்ளன.
இந்நூலுள் நான்கு வகைக் கருப்பொருள்கள் பயன்படுத்தப் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு ; 1. சிவபெருமானின் பெருமைகள், 2. சிவபெருமானின் ஆடல், 3. அகக் கருத்துகள், 4. தத்துவக் கருத்துகள். இந்நான்கைப் பற்றிய கருத்துகளை விளக்கு
வதாக இக்கட்டுரை அமைகிறது.
சிவபெருமானின் பெருமைகள் சிவபெருமானின் பெருமைகள் என்ற கருத்தின் அடிப்படையில் சிவபெருமானின் உடலழகு, பத்து அங்கங்கள், திருவிளையாடல்கள். சிவன் இருக்கும் இடம் ஆகியன போற்றப் பெறுகின்றன. இவை இந்நூலின் பாடல்
களில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. பட்டினத்தடிகள் சிவபெருமானின் புற
அழகைப் பாடல்கள்தோறும் கூறி வியக்கின்றார்.
அவற்றில் சில பகுதிகள் பின்வருகின்றன.
''சிவபெருமானின் திருவடி ஒன்று மட்டுமே பாதாள உலகின் கீழ் நீள்வது. திருமுடி அண்டங்கள் எல்லாம் கடந்து நிறைவது. திருநீறு நிறைந்த எட்டு தோள்களும் எட்டு திசைகள் கடந்தவை. ''(பா.6) என்பன பட்டினத்தடிகள் காட்டும் சிவபெருமானின் தோற்றப் பொலிவுகள் ஆகும்.
'வாமத்தி¢லே ஒரு மானை தரித்து ஒரு மானை வைத்தாய்' (பா.14) என்று மான் ஏந்தியமையையும் , பார்வதியை ஒரு பகுதி ஏற்றியமையையும் அவர் ஒரு சேரப் பாடுகிறார். 'அலங்கல் மதியுடன் அணிந்த பொதியவிழ் சடிலத்துப் பையரவு அணிந்த தெய்வநாயக' என்ற தொடரின் மூலம் சிவபெருமானின் பாம்பணியும் தலையணியும் விளக்கம் பெறுகின்றன. இவை அழகிற்குச் சான்றுகள்.
சிவபெருமான் அணிகின்ற கொன்றைமாலையும் வெண்கொற்றக்குடையும், வெற்றிதரும் விடைக்கொடியும், ஒலிசெய்யும் உடுக்கை என்னும் இசைக்கருவியும், நான்மறைகள் என்று கூறத்தக்க குதிரைகளும், ஆயிரம் ஆயிரம் யானைகளும், மேருமலையும், தில்லைத் திருப்பதியும், பதினாயிரம் திருப்பெயர்களும் போன்ற பத்து அங்கங்களைப் பெருமை கொள்ள ஏற்றுக் கொண்டவர்.
அவரின் திருமண நாளில் தேவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது எழுதப்பட்ட பெயரேட்டில் என் பெயரையும் சேர்த்துக் கொள்ள நான் உன்னிடம் வேண்டுகின்றேன். இவ்வாறு செய்தால் நுளம்பும்(கொசுவும்) கருடனாகி விடும் என்ற விதிக்கு ஏற்ப நானும் அடியவரில் ஒருவராவேன்(பா.4) என்று பட்டினத்துப் பிள்ளை வேண்டுகோள் வைக்கிறார். இவ்வேண்டுகோளின் அடிப்படையில் சிவபெருமானின் பத்து அங்கங்களையும் தொண்டர்கள் அறிந்து கொள்ள முடிகின்றது.
சிவபெருமானின் திருவிளையாடல்கள் இம்மாலையின் இறுதிப்பாடலில் தௌ¤வாக்கப் பெற்றுள்ளன. திருமாலுக்குச் சக்கரம்¢ அருளியமை, குபேரனுக்குச் சங்கநிதி பதும நிதி அளித்தமை, மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் அளித்தமை, தேவர்க்காக கொடிய நஞ்சு உண்டமை, மன்மதனை எரித்தமை, தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை அழித்தமை, அருச்சுணனுக்கு ஆயுதம் வழங்கியமை, இராவணனின் செருக்கை அடக்கியமை, சலந்தரனை அழித்தமை, சண்டீசருக்குப் பதம் அளித்தமை, மகனான சீராள தேவனை அரிந்த சிறுத்தொண்டருக்கு அருளியமை, விளக்கைத் தூண்டிய எலிக்கு சக்கரவர்த்தி பதம் தந்தமை, அடி முடி தேட விட்டமை முதலான பல திருவிளையாடல்கள் இப்பாடலில் அட்டவணைப் படுத்தப் பெற்றுள்ளன(பா.40).
இவை அனைத்தும் புராணச் செய்திகளும், பெரியபுராணச் செய்திளும் ஆகும். அறிந்த இந்த செய்திகள் தவிர பலரும் அறியாத விளையாடல்களையும் பட்டினத்தடிகள் இப்பனுவலி¢ல் பொதிந்து வைத்துள்ளார்.
அவ்வகையில் உலகம் அழியும் காலத்தில் உயிர்களைக் காக்கவும், கடல் நிலம் போன்ற பகுதிகளைக் காக்கவும் சேல் மீன் ஆகி உலகை உண்ட திருவிளையாடல் புதிய ஒன்றாகும்.
சிவன் இனிது அமரும் இடம் தில்லையம்பதியாகும். இங்கு அவன் நடனக் கோலத்தில் விளங்குகிறான். தில்லையில் உள்ள இறைவன் 'பெரியதிற் பெரியை
என்றும் அன்றே, சிறியதிற் சிறியை என்றும் அன்றே' என்னும் அளவில் என்றும் இருப்பவன். ''செய்யவாய், மையமர் கண்டம், நெற்றியில் ஒற்றை நாட்டம், எடுத்த
பாதம், தடுத்த செங்கை, புள்ளி ஆடை, நாடகம் மன்றுள் ஆடுபவன் ''(பா.12) என்று
தில்லை இறைவன் இவரால் சிறப்பிக்கப் படுகிறான்.
இவ்வாறு இறைவர் பெருமை ஒரு கருப் பொருளாக நின்று இப்பனுவல் சிறக்கிறது.சிவபெருமானின் ஆடல் சொல், பொருள் இரண்டின் அளவையும் கடந்து தம்மை மறந்து சிவனை நினைப்பவர் மனத்திலும் தி¢ல்லையிலும் ஆடல் புரியக் கூடியவர் நடராசப் பெருமான்(பா.4). இவரின் நடத்தால் ஏழு உலகமும் உயிர் பெறுகிறது (பா. 7). இவர் அம்பலத்தே நின்று கூத்து உகந்தவர் (பா. 10). '' மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்ப அம்மன்றுக் கெல்லாம் அணியாய் அருள் நடம் ஆடும் பிரான் இவர் '' (பா.26) என்ற பட்டினத்துப் பிள்ளையாரின் குறிப்புரைகள் கொண்டு சிவபெருமானின் ஆடலை அறிந்து அருள் பெறமுடிகிறது.
அகக் கருத்துகள் சிவபெருமானுடைய தேர் வரும்போதே பெண்களின் கைகளில் இருந்த வளையல்கள் கழறத் தொடங்கிவிடும்( பா. 17). வாடைக்காற்றும் மேகமும் மழையும் கலந்து வருகின்றன. இதன்மூலம் வரும் சிவபெருமான் மீது கொண்ட காதல் வருத்தத்தைத் தலைவி எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறாள் (பா. 22) ஊர் அலர் தூற்ற, வாடைக் காற்று வருத்த, பசப்பு நோய் வர இவ்வாறு பற்பலத் துன்பங்களைப் பெற்ற என்மகளைத் தேற்ற உன் கொன்றை மாலையைத் தந்தருள்க (பா.31) என்ற வகையில் பல அகக் கருத்துள்ள பாடல்களை இப்பனுவல் பெற்றுள்ளது.
தத்துவக் கருத்துகள் எளிமையான தத்துவக் கருத்துக்களைப் பாடுவதில் வல்லவர் பட்டினத்துப் பிள்ளையார். இப்பனுவலிலும் பல தத்துவக் கருத்துகளை எளிமையாகச் சொல்லிச் செல்கின்றார்.
'' பேசு வாழி பேசு வாழி கண்டன மறையும் உண்டன மலமாம் பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும் பிறந்தன இறக்கும் பெரியன சிறக்கும் ஒன்றொன்று ஒருவழி நில்லா அன்றியும்''(பா. 28) என்று உலகின் இயல்பை எளிய தத்துவங்களால் எடுத்துரைக்கிறார் பட்டினத்தடிகள்.உயிரின் இயல்பைத் தத்துவப் பின்னணியோடு பின்வரும் பாடலடிகள் உணர்த்துகின்றன.
''குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப் பூட்டி ஐவர் ஐந்திடத்து ஈர்ப்ப நொய்தில் பிறந்தாங்கு இறந்தும் இறந்தாங்கு பிறந்தும் கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும் கொப்புட் செய்கை ஒப்பின் மின்போல் உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்'' (பா. 20)என்ற இவ்வடிகளில் வரும் ஐந்து புலனாசையினால் அழியும் பிறப்பும் மீளவும் இறப்பும் மீளவும் பிறப்பும் என்பதான சுழற்சியில் சிக்கும் மனித வாழ்வைப் பட்டினத்தடிகள் வெறுக்கின்றார்.
''மக்கள் யாக்கைக்கு நினைப்பினும் கடிதே இளமை நீக்கம் அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி அதனினும் கடிதே கதுமென மரணம் வானாள் பருகி உடம்பை வறிதாக்கி நாணாள் பயின்ற நல்காகக் கூற்றம் இனைண தன்மையது இதுவே'' என யமனின் இயல்பைக் கூறுகிறார் பட்டினத்தடிகள்.
சுருங்கச் சொல்லி தத்துவங்களை விளங்க வைக்கும் சீர்மை இவரின் இலக்கியங்களில் காணத்தகும் சிறப்பாகும். அவ்வழியில் கோயில் நான்மணிமாலையும் இனிய தத்துவக் கருத்துகளை வழங்கிச் சிறக்கின்றது.
--~--~---------~--~----~------------~-------~--~----~
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர். -~----------~----~----~----~------~----~------~--~---
இட்டவர் முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' 2 மறுமொழிகள்