காவிரி தோன்றுமிடம் குடகுமலை. காவிரி இரண்டாகப் பிரியுமிடம் 'முக்கொம்பு'. பிரிந்த காவிரி மீண்டும் கூடுமிடம் 'கல்லணை'. கல்லணையிலிருந்து ஐந்து கிளைகளாகப் பிரிந்து பல பெயர்களைக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது, காவிரி. காவிரியின் முதற்பெயர் பொன்னி. பின்பு காவிரி எனப்பெயர் பெற்றது. கல்லனைக்கு அருகில் காவிரி நதித்தீவில் அமைந்துள்ளது, திருவானைக் கோயில்.
தத்துவம்: குடகுமலை பிரம்ம நிலையைக் குறிக்கும். பிரம்மம் என்பது ஒன்றே. முக்கொம்பில் இரண்டாகப் பிரிவது ஒன்று இடகலை. மற்றொன்று பிங்கலை. நடுவிலுள்ள தீவு சுழிமுனை. கல்லணையில் ஐந்தாகப் பிரிவது ஞானேந்திரியங்கள், ஐந்து. இவை நம்மை நோக்கிச் செலுத்துவதால் ஆற்றோடு போகாது நாம் எதிர் நீச்சலிட்டு மேலே சென்று பிரம்மத்துடன் கலக்க வேண்டும் என்பதை விளக்குவதே திருவானைக் கோயில்.
நாம் உள்ளே இழுக்கும் போது பன்னிரண்டு அங்குலம் உள்ளே செல்கிறது. மூச்சை வெளியே விடும்போது நான்கு அங்குலம் வெளியேறுகிறது. நான்கு அங்குலம் வீணாகிறது. ஒவ்வொருமுறையும் நான்கு அங்குலக் காற்று வீணாவதனால், ஆயுள் குறைவு ஏற்படுகிறது. நான்கு அங்குலம் வெளியேறி வீணாவதைத்தடுத்தால் ஆயுள் கூடும் என்பதால், வீணாவதைத் தடுத்து அது உடலோடு சேர்க்கச் சொல்லிக் காட்டுவதுதான் நான்குகால் மண்டபம்.
முதல் கோபுரத்தைக் கடந்து இரண்டாவது கோபுரம் நுழையும் போது ஒரு படி இறங்கிச் செல்லவேண்டும். அது, நமது மனம் யோக நிலையில் கீழிறங்கிச் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கும். அக்கோபுரத்தின் இரண்டு பக்கமும் வினாயகர் சுப்பிரமணியர் உள்ளனர்.
மூன்றாவது கோபுரம் கடந்து ஒருபடி இறங்கியதும் வலப்புறம் சுந்தரேசர், மீனாட்சி சன்னதி தனித்தனியே உள்ளது. இடப்புறம் சம்புகேசர், அகிலாண்ட நாயகி சன்னதி தனித்தனியே உள்ளது. அடுத்து ஊஞ்சல் மண்டபம் உள்ளது. வடபகுதியில் ஒரு தூணில் காளை, யானை சிற்பம் உள்ளன. ஒரே நேரத்தில் அவை இரண்டையும் காண முடியாது. ஏதேனும் ஒன்றைத்தான் காண முடியும். காளையைக் காணும் போது யானை தெரியாது. யானையைக் காணும் போது காளையைக் காண முடியாது.
தெற்குப் பக்கத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் லிங்கவடிவில் உள்ளனர். மூவரும் ஒருவரே என்பது இதன் கருத்து.
கோவில்கள் எல்லாம் தரை மட்டத்திற்கு மேல் படிப்படியாக உயர்ந்து செல்வதுபோல் இருக்கும். ஆனால், திருவானைக்காவல் சிவன் நீரில் இருக்கிறது. இக்கோயில் படிகளில் இறங்கிச் சென்றால் காவிரி நீர் மட்டத்திற்குச் சென்று விடலாம். அங்கே லிங்கம் இருக்கிறது. மழைக்காலங்களில் லிங்கம் நீரில் மூழ்கிவிடும். ஆகவே, இக்கோயில், ' சுவாதிட்டானம்' கோயில் என்பர்.
அது ஏன்? நம் உடலில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும் பகுதி சுவாதிட்டானம் ஆகும்.
ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சம் இருக்கும். அதுபோல், இக்கோயிலில் இருக்கும் தலவிருட்சம் 'வெண்நாவல்' மரம். அது, ஜெம்பு மகரிஷி என்னும் முனிவர் அடக்கமான இடத்தில், சுமார் 500 ஆண்டுகளாக உள்ளது! என்பர். யோகம் செய்பவர்கள், தங்கள் உடலில் ஏற்படுகின்ற வெப்பத்தைத் தணிக்க வில்வம் சாப்பிட வேண்டும் என்பதைக் குறிக்க இங்கே விலவம் தலமரமாக இருக்கிறது.
இக்கோயில், சோழன் கோச் செங்கண்ணனால் கட்டப்பட்டது. இக்கொயிலுள் யானை நுழைய முடியாத அளவுக்கு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மனம் என்பது மதம்கொண்ட யானை போன்றது. இக்கோயில் அமைந்துள்ள முறையில் வழிபட்டால் மனம் அடங்கிவிடும் என்பது பொருள்.
இக்கொயிலில் முக்கிய கோபுரங்கள் ஐந்து. அவை 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைக் குறிக்கிறது. உயிர்க்குறிய குணங்கள் ஐந்து. அவை, அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் ஆகியவை. இவற்றையும் இக்கோபுரங்கள் குறிக்கின்றன.
அகிலாண்டேஸ்வரி சன்னதிக்குச் செல்லும் வழியில் 12 தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. இது சூரிய கலையைக் குறிக்கிறது. அடுத்து, 16 தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. இது, சந்திர கலையைக் குறிக்கிறது.
அம்மன் சன்னதிக்கு முன் உள்ள இரு கதவுகளில் ஒவ்வொரு கதவிலும் 48 + 48 = 96 குமிழ்கள் உள்ளன. அவை உடம்பிலுள்ள 96 தத்துவங்களைக் குறிக்கின்றன. யோகம் செய்பவர் 96 தத்துவங்களைக் கடந்து செல்லவேண்டும் என்பதற்கு இவை அடையாளமாக விளங்குகின்றன.
யோகமும் வாகனமும்
காளை வாகனம். இது தருமத்தைக் குறிக்கும். உழைப்பின் சின்னம்.
சூரிய பிரபை வாகனம். அக இருளை நீக்கும் என்பதாகும்.
சந்திர பிரபை வாகனம். குளிர்ச்சியைக் குறிக்கும்.
அன்ன வாகனம். பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும் நீரை நீக்கிவிட்டு தண்ணீரை அருந்தும் அன்னத்தைப் போல, உலக பந்தங்களுக்கு அடிமையாகாது யோகத்தினால் கிடைக்கும் இன்பமாகிய அமுதப்பாலை மட்டுமே அருந்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கைலாச வாகனம். இராவணன் சாமகானம் (பிராணாயாம்ம்) பாடி இறைவன் அருளைப் பெற்றான். அது போல் நாமும் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பூதவாகனம். யோகத்தினால் உலகப்பற்று நடுங்கும் என்பதாகும்.
சர்ப்பவாகன. குண்டலினி சக்தியால் யோக நிலையில் சித்தி அடைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
யானை வாகனம். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அடக்கினால், அகப்பற்றும் புறப்பற்றும் நீங்கும் என்பதைக் குறிக்கும்.
சிம்ம வாகனம். ஆணவத்தை அடக்கு என்பதைக் குறிக்கிறது.
குதிரை வாகனம். பஞ்ச இந்திரியங்களின் (பூதங்கள்) வேகத்தைக் குறிக்கிறது. குதிரையை அடக்குவது போல புலன்களை அடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பல்லக்கு. மனிதர்கள் நன்னிலை அடைய வேண்டுமானால், மனதை அலைய விடக்கூடாது என்பதைக் குறிக்கிறது.
தெப்பம். நீரில் மிதப்பது போல வாழ்க்கையின் கரை தெரியாமல் தத்தளிப்பவர்கள் பிராணாயாமம் செய்தால், கரை சேர்வார்கள் என்பதைக் குறிக்கிறது.
தேர். உலகத்தையே அடக்கிக் காட்டுகிறது. அதில் சிற்றின்ப பேரின்ப துன்பக் காட்சிகள் சிற்பமாக இருக்கும். புருவமாகிய தேரில் ஏறினால், இறைவனைக் காணலாம். புருவமே பத்தாவது வாசலாகும். இந்த வாசலைத் திறக்க யோக அக்னியாகும். இந்த சாவியை உடையவரே இறைவன் காட்சி அளிக்கும் வாசலைத் திறக்க முடியும்.
பலி பீடத்திலிருந்து முருகன் சன்னதிக்குச் செல்லும் வழியில், வலப்புறம் நான்கு தூண்கள். ஒவ்வொரு தூணிலும் பேரின்பத்தை உண்டு பண்ணக்கூடிய சிற்பங்கள். சிற்றின்பச் சிற்பங்கள். விந்து தத்துவத்தை மேல் நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கும் முறையில் அமைந்துள்ளது. விந்துவை மேல் நிலைக்குக் கொண்டுவருபவன் தெய்வமாகலாம்! என்று விளக்கப்பட்டுள்ளது. தூண்களுக்கு மேல் 12 இராசிகள் அமைந்துள்ளன.
இதன் விளக்கமாக, ஓக சாதகர் மும்மலத்தையும் கடந்து முதுகுத் தண்டின் வழியாக சுழிமுனை நாடி வழியாக பிராண சத்தியை மேலேற்றி உச்சியை அடைந்தால், அதன் பின் நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று பொருள்.
அடுத்து, பலிபீடம். அது, மும்மலத்தை பலியிடவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கொடிமரம், முதுகுத் தண்டைக் குறிக்கும். கொடிக்கம்பத்தில் 32 அங்கங்கள் உள்ளன. முதுகுத் தண்டிலும் 32 பகுதிகள் உள்ளன.
முதுகுத் தண்டினுள் உள்ள துவாரத்தில் ஈக முறையில் உயிர்மூச்சைச் செலுத்தினால், மரணமற்ற வாழ்வு கிட்டும்.
ஆறுநிலைகளைக் கடந்து ஏழாவது நிலையை அடைந்தால் தெய்வ நிலையை அடையலாம் என்பதைக் குறிக்க, ஆறு படிகளைக் கடந்து ஏழாவது நிலையில் சம்புகேசர் உள்ளார்.
சம்புகேசர் முன்பு ஒன்பது துவாரங்களைக் கொண்ட கல் சன்னல் உள்ளது. ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. இந்த ஒன்பது துவாரங்களும் ஒன்பது தீர்த்தங்களும் நம் உடலில் உள்ளன.
ஒன்பது துவாரங்களின் வழியாக வெளியேறும் உயிர்காற்றை (பிராணன்) வெளியேறாமல் நிறுத்தினால், நாம் பறக்க முடியும். இவ்வாறு பிராண சத்தியை நிறுத்தி காற்றுபோல வானில் பறந்து செல்வதைக் குறிக்கிறது, ஆஞ்சநேயர்.
இந்த நிலையை அடைய நடுவிடமாகிய ஆக்ஞை பூட்டிக் கிடக்கிறது. அதைத் திறந்துவிட்டால், பல அதிசயங்களைக் காணலாம்.