.**மார்கழி நோன்பு** **மார்கழி - தை.**

**15-12-06 -இல் மார்கழி நோன்பு தொடக்கம் **

**உலகின் வட முனையில் இருப்பவர்கள் நம்மைப் போல பகலெல்லாம் வெயிலிலும் ,
இரவெல்லாம் இருட்டிலும் வாழ்வதில்லை. **

**அவர்களுக்குப் பகலென்பது ஆறு மாதமாகவும்,**

**இரவென்பது ஆறுமாதமாகவும் நீண்டுடிருக்கும். **

**சூரியன் வடக்கிருந்து தெற்கேபோவது போலவும்,
பின் ஆறு திங்கள் ஆனதும் தெற்கே இருந்து வடக்கே
திரும்பிப் போவது போலவும் நமக்குத் தோன்றும்**

**வடக்கு நோக்கிப்போகும்
*ஆறு திங்களைத் தட்சணாயனம்
*எனவும் வழங்குகிறது.**

**வட முனையில் தட்சணாயனமே இரவுக் காலம் **

**உத்தராயணமே பகற்காலம்.**

**தை மாதத்திலிருந்து ஆறு திங்களை உத்தாரயணம் என்றும் ,
**ஆடியிலிருந்து ஆறு திங்களைத் தட்சணாயனம் என்றும்
**கூறுகிறோம்.**

**புராணங்கள் தேவர்களுக்கு ஓராண்டு ஒருநாள் என்றும் ,

**உத்தராயணமே பகல் என்றும்,தட்சணாயனமே இரவென்றும் கூறும்.

**இந்த நிலையில் தைமாதத்திற்கு முந்திய மாதம் செவ்வானக் காலமாகும்.

**அந்த நிலையில் மார்கழி மாதம்,
*இருளில் நீண்ட காலம் புழுங்கியவர்களுக்குத்
*துன்பமெல்லாம் நீங்கிப் பொழுது விடியும் காலமாக
*இன்பமூட்டுவது இயல்பே. **

^^வட முனையில் வாழ்ந்த வாழ்வின் நினைவே அந்த இனத்தின்^^
**நினைவில் தங்கிவிட அதனையே தேவ ஆண்டாகப் புராணம் பேசியிருக்கலாம்
**எனக் கருதுவாரும் உண்டு. நாள் விடிவதென்றால் நம் கணக்கில்
**ஆண்டு பிறப்பதேயாகும்.**

**திருவாதிரை ஒரு காலத்தில் சூரியராசியின் தொடக்கமாக இருந்ததாம்.**

**பூமியின் சுழற்சியின் பயனாக இவ்வாறு தொடங்குமிடம் பல நூற்றாண்டுகளில்
**மெல்ல மெல்ல மாறி வருமாம்.

திருவாதிரையிலிருந்து கார்த்திகை முதலாக **மாறியிருந்த காலமும்,
அசுவினி முதலாக மாறி இருந்த காலமும் உண்டு. **

**இப்போது பூரட்டாதி முதலாக உளது என்பர்.

திருவாதிரை முதலாக **இருந்த காலத்தில் வேதம் எழுதப்பட்டது என்பது திலகரது கொள்கை.

**கார்த்திகை மாதமே ஆண்டின் முதல் மாதமாக இருந்ததும் உண்டு.

**அது மாறிப்போன பின்னும் கூட மக்கள் அதனையே முதலாக **வைத்து எண்ணி வந்தனர்.**
** ஞான சம்பந்தரது கோளாறு பதிகத்தில் வழி நடைக்கு காத
நட்சத்திரங்களைக் குறிப்பிடும் போது :**

** '' ஒன்பதோடு ஒன்றோடு ஏழுபதினெட்டோடு**
ஆறும் உடனாய நாள்கள்..." **

என்று கிருத்திகையை முதலாக வைத்தே எண்ணுகிறார் என்பர்.**

**ஆனால் அவருக்கு முன் காலத்திலேயே அசுவனி முதலாக**எண்ணப்பட்டு விட்டது.

வட நாட்டில் வருடப்பிறப்பு தீபாவளியன்று **பிறப்பது இதனை ஒட்டியே என்று கூறப்படுகிறது.**

**<> மார்கழி பனி பொலிவு நாளையும் உண்டு <>**



**'' மார்கழி '' வட நூல் குறிப்பு"**.

*மார்கழித் திங்களைச் சிறப்பித்துப் பேசும் வழக்கத்தை வடமொழிநூல்களிலும் காணலாம்.

''மாதங்களில் நான் மார்கழி மாதம் ஆகின்றேன் ''

என்று கண்ணன் கீதையில்கூறுகிறான்.

வால்மீகியும்,

பஞ்சவடிவில் ராமர் இருக்கும்போது,இலக்குமணன்,
ராமனுக்குவிருப்பமான பனிக்காலம் வந்ததென்றும்,
இந்த மார்கழி மாதத்தினாலேயே ஆண்டுமுழுவதும்
அணி பெறுகிறதென்றும் ராமனிடம் கூறிகிறான்.

பெண்கள் அழகைப் பெற விரும்பினால் செய்யும்
நோன்பு ஒன்றை விஷ்ணுதருமோத்த புராணம் கூறுகிறது.

இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும்,
அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும்
அந்தப் புராணம் கூறுகிறது.

அம்பா ஆடல் என்பதற்கும் உலகத் தாயின் வடிவைப் பாவையாக
அமைத்து வழிபடுவது என்று பொருள் கூறலாம் என்று காலம் சென்ற
மு. ராகவையங்கர் கூறுகிறார்.

பாகவதம் மார்கழி மாதத்தில்ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு,
அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள்என்றும் கூறுகிறது.

இந்த வடநூற் குறிப்புகள் தென்னாட்டு தொடர்பால் எழுந்தன என்று கூறலாம்.



*பாவை நோன்பு :

*கார்த்தியானி விரதத்தைப் ''பாவை நோன்பு'' என்பதினால் ' எம்பாவாய் 'எனப் பாவையை நோக்கி முதலில் பாடிய பாடல்கள் 'ஏலோர் எம்பாவாய்'என்ற தொடர் ஒவ்வொரு பாட்டிலும் முடிவாக வருகிறது.

அவியுணவு உண்ணுதலைப்பற்றி வடமொழி நூல்கள் கூறுகிறது.

ஆண்டாளும் ,



'' பாலுண்ணோம் நெய்யுண்ணோம்
கோல அணிகலெல்லாம் பூணோம் ''

-- என்று கூறிகிறாள்.

இதிலிருந்து இந்த நோன்பின் கடுமை நமக்கு விளங்குகிறது.

அது மட்டுமல்லாது அறம்செய்தலையும் வலியுறுத்துகிறது.

ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்டவேண்டுமெனப் பாடுகிறார்.

நோன்பு முடிந்த பின் எல்லா அணிகளையும் அணிவதோடுநெய் ஒழுக சிறந்த உணவை உண்ணுவதனையும் குறிப்பிடுகிறது.