தமிழ் தொன்மையானது; தமிழர் தம் ஒழுக்கம் அதனினும் தொன்மையானது". தமிழில் தோன்றிய இலக்கியம் அனைத்தும் ஒழுக்கத்தை உரைக்கக் கூடியவை. அதேபோல், தமிழ் மொழியிலுள்ள இலக்கணங்கள் மொழி ஒழுக்கத்தையும் வாழ்க்கை ஒழுக்கத்தையும் உரைக்கத் தோன்றியவையே.
ஒழுக்கம் என்பது நாகரிகம் தோன்றிய காலத்துக்கும் முந்தியது! ஒழுக்கத்தின் தேவையை உணர்ந்து வகுக்கப் பெற்றவையே நீதியும் நெறி முறையும். ஒழுக்கத்தை வலியுறுத்தும் வள்ளுவம், ' ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ' என்கிறது.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"
ஒழுக்கம் வாழ்விற்குச் சிறப்பைத் தரும்; அதனால், ஒழுக்கம் உயிரைவிடவும் சிறந்ததாக எண்ணிக் காக்கப் படும். இதன் ஒண்மையை உணராதவர் எய்துவர் எய்தாப் பழி! என்று, எச்சரிக்கிறது, தமிழ் மறை.
ஒழுக்கம் இருவகைப் படும்.அவை, 'புறவொழுக்கம் அகவொழுக்கம்' என்பவையாகும். புறவொழுக்கம் நீரினாலும் அகவொழுக்கம் வாய்மையினாலும் காக்கப் படும்.
அகவொழுக்கம் மனஞ் சார்ந்ததாகவும், புறவொழுக்கம் உடல் சார்ந்த தாகவும் கருதுவர். உடலாலும் உள்ளத்தாலும் ஒழுக்கத்தை ஒழுகினால், வாழ்வில் துன்பம், துயரம் என்பவை தொடராமலிருக்கும். இதுவே, தமிழ்மறை கண்ட வாழ்வியல் உண்மை.
ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க விழைவோர் உடலை ஓம்புகின்ற ஒழுக்க முறைகளைக் கற்றறிதல் நலம். பின்னர், அவ்வொழுக்கத்தை மேற்கொண்டொழு கினால் வாழ்வில் சுகங்கொழிக்கும்.
உடலொழுக்கம்.
தினந்தோரும் உடலை ஓம்புவது தினவொழுக்கம் எனப்படும். தினவொழுக்கத்தில் தவறுகள் நேரின் துன்பமும் துயரமும் தொடரும். தின வொழுக்கத்தைத் தேடாதார் துன்பத்தைத் தேடினார்! எனல் சாலும்.
"நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்"
என்றதனால் அறியலாம்.
உடலுக்கு நோயெனவொன்று எப்போது தோன்றுகிறதென்றால், உண்ட உணவு செரியாமுன் உண்பதனாலும், கழிவை வெளியேற்றாமல் தடுப்பதினாலுமேயாம். அதனாலேயே நோயெனும் துன்பமும் துயரமும் அடைய நேரிடுகிறது.
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்"
ஞாயிறின் உதயத்தைக் காணாமல் தூங்கி எழுவோர் பலர். அவர்களிடம் எப்போதாவது உதயத்தைக் கண்டதுண்டா? என்று கேட்டால், எப்போதோ பார்த்த ஞாபகம்! என்பதுண்டு. அவ்வாறு, காலங்கடந்து துயிலெழாமல் 'வைகறையில் துயில் எழு' என்றார், தமிழ் மூதாட்டி.
உதயத்துக்குமுன் துயிலெழுந்து காலைக் கடனை முடித்து, நீராட வேண்டும். நீராடல் என்றால், ' சனி நீராடு' என்பதைக் குறிப்பிடுவர். அது, சனி தோறும் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்! என்பதைக் குறிப்பதாகும்.
" நாள் இரண்டு; வாரம் இரண்டு;
மாதம் இரண்டு; வருடம் இரண்டு
என்றொரு வழக்கு உடலைப் பேணுதற்காக உரைப்பதுண்டு. நாள் இரண்டு - நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மலம் போக்க வேண்டும்! என்பதையும், வாரம்இரண்டு-வாரம் இரண்டு முறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும்! என்பதையும், மாதம் இரண்டு - மாதம் இரண்டு முறை இல்லற இன்பம் துய்க்க வேண்டும்! என்பதையும், வருடம் இரண்டு - வருடத்திற்கு இரண்டு முறை குடலைச் சுத்தஞ் செய்ய வேண்டும்! என்பதையும் குறிப்பதாகும்.
உணவு:
உயிர் வாழ்வதற்குத் தேவையானது, உணவு. உணவு இல்லையேல் உடலும் உயிரும் இல்லை. அத்தகைய உணவை எவ்வாறு உண்ண வேண்டும்? என்னும் போது, ' அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட' என்று, நாலடி உரைக்கும். ஆறு சுவையுடைய உணவை உண்ணும் போது, முதலில், இனிப்பும் அதன்பின்னர், புளிப்பு, உப்பு, காரம், கசப்பு என்று உண்ட பின்பு இறுதியில், துவர்ப்புச்சுவை உணவை உண்ணவேண்டும். அவ்வாறு உண்பதனால் உடம்பை ஆட்கொண்டிருக்கும் பஞ்சபூதங்கள் சம நிலை பெறும். உணவின் முடிவில் தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ஐயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கும்.
உணவைக் குறிப்பிட்ட காலத்திலேயே உண்ணவேண்டும். எந்த நேரத்திலும் எதையும் உண்ணலாம்! என்னும் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒழுக்கம் என்பது நாகரிகம் தோன்றிய காலத்துக்கும் முந்தியது! ஒழுக்கத்தின் தேவையை உணர்ந்து வகுக்கப் பெற்றவையே நீதியும் நெறி முறையும். ஒழுக்கத்தை வலியுறுத்தும் வள்ளுவம், ' ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ' என்கிறது.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"
ஒழுக்கம் வாழ்விற்குச் சிறப்பைத் தரும்; அதனால், ஒழுக்கம் உயிரைவிடவும் சிறந்ததாக எண்ணிக் காக்கப் படும். இதன் ஒண்மையை உணராதவர் எய்துவர் எய்தாப் பழி! என்று, எச்சரிக்கிறது, தமிழ் மறை.
ஒழுக்கம் இருவகைப் படும்.அவை, 'புறவொழுக்கம் அகவொழுக்கம்' என்பவையாகும். புறவொழுக்கம் நீரினாலும் அகவொழுக்கம் வாய்மையினாலும் காக்கப் படும்.
அகவொழுக்கம் மனஞ் சார்ந்ததாகவும், புறவொழுக்கம் உடல் சார்ந்த தாகவும் கருதுவர். உடலாலும் உள்ளத்தாலும் ஒழுக்கத்தை ஒழுகினால், வாழ்வில் துன்பம், துயரம் என்பவை தொடராமலிருக்கும். இதுவே, தமிழ்மறை கண்ட வாழ்வியல் உண்மை.
ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க விழைவோர் உடலை ஓம்புகின்ற ஒழுக்க முறைகளைக் கற்றறிதல் நலம். பின்னர், அவ்வொழுக்கத்தை மேற்கொண்டொழு கினால் வாழ்வில் சுகங்கொழிக்கும்.
உடலொழுக்கம்.
தினந்தோரும் உடலை ஓம்புவது தினவொழுக்கம் எனப்படும். தினவொழுக்கத்தில் தவறுகள் நேரின் துன்பமும் துயரமும் தொடரும். தின வொழுக்கத்தைத் தேடாதார் துன்பத்தைத் தேடினார்! எனல் சாலும்.
"நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்"
என்றதனால் அறியலாம்.
உடலுக்கு நோயெனவொன்று எப்போது தோன்றுகிறதென்றால், உண்ட உணவு செரியாமுன் உண்பதனாலும், கழிவை வெளியேற்றாமல் தடுப்பதினாலுமேயாம். அதனாலேயே நோயெனும் துன்பமும் துயரமும் அடைய நேரிடுகிறது.
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்"
ஞாயிறின் உதயத்தைக் காணாமல் தூங்கி எழுவோர் பலர். அவர்களிடம் எப்போதாவது உதயத்தைக் கண்டதுண்டா? என்று கேட்டால், எப்போதோ பார்த்த ஞாபகம்! என்பதுண்டு. அவ்வாறு, காலங்கடந்து துயிலெழாமல் 'வைகறையில் துயில் எழு' என்றார், தமிழ் மூதாட்டி.
உதயத்துக்குமுன் துயிலெழுந்து காலைக் கடனை முடித்து, நீராட வேண்டும். நீராடல் என்றால், ' சனி நீராடு' என்பதைக் குறிப்பிடுவர். அது, சனி தோறும் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்! என்பதைக் குறிப்பதாகும்.
" நாள் இரண்டு; வாரம் இரண்டு;
மாதம் இரண்டு; வருடம் இரண்டு
என்றொரு வழக்கு உடலைப் பேணுதற்காக உரைப்பதுண்டு. நாள் இரண்டு - நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மலம் போக்க வேண்டும்! என்பதையும், வாரம்இரண்டு-வாரம் இரண்டு முறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும்! என்பதையும், மாதம் இரண்டு - மாதம் இரண்டு முறை இல்லற இன்பம் துய்க்க வேண்டும்! என்பதையும், வருடம் இரண்டு - வருடத்திற்கு இரண்டு முறை குடலைச் சுத்தஞ் செய்ய வேண்டும்! என்பதையும் குறிப்பதாகும்.
உணவு:
உயிர் வாழ்வதற்குத் தேவையானது, உணவு. உணவு இல்லையேல் உடலும் உயிரும் இல்லை. அத்தகைய உணவை எவ்வாறு உண்ண வேண்டும்? என்னும் போது, ' அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட' என்று, நாலடி உரைக்கும். ஆறு சுவையுடைய உணவை உண்ணும் போது, முதலில், இனிப்பும் அதன்பின்னர், புளிப்பு, உப்பு, காரம், கசப்பு என்று உண்ட பின்பு இறுதியில், துவர்ப்புச்சுவை உணவை உண்ணவேண்டும். அவ்வாறு உண்பதனால் உடம்பை ஆட்கொண்டிருக்கும் பஞ்சபூதங்கள் சம நிலை பெறும். உணவின் முடிவில் தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ஐயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கும்.
உணவைக் குறிப்பிட்ட காலத்திலேயே உண்ணவேண்டும். எந்த நேரத்திலும் எதையும் உண்ணலாம்! என்னும் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஞாயிறு எழும் போதும், ஞாயிறு மறையும் போதும் உணவை உண்ணக் கூடாது. கோபம், துக்கம், கவலை ஆகியவற்றுடனும், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும், வெட்ட வெளியிலும், ஈரத்துணியுடனும், கை, கால், முகம், வாய் கழுவாமலும் உணவு உண்ணக் கூடாது.
உணவின் அளவு தொழிலுக்கேற்ப மாறுபடும். ஆனாலும், ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு உண்ண வேண்டும்? என்பதற்கு விதி விதிக்கப் பட்டுள்ளது. யோகி, துறவி, மெய்ஞ்ஞானி பொன்றோர் ஒரு நாளுக்கு ஒரு போதும், அறிஞர், சிந்தனையாளர், அலுவலர் போன்றோர் இரு போதும், கடின உழைப்புடையோர் முப்போதும் உணவுண்ண வேண்டும்.
உணவுண்ணும் போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால் ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் செல்வத்தை உண்டாக்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால் அழிவை நோக்கிச் செல்ல வைக்கும்.
உணவுண்ண பல்வகை உண்கலங்கள் பயன் படுத்தப் படுகின்றன. அவற்றுள், பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவை சிறந்தவை. அவை, எல்லாராலும் பயன் படுத்த முடிவதில்லை. ஆனால், அவை அனைத்திலும் சிறந்தது, 'வாழை இலை'. வாழையிலையில் உணவுண்டால் உணவைச் சீராகச் செரிமானமடையச் செய்வதுடன் உணவில் குற்றங்கள் ஏதேனும் இருந்தாலும் அவற்றைப் போக்கும். விருந்திற்கும் மருந்திற்கும் வாழையே சிறந்ததாகும்.
உணவை உண்டு முடித்தவுடன் நூறடி தூரம் நடை பயில வேண்டும். தாம்பூலம் தரிப்பது உடலாரோக்கியத்துக்கு உகந்தது.
காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் என்னும் பழக்கம் தொடர வேண்டும். இஞ்சி, சீரணத்தைப் பெருக்கும். சுக்கு, வாயுவை நீக்கும். கடுக்காய், உணவின் கழிவை வெளியேற்றும். இம்மூன்றும் உடலைக் காக்கும் அரணாகவும் மருந்தாகவும் இருக்கும்.
உணவை உண்டு விட்டுச் சும்மா இருந்தால் சுகம் கிடைத்து விடாது! 'சோம்பித் திரியேல்' என்று, மூதாட்டி சொன்ன சொல்லை நினைவில் கொள்ள வேண்டும். 'சும்மா இருப்பதே சுகம்' என்பது வேறு நிலை. அதை நினைத்துக்கொண்டு தூங்கக் கூடாது!
'ஓரடி நடவேன்
ஈரடி கடவேன்
இருந்து உண்ணேன்
படுத்து உறங்கேன்!
என்னும் வாக்கினைக் கவனிக்க வேண்டும்.
'ஓரடி நடவேன்' என்பது, உச்சி வேளையில் தன்னிழல் ஒரு அடியாக இருக்கும் வேளையில் வெளியில் நடக்க மாட்டேன்! என்றும், 'ஈரடி கடவேன்' என்பது, ஈரமான மண்ணில் நடக்க மாட்டேன்! என்றும், 'இருந்து உண்ணேன்' என்பது, முன்னர் உண்ட உணவு வயிற்றில் இருக்கும் போதே உணவு உண்ணமாட்டேன்! என்றும், 'படுத்து உறங்கேன்' உறக்கம் வராமுன்னம் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டு உறங்காமல் கிடக்க மாட்டேன்! என்றும் பொருளைத் தருகிறது. இவ்வழியைக் கடைப் பிடித்தால் மிகுந்த ஆரோக்கிய முடன் இருக்கலாம். அதேபோல்,
'காலை கல்லும்
மாலை புல்லும்
ஆளை வெல்லும்!'
என்னும் மொழியும் கவனிக்கத் தக்கது.
உதயத்துக்கு முன் கல் தரையிலும், ஞாயிறு மறைவுக்குப் பின் புல் தரையிலும் நடை பயின்றால் அது உடல் நலத்துக்கு உகந்தது! என்று, உரைக்கப் பட்டுள்ளது!
உறங்கும் போது, எங்கும் எப்படியும் படுக்கலாம் என்றில்லாமல்,
'தன் ஊர் கிழக்கு
தங்கின ஊர் மேற்கு
வேட்டகம் தெற்கு - உனக்கு
வேண்டா ஊர் வடக்கு!'
என்னும் வழக்கும் கவனிக்கத் தக்கது.
எல்லாருக்கும் உகந்த திசை கிழக்கு! ஆனால், அனைவரும் விரும்பும் திசை மேற்கு! தம்பதியானவர்களுக்குத் திசை தெற்கு! எவருக்கும் எலாத திசை வடக்கு! என்று, பொருள் கொள்வர். எத்திசையில் படுத்து உறங்க வேண்டும்! என்று, அறிவித்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உணவு உட்கொண்ட பின்னர் இளநீர் உட்கொண்டால் வாத பித்த ஐயம் சமமாகும். வரட்சி, வெட்கை ஆகிய சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும். கண் குளிரும். பசியுண்டாகும். இல்லத்தரசி சுகமடைவாள்.
உணவு உண்ட பின்னர் வற்றக் காய்ச்சிய பசுவின் பால் அருந்தினால், கண்ணோய்கள் நாடாமல் நீங்கும். உணவு செரிக்கும். உடல் பெருக்கும். அழகுண்டாகும். சுடு சோற்றில் நெய்விட்டு உணவருந்தினால் தாது வலுவடையும். பசியுண்டாகும். மலம் நீங்கும். உடல் அழகு பெரும்.
பூச்சூடினால் தலை நோய் குணமாகும். வெட்டையும் மேக நோயும் குறையும். கண்ணொளி யுண்டாகும்.
மேற்கண்ட இவையெல்லாம் தமிழ் இலக்கியமும் தமிழ் மருத்துவ நூல்களும் எடுத்துரைப்பன. இயற்கை வாழ்க்கையை மேற்கொண்டிருந்த சான்றோரிடம் தாங்கள் மேற்கொண்டிருக்கும் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்டோம். அதற்கு அவர், கீழ்க்கண்டவாறு கூறினார்.
சுக வாழ்க்கை நெறி
நாங்கள், மேற்கொண்டொழுகும் ஒழுக்கங்களை வழிமுறைகளை எவரெவர் கடைப் பிடிக்கின்றனரோ அவரெல்லாம் நோயில்லாமல் ஆனந்த வாழ்வு வாழ்வர்! என்று, உறுதிபடக் கூறினார். தாங்கள் மேற்கொள்ளும் நெறியாவனவென்றோம்?
நாங்கள்,
மூன்று வேளையும் நன்னீரால் உடலைச் சுத்தஞ் செய்வோம்!
முப்போதும் ஆலம், வேலம் ஆகிய குச்சிகளினால் பல் துலக்குவோம்!
கொடிய பசியேற்படும் வேளையிலும் குறைவான அளவு உணவையே உட்கொள்வோம்! மெதுவாகவே நடப்போம்!
வெந்நீரில் குளிப்போம்!
தினமும் பால், மோர், நெய் சேர்த்த உணவையே உண்போம்!
வெந்நீரையே அருந்துவோம்!
இளம் பெண்ணுடனே உறவு கொள்வோம்!
மாலை வெய்யலில் காய்வோம்!
சந்தனம், சவ்வாது, புனுகு, திருநீறு போன்ற வாசனைத் திரவியங்களைப் பூசுவோம்! இளநீரை அருந்துவோம்!
மலசலம் அடக்க மாட்டோம்!
குளிர்ந்து தெளிந்த நீரைக் குடிப்போம்!
காலை உண்டி கொள்வோம்!
சந்தனம், அகிற்புகை நுகர்வோம்!
பகற்போதில் மனையாளுடன் உறவு கொள்ளோம்!
தென்றலில் அமர்ந்திருப்போம்!
புணர்ச்சிக் காலத்தில் வலது கையைத் தரையில் ஊன்ற மாட்டோம்!
குடிக்கும் தண்ணீரைக் குரைவாகக் குடிப்போம்!
அதிகமாக மோரைக் குடிப்போம்!
தினந்தோரும் ஆடையை மாற்றுவோம்!
அதிக நேரம் நீரில் ஆடமாட்டோம்!
கந்தயானாலும் கசக்கிக் கட்டுவோம்!
கூழானாலும் குளித்துக் குடிப்போம்!
செரிக்கு முன்னே உணவை உண்ண மாட்டோம்!
இரவு வேளையில் தயிரை உண்ணமாட்டோம்!
எங்கள் ஊரில்தான் எமனும் இருக்கின்றார்.
அவர்,
நாங்கள் இருக்கும் திசைக்கே வருவதில்லை! என்று, கூறினார்.
வாழ்க, வாழ்க்கை ஒழுக்க நெறி! வாழ்வோம், ஒழுக்க நெறி வழி!
பசியின்மையைப்போக்கும் - இஞ்சி - தேனில் பிரண்டை
வாழ்க, வாழ்க்கை ஒழுக்க நெறி! வாழ்வோம், ஒழுக்க நெறி வழி!
பசியின்மையைப்போக்கும் - இஞ்சி - தேனில் பிரண்டை
கொத்துமல்லி
திருவாதி - இம்மூன்றும் துவையல்
மலச்சிக்கலைப்போக்கும் - ஆமணக்கு
நீர் பிரம்மி ( அரைக்கீரை )
பொன்னாங்கண்ணி (உடல் வன்மை)
தேற்றான் (கற்பம்)
சிறுகீரை (புத்தி கூர்மை)
மூட்டுவலியைக் குணப்படுத்தும் - முடக்கறுத்தான் (அடை)
தழுதாழை (காய்ச்சி பூச)
வாத நாராயணன் (அரைத்துப் பூச)
வீக்கத்தைக் குறைக்கும் - செவ்வாமணக்கு (வதக்கிக் கட்ட)
கற்றாழை (சோற்றைப் பூச)
சுழற்சி (காயினைப் பொடியாக்கி)
நீரிழிவைப் போக்கும் - நாவல் (கொட்டை)
ஆவாரை (பூ)
கொன்றை ( பட்டை)
சீந்தில் (நீர்வேட்கைக்கு)
தோல் நோயை நீக்கும் - அறுகம்புல் (சாறு)
புங்கு (விதை)
பூ வரசு (காய்)
நெய்சிட்டி (பொடி)
சிவனார் வேம்பு (பூ குடிநீர்)
தலை முடியைப் பாதுகாக்கம் - வெட்டி வேர்
மருதோன்றி
உசிலை
பார்வைக் குறைபாட்டைப் போக்கும் - நந்தியா வட்டம் (சாறு)
நேத்திர பூண்டு (இலைச்சாறு)
முட்களா (பூ சாறு)
காது நோயைப் போக்கும் - மருள்
பிரண்டை
பூண்டு
பல் நோயைப் போக்கும் - எருக்கு
வேம்பு
நாயுறுவி
காட்டாமணக்கு
வாய்ப்புண் வயிற்றுப் புண்ணுக்கு - மணத்தக்காளி
வில்வம்
இரைப்புக்கு - ஆடாதொடை
கண்டங்கத்தரி
இதய நோய்க்கு - சீந்தில்
தாளிக்கீரை
தண்ணீர் சுத்திகரிப்புக்கு தேற்றான் கொட்டை
கொழுத்தவனுக்கு கொள்ளும்
இளைத்தவனுக்கு எள்ளும் தின்னச் சொல்லும்!
நாட்ட மிரண்டும் நடுமூக்கில் வைத்திடில் - தூக்கம் வரும்!
மூளை - பிரமி; இதயம் - தாமரை; நுரையீரல் - ஆடாதோடை; லிவர் - கீழாநெல்லி;
சிறுநீர்ப்பை - அசோகு; மூட்டு - நொச்சி.
அட்டவணை
வாதம் பித்தம் ஐயம் உடலினர்க்கு ஏற்ற உணவுப் பொருள்கள்
பெயர் வாத உடல் பித்த உடல் ஐய உடல் கீரைகளும்
பயன்களும் கீரை வகைகள்:
அகத்திக் கீரை
முளைக் கீரை
கடலைக் கீரை
கொத்துமல்லிக் கீரை
வெந்தயக் கீரை
முருங்கைக் கீரை
மணத்தக்காளி
பொன்னாங்காணி
கொத்துப் பசலை
முன்னைக் கீரை
நல்வேளை
ஆரை
முசுமுசுக்கை
மூக்கரட்டை
புளியாரை
கோவை
தூதுளை
வல்லாரை
சிறுகீரை
பண்ணை
சக்கரவர்த்தி
காய் கிழங்கு வகைகள்:
கலியாணப் பூசணிக்காய்
கத்தரிப் பிஞ்சு
முருங்கைப் பிஞ்சு
மிதிப்பாகல் பிஞ்சு
கொம்பு பாகல் பிஞ்சு
வெள்ளை அவரைப் பிஞ்சு
வெள்ளரிக்காய் பிஞ்சு
நீளப்புடல் பிஞ்சு
பீர்க்கம் பிஞ்சு
அவரைப் பிஞ்சு
அத்திப் பிஞ்சு
வாழைக்காய்
சுரைப் பிஞ்சு
பலாப் பிஞ்சு
வழுதுணங்காய்
காராகருணை
காட்டுக் கருணை
முள்ளங்கி
வள்ளிக் கிழங்கு
வெங்காயம்
பருங்களா
வாழைத் தண்டு
வாழைப் பூ
வற்றல் வகைகள்:
சுண்டை வற்றல்
காட்டுப் பிரண்டை வற்றல்
தூதுளங்காய் வற்றல்
மணத்தக்காளி வற்றல்
நெல்லி வற்றல்
ஆதொண்டை வற்றல்
உப்பு ஊறுகாய் வகைகள்:
நாரத்தை ஊறுகாய்
மாவடு "
மிளகு "
இஞ்சி "
எலுமிச்சை "
களா "
கடுக்காய் "
நெல்லி "
உப்பு வகைகள்:
இந்துப்பு
கல்லுப்பு
கடலுப்பு
முளைக்கீரை:
வயோதிகர், இளைஞர், வாலிபர் ஆகிய
அனைவர்க்கும் உகந்தது. காய்ச்சல், காசம் போக்கும்.
அறுகீரை:
காய்ச்சல், குளிர் நடுக்கம், சன்னி, கபவாதம் ஆகிய
பிணி போக்கும். காமத்தைத் தூண்டும்.
சிறுகீரை:
கண்புகைச்சல், இருமல், படலம், பாத எரிச்சல்,
வீக்கம், பித்தம் நீங்கி அழகு உண்டாக்கும்.
மணலிக்கீரை:
மார்புச்சளி, வாதம், ஐயம், கிருமி நோய், பயித்தியம்,
சீதளம் நீங்கும்.
சிறு பசலை:
கபத்தை அதிகமாக்கும். புணர்ச்சியில் இன்பம்
உண்டாக்கும், வெப்பம் தணியும், மயூம் இளகும்.
வசலைக்கீரை:
மூத்திரக் கடுப்பு, வெள்ளை, வாந்தி போகும்.
சாணாக்கீரை:
கபம், அக்கினி மாந்தம், மகோதரம், ஆறாப்புண்
நீங்கும்.
பண்ணைக்கீரை:
மலம் இளகும், குடலுக்கு நன்மை, கரப்பான்,கிரந்தி
நீங்கும்.
வள்ளைக்கீரை:
வாதம் போக்கும், குழந்தை பால் சுரக்கும்.
வேளக்கீரை:
தலைவலி, உடல் குடைச்சல், சீரணம், மார்வலி
நீங்கும். வன்மையுண்டாகும்.
பொன்னாங்காணி:
கண்நோய், கருவிழி நோய்,உடல் சூடு, பீனசன்,
மூலம் நீங்கும். உடல் பொன்னிறமாகும்.
வல்லாரை:
கணச்சூடு, மலக்கழிச்சல், இரத்தக் கடுப்பு நீங்கும்.
முருங்கைக்கீரை:
அக்கினி மந்தம், உட்சூடு, தலைவலி, மூர்ச்சை,
கண்ணோய் போகும்.
அகத்திக்கீரை:
பிறரால் இடப்பட்ட மம்ந்தின் தீமை, பைத்தியம்,
நீங்கும். உண்ட உணவு செறிக்கும்.
ஆரைக்கீரை:
பித்த நோய், நீரிழிவு, இரத்த பிரமேகம் ஒழியும்.
தூதுளை:
காது கேளாமை, காதெழுச்சி, காசம், நமைச்சல்,
மதரோகம், அக்கினிமந்தம், திரிதோடம், சூலை,
விந்து நட்டன் ஆகியவை விலகும்.
கருவேப்பிலை:
நா சுவை அறியாமை, சீத பேதியால் வயிற்றுவலி,
நாட்பட்ட காய்ச்சல், பைத்தியம் போகும்.
புளியாரைக்கீரை:
பித்த மபூக்கம், வாத கப விகர்ப்பம், மூலவாயு,
பிராணி, இரத்த மூலம் போகும்.
கொத்துமல்லி:
வாத ரோகம், பித்த நோய், காய்ச்சல், போகும்.
வன்மை உண்டாகும். சுக்கிலம் பெருகும்.
போகம் விளைக்குங் கீரைகள்:
"தாளி முருங்கைத் தழைதூ துணம்பசலை
வாளிவறு கீரையுநெய் வார்த்துண்ணில் - ஆளியென
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாங்
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்"
நறுந்தாளி, நன்முருங்கை, தூதுணம், பசலை, அறுகீரை, இவற்றுடன் யாதானும் ஒன்றைப் புளி நீக்கிப் பாகஞ்செய்து, அன்னத்துடன் நெய் சேர்த்து, நண்பகலில் மாத்திரம் ஒரு மண்டலம் உண்ணில் புணர்ச்சியில் நிவாகம் உண்டாகும்.
பூ வகைகள்:
வாழைப்பூ:
இரத்த மூலம், பிரமேகம், வெட்டை, பயித்தியம், கபாதிக்கம்,
உதரக்கடுப்பு, இருமல், கைகால் எரிச்சல் இவை நீங்கும்.
தூதுளம் பூ:
உடல் பெருக்கும், தாது வளர்ச்சி, அழகுண்டாகும், மகளிர் வசியம்
உண்டாகும்.
வெங்காயப் பூ:
குன்மரோகங்கள், வாத நோயைப் போக்கும்.
வேப்பம்பூ:
வாந்தி, ஏப்பம், கிருமி நீங்கும்.
அகத்திப்பூ:
வெண்சுருட்டு முதலிய பிகையினாலும், வெயிலினாலும்
மருந்துகளினாலும் பிறந்த வெப்பம் அழலை நீங்கும்.
ஆவாரைப் பூ:
மதுமேகிகளுக்கு நன்று, கற்றாழை மணத்தை அகற்றும். உடல்
கவர்ச்சியாகும்.
காலையில் 26 முதல் 26 நாழிகைக்குள் எழுந்திருக்க வேண்டும். சுறு சுறுப்பு உண்டாகும். புத்தி தெளியும். நரம்பு தூய்மையாகும். பயித்தியமும் கோபமும் நீங்கும்.
வாதம், பித்தம், கபம் தத்தம் நிலையில் இயங்கும்.
"புத்தி யதற்குப் பொருந்தும்! தெளிவளிக்கும்
சுத்த நரம்பு நற் றூய்மை யுறும் - பித்தொழியும்.
தாலவழி வாத பித்தம் தத்தநிலை மன்னும் அதி
காலை விழிப்பின் குணத்தைக் காண்"
நீர் கழிக்கும் போது இடக்கையால் வலப்பக்கத்து அடிவயிற்றைப் பிடித்து அமுக்க வெண்டும். மலம் கழிக்கும் போது வலக்கையால் இடப்பக்கத்து அடிவயிற்றை அமுக்க வேண்டும்.
பல் துலக்குதல்:
"வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்குப் பல் துலங்கும்
பூலுக்குப் போகம் பொழியுங்காண் - ஆலுக்குத்
தண்டா மரையாளும் சாருவளே - நாயுருவி
கண்டால் வசீகரமாம் காண்"
துவர்ப்புச் சுவை, கைப்புச் சுவை பல்லுக்கு நல்லது.
நீராடல்:
" காலை குளிக்கில் கடும்பசி நோயும் போம்
மாலை குளிக்கில் இவை மத்திபமே - சோலையுடை
வாச நீர் சுத்த சலம் வன்னி நீராடுங்கால்
தேசமுடற் பேதமுன்னிச் செப்பு"
பஞ்ச கற்பம்:
"பூ நெல்லி நீர் மிளகு பொற்கடுக்காய் வான் மஞ்சள்
கானகத்து வேம்பரிசி காரிகையே - மானங்கேள்
ஒன்றரை ஒன்றேகால் ஒன்று உறுதி முக்கால்
கன்றரைக் கையான் நீரில் தேய்"
பசி:
"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனுன்
கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்".
வெந்நீர்: "இயம்பிட எளிதே! வெந்நீர், இயம்புவன் சிறிது கேண்மின்!
நயம்பெழூத் தெளீந்த நீரை நன்றாக வறூத்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குறூத்திடு வீராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்".
தீமை: "முருங்கைக் கீரை வெந்து கெட்டது
அகத்திக் கீரை வேகாமல் கெட்டது"
"இஞ்சிக்குத் தோடும்
கடுக்காய்க்கு வித்தும் நஞ்சு"
வல்லாரை:
"அக்கர நோய் மாறும் அகலும் வயிற்றிழிவு
தக்க விரத்தக் கடுப்புத் தானேகும் - பக்கத்தில்
எல்லாரையும் அருந்தென்றே யுரைத்து நன்மனையுள்
வல்லாரையை வளர்த்து வை".
நரம்பு நோய்:
"அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ?
கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்!
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்!
நரம்பு கோணிடில் நாமதற்கு என்ன செவோம்?"
தினமருந்து: காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டிடில்
கோலை ஊன்றிக் கூனி நடந்தவன்
கோலைத் தூக்கிக் குலுக்கி நடப்பனே!
தூதுவளை:
"திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவையேல் நல்ல
திருக்குளத்தைப் போலே திருத்தும் - திருக்குளத்தை
எல்லாம் இரவுவிளை என்ன வருந் தூதுவளை
எல்லாம் இரவும் இளியென்"
"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னை அர்ச்சிக்கத் தான் இருந்தானே"
(திருமந்திரம். 2355)
தன்னையே தான் அறிய முயன்றால், அம்முயற்சியினால் தனக்கு ஒரு கேடும் வராது; தன்னையேதான் அறியாததனால் தானே கெடுகின்றான்; தன்னையே தான் அறியச் செய்யும்அறிவை அறிந்த பின்னால், தன்னையே தான் வணங்கத் தான் இருந்தானே.
(அறிவைஅறிந்தபின்பு, தன்னையே தான் வணங்க, வணங்கத் தன் வாழ்நாள் நீண்டு நெடுநாள் வாழ்வான் என்றுபொருள்)
ஊன் வளர்க்கும் உணவு:
நாம் உண்ணும் உணவு நமக்கு எப்படிப் பயன் படுகிறது? என்பதை, உணவாகப் பயன் படும் பொருள்களைக்கொண்டே அறியலாம்.
நமது உடலும் நாம் உண்ணும் உணவும் இயற்கைவழி இயன்றது! என்பதால், இயற்கை இயற்கைக்கு மருந்தாகிறது! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
1.சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை: சிறுநீர் அடைப்பைப் போக்கும்.
2.கற்பப்பைப் போன்றிருக்கும் கொய்யாக்காய்: கற்பக் கோளாறைப் போக்கும்.
3.மூளை போன்றிருக்கும் அக்ரூட்: மூளையை வளர்க்கும்.
4.கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய்: கண்ணோய்க்கு மருந்து.
5.இதயம் போன்றிருக்கும் செந்தாமரை: இதய நோயைப் போக்கி இதயத்தைக் காக்கும்.
6.உயிரணு போன்றிருக்கும் எள்: உயிரணுவை வளர்க்கிறது.
7.உளுந்து கொடி நரம்பு போன்றிருக்கும்: உளுந்து நரம்பு மண்டலத்தைக் காக்கும்.
"என்னினெய்யு முக்கூட் டெனுநெய்யு மானெய்யுங்
விள்ளுதயி லாதியென வீறுநெய்யு - முள்ளபடி
வாரந் தனக்கிருநாள் வைந்தாடி நோய்களதி
காரந் தனக்கிடமிற் காண்"
வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நோய்கள் அணுகாது ஓடிப்போகும்.
எண்ணெய், பாதத்தில் தேய்த்தால் கண்ணோய் போகும். கண்ணுக்குள் விட்டால் காதுநோய்போகும். காதுக்குள் விட்டால் தலை நோய் போகும். தலைக்குத் தேய்த்தால் நோயெல்லாம்போகும்.
தேங்காய்:
தேங்காய் சூடும் வரட்சியும். பயன் அதிக உணவு. இதனால் இரத்தம் சுத்தமாகும். தாது விளையும். இடுப்புவலி, கீல்வாதம், பாரிசவாதம், முதலியவற்றைக் கண்டிக்கும். ஈரலுக்கு வலிவு கொடுக்கும். உள்புண்ணை ஆற்றும். மூலத்திற்கு நல்லது. விந்து விளையும். இளநீரில் வறுத்த கொத்தமல்லிச் சூரணம் ஊறவைத்திக் குடிக்க நீர்த்தாரையில் ஒழுகும் இரத்தம் நிற்கும்.
தேங்காயை நெல்லில் வைத்து அவித்து குழந்தைக்குக் கொடுக்க வயிற்றுக் கிருமி சாகும். தேங்காய் தைலத்தால் அறிவு வளரும்.
வாழ்க வளமுடம்.
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
0 மறுமொழிகள்:
நீங்களும் சொல்லுங்கள்...