*சூடிக்கொடுத்த கோதை*


[ஆண்டாள் பாடிய திருப்பாவையால் சிறப்புப் பெற்ற மார்கழி வரும் கூடாரவல்லி ஜனவரி11-மார்கழி 27 தினம் விஷேமானது.கண்ணனை நினைந்து,தினமும் ஒரு பாடலாக பாடிவிரதம் இருந்த ஆண்டாள் 27வது நாள் தன் விரதத்தைப் பூர்த்தி செய்து, மறுநாள் அரங்கனை அடைந்தாக வரலாறு]

ஆண்டாள், நமது பக்தி இலக்கிய வாதிகளுள் ஒருதனிப் பெருங்கவி. பன்னிரண்டு ஆழ்வார்களுள் அவளும் ஒருத்தி கட்டக் கடைசி மட்டுமல்ல, அந்த வரிசையில் இடம் பெற்ற ஒரே ஒரு பெண்மணி அவள்தான்.

உலக வரலாற்றில் ஆண்டாளுக்கு இணையான காதல் கவிகள் வேறு யாரும் கிடையாது. இன்றுவரைக்கும் இல்லை எனலாம்.
ஆண்டாள்தான் காதலை கனிந்து உள்ளுருகி பாடிய பெண்கவிஞர்.தன் காதலை இனிய தமிழில் சொல்லோவியமாக, என்றும்வாடாத பாமாலையாகபாடி,சூடி மகிழ்ந்தாள்.காதல் வெள்ளம் சுழித்து கரைபுரண்டு ஓடியது.அந்த வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவளுக்கு, என்ன செய்வது என்று தெரியாது நோன்பு நோற்ற கோதை பரமனை சேர்ந்தாள்.பரந்தாமன் புருஷோத்தமனைக் காதலித்த தனிப் பெருங் காவியம் தான் ஆண்டாளின் வாழ்க்கை.

அந்தக் காலத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தர் என்கிறர் வசித்துவந்தார். அருமையானபுலவர். இந்த விஷ்ணு சித்தர்தான் பின்னாளில் பெரியாழ்வர் என்று அழைக்கப்பட்டவர். ஒருநாள் நந்தவன பெருமாளுக்குமாலை தெடுக்க மலர்களை கொய்து கொண்டிருந்தபோது துளசிச் செடிகளின் ஊடே இயற்கை அழகின் வடிவாக கிடந்த பெண்குழந்தையாக, தங்கக் கனியாக ஆண்டாள் கிடைக்கப் பெற்றார்.
விஷ்ணுசித்தருக்குக் குழந்தை இல்லை.
ஆண்டாளுக்கும் பொறுப்பாளர் இல்லை.
ஆக இது பொருத்தமான அமைப்பாக அமைந்திடவே அவர் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

குழந்தைகளுக்கு பயம் காட்ட சில சமயங்களில் நமது பெரிசுகள்பூச்சாண்டியிடம் பிடித்து கொடுத்து விடுவேன், அடம் பிடிக்காமல் இரு என்று கூறுவதுண்டு.
விஷ்ணு சித்தருக்கு பூச்சாண்டி தெரியாத காரணத்தால் ஒரு சமயம் வேடிக்கையாக அரங்கனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போகிறேன் என்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லவே சிறுமியான ஆண்டாளுக்கு மனதில் பதிந்துவிட்டது.

சிறுமியான ஆண்டாள் அதையே உண்மை என்று நினைந்து விட்டாள். அன்று தெடங்கி திருவரங்கத்தில் இருக்கிற அரங்கன்தான் தன் புருஷன் என்று உளமாற நம்ப ஆரம்பித்துவிட்டாள். கோதைக்கு இயல்பிலேயே அரங்கன் மீது மாளாக் காதல் மலர்ந்திட, அவள்அரங்கனை அடையவே பிறவி எடுத்தவள் என்று திடமாக நம்பினாள்.நாளுக்கு நாள் கண்ணன்மீது ஆண்டாளுக்கு காதலும் வளர்ந்தது.பாவை நோன்பு நோற்றாள் அவ்வகையில் திருப்பாவை நாச்சியார் திருமொழி என்று இரு பிரபந்தங்களை அருளினாள். மகளுக்கு திருமண வயது வந்துவிட்டதே!அவள் விருப்பத்தை அறிய கேட்டபோது, அவளிடமிருந்து...,

மானிடவர் கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன் கண்டாய் மன்மதனே!

என்று பாட்டாய் பதிலாக வந்தது.
இறுதியாக,ஏழு கமலப் பூவழகுகளை யுடைய திருவரங்கத் தம்மானையே மணப்பேன் என்றாள் விஷ்ணு சித்தர் தினம் கோவிலுக்கு போவார். தன் கையால் தெடுத்த மாலைகளை வடபத்ரசாயிக்கு அணிவித்து அழகு பார்ப்பார். பாசுரங்கள் பாடுவார். இறை ஊழியம் செய்து விட்டு வீடு திரும்புவார்.அப்படி ஒரு நாள் இறைவனுக்குச் சூட மலர் மாலையை எடுத்த போது மாலையில் ஒரு பெண்ணின் தலை முடி இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார் விஷ்ணு சித்தர்.

இறைவனுக்குச் சூட்டவேண்டிய மாலையை எந்தப் பெண் தன்தலையில் சூடி அழகு பார்த்திருக்க முடியும்? ஆண்டாளா? சந்தேகமே இல்லை. ஆண்டாள்தான்.அவள் தான் அதைச் செய்திருப்பாள். அவளால் மட்டும் தான் அப்படிச் செய்திருக்கவும் முடியும்!

இதிலென்னப்பா தப்பு இருக்கு?
இறைவன் யார்?

நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர்தானே?நான் முதலில் சூடிப் பார்த்து விட்டு அவருக்குச் சூட்டினால் என்ன குடி முழுகிப் போய் விடும்? என்று கேட்டாள் ஆண்டாள்.

ஆடிப்போய்விட்டார் விஷ்ணு சித்தர்.
அவர் பெரிய ஆசாரசீலர்.
கோயில் காரியங்களெல்லாம் ஆசாரமாக,முறைப்படி நடக்கவேண்டும் அவருக்கு ஆனால் தன் மகளே இப்படி ஒரு அபசாரத்தைச் செய்திருக்கிறாள்! கடவுளே, இதற்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ என்று பதைத்தது அவரது பக்தி மனம்.
அன்றைக்கு மட்டுமல்ல, பல நாட்களாவே ஆண்டாள் இறைவனுக்குக்காக தந்தை கட்டி வைக்கும் மாலைகளை முதலில் தான் சூடி ஒரு கிணற்றின் நீரில் அழகு பார்த்துவிட்டுதான் அதைக்கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்து வந்திருக்கிறாள்.காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல்தானே ஆகப்பெரிய புனிதம்! பின்னால் இதுபற்றி விஷ்ணுசித்தர் அழுது அரற்றி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டபோது, பாமாலைப் பாடித்தரப் பிறந்தாள், பூமாலை சூடிக் கொடுக்கவும் பிறந்தாள் என்று கூறியது பெரியாழ்வருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.அதன்படி பெருமாள் சொன்னபடி அவர் செய்து வந்தார்.
அன்று முதல்சூடிக் கொடுத்தவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி என்று எம்பிராணனையே ஆண்டு விட்டாள்என் பதால் ஆண்டாள் என்னும் பெயர் விளங்கிற்று.

கதைகள் எப்போதும் சுவார்சியமானவைதான்.
ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையைவிட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரிசியமானது,சுவையானது.அவள்தான் தமிழை முதல் நவீன பெண் கவிஞர்.அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதிநவீன சங்கதிகளை மட்டும்தான் அவள் தன்பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத் திருக்கிறாள்.
ஒரு உதாரணம் சொன்னால் விளங்கும். ஆண்டாளுக்கு, அவளது காதலனான மகா விஷ்ணுவின் உதட்டில் முத்தமிடவேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.எப்படி முத்தமிட வேண்டும்? அவர்க்கும் ஒரு அனுபவம் வேண்டுமல்லவா? ஏற்கனவே மணந்த மகா லட்சுமியை கேட்கலாம். அது பிரச்சனையாகி விடும்.
வேறு யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது.அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!
அதை வைத்துதானே எப்போதும் வாயில்வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவைதெரிந்திருக்குமே!
இந்த யுக்தி உதயமானதுமே கவிதை பீறிட்டுக் கொண்டு புறப்பட்டு விடுகிறது.*
கற்பூரம் நாறுமே,
கமலப்பூ நாறுமோ,**
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ**
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே**
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே* !
கற்பூரம் என்றால் மகா விஷ்ணுவுக்கு உகந்த பச்சை கற்பூரம்.
கமலப்பூஎன்றால் கமலப்பூ தான்.
பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம்சந்தேகம் கேட்கிறாள்.
மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லித் தெலையேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!
இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?
ஆண்டாள் அதிகம் பாடவில்லை தான்.
மொத்தம் 143 பாடல்தான்.
ஆனால்,நாச்சியார் திருமொழி என்றுவைவணவர்களின் நான்காவது வேதமான நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் அந்தப்பாசுரங்களுக்கு ஒரு நட்சத்திர அஸ்தஸ்து உண்டு.
எளிமையும் இனிமையுமான காதல்பாடல்தான் எல்லாமே.
பக்தியில் பல வகைகள் உண்டு. இறைவனை தாயாய், தந்தையாய், தோழனாய், தலைவனாய், தெண்டனாய் இன்னும் பலப்பல வடிவங்களில் கண்டு,பாடி பக்தி செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் காதலனாக வரித்துக்கொண்டு கவிதை மழைபொழிந்தவள்.ஆண்டாள் தான்! வடதேசத்துக்கு ஒரு மீரா என்றால் நம்மூருக்கு ஆண்டாள்! மார்கழி மாதமானால் அதிகாலை பொங்கலுடன் உள்ளே நுழையும் திருபாவைதான் ஆண்டாள். இறைவனை மணப்பதற்காகப் பாவை நோன்பிருந்து அதிகாலை வேளையில் தினசரி ஒன்றாக ஆண்டாள் பாடியமுப்பது பாடல்கள் அவை.
என்ன இந்தப் பெண் இப்படி ஒரு அரங்கன் பித்து பிடித்து அலைகிறாளே என்று அவளது அப்பாவுக்கு ரொம்ப கஷ்டமாகப் போய்விட்டது.வில்லிபுத்தூர் இறைவனான வட பத்ரசாயிடம் போய்கதறி கண்ணீர் மல்க தன் மகளுக்கொரு வழி காட்டும்படிவேண்டினார்.
அவரால் வேறென்ன செய்ய முடியும்.
இறைவன் உத்தரவுப்படியே விஷ்ணு தன்மகளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துப் போனார்.

இப்படி ஒரு நிகழ்வு இவ்வையகத்தில் நிகழுமா என்ற ஆச்சிரிய ஆர்வத்துடன் ஊரேதிரண்டு ஊர்வலமாக கோதையின் பின்னால்சென்றது.
வல்லபதேவ பாண்டியனும் அந்தஊர்வலத்தில் முன் சென்றான்.
************************************