இலக்குவன் தியாகம்!

இராமாயணத்தில் பரதனின் உயர்ந்த தியாகத்தை மெச்சி, அனைவரது உள்ளமும் அவனைத் தொழுவது இயல்பு தான்!

பரதன் துறந்தது கைகேயி தன் வரத்தினால் பெற்ற, அயோத்தி சிம்மாசன உரிமையைத் தான். ஆனால் இலக்குவனோ தன் வாழ்வையே இராமனுக்காகத் துறந்து விடுகிறான்- என்பதை உணரும் போது நம் உள்ளம் இன்னும் உருகி விடும்!

உத்தரகாண்டத்தில் இலக்குவனின் முடிவில் அவன் தியாகத்தைநாம் காண்கிறோம்.
இராமனுடன் வனம் புகுந்த இலக்குவன் இராமனையும் சீதையையும் காவல் காப்பதி லிருந்து அனைத்துப் பணிகளையும் விரும்பி மேற்கொள்கிறான்.

சித்ரக்கூடத்தில் பலவிதமான மரங்களைக் கொண்டு பர்ணசாலை அமைக்கிறான். அதில் இராமர் வாஸ்து சாந்தி செய்த பின்னர் சீதையுடன் புகுகிறார். இராமனுக்கே தன் வாழ்வு என்பதைப் போல இயங்கும் இலக்குவனை, வால்மீகி இராமனின் வெளியே உலாவும் பிராணன் என்கிறார். (பஹிர் பிராண இவாபர: பாலகாண்டம் 18-28)

வால்மீகியின் இந்தக் கூற்று மிக்க பொருள் பொதிந்தது என்பதை அவன் முடிவின் மூலம் உணர முடிகிறது.

யுத்தத்தின் போது இராவணன், பிரமன் கொடுத்த வேல் ஆயுதத்தால் இலக்குவனை அடித்து வீழ்த்துகிறான். களத்திலே மூர்ச்சித்துக் கிடக்கும் இலக்குவனை நோக்கி எல்லையற்ற மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்த இராவணன், இலக்குவனின் உடலைத் தூக்கிச் செல்ல முயல்கிறான். ஆனால் அவனால் முடியவில்லை.

எவ்வளவு முயற்சி செய்த போதும் இலக்குவனின் பொன் உடலை வெள்ளிக் கயிலை மலையைத் தூக்கிய இராவணனால் தூக்க முடியவில்லை!

அப்போது எங்கிருந்தோ வந்த அனுமன் எளிதாக இலக்குவன் உடலைத் தூக்கிச் செல்கிறான். பின்னர் இலக்குவன் காப்பாற்றப் படுகிறான்.

(இடுக்கில் நின்ற அம்மாருதி புகுந்து எடுத்து ஏந்தி -கம்பன்: யுத்த-முதல் போர்புரி படலம்)

வெளி பிராணன் போலவே இருக்கும் இலக்குவனும் இராமன் போலவே, பக்தன் அல்லாத அயலாருக்கு பாரம்; பக்தருக்கோ பாரமற்ற எளியன என்பதை இந்த சம்பவத்தால் பார்க்கிறோம். அரக்கனான இராவணனுக்குப் பாரமாக இருந்த இலக்குவன் பக்தனான அனுமனுக்கு மயிலிறகு போல எளியனாக ஆகி விட்டான். இது போன்ற பல சம்பவங்கள் மூலம் இராம -இலக்குவ தொடர்பை நுணுக்கமாக வால்மீகியும் கம்பரும் எடுத்துக் காட்டும் பாங்கே அலாதி சுவையுடன் அமைகிறது.

இலக்குவனின் முடிவைப் பார்ப்போம்.

நீண்ட காலம் அயோத்தியை அரசாண்ட ராமனின் அவதார காலத்தின் முடிவு நெருங்குகிறது. இதை பிரம்மா காலனுக்கு உணர்த்த, காலன் இராமரை ஒரு முனிவர் வேடத்தில் அணுகுகிறான்.

வாயிலில் இருந்த இலக்குவனிடம், “ஒரு முக்கியமான விஷயமாக இராமரைப்பார்க்க வந்திருக்கிறேன்” என்று கூறிய முனிவரைரிடம், இராமனின் அனுமதிபெற்று அவரை உள்ளே அனுமதிக்கிறான்.

தங்க ஆசனத்தில் அமர்ந்த காலன், "நாம் இருவரும் தனியே பேச வேண்டியவிஷயம் இது. நாம் பேசுவதை வேறு யாரேனும் கேட்டாலோ, தனித்துநாம் இருப்பதைப் பார்த்தாலோ கூட அவன் உன்னால் கொல்லப்பட வேண்டும்"என்று கூறுகிறான்.

இதற்கு இணங்கிய இராமர், இலக்குவனிடம் வாயிற்காப்போனை அனுப்பி விடு;நீயே அங்கு இரு; யார் என்னைப் பார்க்கிறானோ அல்லது எங்களின்பேச்சைக் கேட்கிறானோ அவன் என்னால் கொல்லப்படுவான்" என்றுகூறுகிறார்.

இலக்குவன் வெளியே வாயிலுக்குச் செல்ல காலன் இராமரிடம் பிரம்மா தன்னை அனுப்பியதாகச் சொல்லி, இராமன் தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டகாலம் முடிவுக்கு வருவதை பிரம்மா நினைவூட்டச் சொன்னதை விரிவாகவிளக்கிக் கூறுகிறான். இராமர் அமைதியாக இதைக் கேட்டுக் கொண்டிருக்கும்வேளையில் வெளியே துர்வாச முனிவர் வருகிறார்.

அவரைத் தடுத்த இலக்குவன், இராமர் மிக முக்கியமான வேலை நிமித்தம்இருப்பதைச் சொல்லி சிறிது காத்திருக்க வேண்டுகிறான். இதை கேட்டதுர்வாசர்ம் பெரும் கோபம் கொள்கிறார்.

"உடனே உள்ளே சென்று நான் வந்ததைச் சொல்!. இல்லாவிடில் இராமரையும்உன்னையும் பரத, சத்ருக்க்கனரையும், ஏன்!, இந்த நாட்டில் உள்ளஅனைவரையும் உங்கள் சந்ததி யினரையும் சபித்து விடுவேன்!"என்கிறார்.

சற்று யோசித்த இலக்குவன் தன் வாழ்வைத் தியாகம் செய்வதே சிறந்தது; அதனால் மற்றவரைக் காப்பாற்ற முடியும், என்ற முடிவுக்கு வந்து உள்ளே சென்று துர்வாசரின் வரவை அறிவிக்கிறான்.

இராமர் உடனே காலனுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டு வெளியேவந்து துர்வாசரை வரவேற்கிறார்.

“ஆயிரம் ஆண்டுகள் உண்ணாமல் இருந்துத, ஒரு தவத்தை முடித்து விட்டுநேராக இங்கு வருகிறேன்.உண்ணுவதற்கு ஏற்பாடு செய்” என்கிறார் துர்வாசர்.இராமன் அளித்த விருந்தால் மனம் மகிழ்ந்து விடை பெறுகிறார் அவர்.இப்போது இராமன் மனம் மிகவும் துயரம் அடைகிறது.

அவனை நோக்கிய இலக்குவன்,

" காகுத்ஸரே! எனக்கு உங்கள் பிரதிக்ஞையின்படி உரிய தண்டனையை வழங்குங்கள். என்னைக் கொல்லுங்கள்" என்று தானே முன் வந்து கூறுகிறான்.

உடனே இராமன் வசிஷ்டர் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து முனிவர் (காலன்)வந்ததையும் இடையில் குறுக்கே புகுந்ததால் பிரதிக்ஞையின் படிஇலக்குவனைக் கொல்ல வேண்டியிருப்பதையும் கூறுகிறான்.

இராமன் இலக்குவனை நோக்கி,

" சுமித்ரையின் புதல்வனே! இனி உன்னை நான் ஒதுக்குகிறேன். ஏனெனில் நாணயமானோருக்கு ஒதுக்குவது என்பதும் மரணமும் ஒன்று தான்" என்கிறான்.

அற நூலின் படி அமைந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட இலக்குவன் கண்களில் நீர் மல்க சரயு நதி நோக்கிச் செல்கிறான். அங்கே கூப்பிய கைகளுடன்தன் புலன்களை ஒடுக்கி தன் மூச்சை நிறுத்துகிறான்.'

இலக்குவனின் இந்தத் தியாகம் நம்மை உருகச் செய்கிறது!

வெளி பிராணனான இலக்குவன் "போன" பின் உள் பிராணனுக்கு என்ன வேலை?
வால்மீகியின் ஆழ்ந்த வார்த்தைகளுக்கு கடைசியில் அர்த்தம் புரியும் வகையில்,இராமன் அனைவரையும் அழைத்து, " இன்றே நான் வனம் ஏகச் செல்கிறேன்"என்று கூறி தன் அவதார காரியத்தை முடித்து தன் நிரந்தர இருப்பிடமானவைகுண்ட வாசத்திற்குப் புறப்படத் தயாராகிறான்.

இராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு சிறு சிறு சம்பவமும் மனதில் பதிந்து அறநெறிகளை உணர்த்துவதோடு உள்ளத்தை உருக்குவதாகவும் அமைகிறது!

பட்டி மன்ற வரலாறு. -முனைவர் இர.வாசுதேவன்

1. பழந்தமிழர் தம் கருத்தை மற்றோர்க்கு அறிவிக்க கருத்துப் போர் நிகழ்த்தியதாகத் தெரிகிறது. அது, பொது இடங்களில் பல்லோர் முன்னிலையில் நிகழ்ந்திருக்கிறது.

ஊரம்பலங்களை மரங்களினால் மூடி நிழல் பரப்புங்கள்! விழா அரங்கங்களில் இன்பம் பொங்கும் நல்லுரை ஆற்றுங்கள்! உரையாற்றும் வல்லமை கொண்டோ ரெல்லாம் உரையாற்றுங்கள்! சமயங்கள் கூறும் தத்துவங்களை காதலர்களுக்கு விளக்கிக் கூறுங்கள்! கருத்துகளுக்குக் கருத்துகளை எடுத்துக் கூறி வாதிடுங்கள்! வாதத்தை வாதத்தால் வாதிட்டு, வாதத்தைத் தீர்த்து வையுங்கள்! என்று, தொடிதோட்செம்பியன், அரசாணை வெளியிட்டான். இது, முதற் சங்க காலத்தில் நிகழ்ந்த நிகழ்வாகக் கருதுவர்.
பட்டிமன்றம் என்பது,

"பல்கேளிவித் துறை போகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறழ்குறித் தெடுத்த உடுகெழு கொடியும்"

மாறுபட்ட கருத்தை உரைப்பது என்னும் பொருளில், பட்டினப்பாலை உரைக்கிறது.

அக்காலத்தில் பட்டிமன்றங்கள், அரசுத் தலைநகரங்களிலும், பெரு நகரங்களிலும், பொது விழாக்களிலும் நடைபெற்றுள்ளன . ஒரு நிகழ்வை அறிவிக்கும் மதுரை மாநகரம், பின்வருமாறு முரசு அறைந்தது. "பெருஞ்செய் ஆடவர் தம்மின்; பிறரும் யாவரும் வருக! ஏனோரும் தம்" என்று, மதுரைக் காஞ்சி கூறுகிறது.

பனம்பரனார் இயற்றிய இலக்கண நூலான பனம்பாரத்தில் காணப்படும் ஒரு சூத்திரத்தில், 'மன்னிய அவையிடை வெல்லுறு போதினும்' என்று குறிப்பு, சொற்போரிட்டு வெல்லும் நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. இக்கருத்து, இன்றைக்கு 3500 ஆண்டுகட்கு முற்பட்டது.

'ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்'

என்று , மணிமேகலை குறிப்பிடுகிறது.

சொற்போர் நிகழ்த்துவதற்கு உரிய கருத்துகளை வள்ளுவம் ஒரு அதிகாரமாகக் கூறுகிறது. சொற்போர் நிகழ்த்துவோரைச் ' சொல்லேர் உழவர் ' என்கிறது. நூலைக் கற்றவன் அவைக்கு அஞ்சினால், அவனைப் பேடியின் கையிலுள்ள வாளை' உவமை யாக்குகிறது. மதுரைக் காஞ்சியில் "கம்பலை" என்னும் சொல் ஆளப்படுகிறது. அது, பட்டிமன்றங்களில் எழுந்த ஆரவாரம் என்று பொருள் கூறுகின்றனர்.

"கல்வி பயில்களம் பட்டிமண்டபம்" என்று பிங்கல நிகண்டு (663) பொருள் உரைக்கிறது .

பட்டிமன்ற நெறிகளை அவிநயம் என்னும் பழந்தமிழ் நூல் உரைக்கிறது. அவையில் வாது செய்வோர் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதைத் தெளிவாக உரைக்கிறது . அதாவது,

அவைபுகும் நெறியே ஆயுங்காலை எனத் தொடங்கி,

அவையில் கூறவேண்டியவற்றை அவையில் புகும் முன்னரே ஓர் ஒழுங்கு வரிசைப் படுத்திக் கொள்ளவேண்டும்.

பேச எழும்போது இருவரும் ஒன்றாக எழக்கூடாது.

பேசப் புகுந்தவன் கருத்து தோல்வியுறுதலும் உண்டு. இந்த உண்மையையும் எதிர்பார்த்தே புகவேண்டும்.

இருவரும் கூடி உடன் பட்டு நிறைவு பெற வேண்டும். இதனையும் முன் எண்ணமாகக் கொள்ள வேண்டும்.

'தெரிவுடன் உணர்ந்தோர் செப்பினர்' என்று முடிக்கிறது.

அவையடக்கம் பற்றி ஆங்காங்கே கிடைக்கும் செய்தி:

அவையில் பேசுவோர் அவைக்கு அடங்கி வணக்கம் சொல்லுதல் வேண்டும். இது, அவை அடங்கியல் எனப்பட்டது. ( தொல்காப்பியம்) "(யான்) அறியாதன சொல்லினும் (அவையோர்) பாகுபடுத்திக் கோடல் வேண்டும். என ( அவையிலுள்ள) எல்லா மாந்தர்க்கும் தாழ்ந்து கூறல் என்று நச்சினார்க்கினியர் விளக்குகிறார்.

பேசுவோர் எழுந்து நின்று பேசுதல் (சிலம்பு)

ஒருவர் பேசும் போது மற்றவர் பேசாமை (நாலடியார்)

இகல் இல்லாதவராக எஃகு போன்ற கருத்து உறுதி கொள்ளுதல் (நாலடி)

அதிரப் பேசாமை (ஆசாரக் கோவை)

கொச்சைச் சொல்லுக்கு மாற்றாக 'அவையியல் கிளவி' சொல்லுதல் (தொல்காப்பியம்)

அவைக்கேற்ற வரையறை கொள்ளுதல் (பழமொழி)

முடிவுக்கு வந்த கருத்தை ஏற்றுக் கொள்ளல் (அவிநயம்)

தலைமைக்குக் கட்டுப்படல் (நாலடி)

மகிழ்ச்சியான ஆரவாரக் குறிப்புகள் (மதுரைக் காஞ்சி)

பாராட்டல் (பழமொழி)

நன்றி கூறல் (திருக்குறள்)


இவை பட்டிமன்றத்தில் காணப்படும் பண்புகளாகும்.

விடுதலைக்கு குரல் கொடுத்தவர் தென்னகத்து பூலித்தேவன்

மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன்.
தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலை நிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்!
நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங் கோலொச்சிய பாளையக் காரனாவான். தன் பாளையத்திற்கு மட்டு மின்று மேற்குப் பாளையத்தார் களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச் செய்த மாபெரும் போர்வீரன்.
இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் 'வெள்ளையனே வெளியேறு' என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழ் மறவன் பூலித்தேவனின் வரலாற்றுச் சுவடிகளில் சிலவற்றைக் இங்கு காண்போம்.
மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங் களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு பாளையங்களாக பிரிக்கப்பட்டதன் காரணம் பாண்டிய வமசத்தினர் மீண்டும் படைத் திரட்டி ஆட்சியைப் பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான். மதுரை, திருச்சி, கொங்குநாடு ஆகிய பகுதிகளில் தெலுங்கர்களையே நாயக்க மன்னன் நியமித்தான். திருநெவேலிச் சீமையில் தான் பெரும்பாலும் தமிழர்கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள்.
மேலும் பாண்டிய வம்சத்தின் சிலரையும் பாளையக்காரர்களாக நியமித்து ஓரளவு வம்சாவழி எதிர்ப்பையும் அடக்கினான். மக்களிடத்து இவ்வாறு அதிகார வரம்பை பகிர்ந்தளித்ததால் மக்கள் எதிர்ப்பும் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நாயக்க அரசர்களின் ஆட்சி பலவீனமடைந்தது. இதனால் ஓரளவு சுய அதிகாரம் பெற்றிருந்த பளையக்காரர்கள் சிறிது சிறிதாக நாயக்கராட்சியின் கட்டுப் பாட்டிலிருந்து விலகினார்கள்.
இத்தனைய பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம் இந்திய விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள் பெயர் சித்திர புத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர்.
1-9-1715 ல் மாவீரன் பூலித்தேவர் இவர்களின் புதல்வராக தோன்றினார். இயற்பெயர், 'காத்தப்ப பூலித்தேவர்' என்பதாகும் 'பூலித்தேவர்' என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர் பூலித்தேவர் பிறந்த பொழுது அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். அதற்கு காரணம் பூலித்தேவரின் தந்தை சித்தி புத்திரத் தேவரின் நல்லாட்சிதான்.
அவருடைய ஆட்சி நல்ல முறையில் இருந்ததால்தான் மக்கள் அவர் மீது மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் தான் அவருக்கு பூலித் தேவர் பிறந்தபொழுது, மக்கள் மகிழ்வுற்றார்கள்.
சித்திரபுத்திரத் தேவர் எந்த பிரச்சினையும் இல்லாத அறுபத்து மூன்று ஆண்டுகள் மக்கள் போற்றும் வண்ணம் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாளைக்காரர்கள் மத்தயில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான் பூலித்தேவர் வளர்க்கப்பட்டார். சிறுவயதில் தாதிகளிடம் தன்னு டைய முன்னோர் பற்றிய வீர வரலாறுகளைக் கேட்டு மகிழ்ந்தார்.
மேலும் அந்த பிஞ்சு உள்ளத்தில் இறையுணர்வு பற்றிய தெளிவான விளக்கமும் பதிய வைக்கப்பட்டது. இவ்வாறு சிறுவயதில் ஊன்றப்பட்ட வீர உணர்ச்சியும், இறையுணர்வும் இறுதிவரை அவர் மனதில் இருந்தது. பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப் பட்டது.
சிறு வயதிலேயே முன்னோர் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டதால் தாமும் அவர்களைப்போல் பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உறுதி பூலித்தேவர் மனதில் இருந்தது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார் மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு
இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர் பூலித்தேவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு மாவீரன் என்று கூறுமளவிற்கு அவருடைய உடல்வாகு இருந்தது. அவரைப் பற்றிய ஒரு நாட்டு பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். சோதியைப் போல முகமிருக்கும், திண் தோள்களை உடையவர், பல்லோ பளபளக்கும், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.
காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கி னார்கள். பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக் கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து அவரை அத்தனை இளம் வயதில் மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.
பின்னர் பூலித்வேருக்கு திருமண ஏற்டபாடுகள் நடைபெற்றன.
அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான். கயல்கண்ணி நல்ல அழகி மட்டுமல்ல, வீர விளை யாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர்.
கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள்.
பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர புத்திர தேவன் மற்றும் சிஞானப் பாண்டியன் என்று மூன்று நன்மக்கள் பிறந்தனர்.
பூலித்தேவருக்கு பதினெட்டு வயதிருக்கும் பொழுது கிழக்குப் பளையங்களைச் சேர்ந்த இலவந்தூர் , ஈராட்சி ஆகியவற்றிற்க்கு ஏற்பட்ட எல்லைத் தகராறைத் தீர்த்து வைக்கச் சென்றிருந்தார். அச்சமயம் சிவகிரிப் பாளையத்தான் வந்து கால் நடைகளைக் கவர்ந்து சென்றான். இந்தச் செய்தியை ஒற்றன் மூலம் பூலித் தேவருக்கு கூறப்பட்டது.
உடனே அவர் தளபதியான சவனத்தேவருக்கு செய்தி அனுப்பி சிவகிரிப் பளைக்காரணை தடுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார்.
உடனே 150 வீர்களுடன்ட புறப்பட்டு நேராக சிவகிரிப் படைகளைத் தாக்கு வதற்குச் சென்றார். பூலித்தேவர் போர்க்களத்தில் நுழைந்ததும் சிவகிரி படைகளின் எண்ணிக்கை கனிசமாக் குறைந்து கொண்டே வந்தது. இதனைக் கண்டு மேலும் பலர் களத்தை விட்டு ஓடினர். பூலித்தேவர் இறுதியில் வெற்றிகரமாக கால்டைகளை மீட்டுச் சென்றார். அக்காலப்போர் முறையின் முதற்கட்டமே வேற்று நாட்டின் கால் நடைகளைக் கவர்ந்து செல்வதுதான்.
போரில் வெற்றிபெற்றாலும் சவணத்தேவர் கூடலூர் வரை எதிரிகளை துரத்திச் சென்று போரிட்டார். அவர்களின் எல்லைக் கருகில் சென்று விட்டதால் எதிரி களின் எண்ணிக்கை கூடிவிட்டது.
ஆனாலும் மனம் தளராது போராடி பல பேரை சவணத்தேவர் கொன்று குவித்தார். ஆனால் களத்தில் அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அதையும் பொருட் படுத்தாமல் அவர் போராடியதில், இறுதியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதற்கு விலையாக தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.

CAN U BEAT THIS RESUME !!!!!!!!!!!! !RESUME EDUCATION


இது ஒருவரின் பயோடேட்டா

பார்த்து விட்டு என்ன வேலை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்!!
-----------------------------------------------------

CAN U BEAT THIS RESUME !!!!!!!!!!!! !RESUME EDUCATION /

Qualification:

1950: Stood first i! n BA (Hons), Economics, Punjab University , Chandigarh
,

1952; Stood first in MA (Economics), Panjab University ,Chandigarh
,

1954; Wright's Prize for distinguished performance at St John'sCollege,
Cambridge,

1955 and 1957; Wrenbury scholar, University of Cambridge,

1957; DPhil ( Oxford), DLitt (Honoris Causa); PhD thesis on India'sexport
competitivenessOCCUPATION /

Teaching Experience:

Professor (Senior lecturer, Economics, 1957-59;
Reader, Economics, 1959-63;
Professor, Economics, Panjab University , Chandigarh , 1963-65;
Professor,Internati onal Trade, Delhi School of Economics,University of
Delhi,1969-71 ; Honorary professor, Jawaharlal Nehru University ,New Delhi, 1976
and
Delhi School of Economics, University of Delhi ,1996 and
Civil ServantWorking Experience/

POSITIONS :
1971-72: Economic advisor,
ministry of foreign trade1972-76:
Chief economic advisor, ministry of finance 1976-80:
Director, Reserve Bank of India ;
Director, IndustrialDevelopment Bank of India ;
Alternate governor for India , Board of governors, Asian Development
Bank;
Alternate governor for India , Board of governors, IBRD November 1976 -
April 1980: Secretary, ministry of finance(Department of economic
affairs);
Member, finance, Atomic Energy Commission; Member,finance, Space
CommissionApril 1980 - September 15, 1982 :
Member-secretary, Planning Commission1980-83:
Chairman , India Committee of the Indo-Japan joint study committeeSeptember
16, 1982 - January 14, 1985:
Governor, Reserve Bank of India.1982-85:
Alternate Governor for India, Board of governors, International Monetary
Fund1983-84: Member, economic advisory council to the Prime Minister1985:
President, Indian Economic AssociationJanuary 15, 1985 - July 31, 1987 :
Deputy Chairman, Planning CommissionAugust 1, 1987 - November 10, 19! 90:
Secretary-general andcommissioner, south commission, GenevaDecember 10,
1990 - March 14, 1991 :
Advisor to the Prime Minister on economic affairsMarch 15, 1991 - June 20,
1991 :
Chairman, UGCJune 21, 1991 - May 15, 1996 :
Union finance ministerOctober 1991:
Elected to Rajya Sabha from Assam on Congress ticketJune 1995:
Re-elected to Rajya Sabha 1996 onwards:
Member, Consultative Committee for the ministry of financeAugust 1, 1996 -
December 4, 1997: Chairman, Parliamentary standing committee on commerceMarch
21, 1998 onwards:
Leader of the Opposition, Rajya Sabha June 5, 1998 onwards:
Member, committee on financeAugust 13, 1998 onwards:
Member, committee on rulesAug 1998-2001:
Member, committee of privileges 2000 onwards: Member, executive committee,
Indian parliamentary group June 2001: Re-elected to Rajya SabhaAug 2001 onwards:
Member, general purposes committee

BOOKS:
India 's Export Trends and Prospects for Self-Sustained Growth -Clarendon
Press, Oxford University, 1964;
also published a large number of articles in various economic journals.

OTHER ACCOMPLISHMENTS:

Adam Smith Prize, University of Cambridge ,
1956Padma Vibhushan,
1987Euro money Award, Finance Minister of the Year,
1993;Asia money Award, Finance Minister of the Year for Asia,
1993 and1994

INTERNATIONAL ASSIGNMENTS:

1966: Economic Affairs Officer1966-69:
Chief, financing for trade section,
UNCTAD1972-74:
Deputy for India in IMF Committee of Twenty onInternational Monetary Reform
1977-79: Indian delegation to Aid-India Consortium Meetings1980-82:
Indo-Soviet joint planning group meeting1982:
Indo-Soviet monitoring group meeting1993:
Commonwealth Heads of Government Meeting Cyprus 1993:
Human Rights World Conference, Vienna

RECREATION :

Gymkhana Club, New Delhi;
ife Member, India International Centre,New DelhiName:

Dr Manmohan Singh

DOB: September 26, 1932
Place of Birth: Gah ( West Punjab)
Father: S. Gurmukh Singh
Mother: Mrs Amrit Kaur

Married on: September 14, 1958
Wife: Mrs Gursharan Kaur
Children: Three daughters
Our Prime Minister seems to be the most qualified PM all over
theworld.
Pass this to every INDIAN.... and be PROUD to be an INDIAN

ஊண் போற்றி!! ஊன் போற்றி!!! - முனைவர் இர.வாசுதேவன் M.A.,M.PHIL.,Ph.D.

தமிழ் தொன்மையானது; தமிழர் தம் ஒழுக்கம் அதனினும் தொன்மையானது". தமிழில் தோன்றிய இலக்கியம் அனைத்தும் ஒழுக்கத்தை உரைக்கக் கூடியவை. அதேபோல், தமிழ் மொழியிலுள்ள இலக்கணங்கள் மொழி ஒழுக்கத்தையும் வாழ்க்கை ஒழுக்கத்தையும் உரைக்கத் தோன்றியவையே.

ஒழுக்கம் என்பது நாகரிகம் தோன்றிய காலத்துக்கும் முந்தியது! ஒழுக்கத்தின் தேவையை உணர்ந்து வகுக்கப் பெற்றவையே நீதியும் நெறி முறையும். ஒழுக்கத்தை வலியுறுத்தும் வள்ளுவம், ' ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை ' என்கிறது.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்"

ஒழுக்கம் வாழ்விற்குச் சிறப்பைத் தரும்; அதனால், ஒழுக்கம் உயிரைவிடவும் சிறந்ததாக எண்ணிக் காக்கப் படும். இதன் ஒண்மையை உணராதவர் எய்துவர் எய்தாப் பழி! என்று, எச்சரிக்கிறது, தமிழ் மறை.

ஒழுக்கம் இருவகைப் படும்.அவை, 'புறவொழுக்கம் அகவொழுக்கம்' என்பவையாகும். புறவொழுக்கம் நீரினாலும் அகவொழுக்கம் வாய்மையினாலும் காக்கப் படும்.

அகவொழுக்கம் மனஞ் சார்ந்ததாகவும், புறவொழுக்கம் உடல் சார்ந்த தாகவும் கருதுவர். உடலாலும் உள்ளத்தாலும் ஒழுக்கத்தை ஒழுகினால், வாழ்வில் துன்பம், துயரம் என்பவை தொடராமலிருக்கும். இதுவே, தமிழ்மறை கண்ட வாழ்வியல் உண்மை.

ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க விழைவோர் உடலை ஓம்புகின்ற ஒழுக்க முறைகளைக் கற்றறிதல் நலம். பின்னர், அவ்வொழுக்கத்தை மேற்கொண்டொழு கினால் வாழ்வில் சுகங்கொழிக்கும்.

உடலொழுக்கம்.

தினந்தோரும் உடலை ஓம்புவது தினவொழுக்கம் எனப்படும். தினவொழுக்கத்தில் தவறுகள் நேரின் துன்பமும் துயரமும் தொடரும். தின வொழுக்கத்தைத் தேடாதார் துன்பத்தைத் தேடினார்! எனல் சாலும்.

"நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்"

என்றதனால் அறியலாம்.

உடலுக்கு நோயெனவொன்று எப்போது தோன்றுகிறதென்றால், உண்ட உணவு செரியாமுன் உண்பதனாலும், கழிவை வெளியேற்றாமல் தடுப்பதினாலுமேயாம். அதனாலேயே நோயெனும் துன்பமும் துயரமும் அடைய நேரிடுகிறது.

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்"

ஞாயிறின் உதயத்தைக் காணாமல் தூங்கி எழுவோர் பலர். அவர்களிடம் எப்போதாவது உதயத்தைக் கண்டதுண்டா? என்று கேட்டால், எப்போதோ பார்த்த ஞாபகம்! என்பதுண்டு. அவ்வாறு, காலங்கடந்து துயிலெழாமல் 'வைகறையில் துயில் எழு' என்றார், தமிழ் மூதாட்டி.

உதயத்துக்குமுன் துயிலெழுந்து காலைக் கடனை முடித்து, நீராட வேண்டும். நீராடல் என்றால், ' சனி நீராடு' என்பதைக் குறிப்பிடுவர். அது, சனி தோறும் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்! என்பதைக் குறிப்பதாகும்.

" நாள் இரண்டு; வாரம் இரண்டு;
மாதம் இரண்டு; வருடம் இரண்டு

என்றொரு வழக்கு உடலைப் பேணுதற்காக உரைப்பதுண்டு. நாள் இரண்டு - நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மலம் போக்க வேண்டும்! என்பதையும், வாரம்இரண்டு-வாரம் இரண்டு முறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும்! என்பதையும், மாதம் இரண்டு - மாதம் இரண்டு முறை இல்லற இன்பம் துய்க்க வேண்டும்! என்பதையும், வருடம் இரண்டு - வருடத்திற்கு இரண்டு முறை குடலைச் சுத்தஞ் செய்ய வேண்டும்! என்பதையும் குறிப்பதாகும்.

உணவு:

உயிர் வாழ்வதற்குத் தேவையானது, உணவு. உணவு இல்லையேல் உடலும் உயிரும் இல்லை. அத்தகைய உணவை எவ்வாறு உண்ண வேண்டும்? என்னும் போது, ' அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட' என்று, நாலடி உரைக்கும். ஆறு சுவையுடைய உணவை உண்ணும் போது, முதலில், இனிப்பும் அதன்பின்னர், புளிப்பு, உப்பு, காரம், கசப்பு என்று உண்ட பின்பு இறுதியில், துவர்ப்புச்சுவை உணவை உண்ணவேண்டும். அவ்வாறு உண்பதனால் உடம்பை ஆட்கொண்டிருக்கும் பஞ்சபூதங்கள் சம நிலை பெறும். உணவின் முடிவில் தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ஐயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கும்.

உணவைக் குறிப்பிட்ட காலத்திலேயே உண்ணவேண்டும். எந்த நேரத்திலும் எதையும் உண்ணலாம்! என்னும் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஞாயிறு எழும் போதும், ஞாயிறு மறையும் போதும் உணவை உண்ணக் கூடாது. கோபம், துக்கம், கவலை ஆகியவற்றுடனும், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும், வெட்ட வெளியிலும், ஈரத்துணியுடனும், கை, கால், முகம், வாய் கழுவாமலும் உணவு உண்ணக் கூடாது.

உணவின் அளவு தொழிலுக்கேற்ப மாறுபடும். ஆனாலும், ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு உண்ண வேண்டும்? என்பதற்கு விதி விதிக்கப் பட்டுள்ளது. யோகி, துறவி, மெய்ஞ்ஞானி பொன்றோர் ஒரு நாளுக்கு ஒரு போதும், அறிஞர், சிந்தனையாளர், அலுவலர் போன்றோர் இரு போதும், கடின உழைப்புடையோர் முப்போதும் உணவுண்ண வேண்டும்.

உணவுண்ணும் போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால் ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் செல்வத்தை உண்டாக்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால் அழிவை நோக்கிச் செல்ல வைக்கும்.

உணவுண்ண பல்வகை உண்கலங்கள் பயன் படுத்தப் படுகின்றன. அவற்றுள், பொன், வெள்ளி, வெண்கலம் ஆகியவை சிறந்தவை. அவை, எல்லாராலும் பயன் படுத்த முடிவதில்லை. ஆனால், அவை அனைத்திலும் சிறந்தது, 'வாழை இலை'. வாழையிலையில் உணவுண்டால் உணவைச் சீராகச் செரிமானமடையச் செய்வதுடன் உணவில் குற்றங்கள் ஏதேனும் இருந்தாலும் அவற்றைப் போக்கும். விருந்திற்கும் மருந்திற்கும் வாழையே சிறந்ததாகும்.

உணவை உண்டு முடித்தவுடன் நூறடி தூரம் நடை பயில வேண்டும். தாம்பூலம் தரிப்பது உடலாரோக்கியத்துக்கு உகந்தது.

காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் என்னும் பழக்கம் தொடர வேண்டும். இஞ்சி, சீரணத்தைப் பெருக்கும். சுக்கு, வாயுவை நீக்கும். கடுக்காய், உணவின் கழிவை வெளியேற்றும். இம்மூன்றும் உடலைக் காக்கும் அரணாகவும் மருந்தாகவும் இருக்கும்.

உணவை உண்டு விட்டுச் சும்மா இருந்தால் சுகம் கிடைத்து விடாது! 'சோம்பித் திரியேல்' என்று, மூதாட்டி சொன்ன சொல்லை நினைவில் கொள்ள வேண்டும். 'சும்மா இருப்பதே சுகம்' என்பது வேறு நிலை. அதை நினைத்துக்கொண்டு தூங்கக் கூடாது!

'ஓரடி நடவேன்
ஈரடி கடவேன்
இருந்து உண்ணேன்
படுத்து உறங்கேன்!

என்னும் வாக்கினைக் கவனிக்க வேண்டும்.

'ஓரடி நடவேன்' என்பது, உச்சி வேளையில் தன்னிழல் ஒரு அடியாக இருக்கும் வேளையில் வெளியில் நடக்க மாட்டேன்! என்றும், 'ஈரடி கடவேன்' என்பது, ஈரமான மண்ணில் நடக்க மாட்டேன்! என்றும், 'இருந்து உண்ணேன்' என்பது, முன்னர் உண்ட உணவு வயிற்றில் இருக்கும் போதே உணவு உண்ணமாட்டேன்! என்றும், 'படுத்து உறங்கேன்' உறக்கம் வராமுன்னம் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டு உறங்காமல் கிடக்க மாட்டேன்! என்றும் பொருளைத் தருகிறது. இவ்வழியைக் கடைப் பிடித்தால் மிகுந்த ஆரோக்கிய முடன் இருக்கலாம். அதேபோல்,

'காலை கல்லும்
மாலை புல்லும்
ஆளை வெல்லும்!'

என்னும் மொழியும் கவனிக்கத் தக்கது.

உதயத்துக்கு முன் கல் தரையிலும், ஞாயிறு மறைவுக்குப் பின் புல் தரையிலும் நடை பயின்றால் அது உடல் நலத்துக்கு உகந்தது! என்று, உரைக்கப் பட்டுள்ளது!

உறங்கும் போது, எங்கும் எப்படியும் படுக்கலாம் என்றில்லாமல்,

'தன் ஊர் கிழக்கு
தங்கின ஊர் மேற்கு
வேட்டகம் தெற்கு - உனக்கு
வேண்டா ஊர் வடக்கு!'

என்னும் வழக்கும் கவனிக்கத் தக்கது.

எல்லாருக்கும் உகந்த திசை கிழக்கு! ஆனால், அனைவரும் விரும்பும் திசை மேற்கு! தம்பதியானவர்களுக்குத் திசை தெற்கு! எவருக்கும் எலாத திசை வடக்கு! என்று, பொருள் கொள்வர். எத்திசையில் படுத்து உறங்க வேண்டும்! என்று, அறிவித்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உணவு உட்கொண்ட பின்னர் இளநீர் உட்கொண்டால் வாத பித்த ஐயம் சமமாகும். வரட்சி, வெட்கை ஆகிய சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும். கண் குளிரும். பசியுண்டாகும். இல்லத்தரசி சுகமடைவாள்.

உணவு உண்ட பின்னர் வற்றக் காய்ச்சிய பசுவின் பால் அருந்தினால், கண்ணோய்கள் நாடாமல் நீங்கும். உணவு செரிக்கும். உடல் பெருக்கும். அழகுண்டாகும். சுடு சோற்றில் நெய்விட்டு உணவருந்தினால் தாது வலுவடையும். பசியுண்டாகும். மலம் நீங்கும். உடல் அழகு பெரும்.

பூச்சூடினால் தலை நோய் குணமாகும். வெட்டையும் மேக நோயும் குறையும். கண்ணொளி யுண்டாகும்.

மேற்கண்ட இவையெல்லாம் தமிழ் இலக்கியமும் தமிழ் மருத்துவ நூல்களும் எடுத்துரைப்பன. இயற்கை வாழ்க்கையை மேற்கொண்டிருந்த சான்றோரிடம் தாங்கள் மேற்கொண்டிருக்கும் வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்டோம். அதற்கு அவர், கீழ்க்கண்டவாறு கூறினார்.

சுக வாழ்க்கை நெறி

நாங்கள், மேற்கொண்டொழுகும் ஒழுக்கங்களை வழிமுறைகளை எவரெவர் கடைப் பிடிக்கின்றனரோ அவரெல்லாம் நோயில்லாமல் ஆனந்த வாழ்வு வாழ்வர்! என்று, உறுதிபடக் கூறினார். தாங்கள் மேற்கொள்ளும் நெறியாவனவென்றோம்?

நாங்கள்,
மூன்று வேளையும் நன்னீரால் உடலைச் சுத்தஞ் செய்வோம்!
முப்போதும் ஆலம், வேலம் ஆகிய குச்சிகளினால் பல் துலக்குவோம்!
கொடிய பசியேற்படும் வேளையிலும் குறைவான அளவு உணவையே உட்கொள்வோம்! மெதுவாகவே நடப்போம்!
வெந்நீரில் குளிப்போம்!
தினமும் பால், மோர், நெய் சேர்த்த உணவையே உண்போம்!
வெந்நீரையே அருந்துவோம்!
இளம் பெண்ணுடனே உறவு கொள்வோம்!
மாலை வெய்யலில் காய்வோம்!
சந்தனம், சவ்வாது, புனுகு, திருநீறு போன்ற வாசனைத் திரவியங்களைப் பூசுவோம்! இளநீரை அருந்துவோம்!
மலசலம் அடக்க மாட்டோம்!
குளிர்ந்து தெளிந்த நீரைக் குடிப்போம்!
காலை உண்டி கொள்வோம்!
சந்தனம், அகிற்புகை நுகர்வோம்!
பகற்போதில் மனையாளுடன் உறவு கொள்ளோம்!
தென்றலில் அமர்ந்திருப்போம்!
புணர்ச்சிக் காலத்தில் வலது கையைத் தரையில் ஊன்ற மாட்டோம்!
குடிக்கும் தண்ணீரைக் குரைவாகக் குடிப்போம்!
அதிகமாக மோரைக் குடிப்போம்!
தினந்தோரும் ஆடையை மாற்றுவோம்!
அதிக நேரம் நீரில் ஆடமாட்டோம்!
கந்தயானாலும் கசக்கிக் கட்டுவோம்!
கூழானாலும் குளித்துக் குடிப்போம்!
செரிக்கு முன்னே உணவை உண்ண மாட்டோம்!
இரவு வேளையில் தயிரை உண்ணமாட்டோம்!
எங்கள் ஊரில்தான் எமனும் இருக்கின்றார்.
அவர்,
நாங்கள் இருக்கும் திசைக்கே வருவதில்லை! என்று, கூறினார்.

வாழ்க, வாழ்க்கை ஒழுக்க நெறி! வாழ்வோம், ஒழுக்க நெறி வழி!




பசியின்மையைப்போக்கும் - இஞ்சி - தேனில் பிரண்டை

கொத்துமல்லி
திருவாதி - இம்மூன்றும் துவையல்

மலச்சிக்கலைப்போக்கும் - ஆமணக்கு
நீர் பிரம்மி ( அரைக்கீரை )

பொன்னாங்கண்ணி (உடல் வன்மை)
தேற்றான் (கற்பம்)
சிறுகீரை (புத்தி கூர்மை)

மூட்டுவலியைக் குணப்படுத்தும் - முடக்கறுத்தான் (அடை)
தழுதாழை (காய்ச்சி பூச)
வாத நாராயணன் (அரைத்துப் பூச)

வீக்கத்தைக் குறைக்கும் - செவ்வாமணக்கு (வதக்கிக் கட்ட)
கற்றாழை (சோற்றைப் பூச)
சுழற்சி (காயினைப் பொடியாக்கி)

நீரிழிவைப் போக்கும் - நாவல் (கொட்டை)
ஆவாரை (பூ)
கொன்றை ( பட்டை)
சீந்தில் (நீர்வேட்கைக்கு)

தோல் நோயை நீக்கும் - அறுகம்புல் (சாறு)
புங்கு (விதை)
பூ வரசு (காய்)
நெய்சிட்டி (பொடி)
சிவனார் வேம்பு (பூ குடிநீர்)


தலை முடியைப் பாதுகாக்கம் - வெட்டி வேர்
மருதோன்றி
உசிலை

பார்வைக் குறைபாட்டைப் போக்கும் - நந்தியா வட்டம் (சாறு)
நேத்திர பூண்டு (இலைச்சாறு)
முட்களா (பூ சாறு)

காது நோயைப் போக்கும் - மருள்
பிரண்டை
பூண்டு

பல் நோயைப் போக்கும் - எருக்கு
வேம்பு
நாயுறுவி
காட்டாமணக்கு

வாய்ப்புண் வயிற்றுப் புண்ணுக்கு - மணத்தக்காளி
வில்வம்

இரைப்புக்கு - ஆடாதொடை
கண்டங்கத்தரி

இதய நோய்க்கு - சீந்தில்
தாளிக்கீரை

தண்ணீர் சுத்திகரிப்புக்கு தேற்றான் கொட்டை
கொழுத்தவனுக்கு கொள்ளும்

இளைத்தவனுக்கு எள்ளும் தின்னச் சொல்லும்!


நாட்ட மிரண்டும் நடுமூக்கில் வைத்திடில் - தூக்கம் வரும்!


மூளை - பிரமி; இதயம் - தாமரை; நுரையீரல் - ஆடாதோடை; லிவர் - கீழாநெல்லி;
சிறுநீர்ப்பை - அசோகு; மூட்டு - நொச்சி.


அட்டவணை

வாதம் பித்தம் ஐயம் உடலினர்க்கு ஏற்ற உணவுப் பொருள்கள்

பெயர் வாத உடல் பித்த உடல் ஐய உடல் கீரைகளும்
பயன்களும் கீரை வகைகள்:

அகத்திக் கீரை
முளைக் கீரை
கடலைக் கீரை
கொத்துமல்லிக் கீரை
வெந்தயக் கீரை
முருங்கைக் கீரை
மணத்தக்காளி
பொன்னாங்காணி
கொத்துப் பசலை
முன்னைக் கீரை
நல்வேளை
ஆரை
முசுமுசுக்கை
மூக்கரட்டை
புளியாரை
கோவை
தூதுளை
வல்லாரை
சிறுகீரை
பண்ணை
சக்கரவர்த்தி

காய் கிழங்கு வகைகள்:
கலியாணப் பூசணிக்காய்
கத்தரிப் பிஞ்சு
முருங்கைப் பிஞ்சு
மிதிப்பாகல் பிஞ்சு
கொம்பு பாகல் பிஞ்சு
வெள்ளை அவரைப் பிஞ்சு
வெள்ளரிக்காய் பிஞ்சு
நீளப்புடல் பிஞ்சு
பீர்க்கம் பிஞ்சு
அவரைப் பிஞ்சு
அத்திப் பிஞ்சு
வாழைக்காய்
சுரைப் பிஞ்சு
பலாப் பிஞ்சு
வழுதுணங்காய்
காராகருணை
காட்டுக் கருணை
முள்ளங்கி
வள்ளிக் கிழங்கு
வெங்காயம்
பருங்களா
வாழைத் தண்டு
வாழைப் பூ

வற்றல் வகைகள்:

சுண்டை வற்றல்
காட்டுப் பிரண்டை வற்றல்
தூதுளங்காய் வற்றல்
மணத்தக்காளி வற்றல்
நெல்லி வற்றல்
ஆதொண்டை வற்றல்

உப்பு ஊறுகாய் வகைகள்:

நாரத்தை ஊறுகாய்
மாவடு "
மிளகு "
இஞ்சி "
எலுமிச்சை "
களா "
கடுக்காய் "
நெல்லி "


உப்பு வகைகள்:

இந்துப்பு
கல்லுப்பு
கடலுப்பு


முளைக்கீரை:
வயோதிகர், இளைஞர், வாலிபர் ஆகிய
அனைவர்க்கும் உகந்தது. காய்ச்சல், காசம் போக்கும்.

அறுகீரை:
காய்ச்சல், குளிர் நடுக்கம், சன்னி, கபவாதம் ஆகிய
பிணி போக்கும். காமத்தைத் தூண்டும்.

சிறுகீரை:
கண்புகைச்சல், இருமல், படலம், பாத எரிச்சல்,
வீக்கம், பித்தம் நீங்கி அழகு உண்டாக்கும்.

மணலிக்கீரை:
மார்புச்சளி, வாதம், ஐயம், கிருமி நோய், பயித்தியம்,
சீதளம் நீங்கும்.

சிறு பசலை:
கபத்தை அதிகமாக்கும். புணர்ச்சியில் இன்பம்
உண்டாக்கும், வெப்பம் தணியும், மயூம் இளகும்.

வசலைக்கீரை:
மூத்திரக் கடுப்பு, வெள்ளை, வாந்தி போகும்.

சாணாக்கீரை:
கபம், அக்கினி மாந்தம், மகோதரம், ஆறாப்புண்
நீங்கும்.

பண்ணைக்கீரை:
மலம் இளகும், குடலுக்கு நன்மை, கரப்பான்,கிரந்தி
நீங்கும்.

வள்ளைக்கீரை:
வாதம் போக்கும், குழந்தை பால் சுரக்கும்.

வேளக்கீரை:
தலைவலி, உடல் குடைச்சல், சீரணம், மார்வலி
நீங்கும். வன்மையுண்டாகும்.

பொன்னாங்காணி:
கண்நோய், கருவிழி நோய்,உடல் சூடு, பீனசன்,
மூலம் நீங்கும். உடல் பொன்னிறமாகும்.

வல்லாரை:
கணச்சூடு, மலக்கழிச்சல், இரத்தக் கடுப்பு நீங்கும்.

முருங்கைக்கீரை:
அக்கினி மந்தம், உட்சூடு, தலைவலி, மூர்ச்சை,
கண்ணோய் போகும்.

அகத்திக்கீரை:
பிறரால் இடப்பட்ட மம்ந்தின் தீமை, பைத்தியம்,
நீங்கும். உண்ட உணவு செறிக்கும்.

ஆரைக்கீரை:
பித்த நோய், நீரிழிவு, இரத்த பிரமேகம் ஒழியும்.

தூதுளை:
காது கேளாமை, காதெழுச்சி, காசம், நமைச்சல்,
மதரோகம், அக்கினிமந்தம், திரிதோடம், சூலை,
விந்து நட்டன் ஆகியவை விலகும்.

கருவேப்பிலை:
நா சுவை அறியாமை, சீத பேதியால் வயிற்றுவலி,
நாட்பட்ட காய்ச்சல், பைத்தியம் போகும்.

புளியாரைக்கீரை:
பித்த மபூக்கம், வாத கப விகர்ப்பம், மூலவாயு,
பிராணி, இரத்த மூலம் போகும்.

கொத்துமல்லி:
வாத ரோகம், பித்த நோய், காய்ச்சல், போகும்.
வன்மை உண்டாகும். சுக்கிலம் பெருகும்.

போகம் விளைக்குங் கீரைகள்:

"தாளி முருங்கைத் தழைதூ துணம்பசலை
வாளிவறு கீரையுநெய் வார்த்துண்ணில் - ஆளியென
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாங்
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்"

நறுந்தாளி, நன்முருங்கை, தூதுணம், பசலை, அறுகீரை, இவற்றுடன் யாதானும் ஒன்றைப் புளி நீக்கிப் பாகஞ்செய்து, அன்னத்துடன் நெய் சேர்த்து, நண்பகலில் மாத்திரம் ஒரு மண்டலம் உண்ணில் புணர்ச்சியில் நிவாகம் உண்டாகும்.

பூ வகைகள்:

வாழைப்பூ:

இரத்த மூலம், பிரமேகம், வெட்டை, பயித்தியம், கபாதிக்கம்,
உதரக்கடுப்பு, இருமல், கைகால் எரிச்சல் இவை நீங்கும்.

தூதுளம் பூ:

உடல் பெருக்கும், தாது வளர்ச்சி, அழகுண்டாகும், மகளிர் வசியம்
உண்டாகும்.

வெங்காயப் பூ:
குன்மரோகங்கள், வாத நோயைப் போக்கும்.

வேப்பம்பூ:
வாந்தி, ஏப்பம், கிருமி நீங்கும்.

அகத்திப்பூ:
வெண்சுருட்டு முதலிய பிகையினாலும், வெயிலினாலும்
மருந்துகளினாலும் பிறந்த வெப்பம் அழலை நீங்கும்.

ஆவாரைப் பூ:
மதுமேகிகளுக்கு நன்று, கற்றாழை மணத்தை அகற்றும். உடல்
கவர்ச்சியாகும்.

காலையில் 26 முதல் 26 நாழிகைக்குள் எழுந்திருக்க வேண்டும். சுறு சுறுப்பு உண்டாகும். புத்தி தெளியும். நரம்பு தூய்மையாகும். பயித்தியமும் கோபமும் நீங்கும்.
வாதம், பித்தம், கபம் தத்தம் நிலையில் இயங்கும்.

"புத்தி யதற்குப் பொருந்தும்! தெளிவளிக்கும்
சுத்த நரம்பு நற் றூய்மை யுறும் - பித்தொழியும்.
தாலவழி வாத பித்தம் தத்தநிலை மன்னும் அதி
காலை விழிப்பின் குணத்தைக் காண்"

நீர் கழிக்கும் போது இடக்கையால் வலப்பக்கத்து அடிவயிற்றைப் பிடித்து அமுக்க வெண்டும். மலம் கழிக்கும் போது வலக்கையால் இடப்பக்கத்து அடிவயிற்றை அமுக்க வேண்டும்.


பல் துலக்குதல்:
"வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்குப் பல் துலங்கும்
பூலுக்குப் போகம் பொழியுங்காண் - ஆலுக்குத்
தண்டா மரையாளும் சாருவளே - நாயுருவி
கண்டால் வசீகரமாம் காண்"
துவர்ப்புச் சுவை, கைப்புச் சுவை பல்லுக்கு நல்லது.

நீராடல்:
" காலை குளிக்கில் கடும்பசி நோயும் போம்
மாலை குளிக்கில் இவை மத்திபமே - சோலையுடை
வாச நீர் சுத்த சலம் வன்னி நீராடுங்கால்
தேசமுடற் பேதமுன்னிச் செப்பு"

பஞ்ச கற்பம்:
"பூ நெல்லி நீர் மிளகு பொற்கடுக்காய் வான் மஞ்சள்
கானகத்து வேம்பரிசி காரிகையே - மானங்கேள்
ஒன்றரை ஒன்றேகால் ஒன்று உறுதி முக்கால்
கன்றரைக் கையான் நீரில் தேய்"

பசி:
"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவமுயற்சி தாளாண்மை - தேனுன்
கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்".

வெந்நீர்: "இயம்பிட எளிதே! வெந்நீர், இயம்புவன் சிறிது கேண்மின்!
நயம்பெழூத் தெளீந்த நீரை நன்றாக வறூத்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன் றாக்கித் தான் குறூத்திடு வீராகில்
வயம்பெறு பித்த வாத சேப்பனம் மாறும் மெய்யாய்".


தீமை: "முருங்கைக் கீரை வெந்து கெட்டது
அகத்திக் கீரை வேகாமல் கெட்டது"

"இஞ்சிக்குத் தோடும்
கடுக்காய்க்கு வித்தும் நஞ்சு"
வல்லாரை:
"அக்கர நோய் மாறும் அகலும் வயிற்றிழிவு
தக்க விரத்தக் கடுப்புத் தானேகும் - பக்கத்தில்
எல்லாரையும் அருந்தென்றே யுரைத்து நன்மனையுள்
வல்லாரையை வளர்த்து வை".

நரம்பு நோய்:
"அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ?
கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாம்!
இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்!
நரம்பு கோணிடில் நாமதற்கு என்ன செவோம்?"

தினமருந்து: காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டிடில்
கோலை ஊன்றிக் கூனி நடந்தவன்
கோலைத் தூக்கிக் குலுக்கி நடப்பனே!
தூதுவளை:
"திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவையேல் நல்ல
திருக்குளத்தைப் போலே திருத்தும் - திருக்குளத்தை
எல்லாம் இரவுவிளை என்ன வருந் தூதுவளை
எல்லாம் இரவும் இளியென்"

"தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னை அர்ச்சிக்கத் தான் இருந்தானே"
(திருமந்திரம். 2355)

தன்னையே தான் அறிய முயன்றால், அம்முயற்சியினால் தனக்கு ஒரு கேடும் வராது; தன்னையேதான் அறியாததனால் தானே கெடுகின்றான்; தன்னையே தான் அறியச் செய்யும்அறிவை அறிந்த பின்னால், தன்னையே தான் வணங்கத் தான் இருந்தானே.

(அறிவைஅறிந்தபின்பு, தன்னையே தான் வணங்க, வணங்கத் தன் வாழ்நாள் நீண்டு நெடுநாள் வாழ்வான் என்றுபொருள்)

ஊன் வளர்க்கும் உணவு:

நாம் உண்ணும் உணவு நமக்கு எப்படிப் பயன் படுகிறது? என்பதை, உணவாகப் பயன் படும் பொருள்களைக்கொண்டே அறியலாம்.

நமது உடலும் நாம் உண்ணும் உணவும் இயற்கைவழி இயன்றது! என்பதால், இயற்கை இயற்கைக்கு மருந்தாகிறது! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

1.சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை: சிறுநீர் அடைப்பைப் போக்கும்.
2.கற்பப்பைப் போன்றிருக்கும் கொய்யாக்காய்: கற்பக் கோளாறைப் போக்கும்.
3.மூளை போன்றிருக்கும் அக்ரூட்: மூளையை வளர்க்கும்.
4.கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய்: கண்ணோய்க்கு மருந்து.
5.இதயம் போன்றிருக்கும் செந்தாமரை: இதய நோயைப் போக்கி இதயத்தைக் காக்கும்.
6.உயிரணு போன்றிருக்கும் எள்: உயிரணுவை வளர்க்கிறது.
7.உளுந்து கொடி நரம்பு போன்றிருக்கும்: உளுந்து நரம்பு மண்டலத்தைக் காக்கும்.

"என்னினெய்யு முக்கூட் டெனுநெய்யு மானெய்யுங்
விள்ளுதயி லாதியென வீறுநெய்யு - முள்ளபடி
வாரந் தனக்கிருநாள் வைந்தாடி நோய்களதி
காரந் தனக்கிடமிற் காண்"

வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நோய்கள் அணுகாது ஓடிப்போகும்.

எண்ணெய், பாதத்தில் தேய்த்தால் கண்ணோய் போகும். கண்ணுக்குள் விட்டால் காதுநோய்போகும். காதுக்குள் விட்டால் தலை நோய் போகும். தலைக்குத் தேய்த்தால் நோயெல்லாம்போகும்.

தேங்காய்:
தேங்காய் சூடும் வரட்சியும். பயன் அதிக உணவு. இதனால் இரத்தம் சுத்தமாகும். தாது விளையும். இடுப்புவலி, கீல்வாதம், பாரிசவாதம், முதலியவற்றைக் கண்டிக்கும். ஈரலுக்கு வலிவு கொடுக்கும். உள்புண்ணை ஆற்றும். மூலத்திற்கு நல்லது. விந்து விளையும். இளநீரில் வறுத்த கொத்தமல்லிச் சூரணம் ஊறவைத்திக் குடிக்க நீர்த்தாரையில் ஒழுகும் இரத்தம் நிற்கும்.

தேங்காயை நெல்லில் வைத்து அவித்து குழந்தைக்குக் கொடுக்க வயிற்றுக் கிருமி சாகும். தேங்காய் தைலத்தால் அறிவு வளரும்.

வாழ்க வளமுடம்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

இலத்தின் - வடமொழி - "Black Cat, White Cat"

தொலைக்காட்சியில் காட்டப்படும் வேற்றுமொழிப் படங்களை ஆங்கிலத் துணைத் தலைப்புகளின் உதவியுடன் பார்ப்பது எனக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் ஒன்று.
.
அப்படி ஒரு முறை புகழ்பெற்ற யூகோஸ்லாவிய இயக்குனர் எமிர் கூஸ்தூரீட்சா இயக்கியதென பின்னர் தெரிந்துக்கொண்ட "Black Cat, White Cat" என்ற நகைச்சுவைப் படத்தை மிகவும் ஒன்றிப்போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.
.
கிழக்கு ஐரோப்பாவில் பரவலாக உள்ள ஜிப்ஸி எனப்படும் நாடோடி இனக்குழுக்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்ட இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உருவான ஒரு ஐயம் நேரம் போகப்போக வலுவடைந்தது. படத்தில் வரும் கதை மாந்தர்கள் பயன்படுத்திய பல சொற்கள் இந்திச் சொற்களை ஒத்திருப்பதைக் கவனித்தேன். அவை உச்சரிக்கப்பட்ட விதம் பஞ்சாபிகளின் இந்தி உச்சரிப்பை நினைவு படுத்துவதாக இருந்தது.
.
எடுத்துக்காட்டாக பஞ்சாபிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது 'சுன்' (கேள்) என்ற இந்திச் சொல்லை 'சுனு' என்று ஒருவிதமாக இழுத்து உச்சரிப்பார்கள். மறுநாள் போதி மரத்தின் அடியில் (அதாவது கூகிளில்) தேடியபோது விஷயம் புரிந்தது.
.
அந்தப் படத்தின் பெரும்பகுதி ஐரோப்பிய நாடோடிக் குழுக்களின் மொழியான ரோமானியில் இருந்ததையும், அவர்கள் ஏறத்தாள பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமிய படையெடுப்புகளின் போது பஞ்சாப் பகுதியிலிருந்து மேற்கு நோக்கிக் குடி பெயர்ந்தவர்கள் என்பதையும், ரோமானி மொழி இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளுடன் நெருங்கியத் தொடர்புடையது என்பதையும் தெரிந்துக் கொண்டேன்.
.
தங்கள் தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தும், தொடர்ந்து கடும் அடக்குமுறைகளுக்கு ஆளாகியும் கூட இந்த மக்கள் ஆயிரம் ஆண்டுகளாகத் தங்கள் மொழியின் கூறுகளையும் இன அடையாளத்தையும் இழக்காமல் இருப்பது வியப்பாக இருந்தது.
.
முற்றிலும் புதிய ஒரு மொழியை அணுகும் போது அதில் ஏற்கனவே அறிமுகமானச் சொற்களை அடையாளம் கண்டுக்கொள்வதில் ஒருவிதமான சுகம் இருக்கத்தான் செய்கிறது.வில்லியம் ஜோன்ஸுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.
.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேயரான இவர் சிறுவயதிலேயே ஐரோப்பிய செம்மொழிகளான லத்தீனையும் கிரேக்கத்தையும் கற்றுத் தேர்ந்தவர். கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தில் நீதிபதியாக பணிபுரிய வங்காளத்துக்கு வந்த ஜோன்ஸ் மரபுவழி இந்திய சட்டங்களைத் தெரிந்துக்கொள்வதற்காக சமஸ்கிருத மொழியை கற்கத் தொடங்கினார்.
சமஸ்கிருதத்துக்கும் லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளுக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதை கண்டு அவர் வியப்படைந்தார்.
.
அடுத்த சில ஆண்டுகளை இதுக்குறித்து ஆராய்வதில் செலவிட்ட பின்னர் இந்த மூன்று மொழிகளும் வழக்கொழிந்துவிட்ட ஒரு பழம் மொழியை பொது வேராகக் கொண்டவை என்றக் கருத்தை முன்வைத்தார்.அடுத்த நூறு ஆண்டுகளில் இந்தக் கருத்து மேலும் பல மொழியியல் ஆய்வாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டதன் விளைவாக அஸ்ஸாமிலிருந்து அயர்லாந்து வரை பேசப்படும் நூற்றுக்கணக்கான ஆசிய/ஐரோப்பிய மொழிகள் ஒரே மொழிக் குடும்பத்தைச் (இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பம்) சேர்ந்தவையே என்னும் கருத்து நிறுவப்பட்டது.
.
இந்த மொழிகள் அனைத்தும் ஏறத்தாள ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் (பெரும்பாலும் மத்திய ஆசியாவில்) பேசப்பட்ட ஒரு மொழியிலிருந்துத் தோன்றியவை. Proto-Indo-European என்று தற்போது குறிக்கப்படும் இம்மொழியைப் பேசியவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் சிறுக் குழுக்களாகப் பிரிந்து மேற்கு (ஐரோப்பாவை நோக்கி) மற்றும் தெற்கு (இந்தியாவை நோக்கி) திசைகளில் நகர்ந்ததின் விளைவாக பல கிளைகளாகப் பிரிந்தது என்பது ஏராளமான மொழியியல் / தொல்லியல் / வரலாற்று சான்றுகளின் மூலம் நிறுவப்பட்டுள்ளது.
.
சமஸ்கிருதம் லத்தீன் ஆகிய இரு மொழிகளுக்கும் இடையில் மொழியியல் ரீதியிலான ஒற்றுமைகளைத் தவிர வேறு பல ஒற்றுமைகளும் இருப்பது காணக்கூடியதாக இருக்கிறது.
.
இரண்டுமே பேச்சுவழக்கில் இல்லாத செம்மொழிகள் என்பது வெளிப்படை. ஐரோப்பிய மொழிகளில் லத்தீன் வேர்ச்சொற்கள் மற்றும் இரவல் சொற்கள் ஏராளமாகக் காணப் படுவதைப் போல் இந்திய மொழிகளில் சமஸ்கிருதச் சொற்கள் நிறைந்திருக்கின்றன.
.
தமிழகத்தில் தனித்தமிழ் இயக்கம் தோன்றுவதற்கு முன் மணிப்பிரவாள நடை என்ற பெயரில் அளவுக்கதிகமான சமஸ்கிருதச் சொற்களைக் கலந்து எழுதுவது மேதமையின் அடையாளமாகக் கருதப்பட்டதுப் போல கடந்த காலங்களில் தங்கள் எழுத்தில் ஆங்காங்கே லத்தீன் சொற்களையும் சொற்றொடர்களையும் தெளிப்பது ஆங்கில கல்விமான்களின் வழக்கமாக இருந்தது.
.

இன்னொரு முக்கியமான ஒற்றுமை இரண்டுமே வழிபாட்டுக்குரிய மொழிகள் என்று அடையாளப்படுத்தப்படுவது. சமஸ்கிருதம் இன்றளவும் நம்மில் பலருக்கு வழிபாட்டு மொழியாக இருந்து வருகிறது. குமரி மாவட்ட கத்தோலிக்கரான என் முன்னோருக்கு நானூறு ஆண்டுகளாக லத்தீன் வழிபாட்டு மொழியாக இருந்தது. விவிலியம், முக்கியமான வேண்டுதல்கள் ஆகியவை பதினாறாம் நூற்றாண்டிலேயே தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுவிட்ட போதிலும், திருப்பலி (mass) எனப்படும் இறைவழிபாட்டுக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகள் வரை லத்தீன் பயன்படுத்தப்பட்டது. சில வயதான பாதிரியார்கள் பழக்கத்தை விட முடியாமல் அடக்கச் சடங்கு போன்ற நேரங்களில் லத்தீனில் வேண்டுதல்களைச் சொல்வதை எண்பதுகளின் முற்பகுதி வரை நான் கண்டிருக்கிறேன்.
.
திருப்பலி லத்தீனில் இருந்தக் காலத்தில் பாதிரியார் மட்டுமில்லாமல் பொதுமக்களும் லத்தீனில் (பொருள் புரியாமலே மனனம் செய்து) வேண்டிக்கொள்ள வேண்டும். தமிழ் தவிர வேறு மொழியேதும் அறியாத கிராமத்து மக்கள் "mea culpa, mea culpa, mea maxima culpa" என்று இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்பதைக் கற்பனை செய்வதே சற்று அபத்தமாகத் தான் இருக்கிறது. இப்போது இதை "என் பாவமே, என் பாவமே, என் பெரும்பாவமே" என்கிறார்கள்.

.
எனக்கு லத்தீன் தெரியாது. ஆனால் லத்தீன் சொற்களை வேராகக் கொண்ட ஏராளமான ஆங்கிலச் சொற்களை அறிவேன். அதுபோல எனக்கு சமஸ்கிருதமும் தெரியாது. ஆனால் தமிழ், மலையாளம், இந்தி போன்ற இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படும் நூற்றுக் கணக்கான சமஸ்கிருத சொற்களை அடையாளம் காணமுடியும்.


இந்த இரண்டு சொற்கூட்டங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் சில நேரங்களில் எனக்கு புலப்பட்டு வியப்பளிப்பதுண்டு.

இப்படிப்பட்ட சொற்களை எழுதி வைத்தால் என்ன என்று ஒருமுறை தோன்றியதை செயல்படுத்தியபோது நிறைய சொற்கள் இருப்பது தெரிந்தது. இணையத்தில் உள்ள அகராதிகளைப் பயன்படுத்தித் தேடியதில் இன்னும் சில சொற்கள் அகப்பட்டன.

அவற்றில் மொழியியல் அறிமுகம் எதுவும் இல்லாதவர்களுக்குக் கூட ஒற்றுமை புலப்படக்கூடிய சில சொற்களை மட்டும் ஒரு பட்டியலாகக் கீழே இட்டிருக்கிறேன்.

மொழியியல் அறிமுகம் இல்லாதவர்களுக்கு தொடர்பில்லாததுபோல் தோன்றும் சொற்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளையும் பயிற்சி உடையவர்களால் கண்டறிய முடியும். அதற்கு ஒரு மொழியில் உள்ள சொல் மற்றொரு மொழியில் எப்படித் திரியும் என்ற விதிகளை அறிந்திருக்கவேண்டும்.

ஒரு எளிய எடுத்துக்காட்டாக 'பெயர்' என்றத் தமிழ் சொல்லுக்கும் அதே பொருளுடைய கன்னடச் சொல்லான "ஹெசரு" என்பதற்கும் உள்ள தொடர்பை மூன்று விதிகளைக் கொண்டு விளங்கலாம்.

விதி 1: தமிழ்சொல்லின் துவக்கத்தில் 'ப' வந்தால் அது கன்னடத்தில் 'ஹ' என்று திரியும் (புலி -> ஹுலி, பால் -> ஹாலு).

விதி 2: 'ய' என்ற எழுத்து 'ச' என்றுத் திரிவதை தமிழ் மொழிக்கு உள்ளேயேக் காணலாம் (நேயம் -> நேசம், குயவன் -> குசவன்).

விதி 3: 'ர்' என்ற எழுத்தில் முடியும் சொற்களை 'ரு' என்று முடியுமாறு உச்சரிப்பது கன்னடர்களின் வழக்கம் (ஓசூர் -> ஓசூரு, மைசூர் -> மைசூரு). இந்த மூன்று விதிகளையும் 'பெயர்' என்ற சொல்லின் மேல் செலுத்தினால் 'ஹெசரு' என்று உருமாறும்.
இரண்டு மொழிகளில் உள்ள சொற்களுக்கு இடையே உள்ளத் தொடர்பை அறிய வழக்கொழிந்துவிட்ட பழஞ்சொற்களைப் பற்றிய அறிவும் தேவை.

எடுத்துக்காட்டாக, 'இன்று' என்பதை 'இண்ணு' என்றும் 'நாளை' என்பதை 'நாள' என்றும் சொல்லும் மலையாளிகள் 'நேற்று' என்பதை மட்டும் 'இன்னலெ' என்று ஏன் சொல்கிறார்கள் என்று நான் குழம்பியதுண்டு. இதற்கான விளக்கம் வேங்கடராஜுலு என்பவர் எழுதிய "தமிழ் சொல்லமைபு" என்ற நூலில் கிடைத்தது.


பழந்தமிழில் 'நேற்று' என்பதைக் குறிக்க 'நெருநல்' மற்றும் அதன் திரிபாகிய 'நென்னல்' ஆகியவைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறள்: "நெருநல் உளனொருவன் இன்றில்லை.." - நேற்று இருந்தவன் இன்றில்லை).

நென்னல் என்பதே கன்னடத்தில் 'நென்ன' என்றும் மலையாளத்தில் இன்னலெ என்றும் திரிந்திருக்கிறது.தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளும், மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் பிராஹுய் போன்ற மொழிகளும் சமஸ்கிருதம், லத்தீன் போன்ற இந்திய-ஐரோப்பிய மொழிகளுடன் சற்றும் தொடர்ப்பில்லாத மற்றொரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை முதன்முதலில் முறையாக ஆய்ந்து அறிவித்தவர் ராபர்ட் கால்டுவெல். 1841-ல் கிருஸ்தவம் பரப்புவதற்காக திருநெல்வேலிக்கு வந்த இவர் தொழிலுக்கு உதவும் என்று தமிழ் கற்கத் தொடங்கிய பின் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அடுத்த ஐம்பது ஆண்டுகளைத் தமிழ் ஆய்விலும் மொழியியல் ஆய்விலும் செலவிட்டார். "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூல் இவரது முக்கியமான பங்களிப்பு. தமிழறிஞர்களால் "கால்டுவெல் அய்யர்" என்று குறிப்பிடப்படும் இவருக்கு சென்னைக் கடற்கரையில் தமிழக அரசால் சிலை வைக்கப்பட்டது.

அண்மைக்காலமாக அய்யரவர்களுக்கு நேரம் அவ்வளவாக சரியில்லை. "இந்தியாவைத் துண்டாட வந்த வெள்ளை இனவெறியன்" போன்ற வசைகள் தன் மீது ஏவப்படுவதை அறிந்தால் கால்டுவெல் இடையன்குடியில் உள்ளத் தன் கல்லறையில் புரண்டுப் படுக்கக்கூடும்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதையெல்லாம் பள்ளிப்பாடத்தோடு விட்டுவிட்டச் சிலருக்கு தமிழும் சமஸ்கிருதமும் முற்றிலும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை என்ற ஆய்வு முடிவை எவ்வளவு ஹஜ்மோலாவுடன் சேர்த்து விழுங்கினாலும் செரிக்க முடியாமல் இருப்பதே இந்த வசைகளுக்குக் காரணம்.


என் நண்பர் ஒருவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். சென்னையில் சில ஆண்டுகள் தங்கியிருந்தபோது தமிழைச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டுவிட்டார்.


அவரது ஆர்வத்தையும் முயற்சியையும் பாராட்டியபோது, "தமிழ் தெலுகு ரெண்டுக்கும் பெரிய டிஃபரன்ஸ் இல்லை. ஆஃப்டர் ஆல், ரெண்டுமே ஸான்ஸ்க்ரிட்லேந்து வந்தது தானே" என்றார். தமிழும் தெலுங்கும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை என்ற அவரதுக் கருத்து கடந்த நூற்றைம்பது ஆண்டுகால மொழியியல் ஆய்வு முடிவுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று விளக்க முயன்றபோது சற்று எரிச்சல் கலந்தக் குரலில் சொன்னார்:

"இண்டியன் லாங்குவேஜஸ் எல்லாம் ஸான்ஸ்க்ரிட்லேந்து தான் வந்ததுங்கிறது ரொம்ப பேசிக்கான விஷயம்". உண்மையில் பெரும்பாலான தெலுங்கர்களும் மலையாளிகளும் (சிலத் தமிழர்களும்) இந்தக் கருத்தைக் கொண்டிருப்பதை விவாதங்களில் கண்டிருக்கிறேன்.

தங்கள் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியதல்ல என்று மொழியியல் ஆதாரங்களோடுச் சுட்டிக் காட்டப்பட்டால் இவர்கள் மிகுந்த சினம் கொள்வதைக் காணலாம்.


மேற்படிக் கருத்தைக் கொண்டிருப்பவர்கள் செய்யும் தவறு இதுதான்:

தென்னிந்திய மொழிகளில் ஏராளமான சமஸ்கிருத இரவல் சொற்கள் இருப்பதைக் காண்கிறார்கள். எனவே தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருத்ததிலிருந்து தான் தோன்றியிருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இதைவிட அபத்தம் வேறெதுவும் இருக்கமுடியாது.

நானூறு ஆண்டுகளுக்கு முந்தையத் தமிழில் ஒரு ஆங்கிலச் சொல் கூட இருந்திருக்காது.


ஆனால் இன்றையப் பேச்சுத்தமிழிலும் (திங்க் பண்ணி, டிசைட் பண்ணி, இன்ஃபார்ம் பண்ணி என்று பேசப்படும் 'பண்ணி' மொழியில்) ஜூனியர் விகடன் போன்ற எழுத்துக்களிலும் ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலந்திருப்பதால் தமிழ் ஆங்கிலத்திலிருந்துத் தோன்றியது என்றுச் சொல்லமுடியாது.

இருநூறு ஆண்டுகளாக தமிழர்கள் மீது ஆங்கிலேயர் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது மற்றும் இன்றைய உலகில் ஆங்கிலம் பேசுவோரின் மறைமுக ஆதிக்கம் ஆகியவையே தமிழில் ஆங்கிலக் கலப்புக்குக் காரணம்.

தென்னிந்திய மொழிகளில் சமஸ்கிருதக் கலப்புக்கான காரணமும் இதுபோன்றது தான். உண்மை இப்படியிருக்க, இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்துத் தோன்றியவை என்பது மத நம்பிக்கைகளைப் போல தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒரு நம்பிக்கையாக இந்தியர்கள் நடுவே நிலவுகிறது.

தங்கள் மதம், இனம் தொடர்பான நம்பிக்கைகளுக்கும் ஐதீகங்களுக்கும் எதிரான அறிவியல் / தொல்லியல் ஆய்வு முடிவுகளை மூர்க்கமாக எதிர்ப்பதும் உள்நோக்கம் கற்பிப்பதும் இந்தியர்களுக்கு மட்டுமே உள்ள இயல்பு அல்ல.

மனித இனத்தின் தோற்றம் குறித்த டார்வின் கோட்பாடு தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என்பதால் அது பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுவதை கடுமையாக எதிர்த்து அதற்கு மாற்றாக எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாத intelligent design என்ற ஒரு பம்மாத்து தத்துவத்தை அமெரிக்க கிருஸ்தவ அடிப்படைவாதிகள் முன்வைப்பதை இங்கேச் சுட்டலாம்.

அதுபோல இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் பிறப்பிடம் மத்திய ஆசியா என்ற ஆய்வு முடிவு இந்தியாவில் 'பித்ருபூமி', 'புண்ணியபூமி' போன்ற கருத்தாக்கங்களால் ஒருத் தேசியத்தை வரையறைச் செய்து தங்களுக்கு வேண்டாதவர்களை அதற்கு வெளியே நிறுத்தி மகிழும் சிலருக்கு படக்கூடாத இடத்தில் உதைக்கப்பட்டதுப் போன்ற உணர்வை எழுப்புகிறது போலும்.

எனவே அதை மறுத்து இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் பிறப்பிடம் இந்தியா தான் என்று "எப்படியாவது" நிறுவவேண்டும். மொகஞ்சதாரோவிலும் ஹரப்பாவிலும் வாழ்ந்த மக்கள் சமஸ்கிருத மொழியையோ பண்பாட்டையோ அறிந்திருக்கவில்லை என்பது நியாயமான ஐயங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் நிறுவப்பட்டுவிட்டப் போதும் அங்கே சமஸ்கிருதத்தின் இருப்பை நிலைநாட்டியேத் தீருவோம் என்ற முன்முடிவுடன் நடத்தப்படும் "ஆய்வுகள்" இந்தப் போக்கின் நீட்சி.

பதிவுக்கு மீள்வோம்.
கீழே உள்ளப் பட்டியல் சமஸ்கிருதம் மற்றும் லத்தீன் சொற்களிடையே உள்ள ஒற்றுமைகளின் அடிப்படையில் உருவானது. வேறு சில சமஸ்கிருதச் சொற்களுக்கு லத்தீன் சொற்களோடு உள்ள ஒற்றுமையை நிறுவ முடியாவிட்டாலும் மற்ற ஐரோப்பிய மொழிகளில் அதேபோல் ஒலிக்கும் சொற்கள் இருப்பதைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, நாபி (தொப்புள்) என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குரிய லத்தீன் சொல் umbilicus. ஆனால் ஜெர்மன் மொழியில் nabel, ஆங்கிலத்தில் navel.

அதே வேளையில் சமஸ்கிருதத்துக்கு ஐரோப்பிய மொழிகளைக் காட்டிலும் பலமடங்கு அதிக ஒற்றுமை இரான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் பேசப்படும் பழைய பாரசீக மொழியிலிருந்து தோன்றிய மொழிகளுடன் இருக்கிறது. இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் சமஸ்கிருதத்துக்கு பாரசீக மொழி சொந்த சகோதரி என்றால் லத்தீன் ஒன்றுவிட்ட சகோதரி. பட்டியல் இந்த வரிசையில் உள்ளது:

முதலில் தமிழ்ச்சொல், அடுத்த வரியில் சமஸ்கிருதச் சொல்லும் தொடர்புடைய இந்திய மொழிச் சொற்களும், இறுதியாக லத்தீன் சொல்லும் தொடர்புடைய ஆங்கிலச் சொற்களும்.



1. பிறப்பு

ஜன் -> ஜன்மம், ஜனனம்
genus -> genetic, genealogy

2. இறப்பு
மர் -> மரணம்
mors -> mortuary, mortal

3. தாய்

மாத்ர் -> மாத்ருபாஷா, 'வந்தே மாதரம்'
mater -> matrilineal, maternal

4. தந்தை

பித்ர் -> பித்ருபூமி, 'பிதுர் கடன்'
pater -> patriarchal, paternal

5. பெயர்

நாமன் -> நாமம், நாமகரணம்
nomen -> name, nomenclature

6. நெருப்பு

அக்னி -> அக்னி
ignis -> ignite

7. கடவுள்

தேவ -> தெய்வம்
deus -> deity, deify

8. மன்னன்

ராஜ -> ராஜகுரு, ராஜகுமாரன்
regis -> regicide, regal

9. கைம்பெண்

விதவா -> விதவை
vidua -> widow

10. மூக்கு

நாஸ் -> நாசி
nasus -> nasal

11. பல்

தந்த் -> தாந்த் (ஹிந்தி: பல்)

12. அடி
பாத -> பாதசாரி
pedis -> pedestrian, pedal

13. இரண்டு
த்வி -> த்விபாஷி (இரு மொழி அறிந்தவன்), த்விவேதிduo -> dual, duet

14. மூன்றுத்ரி -> த்ரிமூர்த்தி, த்ரிவேதிtria -> triangle, trinity

15. ஏழுசப்த -> சப்தஸ்வரம் (ஏழு ஸ்வரங்கள்)septem -> september (7th month in old calender)

16. ஒன்பதுநவ -> நவக்கிரகம், நவராத்திரிnovem -> november (9th month in old calender)

17. பத்துதச -> தசாவதாரம், தசாப்தம்decem -> december, decimal

18. என்னைமா -> மேய்ன் (இந்தி: நான்)me -> me

19. உன்னைத்வா -> து (இந்தி: நீ)tu -> thou (Old English: you)

20. உள்ளம்மனஸ் -> மனஸ்தாபம், மனம்mens -> mental

21. பெரும்-மகா -> மகாகவி, மகாராஜாmagna -> magnificent, megastar

22. சிறைகாராக்ரஹ -> காராக்ரஹம்carcer -> incarcerate

23. தொன்மையானசன -> சனாதனsenex -> senile, senior

24. இளைஞன்யுவன் -> யுவன்iuvenis -> juvenile

25. குரல் / பேச்சுவாக் -> வாக்குvox -> vocal

26. ஆடவன்வீரா -> வீரியம்vir -> virile

27. சொல்வ்யார்த்தி -> வார்த்தைverbum -> verbal

28. தன்ஸ்வ -> சுய, சுயம்suo -> 'suo moto'

29. இரவுநக்தம் -> நக்ஷத்திரம்noctis -> nocturnal

30. புதுமைநவ -> நவீனnovus -> novel

31. உதவிஸாக -> சகாயம்succurro -> succor

32. அறிவுஞான -> ஞானம்gnoscere -> ignore, knowledge

33. நடுமத்ய -> மத்யஸ்தம், மத்தியில்medius -> median, middle

34. கக்குதல்வாமிதி -> வாந்தி (திரிபு)vomito -> vomit

35. மாலுமிநௌகர -> நௌக்கா (இந்தி: படகு)nauta -> nautical

36. உள்ளே / இடையேஅந்தர் -> அந்தராத்மா, 'அந்தர்-ராஷ்ட்ரிய' (இந்தி)inter -> internal, international

37. ஊர்தல்சர்ப்ப -> சர்ப்பம் (பாம்பு)serpere -> serpent

38. வண்டிவாஹன -> வாகனம்vehiculum -> vehicle

39. நிலம்தர -> தரை, தரணிterra -> terrestrial, terrain

40. ஆடைவஸ்த்ர -> வஸ்திரம்vestis -> vest

ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம்

ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் - பாகம் 1



இந்தக் கட்டுரையை வெளியிட்ட
தமிழோவியம் இதழுக்கு நன்றி.
---------------------------------------
அறிவியல் பார்வையில் மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் : பாகம் 1

மிகுந்த சமய, ஆன்மீகப் பற்றுள்ள, ஆனால் ஜோதிடத்தை சிறிதும் நம்பாத (சொல்லப் போனால் ஜோதிடத்தை எதிர்க்கும்) ஆள் நான் என்றால் யாரும் நம்பவும் ஏற்றுக் கொள்ளவும் மறுக்கிறார்கள்.
“என்ன சார், இவ்வளவு அழகா விபூதி குங்குமம் வெச்சுருக்கீங்க, ஜோதிடம் எல்லாம் பொய்யினு இப்படி நாத்திகர் மாதிரி பேசறீங்களே!” என்பது ஒரு வகை.
“நீ ஜோசியத்தை நம்பாமல் கேலி பேசுவதால் உன் ஆன்மீக சாதனைகள் எல்லாமே வீணாய்ப் போகும்” போன்ற சில ‘பெரியவர்களின்’ சாபங்கள் இன்னொரு வகை.
தளையற்ற சிந்தனைகளிலும் உணர்வுகளிலும் முகிழ்த்த நம் சமய, ஆன்மீக மரபுகளைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள் இப்படி முரண் போலத் தோன்றுகின்ற சில சின்ன விஷயங்களைக் கூட ஜீரணிக்கத் தயங்குவது ஆச்சரியமான முரண்பாடு தான்.

முதலில் வரலாற்றுப் பார்வையில் ஜோதிடம் பற்றிச் சில விஷயங்கள்.“ஜ்யோதிஷம்” என்கிற மூலச் சொல்லுக்குப் பொருள் “ஒளி பற்றிய அறிவு” என்பது.
ஒளிரும் பொருள்களான சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்கள் பற்றிய ஆராய்ச்சியையும், அறிவையும் குறிப்பதற்காக வேத இலக்கியத்தில் இந்தச் சொல் பயன்பட்டது, ஒரு வகையில் பண்டைய வான சாஸ்திரம் எனலாம். இது பற்றியே வேத வித்யையின் ஆறு அங்கங்களில் ஒன்றாக ஜோதிடம் அறியப் பட்டது.
வேத காலத்திலிருந்து இந்த அறிவு விரிவாக்கம் பெற்று வளர்ச்சியடைந்த கால கட்டங்களில் முக்கியமான ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று விஷயங்கள் பற்றிய சிந்தனை வளர்ச்சியை இந்தத் துறை உள்ளடக்கியது –

1. வானியல் : வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது. அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் (celestial objects) தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை.
2. கணிதம் : வான் பொருட்களின் இடம் மற்றும் இயக்கம் பற்றிய அறிவை முன்னெடுத்துச் செல்ல அடிப்படை ஜியோமிதி மற்றும் முக்கோணவியல் (Trignometry) அத்தியாவசியமாயிற்று. ‘கணிதம்’ என்பதும் ஆறு வேத அங்கங்களில் ஒன்றாக அறியப்பட்டுத் தனித் துறையாக வளர்ந்து வந்தது. எனவே, ஜோதிடத்திலும் கணித அறிவின் பல கூறுகள் பயன்படுத்தப் பட்டன.

3. கால அளவு முறைகள்: எல்லா பண்டைய நாகரீகங்களின் வளர்ச்சியிலும் காலக் கணக்கு முறைகள் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின. பன்னிரண்டு ராசிகள், சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்டு நாட்களை அளவிடுதல் போன்றவை. பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள், பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப் பட்டன. ஆவணி மாதம் வளர்பிறையில் அஷ்டமியும் ரோகிணியும் கூடியிருந்த நாளில் கண்ணன் பிறந்தான் என்பது போல.
பஞ்சாங்கம் என்பது அடிப்படையில் ஒரு காலக் கணக்குக் காட்டி என்பதாகவே உருவாயிற்று.மேற்சொன்ன வானியல் அறிவும், கணித அறிவும், பல நூற்றாண்டுகளாகத் திரட்டப் பட்ட பிரபஞ்ச நிகழ்வுகள் (cosmic events) பற்றிய பதிவுகளும் (recordings) ஒன்றிணைந்து இத் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தின.
எந்தத் தொலைநோக்குக் கருவியின் உதவியுமின்றி கிரகணங்களைத் துல்லியமாகக் கணிப்பது போன்ற அரிய நுட்பங்கள் இதனால் உருவாயின. ஜ்யோதிஷம் என்று முதலில் அறியப் பட்ட அறிவுத் துறை இது வரை தான்.

இதே கால கட்டத்தில் தான் கர்மம், ஊழ், வினைப்பயன், மறுபிறவி, பிரபஞ்சவியல் போன்ற கருத்துகளும் வளர்ந்தன. ஒவ்வொரு உயிரின் செயல்பாடுகளும் அதன் கர்ம வினைப் படியே நடந்தேறும், ஒரு ஜீவனின் சுழற்சியை முற்றுமாகத் தீர்மானிப்பது அதன் கர்மமே என்ற அடிப்படை சமய உண்மையும் வலுப்பெற்றது.
“அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது”, பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பொருட்களால் ஆனது போல் தோன்றினாலும், அடிப்படையில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, சொல்லப் போனால் ஒன்றேயான பொருளால் ஆனது என்னும் வேதாந்த சிந்தனையும் இதனூடாக முளைத்தது.
பல்வேறு பட்ட இந்த சமய, அறிவியல் தத்துவங்களின் தாக்கங்களினால் “வான வெளியில் சுழலும் கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையிலும் புகுந்து, ஓரளவு கர்ம வினைகள் மற்றும் அதன் பயன்களையும் தீர்மானிக்கிறது” என்பதாக ஒரு கருத்து உருவாகி யிருக்கலாம் என்றே தோன்றுகிறது.
இதுவே இன்று நாம் ஜோதிடம் என்று அழைக்கும் விஷயமாக வளர்ந்திருக்கிறது. நாளடைவில் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இதில் “ஓரளவு” என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக “எல்லாவற்றையுமே” கிரக சஞ்சாரங்கள் தான் தீர்மானிக்கின்றன என்பதாக வளர்த்தெடுத்திருக்கலாம். ஏற்கனவே புழக்கத்திலிருந்த சகுனம் பார்த்தல், பறவைகள் மற்றும் விலங்குகளின் சேஷ்டைகள் இயற்கை நிகழ்வுகளை முன்னறிவிக்கும் போன்ற நம்பிக்கைகள் எல்லாம் கலந்து, இன்று அஸ்ட்ராலஜி மட்டுமல்லாமல் நியூமெராலஜி, ஜெம்மாலஜி, ‘சும்மா’லஜி என்று அப்பாவி மக்களையும், பல படித்த முட்டாள்களையும் பைத்தியம் பிடிக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலைமைக்கு வந்திருக்கலாம்.

சுவாமி விவேகானந்தர் “மனிதனின் விதிக்கு அவனே பொறுப்பாளி” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவில் ஜோதிடம் பற்றிய தமது கருத்துக்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார். “ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற அரசவம்சங்களில் தோன்றியவர்களின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகங்கள் கணிக்கப்பட்டு எதிர்காலம் பற்றிய யூகங்கள் கூறப்பட்டன, இந்த ஊகங்கள் பிறகு நடந்த உண்மை சம்பவங்களுடன் ஒப்பு நோக்கப்பட்டன.
இப்படியே ஒரு ஆயிரம் வருடங்கள் ஜோதிடர்களின் வம்சாவளிகள் இதை செய்து வந்தன. இந்தப் போக்கில் பல யூகங்கள் “பொது விதிகளாக” அறியப்பட்டு ஜோதிடப் புத்தகங்கள் உருவாகியிருக்கலாம்” என்று சுவாமிஜி கூறுகிறார். “பண்டைய இந்துக்களிடமிருந்து வான சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்ட கிரேக்கர்கள், தங்கள் கலாசாரத்தில் பிரபலமாக இருந்த ஜோதிடக் கலையை இந்துக்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கலாம்” என்றும் சுவாமிஜி கூறுகிறார்.
இதன்படி பார்த்தால் இன்றைய ஜோதிடக் கலையின் மூலம் வேத கலாசாரமே இல்லை என்றாகிறது! “ஜோதிடத்தின் சிறு சிறு நுட்பங்களிலும் அளவுக்கு அதிகமான கவனம் செலுத்தத் தூண்டிய மூடநம்பிக்கைகள் காலப் போக்கில் இந்துக்களுக்குப் பெரும் தீங்கையே விளைவித்திருக்கின்றன” என்றும் அவர் மதிப்பிடுகிறார்.
அவர் மேலும் கூறுகிறார் - “வேதாந்த தத்துவத்தின் படி ஒரு பொருளின் சகல பரிணாமங் களும் அதன் இயற்கையிலேயே இருக்கின்றனவே அன்றி அதற்கு வெளியில் இல்லை (மரம் முழுவதும் விதைக்குள் அடங்கியிருப்பது போல).. என்னுடைய இப்போதைய நிலை முழுவதையும் விளக்குவதற்கு என் கர்ம வினையே போதுமானது, கிரகங்களும் நட்சத் திரங்களும் தேவையில்லை!.. (போதிசத்வரான) புத்தர் மறுபடியும் மறுபடியும் பற்பல மிருகங்களாகவும் பறவைகளாகவும் பிறந்து, ஒவ்வொரு முறையும் இறுதியில் புத்த நிலையை அடைகிறார்.
இதில் நட்சத்திரங்களுக்கு என்ன வேலை? அவற்றின் தாக்கம் மிகச் சிறிதளவு இருக்க லாம், ஆனால் நம் கடமை அவற்றை ஒதுக்கித் தள்ளுவது தானே தவிர, அவற்றை எண்ணி மறுகிக் கவலையுறுவதல்ல.. என் போதனையின் முதல் உபதேசம் இது தான் – உடலை யோ, மனத்தையோ, ஆன்மாவையோ பலவீனப் படுத்துவது எதுவாயினும், அதைக் கால் தூசுக்கு சமானமாகக் கூடக் கருதாதீர்கள்! மனிதனில் இயல்பாக உறையும் ஆன்ம சக்தியை வெளிக்கொணர்வதே உண்மையான சமய தத்துவம்”

ஒரு பழைய கதை. ஒரு ஜோதிடர் அரசரிடம் வந்து “இன்னும் ஆறு மாத்தில் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும், என் கணக்கு என்றும் பொய்யாகாது” என்று சொன்னார். இந்த மரண பயத்திலேயே அரசருக்குப் பாதி உயிர் போய்விடும்போலிருந்தது.
இது பொறுக்க முடியாத அறிவாளி அமைச்சர் ஜோதிடரைக் கூப்பிட்டு “தங்கள் கணக்குப் படி, தங்களின் ஆயுட்காலம் எவ்வளவோ?” என்று கேட்டார். “பன்னிரண்டு வருஷத்திற்கு எனக்கு ஒரு கண்டமும் கிடையாது. இது நிச்சயம்” என்று சத்தியம் செய்தார் ஜோதிடர். அடுத்த கணம் அமைச்சர் வாளை உருவினார். ஜோதிடரின் தலை தரையில் கிடந்தது. “இந்தப் பொய்யன் சொன்னதை இன்னும் நம்புகிறீர்களா?” என்று அரசரைத் தெளிவித்தார் அமைச்சர்.இந்தக் கதையைக் கூறிய சுவாமிஜி, மேலும் சொல்லுக்கிறார் –

“(கடந்த காலம் பற்றிய) பல ஆச்சரியகரமான விஷயங்கள் ஜோதிடர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவை அனைத்தையும் கிரக நட்சத்திரக் கணக்குகளைக் கொண்டு அவர்கள் சொல்லுகிறார்கள் என்று நம்புவதற்குக் காரண அறிவு இடம் கொடுக்கவில்லை.
பெரும்பாலும் மனதைப் படித்து (mind reading) சொல்லப்படுபவையே இவையெல்லாம்… உண்மையான சமய தத்துவம் உங்களை உறுதியாக்கி குருட்டு நம்பிக்கைகளினின்று விடுவிக்கும்… மிக மிக உயர்வானவை அனைத்தும் (ஆன்மாகிய) உன் காலடியில் கிடக்கின்றன. நீ நினைத்தால் நட்சத்திரங்களையும் கையில் அள்ளி விழுங்கி விடலாம். ஆன்மாவாகிய உன் உண்மை இயல்பு இந்தப் பெரும் சக்தியே..”
சென்ற நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஆன்மீக குருவாகவும், சிந்தனையாளராகவும் திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் இவை.
சீர்திருத்தவாதியான சுவாமிஜியின் கருத்துக்கள் இப்படிப் புரட்சிகரமாக இருப்பதில் வியப்பில்லை. ஆனால் காலம் காலமாக வந்த சமய, ஆன்மீக மரபுகள் என்ன சொல்லு கின்றன? அதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.




ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் : பாகம் 2

அறிவியல் பார்வையில் மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையிலும் அடிபடும் ஜோதிடம் :

ஜ்யோதிஷம் என்னும் அறிவுத் துறையின் வரலாறு மற்றும் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் பற்றி சென்ற பாகத்தில் பார்த்தோம். நான்கு யோகங்கள், புராணங்கள், சைவ-வைணவ சமயங்கள் முதலியவற்றின் பார்வையில் இன்றைய ஜோதிடம் பற்றிப் பார்க்கலாம்.
யோகங்கள் :

கர்ம யோகத்தின் சாரம் பலன் சாரா செய்கை என்பது. முழு மனதுடனும், சிரத்தையுடனும், வெற்றி-தோல்வி லாப-நஷ்டம் போன்ற “இருமை”களையும் பலன்களையும் எண்ணிப் பார்க்காமல், எல்லாச் செயல்களையும் அர்ப்பணிப்பு உணர்வோடு ‘யக்ஞம்’ போன்று செய்யவேண்டும் என்பதே இந்த யோகத்தின் கோட்பாடு.
ஆனால் ஜோதிடத்தில் அதிகம் புழங்கும் வார்த்தையே “பலன்” தான்! எனவே ஜோதிடம் கர்ம யோகத்திற்கு நேர்மாறான நிலைப்பாட்டில் இருக்கிறது. ‘கர்மம்’ என்பதை செயல் என்று கொள்ளாமல் வைதீக நோக்கில் யாகம், ஹோமம் என்று கொண்டாலும், ஜோதிடத்தின் அறிவுரைப் படி சில கிரக தோஷங்களை முறியடிப்பதற்காக இவற்றைச் செய்தால் அது காம்ய கர்மம் (பலன் விரும்பிச் செய்யப்பட்டது) தானே தவிர கர்ம யோகமல்ல.

ஞான யோகத்தின் சாரம் வேதாந்த விசாரம். “நான் யார்?” என்ற கேள்வியில் தொடங்கி ஜீவன், பிரம்மம், மாயை, எல்லாத் தளைகளிலிருந்து விடுபடுதல் போன்ற தத்துவ சிந்தனை கள். பௌதீக ஆகாசத்தில் ஒளிரும் சூரியனை சிதாகாசத்தில் ஒளிரும் ஆன்மா வுடன் ஒன்றிணைத்துத் தான் ஞான யோகம் பார்க்கிறது, ஜோதிடம் பார்ப்பது போல கிரக, ராசி மண்டலத்தின் தலைவனாக மட்டும் அல்ல.
“ஓ சூரியதேவனே, உனது கிரணங்களின் உண்மையான பொருளையும் மகிமையையும் உணர்ந்து கொண்டேன். உன்னுள்ளிருக்கும் உண்மையை நான் காண்கிறேன்; உன்னுள் இருப்பதே என்னுள்ளும் இருக்கிறது; நானே அது“ (ஈசாவாஸ்ய உபநிஷதம், 16). காயத்ரி மந்திரமும் “எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று சூரிய தேவனிடம் ஞானத்தை யே வேண்டுகிறது.
ஆனால் சுத்த ஞான ஸ்வரூபனும், மௌன குருபரனும் ஆகிய ஆலமர் செல்வன் தட்சிணா மூர்த்தியை வியாழ கிரகத்தின் தேவதை என்று வர்ணித்து, ஞானம் கீனத்தை யெல்லாம் கடாசிவிட்டு குரு பெயர்ச்சி பலன்களுக்காக (பயங்களுக்காகவும்) தட்சிணாமூர்த்தி சன்னதியில் தொழ வேண்டும் என்ற “தத்துவத்தை” பாமர மக்களிடையே உருவாக்கி யிருப்பது ஜோதிடத்தின் சாதனை.

ராஜ யோகம் மனக் கட்டுப்பாடு, அஷ்டாங்க யோகம், சாதனைகள், நாடிகள், சக்கரங்கள், குண்டலினி என்று போகிறது.
சுவாமி விவேகானந்தர் கூறியது போல ஒவ்வொரு மனிதனுள்ளும் உறங்கிக் கிடக்கும் ஆன்ம சக்தியை எழுப்புவதற்காக, படிப்படியாக ஒழுக்க நெறிகள் (யம, நியமம்), ஆசனங்கள், பிராணாயாமம், புலனடக்கம், தியானம் போன்ற சாதனைகளில் ஈடுபடுவதே ராஜ யோகம். யோகிகள் ஜோதிட நம்பிக்கைகளை சாதனைகளுக்கெல்லாம் மிகக் கீழ் நிலையில் உள்ள பய உணர்வுகளின் வெளிப்பாடுகளாகத் தான் கண்டார்கள்.
பக்தி யோகம் தான் பெரும்பாலான மக்களின் அன்றாட சமய வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. எல்லா உயிர்களிலும் இயல்பாக இருப்பது அன்பு. இந்த அன்பு என்ற உணர்வு விசாலமாகி தெய்வத்தன்மை பெறும்போது அது பக்தி யோகமாகப் பரிணமிக்கிறது.
“ஸா த்வஸ்மின் பரம ப்ரேம ரூபா” (பக்தி என்பது அளப்பரிய அன்பே உருவானது) என்பது நாரத பக்தி சூத்திரத்தின் முதல் அடி. அன்பு கலந்த பக்தி என்பது தனக்குத் தானே சாட்சியே அன்றி (ஸ்வயம் ப்ரமாணாத்), அதற்கு வேறு எந்த வெளிச் சாட்சிகளும் தேவையில்லை என்றும் நாரத முனி கூறுகிறார்.
“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி”யும், “அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இருதிரியா”க்கியும் “கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம்” தான் பக்தி. திருவாசகத்திலோ திருவாய்மொழியிலோ உள்ள சில பாசுரங்களையாவது உணர்வோடு சொல்லி லயித்து வழிபட்டவர்களுக்கு இது புரியும்.
ஜோதிடர்கள் சொல்லியோ இல்லை தானாக ஜோதிடம் பார்த்து அதன் காரணமாகவோ கோயில்களுக்குச் சென்றும், பூஜைகள் செய்தும், பஜனைகள் பாடியும் பக்தி செய்வதில் பக்தியின் இந்த லட்சணங்களில் ஏதாவது ஒன்றாவது இருக்கிறதா?
நவக்கிரக சன்னிதியில் போய்த் தொழும்போது எந்த மாதிரி பாவனைகள் வரும்? “அத்தா உனக்காளாய் இனி அல்லேன்” என்று ஈசனிடமும், “உன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்று கண்ணனிடமும் பக்தர்கள் வேண்டியது போல, சுக்கிரனிடமும், புதனிடமும், சனியிடமும் வேண்ட முடியுமா? கிரக, நட்சத்திர தொல்லைகளும், பயங்களும் தான் மனதில் நிழலாடும்.

புராணங்கள்:

வக்கிரக புராணம் என்ற பெயரில் வழங்கும் சில கதைகளை ஜோதிட வெறியர்கள் ஏதோவொரு கால கட்டத்தில் எழுதியிருப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. எல்லா தேவதைகளும், அவதாரங்களும் கிரக சஞ்சாரங்களால் பீடிக்கப் பட்டார்கள் என்பதாக இந்தக் கதைகள் இருக்கும்..
காலாதீதமான பரம்பொருளான சிவபெருமான் சனி என்கிற ஒரு குட்டி கிரகத்தின் சேட்டையால் கஷ்டப் பட்டதாக எண்ணுவதே நாத்திகம் அல்லவா? சிவ துரோகம் அல்லவா? உண்மையான சிவ பக்தன் இப்படி கனவிலும் நினைப்பானா? ராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும் வரும் சம்பவங்களெல்லாம் கிரக, நட்சத்திர சமாசாரங்களினால் நடந்தது என்று சொன்னால் அது அவதார தத்துவத்தையே அவமதிப்பதாகும்.
இந்த அவதாரங்கள் பட்ட மானுட கஷ்டங்களெல்லாம் தெய்வ லீலை, அலகிலா விளையாட்டு. மறைமுகமாக விளையாடுவது என்பது தெய்வத்திற்குப் பிரியமான ஒன்று - “பரோக்ஷ ப்ரியா: இவ ஹி தேவா:” என்று வேதம் கூறுகிறது.
தனக்காகப் போரிட்டு மடிந்த எல்லா வானரங்களையும் உயிர்பெறச் செய்த ராமன், தன் தந்தை தசரதனும், ஜடாயுவும் இறந்த போது கதறி அழுதானே? அதை எப்படிப் புரிந்து கொள்வது? தெய்வ லீலை என்பது தவிர வேறு எந்த மாதிரியும் ஆன்மீக நோக்கில் அதைப் புரிந்து கொள்ள முடியாது !

சமய மரபுகள்:

பிரதோஷத்தன்று சிவ வழிபாடு, ஏகாதசி விரதம், கிருத்திகை, ஷஷ்டியில் முருக வழிபாடு போன்று சமய மரபில் தொன்று தொட்டு வழங்கி வரும் விரதங்களும், பண்டிகை நாட்களும் முன்பே கூறிய படி காலக் கணக்கு என்ற வகையில் அடங்கும். சமுதாய அளவில், அடியார்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாளில் சென்று கூட்டாக வழிபடுவதற்குச் செய்யப் பட்ட நல்ல ஏற்பாடு என்பதாகவே இவை உருவாகியிருக்க வேண்டும்.
இன்றைய ஜோதிடர்கள் இவற்றுக்கு ஜோதிட அடிப்படையில் விளக்கம் அளிக்கவும் சாத்தியக் கூறு இருக்கிறதே அன்றி, இவை ஜோதிடத்தை மனதில் கொண்டு உருவான வை என்று சொல்ல முடியாது.
உதாரணமாக, தேவி மகாத்மியம் கடைசி காண்டத்தில் “மழைக் காலத்தில் நடக்கும் சிறப்புப் பூஜை” (ஷரத்காலே மஹாபூஜா) என்று குறிப்பிடப் படுவதே இன்று நாம் கொண்டாடும் அற்புதமான நவராத்திரித் திருநாளாக வளர்ந்திருக்கும்.
திருஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தில் சிவனருள் இருந்தால் கிரக, நட்சத் திரங்கள் மட்டுமல்ல, நோய்கள், விலங்குகள் போன்ற மற்ற இயற்கை உபாதைகளும் துன்புறுத்தாது என்ற கருத்தே உள்ளது. “நாள் என் செயும் வினை தான் என் செயும் எமை நாடி வந்த கோள் என் செயும்” என்று அருணகிரி முழங்குகிறார்.
கிரகங்களின் பலன் எம்மாத்திரம்? ராமனுடைய கருணையின் பலனே பலன் (க்ரஹ பலமேமி? ராமானுக்ரஹ பலமே பலமு) என்கிறார் தியாகராஜர். எல்லா கிரகங்களின் பலமும் நீயே தாமரைக் கண்ணா (ஸகலக்ரஹ பல நீனே ஸரஸிஜாக்ஷா) என்று புரந்தரதாசர் பாடுகிறார்.
இவற்றையெல்லாம் படிக்கும்போது ஜோதிடத்தை நம்பி தெய்வத்தை நம்பாமல் இருந்த போலி பக்தர்களுக்காகவே இந்த அடியார்கள் இப்படிப் பாடியிருப்பார்கள் என்று தோன்றுகிறது!

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம்”
என்றும்

“பொலிக பொலிக பொலிக போயிற்று
வல்லுயிர்ச் சாபம்நலியும் நரகும் நைந்த
நமனுக்கினங்கியாதொன்றுமில்லை”

என்றும் பாடிய அச்சமற்ற ஆன்மீக உணர்வே சைவ, வைணவ சமயக் கோட்பாடுகளில் வெளிப்படுகிறது.
இயற்கை வழிபாடு என்ற அளவில் இன்றைய ஜோதிடம் சார்ந்த சமாசாரங்களைச் சொல்ல முடியுமா?
பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்தது தெய்வம் என்னும்போது கிரகங்களும் நட்சத்திரங்களும் அதில் அடக்கம் தான், அதனால் அவற்றை வணங்குவது பொருத்தமே என்ற கருத்து வருகிறது.
அது சரிதான், ஆனால் எந்த வகையான உணர்வுடன் வணங்குகிறோம் என்பது முக்கியம். கங்கையையும், காவிரியையும் நாம் போற்றி வழிபடுவது பய உணர்வினால் அல்ல.
தெய்வத்தின் கருணையே இப்படி ஆறாக ஓடுகிறது என்ற ஆன்மீக உணர்வினாலும், இது என் நாட்டின் நதி என்ற மண்ணின் மணம் சார்ந்த தேசபக்தி உணர்வினாலும் தான்.

“அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி
உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது”

என்று காவிரி நதியை சேக்கிழார் வர்ணிக்கிறார்.
பொங்கல் வைப்பது, அரச மரம் மற்றும் ஸ்தல விருட்சங்கள் வளர்ப்பது, துளசி மாடத்தில் துளசிச் செடி வைத்து வணங்குவது எல்லாம் இந்த வகையில் அடங்கும் – இவை மூட நம்பிக்கைகள் என்று நாத்திகர்கள் சொல்லலாம், ஆனால் நாம் இப்போது பேசிக் கொண்டி ருப்பது ஆன்மீகப் பார்வை பற்றி ! மேலும், இந்த வழிபாட்டு முறைகள் எல்லாம் சுற்றுச் சூழலைப் பேணி வளர்க்கவும் வணங்கவும் வேண்டும் என்ற நல்ல, ஆக்கபூர்வமான சிந்தனையை சமயத்தின் துணை கொண்டு உருவாக்கி வந்திருக்கின்றன.

ஆனால் ஜோதிடமோ எதிர்காலம் பற்றிய பயம், குறுக்கு வழிகளில் விருப்பம், உழைப்பை யும் தெய்வத்தையும் நம்புவதை விட்டு விதியை நம்புதல், அறியாமை போன்றவற்றையே வளர்த்து வந்திருக்கிறது.
.
திருமணம்:

திருமணத்தில் ஜாதகம் பார்ப்பது பற்றிக் குறிப்பாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. மற்ற எல்லா விஷயங்களிலும் அவ்வளவாக ஜோதிடத்தை நாடாதவர்களும், இந்த விஷயத்தில் அதில் சரணடைகிறார்கள்.
நமது புராணங்களிலும், இதிகாசங்களிலும் ஜாதகம் பார்த்து நடந்த கல்யாணம் என்று ஏதாவது ஒன்று உண்டா? சீதை ராமனையும், தமயந்தி நளனையும், திரௌபதி பாண்டவர்களையும் கைப்பிடித்தது சுயம்வரத்தில். ருக்மிணி கிருஷ்ணன், சுபத்திரை அர்ஜுனன் திருமணங்கள் மாப்பிள்ளை பெண்ணத் தூக்கி வந்து நடத்தியவை! முருகன் வள்ளியைக் காட்டில் தேடிச் சென்று மணந்தான். துஷ்யந்தன் சகுந்தலையைக் காட்டில் கண்டு காதல் கொண்டு காந்தர்வ விவாகம் புரிந்தான். சிவன் பார்வதி, முருகன் தெய்வானை, கண்ணகி கோவலன் திருமணங்கள் பெற்றோர்கள் சம்மத்துடன் ஊர் கூடி நடந்தது (ஜாதகம் பார்த்ததாக காவியங்களிலும், புராணங்களிலும் குறிப்பு இல்லை).
பெரியவர்கள் பார்த்து நடத்தும் இத்தகைய விவாக முறைக்கு “பிரம்ம விவாகம்” என்று பெயர். இதில் ஒருவருக்கொருவர் குணத்திலும், அழகிலும் பொருத்தமுடைய இருவர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மணம் புரிய வேண்டும் என்று தான் வரையறை இருக்கிறதே தவிர, ஜாதகம் பார்க்க வேண்டும் என்று இருப்பதாகத் தெரியவில்லை!
ஜோதிடம் கிளப்பி விட்ட பய உணர்வின் காரணமாகவும், இவ்வளவு முக்கியமான திருமண பந்தத்தை கிரகங்களின் பாதிப்பு சிறு அளவில் இருந்தாலும் கெடுத்து விடக் கூடாதே என்ற கவலையின் காரணமாகவும் இந்தப் பழக்கம் உருவாகி, இன்று பல திருமண உறவுத் தீர்மானங்களில் முதல் முக்கிய விஷயமாக ஆகும் அளவுக்கு பூதாகாரமாக வளர்ந்திருக்கலாம்.
மொத்தத்தில், எந்த சமய கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ஜோதிட நம்பிக்கைகளுக்கான ஆன்மீக அடித்தளம் இல்லை என்றாகிறது. மரபுசார்ந்த காலக் கணக்கு என்ற அளவில் பஞ்சாங்கம், தமிழ் மாதங்கள், விரதங்கள், பண்டிகைகள் முதலிய அம்சங்களைக் கடைப் பிடிக்கலாம், கடைப்பிடிக்க வேண்டும்.
வானியல் இன்று Astronomy, Astrophysics என்று தனி அறிவியல் துறையாகவே ஆகி விட்டது. இதற்கு மேல் ஜோதிடத்தில் எஞ்சி இருப்பவை குருட்டு நம்பிக்கைகள் தான் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.

இந்தக் கட்டுரை ஜோதிட நம்பிக்கையுள்ள சில சமய, ஆன்மீக அன்பர்களைக் குழப்புவது போல் தோன்றலாம். குழப்பத்திலிருந்து தான் தெளிவு பிறக்கும். மகா யோகியாகவும், மகா பக்தராகவும் திகழ்ந்த மகாகவி பாரதியின் இந்த புதிய ஆத்திச்சூடி உபதேசங்கள் மனத்தை இன்னும் தெளிவாக்கும்.

அச்சம் தவிர்
சோதிடந்தனை இகழ்
ஞாயிறு போற்று
தொன்மைக்கஞ்சேல்தவத்தினை நிதம் புரி
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்
பீழைக்கிடம் கொடேல்
லீலையிவ்வுலகுவிதையினைத் தெரிந்திடு
வானநூற் பயிற்சி கொள்
வேதம் புதுமை செய்

வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும்



வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்

(திண்ணை இதழில் வெளிவந்தது)

வந்தே மாதரம் என்றுயிர் போம் வரை
வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்
எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்
ஈனமோ அவமானமோ?

- மகாகவி பாரதி
.
“வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது; அதனால் முஸ்லீம்கள் இந்தப் பாடலைப் பாடக் கூடாது” என்பதாக சில ஹைதராபாத் இமாம்களும் [1] , ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் புகாரியும் [2] ஃபத்வா, அறிக்கை விட்டபோது, இவர்கள் ஜிகாதி மதவெறியர்கள், மறைமுக தீவிரவாத ஆதரவாளர்கள், இப்படித் தான் சொல்லுவார்கள், இவர்கள் பேச்சைப் பெரிதுபடுத்தக் கூடாது என்றே எண்ணினேன்.
.
ஏனென்றால், நாட்டின் மிகப் பெரும்பான்மையான தேசபக்த முஸ்லீம்கள் வந்தே மாதர கீதத்தைப் பாடுவதிலும் ஏற்றுக்கொள்வதிலும் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் உணர்ச்சிப் பெருக்குடன் பாடிய “வந்தே…. மாதரம் – தாய் மண்ணே வணக்கம்” என்ற பாடல் சுதந்திரப் பொன்விழா ஆண்டில் நாடு முழுதும் மக்களின் தேசபக்தி உணர்வுகளை எழுப்பிற்று. ராணுவத்திலும், மற்ற அரசுத் துறைகளிலும் இருக்கும் பொறுப்பு மிக்க முஸ்லிம் தலைவர்களும், மாட்சிமை பொருந்திய நமது தேசியப் பாடல் பற்றி எதிர்மறைக் கருத்து எதுவும் சொல்லவில்லை.ஆனால் சமீபத்திய இரண்டு விஷயங்கள் மிகவும் கவலையளிக்கின்றன –
.
1) மேற்சொன்ன இமாம்களை பெருவாரியான முஸ்லீம் தலைவர்களும், அமைப்புகளும் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும், ஆனால் மௌனம் சாதிக்கிறார்கள். மெதுவாக இந்தக் கருத்து முஸ்லீம் சமூகத்தில் பரவி வருகிறதோ என்று தோன்றுகிறது
.
2) காங்கிரஸ், SP கட்சிகளின் அபாயகரமான நிலைப்பாடு –
.
“வந்தே மாதரம் பாடுவதில் கட்டாயம் எதுவும் இல்லை, விரும்பினால் பாடலாம்” என்று அர்ஜுன் சிங் பாராளுமன்றத்தில் வெட்கமில்லாமல் வாதிடுகிறார். இந்தியக் குடிமக்கள் தேசத்திற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை, விரும்பினால் தாராளமாக தேசத்துரோகம் செய்யலாம் என்று அரசு அமைச்சரே சொல்வதற்கு இணையானது இது. வந்தே மாதரம் பாட மறுக்கும் சிந்தனைப் போக்குக்குப் பின் எத்தகைய தேச விரோத விஷம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.
.
வரலாற்றுப் பின்னணி:
.
வந்தே மாதரம் என்பது ஒரு சாதாரணப் பாடல் மட்டுமல்ல. நமது தேசிய எழுச்சியின் அடையாளம் அது. ஒன்றுபட்ட புதிய பாரதத்தின் மலர்ச்சியை கட்டியம் கூறி அறிவித்த போர் முரசம். சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒவ்வொரு தேசபக்தனின் உயிர்மூச்சாக இருந்த மந்திரச் சொல். நமது தேசபக்தி பாரம்பரியத்தின் ஆன்மாவும், இதயமுமான கீதம் அது.
.
வந்தே மாதர கீதத்தின் முழு வரலாறு பற்றி அறிய, பார்க்க [4]. சில முக்கியமான குறிப்புக்கள்:
.
1) இந்தப் பாடல் ஆனந்த மடம் என்கிற நாவல் உருவாவதற்கு முன்பே பங்கிம் சந்திர சட்டோபாத்தியரால் எழுதப் பட்டது, பின்னர் இந்த நாவலில் அவரால் சேர்க்கப் பட்டது. 1875-ம் ஆண்டு துர்கா பூஜை விடுமுறைக்காக, பங்கிம் கல்கத்தா நகரிலிருந்து தமது சொந்த ஊரான கந்தலபதா என்ற சிறிய அழகிய கிராமத்துக்குச் சென்றார். தேசம் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த அவர் மனத்தை சுற்றிலும் இருந்த பசும் வயல்களும், நதிகளும் கொள்ளை கொண்டன. அந்தத் தருணத்தில் அவரது கவிதையுள்ளத்தில் “ஸுஜலாம், ஸுபலாம்” என்று தொடங்கும் இந்த அமர கீதம் உதயமாயிற்று.
.
2) 1896 கல்கத்தா காங்கிரஸ் மகாசபையில் “வந்தே மாதரம் நமது தேசிய கீதம்” என்று ரவீந்திர நாதத் தாகூர் முன்மொழிந்தார். இந்த சபையில், அவரே இந்தப் பாடலை உணர்ச்சிப் பெருக்குடன் பாடினார். 1905 வங்கப் பிரிவினையை எதிர்த்து நடந்த போராட்டமே சுதந்திரப் போரின் முக்கியத் திருப்புமுனை. இந்த சமயம், வங்கம் முழுதும் சாதி, மத பேதம் மறந்து அனைத்து மக்களும் வந்தே மாதரம் என்று முழங்கினர். நாடு முழுவதும் இதன் எதிரொலியாக தேசபக்திச் சுடர் பரவியது. எந்த அரசும், கட்சியும், குழுவும் அறிவிக்காமலேயே, மக்கள் தாங்களாகவே வந்தே மாதரத்தை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டனர். இந்த வருடம் தொடங்கி, ஒவ்வொரு வருடமும், காங்கிரஸ் மகாசபைகளில் வந்தே மாதரம் அதன் முழுமையான வடிவில் பாடப்பட்டது. இப்பொழுது நாம் பாடும் “தேஷ்” ராகத்தில் அமைந்த இசை அமைப்பு இதே காலகட்டத்தில் தேசபக்தரும். ஹிந்துஸ்தானி இசை மேதையுமான விஷ்ணு திகம்பர் பலூஸ்கரால் உருவாக்கப் பட்டது.
.
3) 1910-களில் முஸ்லீம் லீக் பெருவளர்ச்சி கண்டது. நாடு முழுவதும் முஸ்லீம் பிரிவினைவாதம் பூதாகாரமாகத் தலைதூக்கத் தொடங்கியது. 1923-ம் ஆண்டு காகிநாடா காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கியவர் மௌலானா முகமது அலி. வழக்கம் போல இந்தப் பாடலை இசைப்பதற்காக பலூஸ்கர் எழுந்தபோது “நிறுத்துங்கள்.. பாடல் இசைப்பது இஸ்லாமுக்கு எதிரானது” என்று மௌலானா குறுக்கிட்டார். மொத்த சபையும் திடுக்கிட்டது. ஆனால், பலூஸ்கர் அயரவில்லை, “இருக்கலாம், ஆனால் இது மசூதியோ, முஸ்லீம் சமயக் கூட்டமோ அல்ல. காங்கிரஸ் மகாசபை. இந்தக் கூட்டத்திற்கு ஊர்வலமாக நாம் வந்த வழியெங்கும் சங்கீதம் இசைத்ததே, அப்போது ஒன்றும் சொல்லாத தலைவர் , இப்போது நான் நமது தேசிய கீதத்தைப் பாடுவதை ஏன் தடுக்க வேண்டும்? நான் பாடியே தீருவேன்” என்று முழங்கிய பலூஸ்கர் வந்தே மாதர கீதத்தைப் பாடி முடித்தார்.
.
முதன் முதலில் வந்தே மாதரத்திற்கான இஸ்லாமிய எதிர்ப்பு எப்படி ஆரம்பித்தது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 1923 வரை வந்தே மாதரம் பாடி வந்த முஸ்லீம்களிடம், திடீரென்று 1923-ல் ஒரு மௌலானா “இசை” இஸ்லாமுக்கு எதிரானது என்று காரணம் காட்டி அதை எதிர்க்கிறார்! இத்தகைய பிரசாரம் இந்த வருடம் உருவானதன் நோக்கம் வேண்டுமென்றே முஸ்லீம்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பது. பாரதப் பண்பாடு, கலாசாரம், தேசபக்தி எல்லாமே இஸ்லாமுக்கு எதிரானது என்ற கருத்தை மெல்ல மெல்ல உருவாக்கி தேசப் பிரிவினைக்கு வித்திடுவது. வேண்டுமென்றே இதை இஸ்லாமிய சமய நம்பிக்கை என்ற போர்வையில் செய்வது. இல்லையென்றால், இவ்வளவு நாள் எல்லா முஸ்லீம்களும் பாடி வந்த தேசபக்திப் பாடல் திடீரென்று எப்படி “இஸ்லாமுக்கு எதிரானதாக” ஆகும்?? 1923-ம் ஆண்டு, குர்-ஆனில் “வந்தே மாதரம் பாடுவது தவறு” என்று புதிதாக ஒரு அத்தியாயம் சேர்க்கப் பட்டதா என்ன?
.
4) இப்படி ஆரம்பித்த இந்த எதிர்ப்பு தேச விரோத, பிரிவினைவாத முஸ்லீம் தலைவர்களால் வேண்டுமென்றே தூபம் போட்டு வளர்க்கப் பட்டது. முக்கியமாக, முஸ்லீம் லீக் கட்சி இதில் முன் நின்றது. முதலில் இசை, பிறகு பாடல் வரிகள், பிறகு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி பற்றி குறிப்பு, ஆனந்த மடம் நாவலின் கதைக் கரு என்பதாக ஒவ்வொன்றாகக் காரணம் காட்டப் பட்டது. அநியாய ஆட்சிக்கெதிரான போராட்டம் “ஆனந்த மடம்” நூலின் கதைக்கரு. வங்காளத்தின் சில மாகாணங்களை ஆண்ட முஸ்லீம் கொடுங்கோல் மன்னர்களை எதிர்த்து “பைராகிகள்” என்ற புரட்சிப் படையினர் தொடுத்த போர் கதைக் களம். இது சில கொடுங்கோல் மன்னர்களுக்கெதிரான மக்கள் போரே தவிர, இஸ்லாமுக்கு எதிரான சமயப் போர் அல்ல - இந்த அடிப்படையில் தான் ராணி துர்காவதி, வீர சிவாஜி, குரு கோவிந்த சிங் போன்ற மன்னர்கள் அந்தக் கால கட்டத்திலும், இன்றும் சுதந்திர வீரர்கள் என்றே அறியப்படுகின்றனர். ஆனால் தேச விராதிகள் இஸ்லாமுக்கு எதிரானது என்பதாக இதைச் சித்தரித்தனர்.
.
5) 1930-களில், காங்கிரஸ் முஸ்லீம் பிரிவினைவாதத்தை ஏற்கும் நிலைக்குத் தள்ளப் பட்டது. அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், ஆசார்ய நரேந்திர தேவ் அடங்கிய குழு தேசிய கீதத்தைப் பரிசீலிப்பதற்காக அமைக்கப் பட்டு, இந்தப் பாடலின் முதல் பத்தி எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதால், முதல் பத்தியை தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தது. காந்திஜியும் இதை ஆதரித்தார். 1947-ல் நாட்டைத் துண்டாடுவதற்கு முன்பு, தேசபக்தியின் அடித்தளமாக இருந்த இந்தப் பாட்டைத் துண்டாடுவது நடந்தேறியது! இதன் பிறகு, எல்லா காங்கிரஸ் கூட்டங்களிலும், தேசிய கீதமாக ஏற்கப்பட்ட முதல் பத்தி பாடப் பட்டு வந்தது.
.
6) ஆனால், தேச விரோதிகள் அப்போதும் எதிர்ப்பை நிறுத்தவில்லை. முதல் பத்தியும் இஸ்லாமுக்கு எதிரானது என்ற பிரசாரம் தொடர்ந்து வந்தது. 1947 பிரிவினை, வன்முறை மற்றும் பயங்கரங்கள் இன்னும் மறக்கப் படாத நிலையில், 1950ல் இந்தியக் குடியரசு பற்றிய தீர்மானம் தொடர்பான சர்ச்சைகளில் தேசிய கீதம் பற்றியும் விவாதிக்கப் பட்டது. அப்போது பிரதமராக இருந்த நேருவும், வேறு சிலரும் ராணுவ இசைக் குழுக்களில் (military bands) இசைப்பதற்கு வந்தே மாதரம் கடினமானது என்று சொத்தைக் காரணம் கூறினர். இதைப் பொய்யாக்கும் வகையில், மாஸ்டர் கிருஷ்ணா ராவ் பாரத பாரம்பரிய இசையின் அடிப்படையில் வந்தே மாதரத்திற்கான கம்பீரமான ராணுவ மெட்டை அமைத்து அதை ராணுவ இசைக் குழுக்களை இசைக்க வைத்தார்!
.
7) இங்கிலாந்தின் 5-ம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதக்காகத் தான் எழுதிய பாட்டு என்று ரவீந்திர நாதத் தாகூரே ஒப்புக் கொண்ட “ஜன கண மன” என்ற பாடலின் முதல் பத்தியும் 1930-களில் பிரபலமாகி வந்தது (இது முற்றிலும் உண்மை, முதல் அடியில் வரும் “ஜன கண மன அதி நாயக” என்ற வரியும், 6-ம் அடியில் வரும் “ஜய ராஜேஷ்வர” என்ற தொடரும் இதை உறுதி செய்கிறது). வந்தே மாதரம் சொன்னவர்களை சிறையில் அடைத்த பிரிட்டிஷ் அரசு, இந்தப் பாடலை மக்கள் பாடுவதை ஊக்குவித்துப் பரிசளித்து வந்தது என்பதே இதற்கு அத்தாட்சி. நாட்டைப் போற்றி எழுதப் பட்டதாக இன்று நம்பப் படும் இந்த ஒரு பாடல் தான் வரலாற்றில் “மன்னன்” என்றும் “நாயகன்” என்றும் பாரத தேசத்தை ஆண்பாலில் விளிக்கும் முதலும் முடிவுமான பாடலாக இருக்கும்! 100 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் வழங்கி வரும் எல்லா தேசபக்திப் பாடல்களுமே “அன்னை” “தாய்” “பாரத மாதா” என்று தான் தேசத்தை உருவகிக்கின்றன! ஏன், தாகூரே எழுதிய வேறு பல தேசபக்திப் பாடல்களுமே தேசத்தை அன்னை என்று தான் அழைக்கின்றன (உ-ம்: “அயி புவன மன மோகினி” என்ற தாகூரின் மிகப் பிரபலமான பாடல்).
.
8) இப்படித் தான் நாட்டின் இயல்பான தேச பக்தி உணர்வுடன் ஒட்டாத, தொடர்பில்லாத “ஜன கண மன” பாடல் தேசிய கீதமாயிற்று. இதை ஆவணப் படுத்தும் அரசியல் சாசனம், இந்த தேசிய கீதத்திற்கு சரிநிகரான, சிறிதும் குறையாத மதிப்புடன், தேசியப் பாடலாக “வந்தே மாதரம்” இருக்கும் என்றும் கூறுகிறது. ஆகாசவாணியிலும், தூர்தர்ஷனிலும், தினந்தோறும் வந்தே மாதரம் ஒலி/ஒளி பரப்பப் படுவதற்கும் காரணம் இது தான். வந்தே மாதரம் இன்றும் ஒவ்வொரு தேசபக்தனின் இதயகீதமாகவே இருந்து வருகிறது.
.

வந்தே மாதர கீதத்தின் ஆதார சுருதி :
.
நம்மைத் தாங்கி வளர்க்கும் இந்த பூமியைப் பெண்மையின், தாய்மையின் உருவமாகக் கருதி போற்றுவது தொன்றுதொட்டு வரும் பாரதப் பண்பாட்டின் கூறுகளில் ஒன்று. “இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்” (மாதா பூமி: புத்ரோSஹம் ப்ருதிவ்யா) என்று வேத ரிஷி உரைத்தார்.
.
“நிலமென்னும் நல்லாள்” என்று குறள் கூறுகிறது.
.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தேசிய மறுலர்ச்சியில், பாரதத்தின் பழம்பெருமைகளைப் பற்றிய பெருமிதமும், இதன் தொடர்ச்சியாகவே, இந்த பாரத தேசம் என் தாய் என்னும் உணர்வும் பிறந்தது. தாயன்பும், தாய் மண்ணின் மீதான பாசமும் இயற்கையாக, ரத்தத்தோடு ஊறிய உணர்ச்சிகள் –
.
இந்த உணர்ச்சிகளே நாடு முழுமைக்குமான தேச பக்தியாக முகிழ்த்து எழுந்தன! இந்த எழுச்சியின் முழுமையான வெளிப்பாடாகவே “வந்தே மாதரம்” என்ற அமர கீதம் சுதந்திரப் போராட்ட காலத்தில் அறியப் பட்டது, இன்றும் அறியப் படுகிறது. இந்தப் பாடலின் அடிப்படை உணர்ச்சி தாய்ப்பாசத்தையும், இயற்கையின் மீதான நன்றியுணர்வையும், தேசபக்தியையும் பாரதப் பண்பாட்டிற்கு உகந்த வகையில் ஒன்றிணைப்பது தான். எந்த விதமான சமய தத்துவமும் அல்ல.ஒரு சமயம் இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்தைப் படித்த எனது சில அமெரிக்க நண்பர்கள் இயற்கையையும் தாய்மையையும் போற்றும் உன்னதமான உணர்வுகள் இந்தப் பாடலின் அடிநாதமாக இருப்பதை வியந்து பாராட்டினார்கள்.நாம் தேசியப் பாடலாக ஏற்றுள்ள முதல் பத்தியின் மொழியாக்கம் -“தாயே வணங்குகிறோம்
.
இனிய நீர்
இன்சுவைக்கனிகள் தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள் எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளேவரமருள்பவளே தாயே வணங்குகிறோம்”
.
(முழுப்பாடல்: திண்ணையில் ஜடாயுவின் மொழியாக்கம் -
இந்த முதல் பத்தி மட்டுமே தேசியப் பாடலாக ஏற்கப் பட்டுள்ளதால், மற்ற வரிகள் பற்றிய சர்ச்சைக்குக் கூட இடமில்லை. இருந்தாலும் கடைசி அடியில் வரும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி பற்றிய குறிப்புக்கள் எதிர்ப்பாளர்களால் சுட்டிக் காட்டப் படுகின்றன. வலிமை, செல்வம், கல்வி இவற்றின் உருவகமாகவே இந்தத் தேவியர் இங்கு குறிப்பிடப் பட்டனர்.
.
பாரதியின் பாஞ்சாலி சபதத்தில்
“தேவர்கள் பூச்சொரிந்தார் ஓம்
ஜய ஜய பாரத சக்தி என்றே”
.
என்று வருகிறது. பெண்மை, சக்தி, தாய்மை – போற்றுதலுக்குரிய இவை அனைத்தையும் ஒன்றாகக் கண்ட சிந்தனையே இவற்றில் தென்படுகிறது. பாரத வரைபடத்தின் நடுவில் சிங்கத்தை அரவணைத்தபடி புன்முறுவல் பூக்கும் தேவி வடிவில் வரையப் பட்ட “பாரத மாதா” சித்திரங்கள் இதே உணர்வை ஓவியத்தின் வாயிலாக வெளிப்படுத்த எண்ணிய ஒரு அழகிய முயற்சி, அவ்வளவு தான். இதை உருவ வழிபாடு என்று கொச்சைப் படுத்துவது கலையுணர்வு இல்லாமையின் அடையாளம். முதன் முதலில், பாரத அன்னை ஓவியம் தீட்டியவர் ரவீந்திரநாதத் தாகூரின் சகோதரரும், வங்கத்தின் பெரும்புகழ் பெற்ற ஓவியருமான அவனீந்திரநாதத் தாகூர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
.
எதிர்ப்பு வாதத்தின் விபரீத பரிமாணங்கள்:
.
தேசியப் பாடலின் மொழியாக்கத்தைப் பார்த்தோம். மண்டையை உடைத்துக்கொண்டு தேடினாலும், இதில் இஸ்லாமுக்கு எதிராக என்ன இருக்கிறது என்று புரியவில்லை. முகமது நபி தேவதூதர் இல்லை என்றும், அல்லா கடவுள் இல்லை என்றும் ஏதாவது இருக்கிறதா? “மாதரம்” (தாயே) என்ற சொல் தான் இருக்கிறதே தவிர கடவுள், தெய்வம் என்று எந்தச் சொற்களும் கூட இல்லை. இது ஒரு சமய சார்புடைய பாடல் என்று கருதுவதற்கு முகாந்திரமே இல்லை.
.
அப்படியானால், “தாயை வணங்குவது” என்பதே இஸ்லாமிற்கு எதிரானதா? இஸ்லாம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்றல்லவா பாரதப் பண்பாடு கூறி வருகிறது? ஒருவேளை, பெண்மையையும், இயற்கையையும் போற்றுவது இஸ்லாமிற்கு எதிரானதா? “அல்லா” என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கும் ஆண் கடவுள் மற்றும் தெய்வீகம் பற்றிய ஒரு குறுகிய அராபியக் கருத்து மட்டுமே (சமய அடிப்படையில் மட்டுமல்ல, எந்த அடிப்படையிலும்)
.
போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரியதா? இது ஒரு காட்டுமிராண்டித் தனமான, வெறித்தனமான நிலைப்பாடு அல்லவா? கொஞ்சம் சிந்தியுங்கள் - “இஸ்லாமுக்கு எதிரானது” என்று இமாம்கள் கூறும் இந்த சொத்தை வாதத்தை வைத்து வந்தே மாதரம் பாட மறுப்பவர்களை அங்கீகரித்தால் எதையெல்லாம் அங்கீகரிக்க வேண்டும்?
.
1) வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” - திலகம் வைத்துக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது “வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? சிறுபான்மை சேவக தி.மு.க. அரசு உடனே அதை ஏற்றுக்கொண்டு “ஆமாம், ஆமாம், முஸ்லீம்கள் பாட வேண்டாம்”என்று சொல்லி தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்த வேண்டாமா?
நாகூர் ரூமி உடனே இதற்கு வக்காலத்து வாங்கி பல அரபு மேற்கோள்களுடன் ஒரு புத்தகம் எழுத வேண்டாமா?
.
2) தமிழ் மறை என்று நாம் எல்லாரும் ஏற்றுக்கொண்ட திருக்குறள்? “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்பது இஸ்லாமிற்கு எதிரானது, அதை மாற்றி “அலிஃப் முதல எழுத்தெல்லாம் அல்லாஹு முதற்றே உலகு” என்று மாற்றித் தான் படிப்போம் என்றாலும் மற்ற குறள்களை என்ன செய்வது? “தீதின்றி வாழும் திரு”, “செய்யவள்”, “தாமரையினாள்” – லட்சுமியைப் பற்றி எத்தனை இடங்களில் வருகிறது? இஸ்லாமுக்கு எதிரான இந்த நூலை முஸ்லீம்கள் படிக்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்தலாமா - கூடவே கூடாது ! திருக்குறளே இல்லாத தமிழ்ப்பாட நூல்களில் சிலம்பும், கம்பராமாயணமும், திருமுறைகளும் எதற்கு? தூக்கு இவை எல்லாவற்றையும் !
.
3) தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள். எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!
.
4) இப்படி, இந்த இமாம்கள் கூறும் “இஸ்லாமுக்கு எதிரான” விஷயங்களுக்கு ஆமாம் ஆமாம் என்று தலையாட்டி பாராளுமன்றத்தில் பேசும் அர்ஜின் சிங், இந்த தேசத் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கி திண்ணையில் கட்டுரை எழுதிய கற்பக விநாயகம் – இந்தக் காஃபிர்கள் உயிரோடு இருப்பதே இஸ்லாமுக்கு எதிரானது அல்லவா? அர்ஜுன் சிங்கும், க.வி.யும் ஜிகாதிகளின் கையால் மரணத்தை ஏற்றுக் கொண்டு ஜஹன்னும் (இஸ்லாமிய நரகம்) போகத் தயார் தானா?இதெல்லாம் விபரீதமான கற்பனை போலத் தோன்றலாம். வந்தே மாதரத்தை எதிர்க்கும் இமாம்களிடம் போய் இதில் வரும் ஒவ்வொரு கேள்வியையும் கேட்டுப் பாருங்கள் – பதில்கள் எப்படி வருகின்றன என்று. பாரதப் பண்பாடு என்பதே இஸ்லாமுக்கு எதிரானது என்ற முடிவில் தான் அது வந்து நிற்கும். ஏழாம் நூற்றாண்டு அராபியப் பாலைவனத்தின் கற்பனைகளுக்கு எட்டாத எந்த விஷயத்தையும் “இஸ்லாமுக்கு எதிரானது” என்ற ஒற்றை வாதத்தின் மூலம் அவர்கள் நிராகரிப்பார்கள் (ஆனால் அதி நவீன துப்பாக்கிகள், வெடி மருந்துகள், எறி குண்டுகள், ராக்கெட்டுகள் எல்லாம் இஸ்லாமிற்கு எதிரானவை அல்ல –அவையெல்லாம் ஜிகாதில் துணை புரிவதற்காக அல்லாவால் அனுப்பப் பட்டவை!!)
.
இந்த தேச விரோத சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்:இப்படி ஜிகாதி இஸ்லாமிய மத வெறியர்கள் (சுருக்கமாக, இஸ்லாமிஸ்டுகள்) ஆட்சேபம் தெரிவிப்பதற்கெல்லாம் அரசும், சமுதாயமும் வளைந்து கொடுத்தால் அது அவர்களை மகிழ்விக்கும், வழிக்குக் கொண்டு வரும் என்று நினைப்பது இமாலயத் தவறு. பாரதம் போன்ற ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், இஸ்லாமிஸ்டுகளை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல.
.
அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.
.
.