திரு. கு. கல்யாணசுந்தரம்
தமிழ் டிஜிட்டல் நூலக துறைக்கு பிள்ளையார் சுழி போட்டவர். இணைத்தில் புகழ் பெற்ற மதுரைத்திட்டத்தின் முன்னோடி. சென்னை மாநகரில் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி படிப்புவரை பயின்றவர். சென்னை லயோலா கல்லூரியில் இரசாயனத் துறையில் பி.எஸ்ஸி மற்றும் எம்.எஸ்ஸி பட்டப் படிப்பு முடித்த பிறகு அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்தியானா மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் இரசாயனத் துறையில் ஆராய்ச்சி மேற்க்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.

அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் மேல்நிலை ஆராய்ச்சியில் பங்கு பெற்ற பின், 1979ல் தற்போது வசித்து வரும் ஸ்விஸ் நாட்டுக்குச் சென்றார். அங்குள்ள லுசான் நகர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் முதுநிலை விரிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் தற்போது பணிபுரிந்து வருகிறார்.
பாஷா இணையத் தளத்திற்காக முனைவர் கு.கல்யாணசுந்தரத்தின் வெற்றி உரைகளை தொகுத்த போது ...
இணையத்தில் நூல்களை தொகுக்கும் ஆர்வம் தங்களுக்கு எப்படி உருவானது?
பத்து ஆண்டுகளுக்கு முன் மக்கின்டாஷ், வின்டோஸ் கணினிகளில் தமிழிலேயே நேரிடையாக உள்ளிட மயிலை என்னும் தமிழ் எழுத்துரு தயாரித்து அதை பல நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை காண்பிக்க திருக்குறள் 1330 குறள்களை உள்ளிட்டு மின்அஞ்சல் மூலம் உலகில் பல பகுதிகளில் உள்ளவர்களுக்கு அனுப்பினேன்.அதை தொடர்ந்து பாரதியார் பாடல்கள், அவ்வையார் பாடல்கள் போன்றவற்றை உள்ளிட்டு அனுப்பினேன்.
1997 ம் ஆண்டு பாலா பிள்ளை ஆரம்பித்து நடத்தும் தமிழ்.நெட் என்னும் மின்னஞ்சல் குழுவில் இணைந்தேன். இக்குழு முறையில் தழிழ் இலக்கியங்களை உலகில் உள்ளவர்கள் ஒன்றுகூடி தயாரித்து பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஒரு கேள்வி எழுந்தது.
அதை தொடர்ந்து 1998ம ஆண்டு பொங்கல் திருநாளன்று மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்பு தொகுப்புத் திட்டம் என்ற ஒரு தன்னார்வு திட்டத்தை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தோம்.
நூல்கள் காகிதப்பதிப்பு, இணையப்பதிப்பு வெற்றி தோல்விகள் என்ன?
காகிகப் பதிப்புக்கு தேவையான அச்சுயந்திரங்கள் 19-ம் நூற்றாண்டிலேயே இருந்த போதிலும், பாரதியார் போன்றவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பயன்படுத்தக்கூடும் என்ற ஒரு அச்சத்தினால் தமிழ் அச்சுயந்திரங்கள் 20-ம் நூற்றாண்டின் பின்பாதி வரை அதிகமாக பயன்படுத்தப் படவில்லை. தமிழ் நூல்கள் சங்ககால நூல்கள் முதல் ஆயிரக் கணக்கி்ல் இருந்தபோதிலும் பெரும் பாலானவை புத்தக வடிவில் அதிக அளவில் அச்சிடப்படவில்லை.
அதோடு மட்டுமில்லாமல், 20ம் நூற்றாண்டின் பின் பகுதியில் புதினங்கள் பெருமளவில் வந்து பொது மக்களை கவர்ந்தது.
இதனால் தமிழ் இலக்கிய நூல்கள் காகிதப்பதிப்பாக வருவது தற்காலத்தில் பெருமளவு குறைந்துவிட்டது. இணையத்தில் இந்திய மொழிகளில் தமிழ் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இணையத்தில் மின்னஞ்சல் மடலாடற்குழு மூலம் தகவல் தொடர்பு, கருத்துப் பறிமாற்றம் செய்வதில் தமிழ் முன்னோடியாக உள்ளது.
அதேபோல் இணைய தளங்கள் எண்ணிக்கைகளிலும் , பிளாக் தளங்கள் மூலம் கருத்தைப் பறிமாற்றம் செய்வதில் தமிழ் மொழி இந்திய மொழிகளிலே முதலிடம் பெற்றுள்ளது.இணையம் வழியே விநியோகிக்கப் படும் தமிழ் நூல்களின் மின்பதிப்புகள் எண்ணிக்கை மிகக் குறைவானதே. தமிழ்நாட்டில் உள்ள பல தமிழ்நூல் பதிப்பாளர்கள் மின்பதிப்புகள் காகிதப் பதிப்புகள் விற்பனையை ெபருமளவில் பாதிக்கும் என்ற ஒரு தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
மின்பதிப்புகள் இணையம் வழியாக உலகில் பல நாட்டில் உள்ள தமிழர்கள் தமிழ் நூல்களைப் பற்றி முதன்முறையாக தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.மதுரைத் திட்டம் போன்றவை காப்புரிமை காரணமாக பழங்கால தமிழ்நூல்களின் மூல செய்யுள்கள்/பாடல்களை மட்டுமே மின்பதிப்பாக வெளியிடுகின்றன. இந்நூல்களின் உரைகளை காகிதப்பதிப்பு மூலமே முழுமையாக படித்து தெரிந்து கொள்ளமுடியும்.
தங்களுடைய மதுரை திட்டத்தின் பணிகள், இலக்கு ஆகியவற்றை விவரிக்கவும்.
மதுரைத் திட்டம் என்பது தமிழர்களும் தமிழ்மொழிமேல் பற்றுள்ள மேலைநாட்டவரும் அவரவர் தங்களது கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களை உள்ளிட்டு, பிழைதிருத்தி பிறகு இம்மின்பதிப்புகளை இணையம் வழியாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் இலவசமாக இறக்கிக்கொள்ள வசதி செய்வதே. www.projectmadurai.org, இத்திட்டத்தில் இன்றுவரை 300க்கு மேற்பட்ட தமிழ் நூல்களை இலவச மின்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.
குறைவான விற்பனை காரணமாக பெரும்பான தமிழ்நூல்கள் காகிதப் பதிப்பாக வெளிவராமல் இன்றும் ஓலை வடிவிலேயே இருக்கின்றன.யாழ்ப்பாண நூல் நிலையம் தீயில் எரிந்து போன பொழுது ஈழத் தமிழர் படைத்த தமிழ் நூல்கள் அனைத்தும அழிந்துவிட்டன. பெரும்பாலான ஈழத் தமிழர்கள் நாடு புலர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதால் ஈழத் தமிழர் இலக்கியம் சிதைந்த போகக்கூடிய நிலையில் உள்ளது.
பணவசதி குறைவு காரணமாக தமிழ்நாட்டு நூலகங்களில் நூல்களும் ஒலைச்சுவடிகளும மோசமான நிலையில் காக்கப்பட்டு வருகின்றது. இன்னும் 50 ஆண்டுகள் அவை அனைத்தும் செல்லரித்து பாழடையும் நிலையில் உள்ளது.
மதுரைத்திட்டத்தின் இலக்கு காலம்,நாடு,மதம்/சமயம் போன்ற எந்தஒரு வேறுபாடின்றி, பல்விதமான தமிழ இலக்கியங்களை மின்வடிவத்தில் உள்ளிட்டு,உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் தமிழ் மொழிமேல் பற்றுளர்களுக்கும் அடையச் செய்வதே ஆகும்.
தமிழ் தகவல் தொழிற்நுட்பம் எந்த அளவிற்கு பின்தங்கியுள்ளது?
நீங்கள் இதில் எதிர்பார்க்கும் வளர்ச்சிகள் என்னென்ன?
உலகில் பல லட்சக்கணக்கான தமிழர்கள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக கணினியில் பல விதமான தொகுப்புகளை தயாரித்து இணையம் வழி பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். ஆனால் ஆங்கில மொழியில் உள்ளதுபோல் அனைவரும் ஒரு தகுதரம் கொண்டு தயாரிக்கப்பட்ட எழுத்துருக்களையோ அல்லது மென்பொருள்களையோ பயன்படுத்தும் நிலையில் இல்லை.முன்பு கூறியது போல் இணையத்தில் தமிழ் மொழி தகவல் தொடர்பு. கருத்துப் பறிமாற்றம், இணைய தளங்கள எண்ணிக்கை போன்றவற்றில் முதலிடம் வகிக்கிறது.
ஆனால் அவை அனைத்தும் தகுதரங்களை பயன்படுத்தாததால் இவற்றின் பயன் பெருமளவில் பாமர மக்களை அடையாமல் இருக்கிறது. இன்றும் பலர் பாமினி போன்ற ஒருமொழி 8-பிட் எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர். பன்மொழி முறையில் அமைக்கப்பட்ட யூனிகோடு தமிழர்களிடையே இன்றும் முழுமையாக ஏற்கப்படவில்லை. இந்நிலை மாறவேண்டும். மாறினால் தான் கணினியில் தமிழ் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்களை உள்ளிட்ட வாய்ப்புகளை அதிகரிக்கும்.
உத்தமம் அமைப்பு பற்றியும் அதில் தங்களது பங்கு என்ன என்பது பற்றியும் கூறமுடியுமா?
உத்தமம் என்று அைழக்கப்படும் “உலகத் தகவல் தொழில்நுட்ப மன்ற” அமைப்பு www.infitt.org ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகின்றன.உத்தமத்தின் குறிக்கோள்கள் உலகெங்கிலும் உள்ள தமிழ் ெமன்பொறி தயாரிப்பாளர்களும் கணினியில் தமிழைப் பயன்படுத்துவர்களுக்கும் இன்றியமையாத தகுதரங்கள் வளர்ப்புக்கு வசதி செய்து தருவதே.
இதற்காக மின்னஞ்சல் குழு வசதி செய்துகொடுப்பதோடு ஆண்டுதோறும் இவர்கள் ஒன்றுகூடி நேரிடையாக கருத்துப்பறிமாற்றம் செய்ய வசதியாக தமிழ் இணைய மாநாடுகளை உலகில் வேறுவேறு மாநகர்களில் நடத்திவருகிறது. சென்னை, சிங்கப்பூர், கோலாலம்பூர் (மலேசியா), சான் பிரான்சிஸ்கோ (கலிபோர்னியா, அமெரிக்கா) போன்ற நகர்களில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகளில் தமிழர்கள் கலந்துகொண்டு பயனடைந்துளளார்கள்.
ஆரம்ப காலத்திலிருந்து உத்தமத்தின் நிர்வாகக் குழுவில் பங்குகொண்டு வருகிறேன். தமிழ் இணைய மாநாடுகளுக்கு கருத்தரங்கு அமைப்புக்குழு தலைவராகப் பணியாற்றியுள்ளேன்.தற்போது உத்தமத்தின் நிர்வாகக்குழு தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன்.
தமிழ் அறிவியல் உலகில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? தங்கள் சொந்த இலக்கு என்ன?
ஆரம்பத்தில் கூறியதுபோல இரசாயனத் துறையில் பல்கலைக்கழக அளவில் கல்வி கற்பிப்பதும் இரசாயனத் துறையில் ஆராய்ச்சியில் பங்குபெறுவதுமே எனது முழுநேர முயற்சிகள். இருப்பினும் கடந்த பத்து ஆண்டுகளுக்குமேல் என்னால் முடிந்தளவு கணினி, இணைய வழியில் தமிழ் மொழி வளர, உலகெங்கிலும் உள்ள தமிழர்களை சென்றுடைய என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். மதுரைத் திட்டத்தில் பங்குபெறுவது மனதிற்கு பெருமளவில் திருப்தியை கொடுத்துவருகிறது. தமிழ் இலக்கிய நூல்களின் மொத்த எண்ணிக்கைப் பார்த்தால் இதுவரை 300 முக்கிய நூல்களுக்கு மின்பதிப்பு தயாரிப்பது ஒரு சிறு துளியே.
பாதுகாக்கப்பட வேண்டிய நூல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. குறிப்பபாக காகிதவடிவ புத்தகமாக வராமலேயே மடிந்துகொண்டிருக்கும் நூல்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளன. கணினியில் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் தமிழ் மொழியில் விரைவில் பெற உத்தமம் போன்ற அைமப்புகள் இன்றியமையாதவை என்பது எனது தாழ்மையான கருத்து. அதனால் உத்தமம் மேலும் விரிவடைந்து உலகளவில் ஒரு பெருமைப்படக் கூடிய அமைப்பாக ஆவேண்டும் என்பது எனது அவா. அதற்கு என்னால் முடிந்த அளவு பணி செய்வேன்.
தமிழ் மரபு அறக்கட்டளை www.tamilheritage.org முனைவர் கண்ணன் தலைமையில் தமிழரது கலாசாரம் சம்பந்தப்பட்டவைகளை பல்லூடக மின்வடிவில் பாதுகாக்க முயன்றுவருகிறது. இதிலும் இயக்கத்தின் துணைதலைவராக என்னால் முடிந்த உதவிகளை ெசய்துவருகிறேன்.
பாஷா இந்தியா வாசகர்களூக்கு வாழ்த்துகள்.

0 மறுமொழிகள்:
நீங்களும் சொல்லுங்கள்...