உயிர்ப்பற்றுப் போன தமிழ்ப்பல்கலைக்கழகம்!?செப்டம்பர் 15 - தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் துவங்கிய நாள்
`
-------- தெ.மதுசூதனன்
`
1925- -ல் திருச்சியிலிருந்து 'தமிழன்' எனும் பத்திரிகை வெளி வந்துகொண்டிருந்தது. −அப் பத்திரிகையில் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை என்பவர்கட்டுரைகள் பல எழுதி வந்தார்.

தமிழ் மொழிக்கென்று ஓர் தனித்துவமானபல்கலைக்கழகம் வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி கட்டுரை ஒன்றுஎழுதியிருந்தார்.
`
தமிழ்ச்சூழலில் −அக் கோரிக்கையின் நியாயப்பாடு பல்வேறு தமிழபிமானிகளால் வரவேற்கப் பட்டது.
`
இந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகஆட்சிக் குழுவிலிருந்த பெரும்பாலோர் தமிழை முழுமையாகப் புறக்கணித்துவரக்கூடிய சூழலும் அப்போது நிலவியது. ஆகவே அத் தருணத்தில் தமிழ்மொழிக்கென்று தனிப் பல்கலைக் கழகக் கோரிக்கை ஏற்புடையதாகவேயிருந்தது.
`
எம்.எஸ். முன் வைத்த கோரிக்கை அன்றைய சைவ அறிஞர்கள் பலராலும் தீவிர பிரச்சாரப் படுத்தும் கோரிக்கையாகவே யிருந்தது.

பல முனைகளிலும் தமிழ்ப் பல்கலைக்கழகக் கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டிருந்தனர். அன்றைய சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவிலிருந்த சில அங்கத்தவர்களும் −இக் கோரிக்கையை வலியுறுத்தினர்.
`
−இதனால் ஆட்சிக்குழுவிலிருந்த தெலுங்கர்கள் சிலர்ஆந்திரப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும்முன்வைத்தனர்.தமிழ் மொழிக்கான முழுமையான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென்றகோரிக்கை வலுப்பட்டு வந்தாலும் அன்றைய ஆங்கிலேய அரசு அங்கீகாரம் கொடுக்கபின் நின்றது.
`
அதே நேரம் 1928- −ல் ஆந்திராவில் ஆந்திரப் பல்கலைக்கழகம்உருவாக்குவதற்கான அனுமதியை பிரிட்டிஷ் அரசு கொடுத்தது. இப்போக்கு தமிழுக்கும் நிச்சயம் தனித்த பல்கலைக்கழகம் உருவாவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது.

அத் தருணத்தில் சிதம்பரத்தில் அண்ணாமலைச் செட்டியாரால் நடத்தப்பட்டு வந்த ஸ்ரீ மீனாட்சிகல்லூரி போன்ற சில கல்லூரிகளை −இணைத்துப் பல்கலைக்கழகமாக உருவாக்கும்முயற்சியில் ஈடுபட்டார்.
`
1929-களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை படிப்படியாகவலுவிழந்து போகும் சூழல் உருவானது.

−இதற்கு அண்ணாமலைச் செட்டியாரின் முயற்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு கூட சில மட்டங்களில் உள்ளது.எவ்வாறாயினும் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் கரைந்து போனது.
`
அவ்வப்பொழுது ஒரு சிலரால் தமிழ்ப் பல்கலைக்கழகக் கோரிக்கை மேற்கிளம்பும்.
இருப்பினும் 1980-களில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகயிருந்த பொழுது தமிழ்ப் பல்கலைக் கழகக் கோரிக்கை மறு பிறப்பு எடுத்தது. எம்.ஜி.ஆரும் இக்கோரிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க முற்பட்டார். 1981 செப்டம்பர் 15- இல்தஞ்சையில் 'தமிழ்ப் பல்கலைக் கழகம்' உருவாக்கப்பட்டது.
`
தமிழ் மொழிக்கென்று தனித்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற நீண்டகாலக் கோரிக்கை எம்.ஜி.ஆரால் தீர்த்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் திருச்சி சாலையில் வல்லம் என்ற ஊருக்கருகே ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்உருவாக்கப்பட்டது.
`
வானத்திலிருந்து பார்த்தால் தமிழ் எழுத்து தெரியும்வகையில் பல்கலைக்கழக கட்டடம் கட்டவும் தீர்மானிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்து 'தமிழியல்' சார்ந்தஉயர்நிலைக் கல்வி ஆய்வு மையமாகத் திகழவே வடிவமைக்கப்பட்டது.
`
இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராகப் பேராசிரியர். வி.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் நியமிக்கப்பட்டார். அவரது ஆளுமையிலும் ஆற்றலிலும் பல்கலைக்கழகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றால் மிகையாகாது.'தமிழியல்' ஆராய்ச்சிப் பரப்பின் வகை மாதிரியாகத் திகழும் வகையில் கல்விப்புலம் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டது.
`
அவை : 1. கலைப்புலம் 2.மொழிப்புலம் 3. சுவடிப்புலம் 4. வளர் தமிழ் புலம் 5. அறிவியல் புலம்ஒவ்வொரு துறைக்கும் துறைபோகிய புலமையாளர்கள் வரவழைக்கப்பட்டு பல்கலைக் கழகத்துக்குத் தக்க தளம் அமைக்கப்பட்டது. மேல்நாட்டு ஆராய்ச்சிப் புலமைச் செழுமையைத் தக்கவாறு தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்திட வி.ஐ.சுப்பிரமணியம் திட்டமிட்டுப் பணியாற்றினார்.
`
எம்.ஜி.ஆர். தக்க ஒருவரைதுணை வேந்தராக நியமித்தமை பாராட்டத்தக்கது. வி.ஐ. சுப்பிரமணியம் கண்ணும்கருத்துமாகயிருந்து சிறந்த பல்கலைக்கழகமாக வளர்ந்திட அரும்பாடுபட்டார். தனது பணிகளில் எவரது குறுக்கீடுகள் எதனையும் விரும்பாதவர். கண்டிப்பானவர். அதனால் எவர் தலையிட்டாலும் உடனே தனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்றும், அதற்காக எப்போதுமே ராஜினாமா கடிதத்தைத் தயாராகவே வைத்திருந்தார் என்றும் கூறுவர்.
`
பல்வேறு வெளிநாட்டுப் புலமையாளர்கள் வருகை தரு பேராசிரியர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் பல்கலைக்கழகத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
`
ஜெர்மன், சுவிட்சர்லாந்து, ஈழம், போலந்து போன்ற நாடுகளிலிருந்து பலர் வருகை தரு பேராசிரியர்களாக −இருந்துள்ளனர்.
`
−இங்குள்ள ஆசிரியர்கள் பலர் வெளிப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று ஆராய்ச்சியில் ஈடுபடவும், பயிற்சிபெறவும் அதற்கான வாய்ப்புக்களை பல்கலைக்கழகம் அமைத்துக் கொடுத்தது.
`
சிலதுறைகளில் உயராய்வு மையங்களும் உருவாக்கப்பட்டன. மண்டபத்தில் நிகழாய்வு மையம், உதகமண்டலத்தில் மலையின மக்கள் ஆய்வு மையம், காஞ்சிபுரத்தில் தத்துவ ஆய்வு மையம், பல்கலைக்கழகத்தில் பேரகராதித் துறை, வாழ்வியல்களஞ்சிய மையம், அறிவியல் களஞ்சிய மையம் போன்றவை உருவாக்கப்பட்டு ஆராய்ச்சிச் செல்நெறியில் புதிய அத்தியாயங்களைத் தோற்றுவிக்க முற்பட்டன.
`
பல்வேறு நூல்கள், நூலடைவுகள், ஆவணப்படுத்தல்கள் எனத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பணிகள் குறுகிய காலத்தில் வளர்ந்தன. ஆராய்ச்சிக்கருத்தரங்குகள் பல திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டன.வி.ஐ.சுப்பிரமணியத்தின் காலத்தில் பல்கலைக்கழகச் சூழல் திட்டமிட்டுஉருவாக்கி வளர்க்கப்பட்டது.
`
−இதன் பின்னர் வந்த துணை வேந்தர்கள் காலத்தில் எந்த நோக்கத்துக்காகப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை ஈடேற்றம் காணும் வகையில் சிதைவை நோக்கி நகரத் தொடங்கியது.

−இன்று பல்கலைக்கழகச் சூழலில் தொடர்ந்து போராட்டங்களும் நிதிப்பற்றாக்குறையும் நிர்வாகச் சீர்கேடுகளும் எனத் தொடர்கதையான பல்கலைக்கழகமாகமாறிவிட்டது.
`
அரசு தலையீடுகள் பல்கலைக்கழகத்தின் கலாசாரத்தையே ஆட்டம் காணவைக்கிறது. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க அறக்கட்டளைகள் பலவற்றை அடகுவைத்துக் கடன் வாங்கும் நிலைமைகள் கூட உருவாகியுள்ளது.
`
தமிழ்ப் பல்கலைக்கழகம் பெயருக்கு மாத்திரமே பல்கலைக்கழகமாக அதன்கட்டடங்கள் மட்டும் நிமிர்ந்து நிற்கிறது. வி.ஐ.சுப்பிரமணியத்தின்காலத்தில் பிரகாசிக்கத் தொடங்கிய பல்கலைக்கழகம் அவருக்குப் பின்னால்மங்கத் தொடங்கியது. தமிழ் மொழி, தமிழர்

−இவற்றின் உயர் கல்வி ஆய்வுநிறுவனமாகத் திகழ வேண்டிய பல்கலைக்கழகம் −இன்று உயிர் வாழ்வதற்கே போராடவேண்டியுள்ளது.
`
பல்கலைக்கழகத்தின் ஆத்மாவைச் சிதைக்கும் துணைவேந்தர்களின் வருகை, அரசுத் தலையீடு, பொறுப்பற்ற ஆசிரியர்களின் புகலிடம்என யாவும் கூட்டுச் சேர்ந்து 'தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்' உயிர்ப்பை நிறுத்தி வருகின்றன.தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் எதிர்காலம் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும்பிரச்சினைப்பாடுகளின் சமிக்ஞைகளில் ஒன்று எனலாம்.

0 மறுமொழிகள்:
நீங்களும் சொல்லுங்கள்...