புகைக்கப் பழகுகிறேன்!
~~~~~~~~~~~~~~~~~~
என்றோ ஒரு நாள்
எரியத்தான் போகின்ற
இவ்வுடம்பை வைத்துகொண்டு
என்னசெய்ய போகிறேன்?
கசந்து போகாமல்
கானல் நீராகப்
புகைந்து போகட்டும்
புகையாகிப் போகட்டும்!
சிறுகச் சிறுகவே
தீ மூட்டி எரியிட்டால்
சிதைக்குப் போகாத
சீமானாய்ப் போயிடலாம்!
திண்ணை கிடைக்காமல்
தெருவோரம் கிடக்கின்றேன்!
எவர் வந்து தீ வைப்பார்?
எவர் வந்து கொள்ளி வைப்பார்?
பாழாய்ப் போனவனைப்
பார்த்துத் துடிப்பதற்கு,
அழுது புலம்புதற்கு
அன்னை வரமாட்டாள்!
சிதையில் எரியாமல்
சீக்குப் பிடிகாமல்
சிறுகச் சிறுகவே
தீயாய்ப் போகட்டும்!
புகழ் மாலை சூடுதற்குப்
புகைக்கப் போகிறேன்!
சிதைக்குச் செலவு செய்ய
செல்லாக் காசில்லை!
செலவு மிஞ்சுமென்று
சிக்கனமாய்த் தீயிடுவேன்!
இறந்து எரிவதையும்
எவரும் காணாரே!
இருந்து எரிவதை நான்
இருந்திருந்து காண்பேனே!
எறும்பூறக் கல் மலையும்
இறந்து படுமென்ற
சொல்லும் பழுதில்லை!
என்பதுவும் உண்மையானால்,
சிறுகச் சிறுகவே
என் சிதைக்குத்
தீயூட்டப் போகிறேன்!
சொல்லாக் காசாகிச்
சீழ்பிடித்துச் சாகாமல்
சீக்காளிப் போலாகிச்
சீச்சீ என்றாரும்
சொல்லிச் சலிக்காமல்
எரியப் போகிறேன்!
பிகைப் பிடித்து
எரியப் போகிறேன்!
நானே
என்னுடலை
நன்றாய் எரியூட்டி
மரண வாசலையும்
நான்
மிதிக்காமல் எரிவேனே!
- இரவா - கபிலன்
புகைக்கப் பழகுகிறேன்!
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
நீங்களும் சொல்லுங்கள்...