தமிழிசை


தமிழ்நண்பர்களே,


சுதா ரகுநாதன் பாடக் கேட்கலாம்:

http://kelpidi.blogspot.com/2006/06/blog-post.html

பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல் இது. இதனைப் படித்திருக்கிறேன்.
ஏதோ ஒரு பழைய திரைப்படத்திலும் கேட்டிருக்கிறேன். அண்மையில்
வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது கர்நாடக இசை வடிவில்
இந்தப் பாடலை இருவர் பாடியிருப்பதைப் பார்த்தேன். அருமையாக
இருக்கின்றன. அவற்றை இங்கே கேளுங்கள்.

இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்தலைப்பு:
பெற்றோர் ஆவல்பாடியவர்கள்: நித்யச்ரீ, சுதா
இரகுநாதன்

இராகம்: தேஷ்தாளம்: ஆதி, ஏகம்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே
ஒருசொல்இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா?
துன்பம்...