Tamil Translation of Professor Hart's Statement on Tamil - a Classical Language [source Thamizh Mann]முனைவர் ஜியார்ஜ் எல்.வறார்ட் அவர்கள் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்
தமிழ் ஒரு செம்மொழி என்ற தகுநிலை பற்றிய ஒரு விளக்கவுரை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, பெருமகிழ்ச்சியுடன் ஏற்று இதனை எழுதுகிறேன்.1975-ம் ஆண்டு முதல் பெர்க்ளி கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நான் ஒரு பேராசிரியராக உள்ளேன் தற்சமயம் அங்கு தமிழ்த்துறை தலைவன். 1970 ஆம் ஆண்டு ஃகார்வடு பல்கலைக் கழகத்தில் வடமொழி (சமசுகிரித)ப் பட்டம் பெற்றேன். எனது முதல் அனுபவம் 1969ல் மேடிசன், விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியர் வேலை ஏற்றது. தமிழ், வடமொழி தவிர இலத்தீன், கிரேக்கச் செம்மொழி களை அறிந்து அவற்றின் மூலம் அந்த இலக்கியங்களையும், மொழி ஒப்பியல் ஆய்வு நூல்களையும் விரிவாக படித்துள்ளேன்.
அவற்றுடன் உருசியன், செர்மன், ஃபிரென்சு ஆகிய தற்கால ஐரேப்பிய மொழிகளிரும் நல்ல பரிச்சயம் உண்டு. அம்மொழி இலக்கியங்களையும் விரிவாகக் கற்றுள்ளேன். இவை தவிர இந்திய இலக்கியங்களில், தமிழ் மலையாள நு}ல்களை அம்மொழிகள் வாயிலாகவும், பிற மொழி நு}ல்களை ஆங்கில மொழியாக்கங்களின் வழியும் படித்துள்ளேன். தெலுங்கு மொழியின் தலையாய் அறிஞர்களுள்; ஒருவரான திரு வி.நாராயணராவ் அவர்களுடன் நெடிது உரையாடப்பெற்ற வாய்ப்புக்கள் வழி அம்மொழி யின் பாரம்பரியத்தையும் நன்கு அறிவேன். கிழக்காசிய மொழிகள் துறையின் நீண்ட நாள் உறுப்பினன் என்ற முறையில் இந்திமொழி இலக்கியச் செழிப்பை அறிந்துணரும் வாய்ப்பும் பெற்றேன்;. துளசி, கபீர், மகாதேவ வர்மா நூல்களை ஆழமாகப் பயின்றுள் ளேன்.நான் பல ஆண்டுகளை உண்மையில் 1969 முதல் என் வாழ்வின் பெரும்பகுதியை வடமொழிக் கல்வி ஃ ஆய்வில் பயன்படுத்தியுள்ளேன். காளிதாசர் மகா படைப்புக்களை முழுமையாகவும், பவாரி, சிறீஃகர்சா நூல்களில் பல பகுதிகளையும் வடமொழி மூலத்தில் படித்துள்ளேன். இவை தவிர இருக்வேத ஐந்தாவது மூலப் பொத்தகத்தையும், பல உபனிசத்துக்களையும் மாபாரதம், கதா சரிதசாகரம், ஆதிசங்கரர் நூல்களில் பெரும் பகுதிகளையும், மற்றும் பல மொழி வடமொழி நூல்களையும் கற்றுள்ளேன்.நான் இவற்றை யெல்லாம் இங்கு சொல்வது, எனது அறிவாற்றலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் அன்று. ஒரு இலக்கியத்தில் செம்மொழிப் பாங்கைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு என்பதைத் தெளிவுபடுத்த மட்டுமே. எவ்வகையான அளவைக் கோட்பாடுகளைத் தேர்ந்து நோக்கினாலும், மேலான உலக பாரம்பரியங்கள், செம்மொழி இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், நிச்சயமாகத் தமிழ் ஒரு சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாகச் சொல்ல முடியும்.இதற்கான காரணங்கள் பல, அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்: முதன்மையாக, தமிழ் மிகத் தொன்மையான மொழி. பிற இந்திய மொழிகளின் தற்கால இலக்கியங்களை விடத் தமிழ் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் காலத்தால் முற்பட்டது.
தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தின் பகுதிகள், பழைய கல்வெட்டு களையும், செப்பேடுகளையும் வைத்து நோக்கும்போது கி.மு. 200 ஆண்டிற்கு முற்பட்ட தாகத் தெரிகிறது. பழந்தமிழின் பெருமை போற்றும் சங்ககாலத் தனிப்பாடல் திரட்டுக்கள், பத்துப்பாட்டு போன்றவை கி.பி. முதல் இரண்டு நு}ற்றாண்டுகளைச் சேர்ந்தவை. அவை இந்தியாவில் முதல்முதலான, சமயங்களுக்கு அப்பாற்பட்ட, உலகியல் வாழ்வு தழுவிய சிறப்புடைய பாடல் தொகுதிகளாகும்.இரண்டாவதாக, இந்திய மண்ணின் மணம் கமழும் இலக்கியப் பாரம்பரியமாக, வடமொழித் தொடர்பில்லாது தோன்றிச் செழித்தது தமிழ் மட்டுமேயாகும். வடமொழியின் தாக்கம் தெற்கே பரவி வலுப்பெறுவதற்கு மிக முன்னதாகத் தோன்றியவை தமிழ் இலக்கியங்கள.; அவை பண்பில் தரத்தில் வடமொழி, பிற இந்திய மொழி இலக்கியங்களிலிருந்து வேறுபட்டு நிற்க்கின்றன. தனக்கே உரிய செய்யுள் அமைப்பு முறைகள், இலக்கணப் பாரம்பரியம், தமிழ் மண்ணில் தோன்றிய நுண்ணறி விய லின் எழில், தன்னேரில்லாது பரந்து விரிந்து இலக்கியச் செழிப்பும், தனித்தன்மையும் கொண்டது.
ஒப்புவமையற்ற இந்தியப் பண்பாட்டு உணர்வுகளை தமக்கே உரிய முறையில் தமிழ் இலக்கிங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. விரிந்த பரந்த, மிகச் செழிப்பான, நுண்மாண் நுழைபுலன் விளைச்சலைக் கொண்ட பெட்டகங்கள் அவை. வடமொழி, மற்ற இந்திய மொழிகளில் உள்ளதைவிட பெரிதும் மாறுபட்ட, இந்திய அறிவுணர்வை உள்ளடக்கியவை. மூன்றாவதாக, உலகப் புகழ்பெற்ற சமசுகிருத, கிரேக்க, இலத்தீன், பார்சி, அரபியப் பேரிலக்கியங்களுடன் ஒப்பிடும்போது, தரத்தில் முன்னணியில் நிற்கும் தகுதியுடையவை தமிழிலக்கியங்கள். அவற்றின் நுட்பமும், முழுமையும,; திண்மையும், உலகளாவிய பல்நோக்குப் பார்வையும், தமிழை உலகின் சிறந்த பண்பாட்டுப் பாரம்பரியங்கள், இலக்கியங்களின் வரிசையில் அமர்த்தும் தகுதியைத் தந்துள்ளன.
முதன்மையான, முதன்மைக்கு அடுத்த நிலையினரல்லாது பொதுமக்களைப் பற்றியும் விரிவாகப் பேசும் முற்கால இந்திய இலக்கியம் தமிழ் ஒன்றே. அறம்பாடும் உலகின் முதன்மையான நு}ல்களில் பொதுவானது திருக்குறள் என்பது யாவரும் அறிந்ததே.திருக்குறள் தமிழின் இலக்கியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றத் தோன்றிய பல பன்முக, பல்வகை துறை முதன்மை நூல்களில் ஒன்றேயாம். மாந்தர் வாழ்வியலை அகழ்ந்தாய்ந்து அதன் பன்முகத் தோற்றங்களுக்கு ஒளியேற்றியதில் தமிழ் இலக்கியம் ஈடுஇணையற்றது.முத்தாய்ப்பாக, தமிழ் தற்கால இந்தியக் கலாசாரத்திற்கும் பாரம்பரியத் திற்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஒரு முதன்மையான தன்னிலை, தற்சார்புள்ள (சுதந்திரமான) மொழி. தெற்கத்திய பாரம்பரியத்தின் தாக்கம் வடமொழி செய்யுள் பாரம்பரியத்தில் பரவியுள்ளது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.
அதேபோல் சிறப்புடையவை. சங்ககாலம் தொடங்கிய பாடல் தொகுதிகள், தமிழர் இந்து சமயத்தின் புனிதமிக்க பேரிலக்கியங்கள் அவை தற்கால இந்துக் கோட்பாடுகளுக்கு அடித்தள அதார உறுதி தருபவை. அவற்றினுடைய கருத்துக்கள் சமசுகிருத, தெலுங்கு, கன்னட மொழிகளில் பகவத புராணம், மற்ற நூல்களில் ஏற்றொழுகப்பட்டு, மேல் இந்தியா முழுதும் பரவியுள்ளன. புனிதத்தில் வடக்கின் நான்கு வேதங்களுக்கு இணையாகக் கருதப்படும் நூல்கள் தமிழில் உள்ளன. அத்திருமறைகள் வேத மந்திரங்களோடு, திருப்பதி போன்ற வைணவத் தலங்களில் ஓதப்படுகின்றன. தற்கால ஆரிய - இந்திய மொழிகளுக்கு வடமொழி ஊற்றுக்கண்ணாக இருப்பதைப்போலவே, தற்காலத் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளுக்குச் செந்தமிழ் அடிப்படை. இந்திய ஆரிய மொழிகளில் சமசுகிருதம் மாற்றங்களை ஏற்காத, பழமை பேணும் மொழியாக இருப்பதைப் போலவே, திராவிட மொழிகளில் பழமை போற்றும் மொழி தமிழ், திராவிடரின் இயல்பு. முன்னேற்றம் பற்றி அறிய விரும்பும் மொழியியலார் நாடும் உரைகல்.
தமிழ் ஏன் இன்னும் செம்மொழியாகக் கண்டு ஏற்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முனையும்போது, நான் ஒரு அரசியல் காரணத்தையே காணுகிறேன். தமிழ் செம்மொழியாகத் தேர்வு செய்யப்பட்டால், மற்ற இந்திய மொழிகளும் அந்த நிலைக்கு உரிமை கொண்டாக்கூடும் என்ற அச்சமே. இது தேவையற்ற கவலை. தற்கால இந்திய மொழிகளின் சிறப்பையும் நான் அறிவேன் - அவை உலக மொழிகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது செழிப்பும், ஆக்கத்திறனும் கொண்டவை.
அவை ஒவ்வொன்றும் உலக மொழி இலக்கியங்களுக்கு இணையான இடைக்கால, தற்கால இலக்கியங்களைக் கொண்டவை. ஆனாலும் அவற்றில் எதுவும் செம்மொழியன்று. ஆங்கிலம் போன்ற தற்கால ஐரோப்பிய மொழிகள் (கிரேக்கம் தவிர) ஏற்கனவே இருந்த செம்மொழிகளின் பாரம்பரியத்தைத் தழுவிப் பின்னால் கி.பி. இரண்டாயிரத்தாணடில் வளர்ந்தவை. ஐரோப்பாவின் செம்மொழியாக உலகமுழுதும் கிரேக்கம் அறியப்பட்டுள்ளது என்றாலும் அதனால் ஃபிரென்சும், ஆங்கிலமும் செம்மொழிகளுக்கான நிலையைக் கோர முடியும்.செம்மொழிப் பாரம்பரியத் தகுதிபெற, ஒரு மொழி பல சீர்நிலைக் கோட்பாடு களுக்குப் பொருந்தவேண்டும். அதற்குப் பழந்தொன்மை, வேறொரு பாரம்பரியத்தின் கிளையாக அமையாத தற்சார்பு வளர்ச்சிப் பாரம்பரியம் இவற்றுடன் செல்வச் செழிப்பு மிகுந்த பழம் இலக்கியத் தொகுப்புக்களைக் கணிசமான அளவு பெற்றிருக்கவேண்டும்.
பிற தற்கால இந்திய மொழிகளைப் போலல்லாது தமிழ் மேற்சொன்ன எல்லாத் தகுதிகளையும் தன்னகத்தே கொண்டது. தமிழ், இலத்தீன் மொழிபோல் மிகமிகப் பழமையானது, அரபி மொழிக்கு மூத்தது. வடமொழி அல்லது வேற்றுமொழித் தாக்கங்கள் இல்லாமல், முழுமையான தன்னிலைத் தோற்றம். வளர்ச்சிப் பாரம்பரியங்களுடையது. அதன் பழம்பெரும் இலக்கியங்கள் சொல்லில் விரிக்கவியலாப் பரப்பும், செல்வச் செழிப்பும் கொண்டவை.தமிழ் செம்மொழி இலக்கியச் சிறப்புக்கள் உடையது என்ற உரிமையை நிலைநாட்ட,நான் இதுபோல் ஒரு உரையை எழுதவேண்டும் என்பது, விந்தையாகத் தோன்றுகிறது. இது இந்தியா பெருமைமிக்க நாடு, இந்துசமயம் உலக மதங்களில் சிறந்த ஒன்று என்று வாதாடுவதைப்போன்றது. உலகில் சிறந்து விளங்கும் செம்மொழிகளில் தமிழ் ஒன்று என்ற மேலான தகுதி, மொழியியல் அறிந்தவர்களுக்கு வெள்ளிடை மலை, உள்ளங்கை நெல்லிக்கனி. தமிழின் செம்மொழித் தகுதியை ஏற்க மறுப்பது, இந்திய நாகரிகத்தின் பெருமைக்குக் கருவான மையப் பகுதியைக் காண மறுப்பதாகும்.
தமிழ் ஒரு செம்மொழி - முனைவர் வா.செ. குழந்தைசாமி
தமிழ் ஒரு செம்மொழி - முனைவர் வா.செ. குழந்தைசாமி
எந்த ஓர் இனமும் சமுதாயமும் தனது பண்டைப் பெருமைபற்றிப் பெருமிதத்துடன் எண்ணுவதும் பேசுவதும் இயல்பு. பாரம்பரியம் என்பது மரத்துக்கு ஆணி வேர் போல. அசையாது நிலைத்து நிற்கும் தன்மைக்கு அதுதான் அடீப்படை. பாரம்பரியம் என்பது பழைமை என்பதும் கழிந்த நாள்களின் கணக்கன்று. அது முன்னோர் அனுபவங்களின் தொகுப்பு. இந்த அனுபவங்களெனும் செல்வத்தை, அது சேரச் சேர தொகுத்துப் பாது காத்து வைத்திருக்கும் கொள்கலன் (container) ஓர் இனத்தின் மொழிதான்.
தான். தாங்கி நிற்கும் கருவுலத்தை அது தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிற தலைமுறைக்கு விட்டுச் செல்கிறது.
ஓர் இனத்தின் பெருமையை அந்த இனத்தின் மொழி பிரதிபலிக்கிறது. மாபெரும் நாகரிகங்கள் மகத்தான மொழியை உருவாக்கத் தவறியதுமில்லை. வரலாற்றுப் பெருமை இல்லாத மக்கள் வளம் மிக்க மொழியை உருவாக்கத் தவறியதுமில்லை. வரலாற்றுப் பெருமை இல்லாத மக்கள் வளம் மிக்க மொழியை உருவாக்கியதுமில்லை.
மூவாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் உள்ள இந்திய நாகரிகம் கண்ட இரு மொழிகள்தாம் தமிழும் வட மொழியும். இவை இரண்டுமே வரலாற்றுக் காலத்துக்கு முந்திய வாழ்வுடையவை. மறைந்துபோன வரலாறுடையவை. இது தனிப்பட்டவர் அபிப்பிராயம் அன்று. அறிஞர்கள் ஒப்பிய உண்மை. ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு.தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகட்கும் தொன்மைச் சிறப்புண்டு. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்திய இலக்கணம் உண்டு. பழைமை வாய்ந்தவை என்று பாராட்டத்தக்க கவிதை இலக்கியங்கள் உண்டு.
இலக்கிய உலகங்கள் போற்றும் காப்பியங்கள் உண்டு. உலகில் இந்த அளவுக்குப் பெருமையுடைய மொழிகள் ஆறு. அவற்றுள் இரண்டு மொழிகளின் தாயகம் இந்தியா. இரண்டும் செம்மொழிகளின் வரிசையில் இடம் பெறுபவை. இந்தப் பெருமை Nவுறு எந்த நாட்டுக்கும் இல்லை. வடமொழியை அதன் இலக்கியத்தின் அகலத்தை, ஆழத்தை அடையாளம் கண்டு அதை இலத்தின்போல கிரேக்கம் போல ஒரு செம்மொழி எனக் கூறியவர்கள் நாம் அல்லர். மேலை நாட்டினர். அதேபோல ஐரோப்பிய நாடுகள் முதல் இங்கிலாந்து. அமெரிக்க வரையுள்ள மொழி வல்லுநர்கள் இந்திய அயல் நிபுணர்கள் விவாதத்திற்கிடமின்றி ஏற்கப்பட்ட உண்மையாகும். இயல்பாகத் தமிழைச் செம்மொழி என்று தங்கள் பேச்சில் எழுத்தில் குறிப்பிடுகிறார்கள்.
இது விவாதத்திற்காகவோ இனிமேல் நிறுவப்பட வேண்டிய தகுதிக்காகவோ எண்ணப்படவில்லை.
இன்று இந்தியப் பண்பாட்டை இந்தியச் சிந்தனை மரபை முழுமையாக அறிந்துகொள்ள இந்த இரண்டு மொழிகளின் துணை தேவை என்பதை வலியுறுத்தாத மேலை நாட்டு இந்தியவியல் (Indology) அறிஞர்கள் யாரமில்லை. ஐரோப்பிய நாகரிகத்திற்கு இலத்தினும் கிரேக்கமும் போல இந்திய நாகரிகத்திற்குத் தமிழும் வடமொழியும் என்ற கருத்து பரவலாக ஏற்கப்பட்ட ஒன்று. அது நாளுக்கு நாள் வலிமைபெற்றும் வருகிறது.ஏதோ வாலாற்று நிகழ்வுகள் காரணமாக இந்திய அரசு தயாரித்த செம்மொழிகள் பட்டியலில் வடமொழியோடு பாரசீகம் அராபியம் ஆகியனவும் இடம்பெற்றிருக்க தமிழ் விடுபட்டு விட்டது.
இந்தக் குறையை நீக்குதல் வேண்டுமென்பதுதான் இன்றைய தமிழ்றிஞர்களின் வேண்டுகோள். தமிழகத்தலைவர்களின் வேண்டுகோளும் இதுவே. இது ஏதோ தமிழுக்காகப் புதிதாக ஒரு மகுடம் சூட்டும் முயற்சி அன்று.பரிதிமாற் கலைஞர் இராமானுசம் போன்ற இந்திய அறிஞர்கள் எமனனோவ் கதில்பெல் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் எழுதியது, பேசியது ஒருபுறம் இருக்க. அமெரிக்காவில் பெர்க்லி (Berkeley)வளாகத்தில் இருக்கும் புகழ் வாய்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of California) பேராசிரியரான டாக்டர் ஜார்ஜ் வறார்ட் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே குறிப்பிடுவது பொருந்தும்.
அவருடைய பின்னணி பற்றிய சுருக்கமான தகவல் பின்வருமாறு.அவர் வறார்வர்டு பல்கலைக் கழகத்தில் வடமொழி படித்துப் பட்டம் பெற்றவர். 1969 முதல் 1975 வரை அமெரிக்காவில் மேடிசன் நகரில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் (University of Wisconsin) வட மொழிப் பேராசிரியராக இருந்தவர். 1963இல் தொடங்கி வடமொழி இலக்கியங்களை விரிவாக்கக் கற்று வந்தவர். காளிதாசன் மாகன் (ஆயபாய) பாரவி வறர்சூன் (Sri Harsha) போன்றோர் படைப்பின் மூலத்தை ஆழ்ந்து படித்தவர். ரிக் வேதத்தின் ஐந்தாவது பகுதி பெரும்பாலான உபநிடங்கள் ஆகியவற்றை அவற்றின் மூலமொழியிலேயே கற்றவர்.
அவருக்கு இலத்தின் கிரெக்கம் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல புலமை உண்டு. அவற்றிலுள்ள இலக்கியங்களை அந்தந்த மொழிகளில் விரிவாகப் படித்தவர். மேலும் நவீன் மொழிகளான இரசூ;;யா, ஜெர்மன் பிரஞ் ஆகிய மொழிகளிலும் புலமை உள்ளவர்.
அவற்றிலுள்ள இலக்கியங்களையும் பரவலாகப் படித்தவர். 1975 முதல் பெர்க்லி வளாகத்தில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார். நாம் அவரைப்பற்றி இவ்வளவும் கூறுவது அவருடைய பெருமைக்காக அல்ல. ஒரு மொழியின் செம்மொழித் தகுதியைத் தீர்மானிக்கும் வளமான பின்னணி அவருக்கண்டு என்பதை எடுத்துக் காட்டவே ஆகும்.
ஏனெனில் செம்மொழித் தகுதி என்பது பொதுக்கூட்டத்தில் முடிவு செய்வதன்று. அரசின் ஆணையால் உருவாக்கப்படுவதும் அன்று. அது அறிஞர்களின் ஏற்பால் ஒரு மொழிக்கு வருவது. தமிழில் செம்மொழி;த் தகுதிக்கான அடிப்படைகள் பற்றி விரிவாக்க கூறிவிட்டு அவர் பின்வருமாறு முடிக்கிறார். தமிழ் ஒரு செம்மொழி என நிறுவ நான் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருப்பது எனக்கு விந்தையாக இருக்கிறது. இது இந்தியா ஒரு நாடு என்பதையும் இந்து மதம் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்று என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது. ("It seems strange to me that I should have to write an essay such as this claiming that the Tamil is a Classical Language - It is akin to claiming that India is a great country or Hindustan is one of the world's great religions)
"உலகின் பெருமை வாய்ந்த செவ்வியல் மொழி தமிழ் என்பது இத்துறையில் ஞானம் உள்ளவர்கட்கு ஐயம் திரிபற வெளிப்படை. தமிழின் செம்மொழித் தகுதியைப் புறக்கணிப்பது இந்தியப் பண்பாட்டுப் பெருமையின் அதன் வளத்தின் சக்தி வாய்ந்ததும் மையமெனத் தக்கதுமான சிறப்பை இழப்பதுமாகும். (The Status of Tamil as one of the great classical languages of the world is something that patently obvious to any one who knows the subject. To deny that Tamil is a classical Language is to deny a vital and central part of the greatness and richness of Indian Culture.")
தமிழின் செம்மொழித் தகுதி என்பது தமிழின் பெருமையொட நிற்பதன்று: அது மொழி வளர்ச்சியில் இந்தியப் பண்பாடு எட்டியுளள உச்சியின் இன்னொரு சிகரம். நமது பாரத அரசு நிலை நிறுத்த முயலும் இந்தியத்துவத்தின் பெருமைக்கு இன்னொரு மகுடம்.முக்கியமானது என நான் கருதுகிற இன்னொரு கருத்தையும் இங்குப் பதிவு செய்தல் வேண்டும். தமிழ் மொழியின் வரலாறு சற்று அசாதாரணமானது. ஆயிரம் கண்டங்களை தாண்டி வந்தது. தமிழர்கள் தங்கள் மொழியைப்;
படையெடுப்புத் தீயிலிருந்தும் காத்தார்கள்.
மேலும் மேலும் வந்த பண்பாட்டு வெள்ளத்திலிருந்தும் காத்தாத்கள்.
படை வலிமை கொண்டும் பாதுகாத்தார்கள்.
பக்தி மார்க்கத் துணையுடனும் பாதுகாத்தார்கள்.
பகுத்தறிவு இயக்கத்தின் வழியும் பாதுகாத்தார்கள்.
இந்தப் பின்னணியில் சுதந்தர இந்தியாவில் கொங்கனி டோகிரி 19 மாநில மொழிகளில் ஒன்றாக மட்டுமே தமிழ் பெற்றுள்ள இடம் அதன் பழைமைக்கும் உலக அளவில் ஒப்புகொள்ளப்பட்டிருக்கும் அதன் தகுதிக்கும் இந்தியப் பண்பாட்டுக்கு அது வழங்கியிருக்கும் பங்களிப்புக்கும் ஏற்ற ஒன்றாக இல்லையே என்ற நியாயமான ஆதங்கம் தமிழர்களிடம் ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருந்தது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு இந்திய அரசு அங்கீகாரம் வழங்கியதால் இக்கனலைத் தணித்திருக்கும். இந்தியத் தேசிய நீரோட்டத்தில் தமிழர் இதயபூர்வமாகப் பங்கேற்பதை வலப்படுத்தும்.
செம்மொழியான தமிழை, இந்திய அரசு உடனே அங்கீகாரம்.
செம்மொழியான தமிழை, இந்திய அரசு உடனே அங்கீகாரம்.
தமிழ் செம்மொழி போராட்டக் குழு, August 2003 [source - Thamizh Mann]கிரேக்கம், இலத்தீன், சீனம், சமஸ்கிருதம் முதலிய உலகளவில் தொன்மையும், மேன்மையும் உடைய மொழி தமிழ்மொழி. இந்த உண்மையை தமிழகத்திலும் சரி, வெளி உலகிலும் சரி, மொழியியல் அறிஞர்கள் எந்தத் தடங்களும் இல்லாமல் ஒப்புக் கொள்கின்றனர்.
ஐரோப்பா அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்கள் சமஸ்கிருத மொழியோடு தமிழையும் ஏற்று ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். இந்தியாவின் வரலாற்றை வடக்கிலிருந்து தொடங்குவதற்கு மாறாகத் தெற்கிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்ற பேருண்மையையும் அறிஞர்கள் இன்று ஒப்புக் கொள்கின்றனர்.
இந்திய நாகரிகத்தின் மேலாக ஆரிய நாகரிகம் என்பதாக அமர்ந்த போதிலும், அடித்தளம் திராவிட நாகரிகம் தான் என்பதையும் அறிஞர்கள் மறுக்கவில்லை. தமிழ் மொழியின் தொன்மை, மேன்மை இலக்கிய இலக்கணத் திறன் நவீன காலத்திற்கும் ஒத்த முறையில் எல்லா வகைகளிலும் தனக்குள் வளர்த்துக் கொண்ட ஆக்கத்திறன் முதலிய பல்வேறு பண்புகளையும் வைத்துப் பார்க்கும் பொழுது தமிழ் செவ்வியல்மொழி தான் என்பதை ஆயிரம் கோவில்களில் நாம் அடித்துச் சொல்ல முடியும்.ஒரு நூறாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் அறிஞர்கள், தமிழ் பல்கலைக் கழகங்கள், தமிழ் செவ்வியல் மொழிதான் என்பதற்குத் தேலையான ஆதாரங்களைத் தேடித் தேடி நிறுவியுள்ளனர். மைய அரசே சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் அரபு, பாரசீகம் ஆகிய அந்நிய மொழிகளைக் கூட செவ்வியல் மொழி என அறிவித்து தற்காலச் சூழலிலும் அவற்றை வாழ்விப்பதற்கும், வளர்ப்பதற்கும் தேவையான நிதி உதவிகள் முதலியவற்றை வழங்கிவருகிறது.
ஆனால் தமிழைப் பார்த்துத் தன்னைத் திருத்தம் செய்து கொண்ட சமஸ்கிருதமொழிக்கு நிகராக தமிழை ஒப்புக் கொள்ள மறுக்கின்றது.
தமிழக முதல்வர்கள் பல முறை மைய அரசுக்கு கோரிக்கைகள் விருத்துள்ளனர். திராவிடமொழி அறிஞர்களும் தமிழைச் செவ்வியல் மொழி என ஏற்பதை ஒப்புக் கொள்கிள்றனர். மைய அரசுக்கு இது வரை மனம் வரவில்லை. சமஸ்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கு எல்லாம் மூல மொழி என்றும், தெய்வ மொழி என்றும் நம்புகிற இந்துமத வாதிகள் மைய அரசில் ஆதிக்கம் பெற்றுள்ள சூழலில் தமிழின் மேன்மையை இன்றுவரை ஒப்புக் கொள்ள மறுப்பதை, மொழிச் சார்ந்த சிக்கல் என்பதைக் காட்டிலும், இந்தச் சிக்கலை அரசியல் சிக்கல், அதுவும் இந்துமதம் ஃ இந்துக்குலம் சார்ந்த அரசியல் என்றே நம்மால் கருத முடியும். தமிழையும், தமிழ் மக்களையும் ஆயிரம் ஆண்டு களுக்கு மேலாகத் தொடர்ந்து பலவகைகளிலும் ஒடுக்கி வருவது இந்திய நாகரிகம். விடுதலைக்குப் பின்னரும் இந்த ஒடுக்கு முறை குறைவில்லாமல் நடந்து வருகிறது.
அரசியல், பொருளியல், கல்வி, பண்பாடு முதலிய பல களங்களிலும் தொடர்ந்து இந்த ஒடுக்குமுறையின் இன்னொரு கூறுதான் தமிழின் மீதான ஒடுக்கு முறை.
சமத்துவமும், சமதர்மமும் தமிழர்களின் அறம். அறிவுத்தரத்தில், பண்பாட்டுச் செழமையில் தமிழர் உலகளவில் மரியாதைக்குரியவர்கள். தமிழைச் செவ்வியல் மொழி என ஏற்றுக் கொண்டால், இத்தகைய உண்மைகளையும் ஏற்க வேண்டிவரும்.
தமிழைச் செவ்வியல் மொழி என மைய அரசு உடனடியாக ஒப்புக் கொள்ளும் என்று யாரும் நம்புவதற்கு ஆதாரம் இல்லை. எனினும் தமிழகத்ததைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் ஏற்கனவே பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வற்புறுத்தினர். தமிழின் ஆக்கத்திற்கான இந்தக் கோரிக்ககையை டெல்லிவரை கொண்டு சென்ற தமிழ் அறிஞர்களை நாம் மனமாற வாழ்த்துகிறோம்.
1 மறுமொழிகள்:
Hey, I ran across your website and thought you might enjoy this site in Tamil:
தமிழ் wiki browser
நீங்களும் சொல்லுங்கள்...