குண்டலினியும் அதன் இயக்கமும்

ஒவ்வொரு மனிதனிடமும் ஓர் அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர்ச்சக்தி உள்ளது. இதற்கே 'குண்டலினி' என்று பெயர். இது அடிப்படை நிலையிலேயே இருக்கும்போது மனிதனுக்குத் தன்னிடம் அத்தகைய உயிராற்றல் இருப்பதே தெரியாது. அந்த சக்தி நகருகிறபோதுதான் அவனால் அதை உணர முடியும். எப்படி ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது தெரியாமல், நகரும்போது நன்றாக தெரிகிறதோ, அது போல.
.
எனவேதான், குண்டலினிக்கான குறியீடாக பாம்பு பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. சிவபெருமானின் தலையின் மீது கூட பாம்பு ஏறி அமர்ந்திருப்பதைக் காணலாம். தன் ஆன்ம சக்தியை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றிருப்பவர் சிவன் என்பதற்கான அடையாளம் இது. ஒரு மனிதன் அடையக் கூடிய அதிகபட்சமான உயர்நிலையும் இதுதான் என்பதையும் அது உணர்த்துகிறது.
.
உச்சியை நோக்கிச் செல்லும் குண்டலினி பற்றிச் சொல்லும்பொழுது ராமக்ரிஷ்ணர் அடிக்கடி சொல்லியியுள்ளார் :-எது ஒன்று உங்கள் அறிவு மையத்தை நோக்கி சிலிர்க்க வைக்கும் ஓர் உணர்ச்சியுடன் செல்கின்றதோ, அது எல்லா நேரத்திலும் ஒரே வகையான நகர்தலைப் பின்பற்றுவதில்லை. நமது வேதங்கள் அதற்கு ஐந்து வகையான இயக்கங்கள் உள்ளன என்று கூறுகின்றன.
.
முதலாவது : எறும்பு-போன்ற இயக்கம்; ஒருவருக்கு ஒரு மெதுவான படர்ந்து போவதான உணர்ச்சி பாதத்திலிருந்து மேல் நோக்கி எழும். எப்படி ஒரு வரிசையில் எறும்புகள் வாயில் உணவு கொண்டு ஊர்ந்து செல்லுமோ அப்படி. அது தலையைச் சென்று அடையும்பொழுது, ஒருவர் சமாதியில் நுழைகின்றார்.
.
இரண்டாவது : தவளை-போன்ற இயக்கம்; எப்படி தவளைகள் இரண்டு மூன்று சிறிய குதிகள் அடுத்தடுத்து செய்து பின்பு சிறிது இடைவெளி விட்டு மீண்டும் அதே போல் குதித்து நகர்ந்து செல்கின் றனவோ, அதே போன்று, ஏதோ ஒன்று பாதத்திலிருந்து மூளையை நோக்கிச் செல்வது உணரப்படுகிறது. அது மூளையைச் சென்றடையும்பொழுது, ஒருவர் சமாதியில் மூழ்குகிறார்.
.
மூன்றாவது :பாம்பு போன்ற இயக்கம்; எப்படி பாம்புகள் அமைதியாகக் கிடந்து (நேராகவோ அல்ல சுருளாகச் சுற்றியோ), பின்பு ஓர் இரையை பார்த்தோ, அல்லது பயமுற்றோ, திடீரென்று வெகு வேகமாக வளைந்து வளைந்து (zigzag) ஓடுகின்றனவோ, அதே போல், நம் உடலில் உள்ள சுருண்டேறிய' (coiled-up) சக்தி தலையை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து செல்கிறது. அது சமாதியைத் தருகிறது.
.
நான்காவது :பறவை-போன்ற இயக்கம்; எப்படி பறவைகள் அவற்றின் பறத்தலின்போது (ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் செல்லும்பொழுது) தங்கள் இறக்கைகளை அசைத்து, சில சமயம் சிறிது உயர் வாகவும், சில சமயம் தாழ்வாகவும், ஆனால் தங்கள் இலக்கை அடையும் வரை விடாமல் பறக்கின்றனவோ, அதே போல் சக்தி மூளையைச் சென்றடைந்து, சமாதி விளைவுறுகிறது.
.
ஐந்தாவது, கடைசியானது :குரங்கு-போன்ற இயக்கம்; எப்படி மரம் விட்டு மரம் தாவும் குரங்குகள், ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு ஒரே தாவாக தாவிச் சென்று இரண்டு மூன்று தாவல்களிலேயே, தூரத்தைக் கடக்கின்றனவோ, அதே போலவே, ஒரு யோகியும் குண்டலினி மூளையைச் சென்று மெய் மறந்த நிலை உருவாக்குவதை உணர்கிறார்.
.
ஆதாரம்: "Life of Sri Ramakrishna", an 'Advaita Ashrama' (Calcutta) Publication